Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வெட்கமில்லை! வெட்கமில்லை ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2014 | , , , ,

இற்றைக்கு இருபதாண்டுகளுக்கு முன், ‘பாரதமணி’ (நவம்பர் 1994) இதழில், கவிஞர் முத்துமணி என்பார் எழுதிய மரபுச் சந்தக்  கவிதை இதோ: தமிழகத்தின் அன்றைய சாக்கடை அரசியல் நிலையைத் தமது கருத்தின் கவிதைப் பதிவாக, இன்றைக்கும் பொருத்தமானதாக,

வெட்கமில்லை!  வெட்கமில்லை!  வெட்கமென்ப  தில்லையே!
மக்கள்முன்பு  மதிப்பிழந்து  நிற்கநேர்ந்த  போதினும் - (வெட்கமில்லை)

நிற்கவைத்து  மக்கள்கேட்கும்  நிலைமைவந்த  போதினும்               
சொக்கத்தங்கம்  போலியாகிப்  பல்லிளித்த   போதினும் - (வெட்கமில்லை)

சர்க்கரைக   லக்கப்பேசிச்   சாதிக்காத   போதினும்                           
கொக்கரித்து   விட்டுப்பின்பு   கொள்கைமாறும்   போதினும் - (வெட்கமில்லை)

சுக்கல்சுக்க   லாகிக்கட்சி   சுருங்கிவிட்ட   போதினும்  
ரொக்கம்ரொக்க   மாகவாங்கி   ரொம்பிவிட்ட   போதினும் - (வெட்கமில்லை)

மக்கிவிட்ட   கொள்கையோடு   மாரடிக்கும்   போதினும்                    
மெய்க்கலப்பில்   லாதுபேச   மேடையேறும்   போதினும் - (வெட்கமில்லை)

கைகலப்பி   லேயிறங்கிக்   களங்கப்பட்ட   போதினும் 
வெட்கமில்லை!   வெட்கமில்லை!   வெட்கமென்ப   தில்லையே!

பரிந்துரை : அதிரை அஹ்மது

7 Responses So Far:

adiraimansoor said...


சரியான தருனத்தில் அதிரை அஹ்மது காக்கா அவர்கள் தந்திருக்கும் மேற்கண்ட கவிதை கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றது
நம் சமுதாய மக்களுக்கு வெட்கமென்பது ஏது?
நம் சமுதாயத்திற்கு தலைவராக இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் மாறிப்போய் பித்தலாட்டங்கள் நிறைந்த சமுதாய தலைவர்களிடம் நாம் எதிர் பார்ப்பது நாம் செய்யும் முட்டால்தனம்தான்
நான் எந்த இயக்கத்தையும் இதில் சாடவில்லை பொதுவாக எழுதும் பின்னூட்டங்களை யாரும் தனிப்பட்ட கற்பனைகள் செய்துவிடக்கூடாது ஏன் இதை எழுதுகின்றேன் என்றால் நம் சகோதரர்களின் மன நிலையை மற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக
போதும் நம் சமுதாய மக்கள் பட்ட கஷ்ட்டங்கள் துன்பங்கள்
இது மாற்றி யோசிக்கும் தருனம்
மூன்றாவது ஒரு ஆப்ஷன் இருக்கும்போது கொஞ்சம் அதையும் யோசித்து பார்க்கலாமே

sheikdawoodmohamedfarook said...

//வெட்கமில்லை!வெட்கமில்லை// வொவ்வொரு வரியும் ஒரு கொள்ளிக்கட்டைச் சூடு! சூடுசொரணை உள்ளவர்களுக்குத்தான் அது சூடு! நல்ல மாட்டுக்கு ஒரு சூடுபோதும்!

Ebrahim Ansari said...

வெட்கத்தை மூட்டை கட்டி
கக்கத்திலே வச்சுக்கிட்டு
வில்லாக வளைஞ்சு ஆடு
டப்பாத் தாளம் போட்டுக்கிட்டு

- என்றும் ஒரு பழைய பாடல் உண்டு. இப்போது டப்பாத்தாளம் என்பதை சூட்கேஸ் தாளம் என்று மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம் - நீ
சொன்னால் காவியம்
ஓவியம என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா!
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா.

வேண்டாம் அதுக்கு மேல் எழுதினால் அலைபேசி அழைக்கும்.

sabeer.abushahruk said...

காக்கா,

இக்காலமும் பொறுந்தும் பாட்டு அருமை.

அருமையான சந்தப்பாட்டு. படிக்கப் படிக்க இக்கால மங்குணி மாப்பிள்ளைகளைப் பற்றி எனக்குத் தோன்றியது கீழே:


வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்ப தில்லையே
அக்கம்பக்க ஆண்களைப்போல் உழைப்பிலாவல் இல்லையே

வேலைவெட்டி ஒன்றுமில்லை வேட்டிமட்டும் வெள்ளையே
வாலையாட்டி வாஞ்சைகாட்டும் நாயின்நன்றி இல்லையே

காலைமாலை கட்டில்தூக்கம் கழுத்தறுக்கும் தொல்லையே
காலைசுத்தும் சர்ப்பம்தானே கடிப்பததன் எல்லையே

கட்டிக்கொடுக்கு முன்புமகள் கொல்லைப்பூத்த முல்லையே
பிள்ளைத்தாச்சி ஆனபின்பும் சோறுதர வில்லையே

தேர்தலுக்கு ஊருக்குள்ளே அடிக்கிறார்கள் கொள்ளையே
தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையோ வீட்டுக்குள்ளே தொல்லையே

ஹிஹி சமாளிச்சேனா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒருவேளை!
தேர்தலுக்குப் பின்னர்

கண்களில்
Wet-Come ! ஆகுமோ?

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

யா அல்லாஹ் நரபலி மோடியை பகிரங்கமாக எதிற்கும் வீரன் அரவிந்த் கேஜ்ரிவாலை ஜெயிக்க வைத்து நரபலி மோடியை படு பாதாலத்தில் தள்ளுவாயாக

அரவிந்த் கேஜ்ரிவாலை கொண்டு நரபலி மோடியை அவமானம் படுத்துவாயாக

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு