Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர் - 5 - [இறைத் தூதருக்காக செய்ய மாட்டீர்களா ?] 18

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2014 | ,


இஸ்லாம் எந்தளவுக்கு நடைமுறைக் கேற்ற மார்க்கம் என்பதை நம் அன்றாட வாழ்விலும், செய்திகள் மூலமும்  அறிந்து கொள்கிறோம். முன்பு பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு, மாப்பிள்ளை அல்லது பெண் பார்த்து திருமணம் செய்வித்தார்கள். பிள்ளைகளும் ஏற்றுக் கொண்டனர். அந்தப் பிள்ளைகளும் தன் கணவனை / மனைவியைக் காதலித்தார்கள். பிரச்சினைகள் எழவில்லை, அப்படி எழுந்தாலும் அதன் அளவு மிக மிகக் குறைவே,அதையும் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொண்டார்கள்.

ஆனால், இன்றைய நவீன??? கால உலகில் திருமணத்திற்கு முன்பே திருட்டுக் காதல், கள்ளக் காதல் என்று எல்லா சமூகங்களிலும் பெருகி வருவது மிக மிக கவலைக்குரியதாகும். பிற மதங்களில் இவ்வாறு நடப்பது என்பது ஒரு பெரிய விஷயமல்ல. காரணம், ஆண்/பெண் எவ்வாறு நடக்க வேண்டும் என்ற வாழ்வியல் சட்டங்கள்-திட்டங்கள் அவர்களின் மத நூற்களில்  கிடையாது. பெண்களை எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்று அவாள்களின் புராணக் கதைகளும், சிலைகளின் சிற்ப வேலைப்பாடுகளும் காட்டுகின்றதே தவிர, நல்ல விஷயங்களை போதிக்கவில்லை. அதனால் அவர்கள் பாழுங்கினற்றில் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

நம் மார்க்கத்தைப் பொருத்தவரை, நமக்கென்று தெளிவான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. யார் யார் எப்படி நடக்க வேண்டும், சிறுநீர், மலம் கழிக்கும் முறையைக் கூட ஆரோக்கியம் பேணும் வழிமுறையாக கற்றுத் தரும் நம் மார்க்கத்தில் சிலர் புதிய சிந்தனைகளால், அதனால் ஏற்பட்ட கோளாறினால், "நான் ஷைத்தானுக்கு மச்சான்" என்ற ரீதியில் செயல்படுவதனால் அவரும் தறிகெட்டு, அவரைத் தொடர்ந்தவர்களும் நிலை தடுமாறி, நரக நெருப்பை சந்திக்கும் அவல நிலை ஏற்படுகிறது.

"ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் ஷைத்தான் இருப்பான்" (ஆதாரம் : அஹ்மது) என்ற நபிகள் நாயகத்தின் அருள் மொழியை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு நிதர்சனமென்பது புரியும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் உள்ள நம்பிக்கையினால், கூடவே இருக்கும் ஷைத்தானை மறந்து விடுகிறார்கள். அந்த ஷைத்தான் - அந்த பிள்ளைகளை நரக படுகுழியில் தள்ளும் முயற்சியை தூண்டி விடுகின்றான்.

இன்று தொலைக்காட்சிகள், இணையதளங்கள், செய்தித்தாள்கள் என எதிலும் நிறைந்திருக்கும் கள்ளக் காதல், காதலன் ஏமாற்றியதால்,கணவனின் அல்லது மனைவியின் கள்ள தொடர்பால் தற்கொலை அல்லது கொலை இப்படியான செய்திகள் வியாபித்திருப்பவைகள் தான் அதிகம், அதிகம். இவைகளை களைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு - அடிப்படை மார்க்க அறிவினை போதிப்பது இன்றியமையாக் கடமையாகும்.

தன் பிள்ளைகள் டாக்டர், எஞ்சினியராக வேண்டும் அதன் மூலம் பெண் வீட்டைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்று ஆண் மகனைப் பெற்ற பெற்றோரும் என் மகள் மெத்தப் படித்தவள் என்று தன் மகளைப் பெற்றோரும் பீற்றிக் கொள்கிறார்களே தவிர, என் மகன் அல்லது மகள் தொழக் கூடிய, குர்ஆன் ஓதக்கூடிய, அல்லாஹ்வையும், அவன் தூதரையுமே பின்பற்றக் கூடிய ஒரு முஸ்லிம் என்று சந்தோஷப்படுகிறோமா? அவர்களை அப்படி வளக்கிறோமா ? அவ்வாறு செய்ய ஏவுகிறோமா ? இப்படி எண்ணுபவர்களின் சதவிதம் மிகக் குறைவு. அதனால்தான் முஸ்லிம் குடும்பத்தில் கூட இவ்வாறெல்லம் நடக்க அரம்பித்து விட்டது.அப்படி மார்க்கத்தை - அடிப்படை இஸ்லாமிய அறிவை ஊட்டவில்லை என்றால் இது தொடர் கதை ஆகிவிடும்.

இவைகளைக் களைய, நம் தனிப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை இருக்கிறது.முஸ்லிம் இயக்கங்கள் எல்லாவற்றுக்கும் கடமை இருக்கிறது.அரசியல் பேச மட்டுமா இயக்கங்கள் !? அசிங்கங்களைக் களையவும் தான். நம்மிடையே இருக்கும் இயக்கங்கள் எல்லாம், ஒன்று கூடி ஒருவருக்கொருவர் அனுசரித்து மார்க்கத்தின் போதனைகளை ஒரே குழுவாக இருந்து எடுத்துரைத்தால் இன்னும் வலுவாக இருக்கும்.இது நடக்கக் கூடிய காரியமா? என தயவு செய்து அங்கலாய்க்கவோ, கமெண்ட் கொடுக்கவோ எண்ணாதீர்கள், மாறாக, சீரியசாக விவாதியுங்கள். அவரவர் இயக்க உறுப்பினர், அந்த அந்த இயக்க தலைவர்களிடம் கேள்வி கேளுங்கள், முடிவு செய்யுங்கள், காரியத்தில் இறங்குங்கள்,மாற்றத்தை இறைவன் பார்த்துக் கொள்வான்.

முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய இயக்கங்கள் எல்லாம் இணைந்தால், அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை பெருகும். ஒரே குரலாக எதிரொலிக்கலாம். சட்டமன்றம், பாராளுமன்றத்தில் நம் குரல் ஒலிக்க வலுவான ஒரு கூட்டணியாக ஏற்படுத்தி, தேர்தலில் நின்று சாதிக்கலாம். இவைகளுக்கு எல்லா கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் ஒத்துழைப்பார்கள். ஆனால்,இதற்கு  அந்தக் கட்சிகளின் / இயங்கங்களின் தலைவர்கள்தான் தங்களின் ஈகோவை கைவிட வேண்டும்.

"உங்களுக்கும், நீங்கள் யாரைப் பகைத்தீர்களோ அவர்களுக்குமிடையே, அல்லாஹ் அன்பை ஏற்படுத்தி விடக் கூடும், அல்லாஹ் ஆற்றலுடையவன்" - (அல்குர்ஆன் 60:7)

"உன் பகைவனை அளவோடு வெறு ! ஒருநாள் அவன் உன் நண்பனாக ஆகலாம்" (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்).

"எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புத் தேடுபவர்களே!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆக, இறைவன் நாடினால், எதுவும் சாத்தியமே ! இதை அரசியல் கட்சிகள் / இயக்கங்களின் தலைவர்கள் அனைவரும் ஓன்று கூடி, சிந்தித்து ஒரே தலைமையின் கீழ் செயல்பட முயற்சிக்க வேண்டும்.

இன்றொன்றையும் சொல்லியாக வேண்டும், மார்க்க விஷயங்களில், பிரச்சாரத்தில் கொள்கைகளை விளக்கி ஏக இறைவனையே வணங்க வேண்டும் என்ற உயரிய கொள்கையைக் கொண்ட எல்லா முஸ்லீம் இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குரலாக பிரச்சாரத்தை பலப்படுத்தி, நம் களப் பணிகளை வீரியமாக ஆக்கினால் இன்ஷா அல்லாஹ் கை மேல் பலன் கிட்ட வாய்ப்பாக அமையும்.

கட்டுக் கோப்பான உறுப்பினர்களை கொண்ட இயக்கங்கள் அதன் தலைவர்களின் ஈகோவை மறந்து அல்லாஹ்விற்காக அவைகளை துறந்து செயல்பட்டால், ஒரே குரலாக மார்க்கப் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்ல முடியும்.

அரசியலுக்கு ஒரு கட்சி என்றும் மார்க்கம் போதிக்க மற்றொரு இயக்கமென்றும் இரட்டைக் குழாய் துப்பாக்கியாக, செயல்பட முடியும். ஒரே குரலில், ஒரே முகம் கொண்டு, ஒரே லட்சியம் என வரும்போது இன்ஷா அல்லாஹ் நிறைய சாதிக்க இயலும்.

இந்த வேண்டுகோளை அனைத்து இயக்கங்களின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த பதிவின் வாயிலாக தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

ஏக இறைவன் அல்லாஹ்வுக்காக, நம் இதயத்தில் என்றும் நிலைத்து இருந்து கொண்டிருக்கும், இறைத் தூதருக்காக செய்ய மாட்டீர்களா ?

இறைவன் நாடினால் தொடரும்

இப்னு அப்துல் ரஜாக்

18 Responses So Far:

Shameed said...

கட்டுரையாளரின் ஆதங்கம் நூற்றுக்கு நூறு உண்மையோ
எதற்கும் கட்டுரையாளர் கவனமாக இருப்பது நல்லது காரணம் இவர் ஒற்றுமையை பற்றி சொல்லி இருப்பதால் இயக்க குஞ்சிகளுக்கு ஒற்றுமை பிடிக்காது அதனால் குஞ்சிகளிடம் இருந்து என்னேரமும் போனில் மிரட்டல் வரலாம் அதுதான் இயக்க இஸ்லாமிய கொள்கை!!!

Ebrahim Ansari said...

//தன் பிள்ளைகள் டாக்டர், எஞ்சினியராக வேண்டும் அதன் மூலம் பெண் வீட்டைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்று ஆண் மகனைப் பெற்ற பெற்றோரும் என் மகள் மெத்தப் படித்தவள் என்று தன் மகளைப் பெற்றோரும் பீற்றிக் கொள்கிறார்களே தவிர, என் மகன் அல்லது மகள் தொழக் கூடிய, குர்ஆன் ஓதக்கூடிய, அல்லாஹ்வையும், அவன் தூதரையுமே பின்பற்றக் கூடிய ஒரு முஸ்லிம் என்று சந்தோஷப்படுகிறோமா? அவர்களை அப்படி வளக்கிறோமா ? அவ்வாறு செய்ய ஏவுகிறோமா ? இப்படி எண்ணுபவர்களின் சதவிதம் மிகக் குறைவு. அதனால்தான் முஸ்லிம் குடும்பத்தில் கூட இவ்வாறெல்லம் நடக்க அரம்பித்து விட்டது.அப்படி மார்க்கத்தை - அடிப்படை இஸ்லாமிய அறிவை ஊட்டவில்லை என்றால் இது தொடர் கதை ஆகிவிடும்.//

மிகவும் கவனிக்கப்படவும் கவலைப்படவும் வேண்டிய கட்டுரையின் பகுதி இது.


sheikdawoodmohamedfarook said...

//முஸ்லிம் அரசியல் கட்சிகள் சமுதாய இயக்கங்கள்// இஸ்லாமிய சமுதாயத்தை மார்க்க நெறிமுறை வழியில் கொண்டுசெல்லும் பணியில் அரசியல் கட்சிகளை கொண்டுவந்தால் ''ஆப்பத்துக்கு சண்டை போட்ட இரண்டு பூனைகள் குரங்கை பஞ்சாயத்துக்கு அழைத்த'கதை' போல முடியும்.அங்கேபோனால் ஆப்பம் பூனைக்கி கிடைக்காது.மேலும்பூனை கை காலுடன்திரும்புமாஎன்பதும் சந்தேகமே! நிலைமை இன்னும் மோசமாகும்.இன்றைய நிலையில் யாரும் யாருடைய சொல்லையும் காதுகொடுத்துகேட்பதாக இல்லை! சமூகம் போகும் போக்கைக் பார்த்து நம்மால் ஆதங்கப்பட முடியுமே தவிர வேறுஏதும் செய்யமுடியாது.இதற்க்கு தீர்வு அல்லா விடமிருந்துதான் வரவேண்டும்.அதற்க்கு அவனிடமே கையேந்து வோம்!

adiraimansoor said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

//அரசியலுக்கு ஒரு கட்சி என்றும் மார்க்கம் போதிக்க மற்றொரு இயக்கமென்றும் இரட்டைக் குழாய் துப்பாக்கியாக, செயல்பட முடியும். ஒரே குரலில், ஒரே முகம் கொண்டு, ஒரே லட்சியம் என வரும்போது இன்ஷா அல்லாஹ் நிறைய சாதிக்க இயலும்.//

நல்ல யோசனை!

adiraimansoor said...

மிக அருமையான கட்டுரைதான் இந்த ஏக்கம் ஈகோ உள்ள தலைவர்களைத் தவிற பெறும்பாலேனோர்களின் மனதில் உள்ளதை சகோதரர் அப்துல் ரஜாக் அவர்களுடைய மகனார் தனது ஆதங்கத்தை இங்கு பதிவு செய்து இருக்கின்றார் சந்தோசம் இதே கருத்தை பல சகோதரர்களும் பலமுறை பதிந்துவிட்டார்கள் சமீபத்தில் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவார்களும் விலா வாரியாக விளக்கம் கொடுத்து ஒற்றுமைக்கு பெரிதும் பாடுபட்டார்கள் ஆனால் சுக்கு நூராக உடைந்த கிளாசை ஒட்டவைக்க முடியவில்லை. முடியாது அதை உருக்கி புதியவடிவம் கொடுக்காதவரை அதை ஒன்றும் செய்ய முடியாது அது ரா மெட்டீரியல்தான் புரியவில்லையா? உடைந்த மனசுகள் ஒன்று சேர வேண்டுமென்றால் எல்லா இயக்கங்களையும் தடை செய்யவேண்டும் அப்பொழுதுதான் சமுதாயம் உருப்படும் சமுதாயத்திற்கு ஒரு நல்ல விடைகிடைக்க வழி கிடைக்கும். சமுதாயத்திற்கு நண்மை செய்கின்றோம் என்பதாக சொல்லிக்கொண்டு ஒவ்வொரு இயக்கமும் சமுதாயத்தை படு பாதாளத்தில் தள்ளிவிட்டார்கள்

பாரூக் காக்க சொல்வது போன்று
//// ''ஆப்பத்துக்கு சண்டை போட்ட இரண்டு பூனைகள் குரங்கை பஞ்சாயத்துக்கு அழைத்த'கதை' போல முடியும்.அங்கேபோனால் ஆப்பம் பூனைக்கி கிடைக்காது.மேலும்பூனை கை காலுடன்திரும்புமாஎன்பதும் சந்தேகமே! நிலைமை இன்னும் மோசமாகும்.இன்றைய நிலையில் யாரும் யாருடைய சொல்லையும் காதுகொடுத்துகேட்பதாக இல்லை////
அப்படி கேட்டுவிட்டால் நம் சமுதாயம் உருப்பட்டுவிடுமே உருப்படவிடுவோமா என்று ஒருத்தரை ஒருத்தர் அடிச்சி சாப்பிடும் அளவுக்கு தங்களுக்குள் குரோத்ததை வளர்த்து வைத்துள்ளது மட்டுமல்லாது அப்பாவி இளம் வாலிபர்களையும் அந்த வலையில் சிக்கவைத்துவிட்டார்கள் என்பது கசப்பான உண்மை
உண்மையிலேயே சமுதாய அக்கரை இருந்தால் தானாக எல்லா இயக்கங்களும் இயக்கத்தையோ கட்சியையோ கலைத்துவிடவேண்டும் கலைத்துவிட்டு புதிதாக வேறு ஒரு புதிய ஒரே கட்சியாக உருவாகினால் ஒழிய இப்பொழுது உள்ள ஈகோவை ஒழிப்பது சாத்தியமைல்லை

சமீபத்தில் டில் முஸ்லீம் லீக் தலைவர் காதர் முஹைதீன் ஒரு கூட்டத்தில் ரொம்ப மோசமாக பேசியுள்ளார் அந்த வீடியோ என்னிடம் உள்ளது அதை அப்படியே தருகின்றேன்.
“முஸ்லீம்களுக்கு தொழுவது எப்படி கடமையோ, நோன்பு பிடிப்பது எப்படி கடமையோ, நபிகள் நாயகம் பெயரைக்கேட்டதும் ஸலவாத்து சொல்வது கடமையோ அது போன்று ஜன நாயக முற்போக்கு கூட்டனியை இந்த தேர்தலில் வெற்றி பெற செய்வது நமது பர்லான கடமை”
இப்படி தலைவர்கள் இருந்தால் இருந்தால் சமுதாயம் எப்படி உருப்படும்
எதுக்கு எதை கம்பேரிசம் செய்வது என்று கூட தெரியாத தலவர்கள் பின்னாடி போவதினால்தான் நம் சமுதாயத்தை அடகு வைத்துவிட்டார்கள்
அல்லாஹ்வை தவிற நம்மை பாது காக்கா யாரும் இல்லை என்பதை ஒவ்வொருத்தரும் புரிந்து கொண்டு இந்த கூடாரம் கலைய கையேதுங்கள் அல்லாஹ்விடம் இதை தவிற நமக்கு இப்போதைக்கு வேறு ஆயுதம் இல்லை.

இப்னு அப்துல் ரஜாக் said...

கருத்திட்ட ஆனவருக்கும் நன்றி!

மன்சூர் மச்சான் அவர்கள் சொன்னது போல,நானும் காதர் முஹைதீன் அவர்களின் பேச்சைக் கேட்டேன்.கேட்டு விட்டு,கொதித்து போய் அவருக்கு போன் செய்தேன்.நீங்கள் அவ்வாறு பேசியது மிக பெரிய தவறு,உங்களைப் போன்ற தலைவர்கள் இப்படி பேசினால்,உடனே எல்லாரையும் reach ஆகும்,எனவே வாபஸ் வாங்குங்கள்,இனி அவ்வாறு பேசாதீர்கள் என்றேன்,சரி என்றார்.இது போன்ற தலைவர்களிடமிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக.நீங்களும் அவருக்கு போன் செய்து,உங்கள் கண்டனத்தை பதியுங்கள்,அவர் போன் எண் 9500080786 .

அதே போன்று வேறு யாரும் இப்படி பேசினாலும் நாம் உடனடியாக தொடர்பு கொண்டு பேசும்போது அவர்கள் திருத்திக் கொள்வார்,அல்லது இனி பேசமாட்டார்கள்,அல்லது நமக்கு அல்லாஹ்வின் கூலியாவது கிடைக்கும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

முஸ்லிம் லீக்கை தோற்கடிப்போம்

இது கிளிக்குங்கள்

http://peacetrain1.blogspot.com/2014/03/blog-post_30.html

sheikdawoodmohamedfarook said...

முஸ்லிம்லீக் தலைவர்காதர் மைதீன் சொன்னது//ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறசெய்வது முஸ்லிம்களின் பார்லான கடமை//காதர்மைதீன்ஆலிம்சாஅவர்களே! ஒருசந்தேகம்! ஒது செய்யாமல்முஸ்லிம் லீக்கை வெற்றிபெறசெய்தால் அது கூடுமா?

Ebrahim Ansari said...

பேராசிரியர் காதர் முகைதீன் ஒரு சிறந்த கல்வியாளர். சிந்தனையாளர். பல வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து வைத்து இருப்பவர். பழக எளிமையானவர்.

ஆனால் அரசியலில் ஒரு கருத்தை தடம் புரண்டதுபோல் சொல்லி அவப் பெயர் வாங்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப் பட்டு இருக்கிறார். ஒரு ஊரறிந்த பேராசிரியர் இப்படி விளையாட்டாக மார்க்க விஷயத்தை பேசும் அளவுக்கு அரசியல் ஈடுபாடும் ஆர்வமும் பெரிய பேராசிரியரின் மூளையைக் கூட மழுங்கச் செய்து விட்டது.

பல முனைகளில் இருந்தும் அவருக்கு கண்டனக் கணைகள் பாய்கின்றன.

ஆனால் ஒன்று ,

நான் அறிந்தவரை தவறை தவறு என்று ஒப்புக் கொள்வார்- அதற்காக மன்னிப்புக் கேட்பார்- மனம் வருந்துவார். அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் கோருவார். நான் சொன்னதுதான் சரி என்று வீம்பு பிடிக்க மாட்டார்.

இறைவன் அவரை மன்னிப்பானாக! நாமும் அவருக்காகக் து ஆச செய்வோம்.

புதிய ஒரு செய்தி நேற்று புதிதாக ஒரு இஸ்லாமிய இயக்கம் மறுமலர்ச்சி மனித நேய மக்கள் கட்சியோ அல்லது என்ன இழவோ என்று ஒருவர் ஆரம்பித்து இருக்கிறார். எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. புதிதாக ஒரு பிரிண்டிங்க் பிரஸுக்கு லெட்டர் பேடு அடிக்கும் வேலையைத் தவிர இதனால் சமுதாயத்துக்கு ஒன்றும் பயன் விளையப் போவதில்லை.

அதிரைக்காரன் said...

முஸ்லிம் லீக் (அப்துல் ஸமது vs. அப்துல் லத்தீப் என்று) இரண்டாகப் பிரிந்ததால், தமிழக முஸ்லிம்களுக்கு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. திராவிட அரசியல் கட்சிகளின் சிறுபான்மை பிரிவுகளாகச் செயல்பட்டதால் ஏற்பட்ட விரக்தியை, தமுமுக ஈடுசெய்தது. தமுமுகவின் எழுச்சி தமிழக முஸ்லிம்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது என்றால் மிகையில்லை. வெறும் ஓட்டுவங்கியாக இனியும் முஸ்லிம்கள் இருக்க முடியாது என்ற சிந்தனையை ஆட்சியாளர்களிடம் விதைக்குமளவுக்கு தமுமுகவின் எழுச்சி இருந்தது.

2004 ஆம் ஆண்டின் மத்தியில் அதன் மேல்மட்ட தலைவர்களிடம் எழுந்த ஈகோ, தான் என்ற அகம்பாவம் காரணமாக தமுமுக, சகோ.பிஜே தலைமையில் பிளவுண்டது. பிளவுக்கான காரணமச்க சிலரின் அரசியல் ஆர்வமும், சிலரின் மார்க்கப்பிரச்சாரமும் சொல்லப்பட்டன. இதனை நம்பியவர்களில் எவரும் இந்த இரண்டுமே நமது இருகண்கள் என்று சொல்லாமல், பரஸ்பரம் வெறுப்பை உமிழ்ந்து, பிளவுபட்ட முஸ்லிம் லீக்கை விட மோசமான நிலைக்கு தமிழக முஸ்லிம்களைத் தள்ளி, தமக்குத்தாமே சூனியம் வைத்துக்கொண்டு, இரண்டு பெரும் அரசியல் கட்சிகளின் செல்லப் பிள்ளைகளாக மாறி, தேர்தலுக்குத் தேர்தல் தங்கள் இருப்பைக்காட்டவும், தாங்களே முஸ்லின்களின் பிரதிநிதி என்றும் காட்ட முனைகின்றனர்.
******
இனியும், இரு அமைப்புகளும் ஒன்று சேரும் என்ற நம்பிக்கை அற்றுப்போய் பல ஆண்டுகளாகி விட்டன. இவர்களின் ஈகோவினால் எழும் பேரிழப்புகள் சங் பரிவாரங்களால் ஏற்படுவதைவிடவும் மோசமாகியது விடுமோ என்று அஞ்சும் மனநிலைக்குக் கொண்டுவந்துள்ளது.
ஆகவே, இந்த மக்களவைத் தேர்தலோடு இவ்விரு அமைப்புகளையும் கலைத்து விட்டு, மார்க்க அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்களால் ஒருங்கிணைந்த புதிய அமைப்பை உருவாக்கி, 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவேண்டும்.

கூட்டணியாக இருந்தாலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைத்தான் ஒதுக்குகிறார்கள் என்பதால், பாமக செய்ததுபோன்று முஸ்லிம்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளில் வேட்பாளர்களை இந்த புதிய கட்சி அறிவிக்க வேண்டும். இதற்கு ஒப்புக்கொள்ளும் கட்சிக்கு ஏனைய தொகுதிகளில் SDPI ஐ செய்ததுபோல் ஆதரவளிக்கலாம்.

அரசியல் வேண்டாம்,மார்க்கப்பிரச்சாரம் மட்டுமே போதும் என்போர், ஏதாவது நொள்ளைக் காரணங்ககைச் சொல்லி மீண்டும் அரசியல்பண்ணாமதிருந்தால், அடுத்த தலைமுறை முஸ்லிம்களாவது நிம்மதியாக வாழ்வர்.

Ebrahim Ansari said...

//அரசியல் வேண்டாம்,மார்க்கப்பிரச்சாரம் மட்டுமே போதும் என்போர், ஏதாவது நொள்ளைக் காரணங்ககைச் சொல்லி மீண்டும் அரசியல்பண்ணாமதிருந்தால், அடுத்த தலைமுறை முஸ்லிம்களாவது நிம்மதியாக வாழ்வர்.//

நல்ல கருத்து ஆனால் நடக்குமா?

நேற்று முத்துப் பேட்டையில் நடந்த கேவலம் தெரியுமா?

http://theadirainews.blogspot.com/2014/03/blog-post_8016.html

Ebrahim Ansari said...

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்
பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் பேசியதை
27.3.14 தேதியிட்ட “மணிச்சுடர்” வெளியிட்டுள்ளது:

“இஸ்லாமிய முறைப்படி சொல்லவேண்டுமென்றால்
பர்லு கடமையான நோன்பு நோற்பது,தொழுகை கடமை போன்று ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பது நமது பர்லு கடமை போன்றதாகும்.”

இந்தப் பேச்சுக்காகத்தான் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் மீது முகநூலில் பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

நோன்பையும் தொழுகையையும் எப்படிக் கட்டாயக் கடமையாக(பர்லு) கருதுகிறீர்களோ அதைப்போல் திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பதையும் ஒரு கட்டாயக் கடமையாகக் கருதுங்கள் எனும் பொருள்தான் அவர் பேச்சில் இருக்கிறதே தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதைப் போய் மார்க்க விரோதமான பேச்சு என்கிறார்கள்.

அப்படியானால் இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு பேராசிரியர் காதர் முகைதீனைத் திட்டுவதற்காக அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லாம் இஸ்லாமிய விழுமங்களுக்கு ஏற்ற வார்த்தைகள்தானா?

“எந்த ஒரு கூட்டத்தார் மீது்ம் நீங்கள் கொண்டிருக்கும் கோபம்
உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிட வேண்டாம்.” (குர்ஆன்)

நன்றி - சிராஜுல்ஹஸன்
From FB

Unknown said...

//பிளவுக்கான காரணமச்க சிலரின் அரசியல் ஆர்வமும், சிலரின் மார்க்கப்பிரச்சாரமும் சொல்லப்பட்டன.//

'அரசியல் இஸ்லாம்' பேசுவோர் எல்லோரும் - 'ஜமாத்தே இஸ்லாமி' முதல் 'இஹ்வானுல் முஸ்லீமீன்' வரை எதிர்நோக்கும் முக்கிய சவாலே 'சமரசம்' தான்.

அதே நேரம் 'மாறும்' அரசியல், இன மற்றும் மத ரீதியான மக்கள் தொகை மாற்றதிர்க்கேர்ப்ப இந்த 'அரசியல் சமரசமும்' மாறும்.

உதரணமாக, யூதர்களுக்காக மட்டுமே வந்த ஏசு நாதர் என கிருத்துவர்கள் கூறும் நபி ஈசா (அலை) அவர்கள் பிரச்சாரம் யூதர்களிடம் தோல்வி அடைந்த நிலையில் அவர் இறைவனால் உயர்த்தபடுகின்றார்.

'யூதர்கள்' நபி ஈசா (அலை) அவர்களின் பிரச்சாரத்தை எதிர்த்தாலும், அவர்களது கருத்துக்கள் 'ரோமானியர்கள்' மத்தியில் பரவி 'மக்கள் ஆதரவை பெற்று' பெரும்பாலானோர் பின்பற்ற துவங்குகின்றனர்.

இதனை கவனித்த ரோமானிய சக்கிரவர்த்தி கான்ஸ்டான்டைன், இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் - ரோமானியர்களின் மூன்று கடவுள் கொள்கையை புகுத்தி - இறைவன் ஒரு கடவுள், இறைவனின் மகன் என்ற அபாண்ட பழியுடன் 'தன்னை கடவுள் என்று கூறாத' நபி ஈசாவை கடவுளாக்கி, அதோடு 'புனித ஆவியையும்' கடவுளாக்கி - கிருத்துவ மதம் என்ற புது மதத்தை உருவாக்கி 'ரோமானிய முக்கடவுள் மதத்துடன்' சமரசம் செய்து மக்களை வழி கெடுத்தார்.

இதே போன்று தான் 'சிரியாவில் உள்ள 'ரஷ்ய கிர்த்துவர்களுடன்' திருமண உறவில் கலந்த 'ஷியாக்களின்' சமரசத்தால் உருவான ஆளைவிட் ஷியாக்கள் அல்லாஹுவுடன், முஹம்மது நபி மற்றும் சல்மான் பார்சி ஆகியோர் கடவுள் என்று கூறி, இப்போது சிரியாவின் 4 லட்சம் அப்பாவி முஸ்லீம் பெண்கள், குழந்தைகளை கொன்று ரத்த குளியல் செய்து கொண்டிருக்கின்றனர்.

Unknown said...

ஆக 'அரசியல் இஸ்லாம்' பேசுவோர் இந்த இரு உதாரணங்களில் ஏதாவது ஒன்றில் வந்து நிற்பார்கள் என்பது 'கொள்கை பிடிப்புள்ள', 'வரலாற்று அறிவுள்ள' முஸ்லீம்களுக்கு தெரியும், தெரியவேண்டும்.

உதாரணமாக 'அரசியல் இஸ்லாம்' பேசும் 'ஜமாத்தே இஸ்லாமி' - அதே காரணத்தால் தான் 'ஆயிஷா (ரலி) மற்றும் உமர் (ரலி), உஸ்மான் (ரலி), காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டும் 'ஷியாக்களுடன்' சமரசம் செய்து கொள்ள விரும்புகிறது - எனினும் அந்த சமரசம் பயன் தராத நிலையில் ஷியாக்கள் குறித்த உண்மையை துணிவாக கூற முடியாமல் மூன்று நாடுகளில் தோல்வியை தழுவியது.

முஸ்லீம் லீக் 'ஷியாக்கள்' மற்றும் 'உருது மொழி வெறியர்களின்' கட்சியின் காதர் மொஹிதீன் இதனால் 'இஸ்லாத்தில்' புது 'பர்ளுகளை' உருவாக்க முடிகிறது.

இதே காரணத்தால் தான் 'இடித்து தரை மட்டமாக்க பட வேண்டிய' தர்காக்களை காக்க 'சமாதி வணங்கிகளுடன்' சேர்ந்து தமுமுக போராட்டம் நடத்துகிறது.

இதே காரணத்தால் தான் முஸ்லீம்களை மாதக்கணக்கில் இழுத்து சென்று ஷியாக்கள் வணங்கும் 'சூபிகளை' நம்பிக்கை கொள்ளும் 'சூபி வெறியர்களாக', உருது மொழியை 'இஸ்லாமிய மொழி' என்று பொய் சொல்லி உருது மொழியை கற்க வைத்து மொழி வெறியர்களாகவும் மாற்றுகிறது, முட்டாள் பாத்வாக்களை அள்ளி வீசும் 'தியோபந்தின் தப்லீக்'.

எனவே தனது ஈமானை காத்துகொள்ளும் ஒரு 'முஸ்லீமாக' இருக்க விரும்பிய 'பீஜே' ஷியாக்களோடு, சமாதி வணங்கி பறேல்விகளோடு சமரசம் காண விரும்பாததால் யாவரின் நிந்தனையையும், கெட்ட வார்த்தைகளோடு கூடிய அசிங்கமான பேச்சுக்களையும், சமாதி வணங்கி திருட்டுபயல்களின் கிண்டல் ஏச்சு, பேச்சு, கவிதைகளையும் எதிர் நோக்கி அல்லாஹுவுக்காக 'தௌஹீதை' சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சரி அப்படி என்றால் பீஜே தவிர மற்றவர்கள் எல்லாம் 'ஈமான்' இல்லாதவர்களா? என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு பதில் என்னவென்றால் - ஈமான் என்பது எளிதாக கிடைக்கும் கடை சரக்கல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலாவதாக ஈமான் இறைவன் அளிக்கும் பிச்சை என்பதையும் அந்த பிச்சையில் ஒரு மனிதனின் அறிவு மற்றும் இறை அச்சம் மற்றும் உறுதி ஆகியவை இடம் பெறுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Unknown said...

இந்த வகையில் மேற்கூறிய உலக வரலாற்றிலும், இஸ்லாமிய வராலருகளிலும் நடந்த அரசியல் சமரசங்கள் அதனால் இஸ்லாத்திற்கும், முஸ்லீம்களுக்கும் விளைந்த கேடுகளை அறிந்தோர் மட்டுமே 'அரசியல் இஸ்லாம்' - 'இஸ்லாத்திற்கு எதிரானது' என்பதை உணர்ந்து - தாமரை இல்லை தண்ணீராக தமது 'இஸ்லாத்தை காப்பாற்றி' - உள்ள அரசியல் தலைவர்கள் யாரோ - அவர் ஹிந்துவோ, கிருத்தவரோ அல்லது ஷியாவோ அவரிடம் உண்மையை எல்லா கஷ்டம், அவமானங்களுக்கும், இழப்புக்களுக்கும் மத்தியில் - அல்லாஹுவுக்காக கூற இயலும்.

அல்லாஹுவுக்காக 'அரசியல் மற்றும் மொழி மற்றும் இன ரீதியான' சமரசம் செய்யாமல் இதை செய்வதால் தான் - அல்லாஹுவை மட்டுமே வணங்க வேண்டும், அவுலியாக்கள் சிபாரிசு என்று வணக்க தளங்களாக, அல்லாஹுவின் சாபத்தை வரவழைக்கும் தர்கா என்னும் 'சமாதிகளை' இடித்து தள்ள வேண்டும், சூபியாக்கள் என்போர் போலிகள், இமாம்கள் பின்பற்ற தக்கவர்கள் அல்ல - அல்லாஹ்வின் கட்டளை மற்றும் அவனது ரசூலின் வழிகாட்டலை மட்டுமே 'தக்லீது செய்து' கேள்வி கேட்காமல் 'முஸ்லீம்கள்' பின் பற்ற வேண்டும் என்று துணிச்சலாக பீ ஜே போன்ற அறிஞர்கள் அல்லாஹுவுக்காக உண்மையை கூற முடிகிறது - அதே நேரம் அவர் செய்த தவறுகளையும் பகிரங்கமாக கூறி என்னை தக்லீது செய்யாமல் நீங்கலாக முயன்று இஸ்லாத்தை கற்று பின்பற்றுங்கள் என்று அல்லாஹுவுக்காக கூற முடிகிறது.

முஸ்லீம்கள் பணம், அரசியல் செல்வாக்கு, சொகுசுகள் என்று ஆசைப்பட்டு எதற்கு பின்னால் ஓடினாலும் அவர்கள் 'அடிமைப்பட்டு' அவர்களது 'ஈமான்' ஷியாக்களின் சமாதிகளிலும், சில நேரம் 'சிலை வணங்கும்' கோவில்களிலும் பலி கொடுக்கப்படும் என்பதை உணர வேண்டியது அவசியம்.

மனிதர்களான நமக்கு நமது எஜமானான அல்லாஹு மட்டுமே உணவையும், மரியாதையையும், செல்வத்தையும், அரசியல் அதிகாரத்தையும் வழங்க கூடியவன் என்று உறுதியாக நம்பியவர்களாக 'அல்லாஹுவின் மீதான' ஈமானில் - அரசியல், பதவி, பணம், பகட்டு, மண், பொன், பெண் - என்று எதற்கும் சமரசம் செய்யாத மூமின்களாக நாம் திகழந்தால் அல்லாஹ் நாம் அவனிடம் கேட்பதை 'பிச்சையாக' நம்மீது விட்டெரிய கூடிய கொடையாளன் என்பதை உணர்ந்து ஈமானில் உறுதியுடன் இருப்போம். இம்மை மறுமை வெற்றி பெறுவோம். ஆமீன்.

sheikdawoodmohamedfarook said...

சகோதரர் Khan testant சொன்னது //கேட்பதை பிச்சையாக நம்மீது விட்டெரிய கூடிய கொடையாளன்// என்பதை ''கேட்பதை நமக்கு கருணையுடன் தரும் கொடையாளன்''என்று சொன்னால்' மிக நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.!

Unknown said...

//கேட்பதை பிச்சையாக நம்மீது விட்டெரிய கூடிய கொடையாளன்//

மேற்கண்டவாறு நான் கூறியதை விட ஒரு படி மேலே சென்று கீழ்கண்டவாறு கூறியிருந்தால் தான் அது சரியாக இருக்கும்:

"நன்றி கெட்ட அவசரக்காரர்களாக, இஸ்லாமிய அறிவை தேட முயலாதவர்கலாக, தகுதியற்றவர்களாக திரியும் முஸ்லீம்களான நாம், நமது பலவீனமான ஈமானுடன் அல்லாஹ்விடம் கேட்பதை 'பிச்சையாக' நம்மீது விட்டெரிய கூடிய கொடையாளன்" - என்று கூறியிருக்க வேண்டும்.

முஸ்லீம்களான நமது நிலை உண்மையில் நான் கூறியதை விட பல மடங்கு மோசம் என்பது தான் நான் அறிந்த வரையில் கண்ட, அறிந்த உண்மை.

நம்மை போன்றவர்களுக்கும் கருணை செய்து 'பிச்சை போடும்' அந்த பெருங்கருனையாலனான அல்லாஹ் மிக தூய்மையானவன் என்பதே உண்மை நிலை, என்பதில் எனக்கு மாற்று கருத்தே இருக்க வாய்ப்பில்லை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு