Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் அகல ரயில்பாதை - ஐந்தே வினாடிகளில் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2014 | , , ,

அப்ப...ப்பா எத்தனை போராட்டங்கள், எத்தனை இழப்புகள், மன உளைச்சல்கள் இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகிறது....

இந்த அரசியல் மற்றும் அதிகார வர்க்கமும் ஏதோ ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு கபட நாடகமாடி நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டியதை கிடைக்க விடாமல் செய்து வருகின்றனர் சுயநல அரசியல் அதிகார வர்க்க கிருமிகள்.

இந்த தூரோகத்திற்கு சட்டரீதியான பாதிப்புகள் கண்டிப்பாக அவர்களுக்கு கிடைக்கும் அதனை அனுபவித்தே தீருவார்கள்.

சின்னஞ்சிறுசுகள் பேச்சுவாக்கில் சொன்னது "இருக்கிற இருப்பு பாதையை அங்கிட்டாலேயும் இங்கிட்டாலேயும் இழுத்துப் போட்டுட்டு ரயில ஓட்டுங்கப்பான்னு".

அட! அப்படியே செய்தால் என்ன !?

கண்ணை மூடாம ஐந்தே வினாடிகள் பாருங்க...! இவ்வளவு ஈசியான வேலையை எவ்வளவு கஷ்டமா காட்டுறாய்ங்க !


ஓட்டுக் கேட்டு வரும் வேட்பாளர்களும் அவர்களின் செயல்பாடுகளும் இந்த தருணத்தில் நினைக்கு வந்தால் தவிர்க்கவா முடியும்?

புகைப்பட பொக்கிஷம் : Sஹமீத்
அதிரைநிருபர் பதிப்பகம்
இது ஒரு மீள்பதிவு !

3 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

இந்தியாவின் முதலாவது ஐந்துஆண்டு திட்டத்தில் இடம்பெற்ற தஞ்சை பட்டுகோட்டை இருப்புபாதை திட்டம் இந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஒரு அமுதசுரபி! இதைசொல்லி சொல்லியே நின்றார்கள்!வென்றார்கள்!.சென்றார்கள்!.R.வெங்கட்ராமனுக்கு இது எழுத்திக்கொடுத்து பட்டாபோட்டதொகுதி.பலமுறை வென்றும் இருப்பு பாதைஇல்லை!பஸ் அதிபர்களுக்கோ தினம்தினம் தீபாவளி! பஸ்பயணிகளுக்கோ தினம்தினம் தலைவலி! [ தொடரும்]

sheikdawoodmohamedfarook said...

1967 தேர்தல் வந்தது .வழக்கம்போல் தஞ்சைக்கு R.V. நாடாளுமன்றதிற்கு காங்கிரஸ் சார்பிலும் S.D சோமசுந்தரம் தி.மு.க.சார்பிலும் மோதினர்.மோதல் தீப்பொறிபறக்கும் மோதல்! சோமசுந்தரம் தஞ்சை-பட்டுகோட்டைரயில்பாதைபோடாமல்'என் கட்டை' வேகாதுஎன்றார்.வென்றார்.ஆனால்ஒன்றுமேநடக்கவில்லை.அதன்பிறகு தஞ்சை நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டவர்கள் எல்லாம்அதையே ஒருதேசியகீதமாக பாடிபாடிவென்றார்கள்.சென்றார்கள்.தேர்தல்வந்துவந்து போகுது.ஆனால்தஞ்சாவூர் வண்டியின்'' கோ! கிச்சுகிச்சு'' சத்தம் யார்காதிலும்விழவில்லை! காரைக்குடி டு சென்னைக்கு ஓடிய கம்பன் ஓய்வுபெற்று ஓய்ந்துவிட்டான்! யாருடைய கதை எழுத எழுத்தாணியும் பனை ஓலையும்தேடுகிறானோ தெரியவில்லை! ராமாயணம் எழுதி 'சேதுசமுத்திர' திட்டத்துக்கு வினை வைத்தான். இப்போ யாருக்கு வைக்கப்போறானோ ஆப்பு?தெரியவில்லை. [ தொடரும்]

sheikdawoodmohamedfarook said...

காரைக்குடி டு சென்னை வரை கம்பன் ஓடியபோது மஞ்சள் குளித்த ஸ்டேஷன்கள் எல்லாம் இப்போது துரியோதனன் துகில்உரிந்த திரௌபதைபோல் இருக்கிறது. அந்த ஸ்டேஷனில் மாலை வேளைகளில்பள்ளிப்பாடங்களை படித்ததும் முதன்முதலில் பினாங்கு புறப்பட்டபோது பால்கொடுத்த தாயின்நெஞ்சின் ஈரத்தை என் நெஞ்சுநினைத்தபோது வழிந்த கண்ணீரும்'' நீஅழுதால் எனக்கென்ன ?''என்று 'கோகிச்சுகிச்சு!' போட்டு நீண்டபுகைகுழாய்வழியாக கரும்புகை கக்கி கனைத்துக்கொண்டு புறப்பட்ட அந்த ஈரமில்லா நெஞ்சு கொண்டகரும்பூத எஞ்சினும் மரவக்காடு--தம்பிகோட்டை-சுந்தரம் போன்றஆலமர நிழலில் இளைப்பாறி கொண்டிருந்த அந்தஸ்டேஷன்களை இன்று காணோம்.அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையுடன் மன்னர்க்கு இருக்க நிழல்கொடுத்த ஆலமரம் எங்கே? அதுவீழ்ந்து வீடாது தங்கிநின்ற விழுதுகள் எங்கே? பழுத்தபோது கனிஉண்ண வந்த காகங்களும் குருவிகளும் பொய்த்தபோது பறந்தோடிவிடும் சில உறவுகள் போல. தியாகிகள் போலபலர் வாழதன்னைஇழந்த அந்த மரங்களை நாம் நேசிப்போம்!.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு