Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அம்மாவுக்கு அடித்த யோகம் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | March 10, 2014 | , , , , , ,

முகநூலில் முகம்காட்ட  முடியவில்லை. நிமிடத்திற்கொரு ஸ்டேடஸ், LIKE,SHARE,கருத்து! எல்லாமே நடப்பு அரசியலை அக்குவேறு ஆணிவேறாக அலசி, துவைத்துக் காயப்போடும் ஆக்கங்கள். கடந்த இருநாட்களாக பச்சைக்கலர் ப்ரொஃபைல் போட்டோவுடன் தம்பிகள் வரிந்து கட்டிக்கொண்டு அதிமுகவுக்கு ஆதரவாக 'தாவா' பணியைத் தொடங்கி விட்டனர். போதாக் குறைக்கு "ஸ்டார் பேச்சாளரின்" விளக்கங்கள் வேறு. ரசிகக் குஞ்சுகளுக்கு சொல்லவா வேண்டும்? ஒட்டுமொத்த தொண்டர்களின் ஒரே குரல் அண்ணன்தான்!

இடஒதுக்கீடுக்கு அதிமுக ஆணையம் அமைத்திருக்கிறதாம். அதற்கு நன்றிக்கடனாக அதிமுகவை ஆதரித்து அண்ணன் பயான் செய்யப்போவதாக எழுதிக் கொடுத்து விட்டாராம்! நல்ல விசயம்தான்! ஆனால், ஒருவாரம் முன்புதான் ஆணையம் அது-இது என்றெல்லாம் சொல்லி முஸ்லிம்களை (Including முஃமீன்கள்) ஏமாற்ற முடியாது. கையில காசு! வாயில தோசை! இடஒதுக்கீடு வழங்கினால் ஓட்டு; இல்லாவிட்டால் வேட்டு என்று "பஞ்ச்" டயலாக் எல்லாம் பறந்தது! 

ஒருவாரம் கெடு! ம்ஹூம்.... எருமை மாட்டுமீது மழை பெய்ததுபோல் எனக்கென்ன என்று 40 தொகுதிகளுக்கும் வேட்பாளார்களை அறிவித்து விட்டு, பிரச்சாரமும் தொடங்கப்பட்டு விட்டது. பொல்லாத கெடு விதிக்காமல் இருந்திருந்தாலாவது ஓ.பன்னீர் செல்வத்திடம் சொல்லி மாப்பு வாங்கியிருக்கலாம் அல்லது ஜும்மா பயானில் ஏதாவது சொல்லி சமாளித்திருக்காலம். சைத்தான் விடுவானா? வழக்கம்போல் ஒரு பேச்சுக்குச் சொல்லிப் பார்ப்போமே என்று அவசரப்பட்டு கெடு விதித்ததால் மரியாதை நிமித்தமான அழைப்புகளும் ஒரேடியாக நின்று போச்சு! 

பிப்ரவரி 23 ஈரோடு பொதுக்குழுவுக்குப் பிறகு விதித்த ஒரு வாரம் கெடு, மார்ச்-2 ஆம் தேதியோடு முடிந்ததது! மாநில அவசர செயற்குழு! (என்ன அவசரமோ?) தேர்தல் நிலைப்பாட்டை முடிவு செய்து பிரதமராகும் கனவில் மண்ணை அள்ளிப் போடும் பிரகடனம் வெளியாகும் என்று வெப்சைட் மேல் மவுஸ் வைத்து காத்திருந்தும் நாட்கள் ஓடியதுதான்! விபரங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில்... என்று ஒரு வாரமாக வெறிச் சோடியது. ஒரு நாளைக்கு 10000 பேர் வந்து செல்லும் வெப்சைட் அது! அல்லாஹ் நாடவில்லை என்று சும்மா இருந்திருக்கக் கூடாதா?

மார்ச் - 7 ஆம் தேதி ஜெயா ப்ளஸில் சேனலில் ஃப்ளாஸ் நியூஸ்! அதிமுகவுக்கு ஆதரவு!! முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படியுங்கள். படிச்சாச்சா? அப்படியே மார்ச்-2ஆம் தேதியிட்ட நாளிதழ் செய்தியையும் கொஞ்சம் படியுங்கள்.  
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் முதன்மைச் செயலர் கே.அருள்மொழி, (முதல்வர் அல்ல என்பதைக் கவனிக்கவும்), தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் செயலருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு ஜவ்ஹீத் (இப்படிதான் உள்ளது) ஜமாத்தின் தலைவர் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் (டாஸ்மாக் அடங்குமா என்று தெரியவில்லை) இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கோரிக்கை அடங்கிய மனுக்களை தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்.அதுகுறித்து ஆய்வு செய்து, தகுந்த பரிந்துரையை அரசுக்கு விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றாகக் கவனிக்கவும்,அண்ணனின் விளக்க உரையிலும், தொண்டரடிப் பொடியாழ்வார்களின் பகிர்வுகளிலும் அம்மா ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளதால் ,ஆதரவு என்று சொல்கின்றனர்.

அரசுதுறையைச் சார்ந்த இரு அலுவலர்களிடையே நடந்த கடித பரிமாற்றத்தை (Internal Communication) ஆணையம் (Commission) அமைத்திருப்பதாக சொல்கின்றனர். அதுவும் நிபுணர்களும்?! இதையே வலியுறுத்தியதால் ஆணையம் அமைத்திருப்பதும், அதன் பரிந்துரைப்படி ஒதுக்கீடு பெறுவதுதான் அறிவார்ந்த செயலாம்! (இந்த நிபுணர்கள் எல்லாம் ,அண்ணன் கெடுவிதித்த போது எங்க போனாங்களோ?)

1) தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, புதிதாக எந்த அறிவிப்பும் அறிவிக்க முடியாது. இதுபோல் வாக்காளர்களைக் குறிவைக்கும் அறிவிப்புகளுக்கு என்றே முட்டுக்கட்டை போட என்ற சுப்பிரமணிய சாமிக்கள் காத்திருக்கிறார்கள்.

2) மேற்சொன்ன அமைப்புகளின் கோரிக்கைகள் மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ்வும் இதுகுறித்து கோரிக்கை வைத்துள்ளதும் முதலமைச்சரின் கவனத்திற்கு ஏற்கனவே வந்திருக்கும் இந்த நிலையில், அரை கோடி முஸ்லிம் (Including ஏழு லட்சம் முஃமீன்) வாக்காளர்களைக் கொண்டுள்ள மக்கள் பேரியக்கம் கெடு விதித்திருக்கும் நிலையில், கண் துடைப்பிற்காக இல்லாவிட்டாலும் பெயரளவில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கலாம். இதை யாரும் தடுக்கவும் முடியாது.

3) முன்னதாக, வேட்பாளர் பட்டியலிலாவது குறைந்தது 2-3 முஸ்லிம் வேட்பாளர்களை, அதுவும் அதிமுகவைச் சார்ந்த இஸ்லாமிய அடிமைகளை அறிவித்திருந்தாலும் 5-7% ஒதுக்கீடு என்று ஓரளவுக்கு நம்பச் செய்திருக்கலாம்.

மேற்கண்ட எதுவுமே இன்றி, பிரச்சாரத்தின் முதலிரண்டு நாட்கள் எதிர்பார்த்த அளவு கூட்டம் கூடாததாலும், முஸ்லிம்கள் கணிசமாக வாழும் கடலோர மாவட்டங்களில் அடுத்தடுத்து பிரச்சார பயணம் இருப்பதாலும் எதையாவது செய்ய வேண்டும். பிரியானியோ, டாஸ்மாக் கட்டிங்க்ஸ் இல்லாமல் இலவசமாக கூடும் கூட்டத்தை ஏன் இழப்பானேன்? 

மேலும், நம்பவைத்து கழுத்தறுபட்ட இரு கம்யூனிஸ்டுகளும் கனிசமாக நிறைந்துள்ள மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் நெருங்க நெருங்க அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு வயித்தைக் கலக்கியது. அதுவரை கண்டு கொள்ளப்படாமல் இருந்த அமைப்புக்கு வெள்ளிக்கிழமை நல்ல நாளில் அடித்தது யோகம். மதுரை ஆதீனம் அமர்ந்த புனித இருக்கையில் அடக்க ஒடுக்கமாக உட்கார வைத்து அழகு பார்க்கப்பட்டார்.!

ஆணையம் தந்த அம்மாவுக்கு ஆதரவு...!

தவ்ஹீத்கான்

22 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நம்பித்தான் இந்த முடிவா அல்லது மாற்று அணியில் அந்த இயக்கம் இருப்பதால் இந்த கோர முடிவா என்பது படைத்தவனுக்கே வெளிச்சம்.

sabeer.abushahruk said...

// கோர முடிவா //

இரண்டு வார்த்தைகள் - இருபது பக்க விமர்சனம்!

sabeer.abushahruk said...

சல்மான்கான் ஷாருக்கான்லாம் வடநாட்ல ஃபிலிம் காட்றாங்க. அதவிட த்ரில்லாவும் விறுவிறுப்பாவும் இருக்குது இந்த தவ்ஹீதுகான் காட்டியிருக்கிற ஃபிலிம்.

ரொம்பத் தெளிவாத்தான் சொல்றிய. ஆனா, ஏன் இப்டீலாம் நடக்குதுன்னுதான் வெளங்கல.

இதுக்கெல்லாம் உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? ஸனது காட்டுவியலா? சீரியல் பாணியில் வெட்டி வெட்டி ஒட்டி ரிப்பீட்டு காட்டி சுதியேத்ற காணொளி இருக்கா? குறைஞ்சபட்சமா பதிவுசெய்யபட்ட செல்போன் பேச்சாவது இருக்கா?

இப்டீலலாம் கேட்டா கேட்கிற ஆளு பட்டதாரியாவே இருந்தாலும் மறப்புக்குப்பின்னாலிருந்து "தற்குறி" ன்னு சொல்வார் (ஆணோ பெண்ணோ) யாராவது கைநாட்டு.

எல்லாம் நேரம்.

sabeer.abushahruk said...

ஒரு விதத்தில எனக்கு இது நல்லதாவும் படுது. எப்டி?

நிச்சயமா திமுக சார்ந்த அல்லது அதிமுக சார்ந்த கூட்டணிதான் கெலிக்கும். தேசிய கட்சிக்கோ மூன்றாவது அணி பூச்சாண்டிக்கோ இங்கே ச்சான்ஸ் நஹி.

நாம எல்லா பாய்மார்களும் அம்மையாரை மட்டுமோ தலைவரை மட்டுமோ ஆதரித்தால், ஏரியாவாரியாக சிதறிக்கிடக்கும் நம்மாட்களின் வாக்குகளால் ஒரு எம்ப்பியைக்கூட உருவாக்க முடியாமல் போகும்பட்சத்தில் கெலிப்பவர்களிடம் நம்மில் ஒரு பகுதி இருப்பது சாணக்கியத்தனம்தானோ!

தப்புன்னா சொல்லுங்கப்பா திருத்திக்கறேன்.

(பி.கு.: இந்தக் கருத்து தமிழ்மொழியில் இருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது. நம் சகோதரர்கள் யாரேனும் இதே கருத்தை எங்கேனும் சொல்லியிருந்தால் அதை அவரிடமிருந்தே காப்பியடித்தேன் என்பதை முன்கூட்டியே ஒத்துக்கொண்டு நன்றி சொல்லி அமர்கிறேன்)

சோடா ப்ளீஸ்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். இங்கே இட ஒதுக்கீடு என்பது வெறும் கட்டம் கட்டப்பட்ட சட்டத்தின் வழியே ஏட்டுச்சுரக்காயாய் இருக்கிறதே ஒளிய அது சட்டமாக்கப்படவில்லை! அது சட்டமாக்கப்பட்டு அமுலுக்கு வருமா? என்பது(அம்முக்கே தெரியும்=அம்மு ,எம்.ஜி.ஆரின்=ஜெயலலிதா).இதை உணர்த்தும் விதமாகவே இங்கே படம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

sabeer.abushahruk said...

அ.நி.:

கூட்டம் நெறய இருக்கு. பேச்சாளர்கள் கொறவா இருக்கே?

சிறப்புப் பேச்சாளர்கள் வந்து பேசி "என் முகத்திறையை கிழித்து, இந்த லிங்க்கை பார் அந்த லிங்க்கைப்பார் என்று படுத்தி, என்னால் பதில் சொல்ல முடியாமல் பின்னங்கால் பிடறியில் பட ஓடி, பின்வாங்கி" விடு முன் இன்னொன்னையும் சொல்லிடறேன்.

பணம் வாங்கிட்டாங்க பணம் வாங்கிட்டாங்க ன்னு ச்சும்மா கூச்சல் போட்றீங்களே அப்டி வாங்கினாத்தான் என்னன்றேன்.

நம்ம கட்சி/இயக்கம் செல்வ செழிப்போட இருந்தாத்தானே இந்தப் பணநாயக நாட்லே சீவிக்க முடியும்? ஒரு பொய்வழக்கு கிய்வழக்கு போட்டுட்டா அத நடத்றதுன்னா சும்மாவா?

இதே வேலையாப் போச்சு...ஒன்னு சொல்ல முடியலே... மைக்கை ஏன்யா புடுங்குறிய?

அதிரைக்காரன் said...

நண்பர் நிஸாரின் ஃபேஸ்புக் ஸ்டேடசில் இட்ட கமெண்ட்ஸ் (c)

நிஸார், இடஒதுக்கீட்டை உயர்த்தாமல் ஆணையம் அமைக்கிறோம் என்றெல்லாம் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்று சொன்னதுவரை இருந்த பிஜே அவர்கள் மீதான நல்லெண்ணம், அதற்கு நேர்மாறாக, அவர் சொன்னபடியே நிகழ்ந்தும், அந்தர்பல்டி அடித்தபிறகு தகர்ந்தது.

மக்களைத்திரட்டி அரசுக்கு கோரிக்கை வைத்தது ஜனவரி 28, கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அதாவது பிப்ரவரி 23 இல் ஈரோட்டில் நடந்த பொதுக்குழுவிற்குப் பிறகு ஒரு வாரகாலம் கெடு விதிக்கப்பட்டது. அதன் பிறகும் இவற்றை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை.

தேர்தல் விவிதமுறைகள் அறிவிக்கப்படும்வரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, ஆணையம் அமைத்ததாகச் சொல்வதை நம்பி ஆதரவு அளித்திருப்பது முரண் அல்லவா?

இப்படி எல்லாம் செய்து முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்றவர், அப்படி செய்தபிறகும் ஆதரவு கொடுத்திருப்பதன்மூலம்
1) முன்பு பிஜே சொன்னது தவறானது. சுயாதீனமாக கெடுவிதித்தார்

அல்லது

2) தற்போது அரசு செய்தது சரியே.

இவ்விரண்டில் ஒன்றுதான் அறிவுப்பூர்வமானதும் நடைமுறைக்குச் சாத்தியப் படக்கூடியது.

முன்னது சரியென்றால் தற்போது ஏமாற்று வேலை. பின்னது சரியென்றால் முந்தைய கெடுவிதித்தது பம்மாத்து. இதில் எதுசரி?

மார்ச்-2 நாளிதழ் செய்திபடி
"இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கோரிக்கை அடங்கிய மனுக்களை தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்.அதுகுறித்து ஆய்வு செய்து, தகுந்த பரிந்துரையை அரசுக்கு விரைவாக அனுப்பி வைக்க வேண்டும்" என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது ஒரு அரசு அலுவலர் இன்னொரு அரசு அலுவலருக்குப் பரிந்துரைக்கிறார். இது எப்படி ஆணையம் அமைத்ததாக கருதமுடியும்? அவ்வாறு ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளது இருந்தால் அரசாணையில் வெளியாகி இருக்குமே? அதற்கான ஆதாரம் எதுவும் உண்டா?

Unknown said...

அல்லாஹ்வுடைய மார்க்கத்திலேயே புகுந்து விளையாட்ற நாங்க அம்மாவுடைய அரசியலுக்கு ஆதரவு பத்வா கொடுக்கக்கூடாதா என்ன?

குர்ஆனையும் ஹதீஸையும் மார்க்கமுன்னு சொல்லிக்கிட்டுருந்த நாங்க எப்பவோ முஹ்தஸ்ஸிலா எனும் வழிகெட்டோரின் கொள்கைக்குள் புகுந்து ரொம்ப நாளாச்சு அதையே தமிழ்நாட்ல தவ்ஹீத் பேசுற எவனும் கண்டுக்கல ஆஃப்டர்ஆல் பெட்டி அரசியலுக்கு போயி ரொம்வும் சடச்சுகிறீங்க,

அண்ணன் சொன்னா அப்பீல் இல்லங்கிற சட்டம் தெரியாதவர்கள் மட்டுமே இப்படி குதிக்கிறீர்கள் பேசாமா ஒரு உறுப்பினர் கார்ட போடுங்க நீங்களும் நம்ம அண்ணன் காட்டிய அம்மா வழிக்கு வந்துருவீங்க.

குறிப்பு: முஃதஸ்ஸிலாக்கள் எனும் மார்க்கத்தில் பகுத்தறிவு பேசிய வழிகேடர்கள் பற்றி அறிய அண்ணாத்தையின் அந்த 72 கூட்டத்தினர் எனும் தொடர் உரையை கேட்கவும்.

Shameed said...

(இந்த நிபுணர்கள் எல்லாம் ,அண்ணன் கெடுவிதித்த போது எங்க போனாங்களோ?)


எங்கே போனார்கள் என்று தெரிந்துகொண்டே கேட்க கூடாது

sabeer.abushahruk said...

அதிரைக்காரன்,

முகநூலிலுமா நாற்றம்?

sabeer.abushahruk said...

எவ்ளோவ் அடிச்சாலும் தாங்குற ரொம்ப நல்லவைங்களாயிருக்கிறவைங்கள அண்டவிடாம விரட்டியடிச்ச தவ்ஹீதுகானுக்கு நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஏனுங்க ! உங்களுக்கெல்லாம் என்னதான் வேண்டும் ?...

சும்ம சும்மா இழுக்குறீங்க !?

அம்மாவுக்கு சீக்கிரமே தவ்ஹீத் சிந்தனைக்கான மனமாற்றதைக் கொடுத்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்று அறிவிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை !

அல்லாஹ்வின் நட்டமிருந்தால்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைக்காரன் !

இவ்வ்வ்வ்ளோ ஆதரங்களோடு சொல்றீங்களே... நீங்க என்ன அரசியல் (இயக்க) தாயியா?

உங்க கருத்து குறு குறுன்னு துரு துருன்னு இருக்கே !

இப்னு அப்துல் ரஜாக் said...

கரு உருமாற்றம் பெற்று
அது நம்மிடையே மனக் கசப்பை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சுகிறேன்.த த ஜ மற்றும் அதன் தலைவர் சகோ பீ ஜே அவர்களை விமர்சிக்காமல்,பொதுவாக நடப்பு அரசியலை மட்டும் விமர்சிக்க வேண்டுமாய் அல்லாஹ்வுக்காக கேட்டுக் கொள்கிறேன்.பிலீஸ்

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோதரர்களே நம்மிடையே வீண் கலகங்கள் வேண்டாம்.உங்களுக்கு எந்த கட்சியையும் ஆதரிக்க உரிமை உண்டு.ஆதரியுங்கள்.நீங்கள் மற்றவர்களை சாட,மற்றவர்கள் உங்களை சாட நம்மிடையே ஷைத்தான் பகை மூட்டி லாபம் அடைய காத்திருக்கின்றான்.அல்லாஹ்வுக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுங்கள் என எல்லாத் தரப்பு மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
அல்லாஹ்வுக்காக ஒற்றுமை பேண மாட்டீர்களா?

Ebrahim Ansari said...

அவைக்கு தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன்.

நேற்று காலை முதல் தொடர் பயணம், சகோதரர் தவ்ஹீத் கான் அவர்களின் ஆயிரம் அட்சரம் பெறும் கட்டுரையை தாமதமாகவே படிக்க நேரிட்டது.

சமுதாயத்தின் இன்றைய குரல் எதிரொலிக்கப்பட்டிருக்கிறது


Ebrahim Ansari said...

//அதிரைக்காரன் !

இவ்வ்வ்வ்ளோ ஆதரங்களோடு சொல்றீங்களே... நீங்க என்ன அரசியல் (இயக்க) தாயியா?

உங்க கருத்து குறு குறுன்னு துரு துருன்னு இருக்கே !//

வழி மொழிகிறேன்.

பேசாமல் ஊருக்கு வாருங்கள் சுயேச்சையாக தஞ்சைத் தொகுதியில் போட்டுப் பார்த்துவிடலாம்.

Ebrahim Ansari said...

சமுதாய நலனுக்காக பேசுவதும் அறச் செயலேயாகும் !

இந்த நாடாளுமன்றத் தேர்தல் நம் முஸ்லிம் சமுதாயத்திற்கு போதுமான நன்மைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இங்கே அரசியல் செய்திகளை நான் பதிவு செய்கிறேன்.
முக்கியமாக...
தமிழ் நாட்டிலிருந்து எந்த முஸ்லிமும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் பிஜேபி போன்ற இந்துத்துவ கட்சிகளை விட
சில முஸ்லிம் அப்பைப்புகள் அதிக முனைப்பு காட்டுகின்றன.

அதற்கான காரணம் எளிதானது !
மற்ற முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதித்துவம் எங்கேயும்
இல்லாமல் போனால் தாங்களே ஒட்டுமொத்த தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கும் ஏகப் பிரதிநிதி என்று பிரகடனப்படுத்தி அதை வைத்து ஆதாயம் தேட நினைக்கும் அரசியல் அது.
அதற்காக ஏகப்பட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டு "கவனிப்புகளும் " நடந்துவிட்டன.

அந்த சூது அரசியலுக்கு பலியாக ஏராளமான அப்பாவி முஸ்லிம்கள் இருக்கவே செய்கிறார்கள். இங்கே நாமிடும்
பதிவுகள் அவர்களையும் எந்த அமைப்பும் சாராத் முஸ்லிம்களையும் சிந்திக்க வைத்து அவர்களையும் வெற்றியை நோக்கி அழைத்து வருவதற்கான முயற்சியே தவிர வேறில்லை. இங்கே யாரையும் சண்டைக்கிழுத்து வாக்குவாதம் செய்யும் வேலை எனக்கில்லை.

அதனால் ...
என்னால் இயன்றவரை முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றிக்காக அவர்களை முன்னிறுத்திய கட்சிகளுக்காக அதன் தோழமை கட்சிகளுக்காக தொடர்ந்து இங்கே பதிவுகள் இடுவேன் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.
எதிரிகளையும் துரோகிகளையும் இனம் கண்டு முஸ்லிம்களை எச்சரிப்பதே இந்த பதிவுகளின் நோக்கம் ... இன்ஷா அல்லாஹ் !

முகநூலில் , அதிரை நிருபரின் மதிப்பிற்குரிய நாஞ்சில் நாட்டு எழுத்தாளர் அபூ ஹஷிமா.
Cpied and Pasted by : ME.

aa said...

சூனியம், கண்ணேறு உள்ளிட்ட விஷயங்களில் தங்களின் ஆய்வுகளை விளக்கம் கிடைத்த பின்னரும் ஏற்காதவர்கள் முஷ்ரிக்குகள் என முத்திரை குத்தும் ததஜவினரருக்கு முஸ்லிம்களின் நலன் மீது அவ்வளவு என்ன அக்கறையோ?

தங்களின் ஆய்வுகளை ஏற்காதவர்கள் பின்னால் நின்று தொழ முடியாது, அவர்களிடம் சம்பந்த உறவு கொள்ள இயலாது, அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்க கூடாது என்றெல்லாம் சொல்லும் ததஜவினருக்கு முஸ்லிம்களின் நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடுவதற்கு எந்த அருகதையும் இல்லை. தாங்கள் உருவாக்கி வரும் நூதன கொள்கைக்காக மட்டும் அவர்கள் போராடி கொள்ளட்டும்

aa said...

தங்களின் வருடாந்திர ஆய்வுகளை ஏற்கவில்லை என்பதற்காகவே முஸ்லிம்களை முஷ்ரிக்குகளாக்கிவிட்டு அவர்களின் துன்யா சம்பந்தமான உரிமைக்காக போராடுகிறோம் என்று சொல்வதற்கு எவ்வளவு துனிச்சல் இருக்க வேண்டும்.

முஸ்லிம்களே! நம்பி விட வேண்டாம் இந்த வழிகேடர்களை! இவர்கள் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் உருவாகி வரும் புதிய காதியானிகள். குலாம் அஹ்மத் காதியானி தன்னுடைய ஆய்வை ஏற்றுக்கொள்ளாதவர்களை முஷ்ரிக் என்று சொல்லியதற்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. உருவாகி வரும் இந்த புதிய மதத்தை புறக்கணிப்போம். தீனுல் இஸ்லாத்தின் மீது நிலைத்திருப்போம். நம்முடைய பொருளாதாரத்தையும், நேரம் காலங்களையும், உடல் உழைப்புகளையும் இந்த வழிகேடர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்வோமாக. காதியானிகள் ’முஸ்லிம்களின் நலனிற்காக’ என்று ஏதேனும் ஒன்றைச் செய்தால் அது எவ்வாறு நாடகமோ அதே போன்றதுதான், ததஜவின் இட ஒதுக்கீடு சித்து விளையாட்டுகளெல்லாம்.

இட ஒதுக்கீடு, முஸ்லிம்களின் பொது நலன் என்றெல்லாம் இவர்கள் விரிக்கும் மாய வலையில் நமதூர் முஸ்லிம்கள் விழுந்து விட வேண்டாம். இவையெல்லாம் கூட்டம் காட்டி இயக்கும் வளர்க்கும் அரசியல் என்பதை புரிந்து கொள்வோமாக!

அதிரை முஸ்லிம்களே நினைவில் வையுங்கள்! உங்களை பார்த்து முஷ்ரிக் என்று சொல்லும் தைரியம் இந்துத்வாவாதிகளுக்கு கூட இருந்ததில்லை; ஆனால் இந்த மன்னடி ஆய்வாளர்கள் பிதற்றுகிறார்கள்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட முஸ்லிம்களுக்கு இந்த துன்யாவின் அற்ப இட ஒதுக்கீடு போன்றவற்றைக் காட்டிலும் மறுமையும், மறுமை நற்பேறும் முக்கியம். அல்லாஹ்வுடைய விஷயத்திலும் நம்முடைய மறுமை வாழ்வு குறித்த விஷயத்திலும் அல்லாஹ்விற்காக உரோஷப்படக்கூடிய மக்களாக நமதூர் மக்களை அல்லாஹ் ஆக்குவானாக!

aa said...

அதிரை வாழ் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இறுதியாக ஒரு வேண்டுகோள். உங்களிடம் ததஜவினர் இது போன்ற ஆர்பாட்டம், போராட்டம் இட ஒதுக்கீடு என்றெல்லாம் சொல்லி வசூலிற்கு வந்தாலோ அல்லது இது போன்ற பேரணிகளுக்கு கூட்டம் காட்டுவதற்காக உங்களை அழைத்தாலோ நீங்கள் கேட்க வேண்டியது ஒரே ஒரு கேள்வி தான். “சூனியம், கண்ணேறு உள்ளிட்ட விஷயங்களில் ​அல்லாஹ்வின் தூதர் சொன்ன ஸஹீஹான ஹதீஸ்களை நம்பி உங்களுடைய 2010 மன்னடி அப்டேட் ஆய்வுளை ஏற்க மறுக்கும் எனது நிலை என்ன?” என்று கேளுங்கள். விடலை மற்றும் இளம் ததஜ சிங்கங்கள் உடனடியாக கர்ச்சிக்கும் “நீங்களெல்லாம் முஷ்ரிக்குகள்; உங்கள் பின்னாடி நின்று தொழ மாட்டோம்; உங்களுக்காக ஜனாசா சொழுகை நடத்தமாட்டோம்” என்று.

அதன் பின்னர் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் ‘உங்களுக்காக ஜனாசா தொழுகை நடத்தக்கூட தயாரில்லாத,உங்களை முஷ்ரிக் என்று அகங்காரத்துடன் அலறும் இந்த ஓநாய்களின் பின்னால் செல்வது சரிதானா’ என்பதை. முஸ்லிமகளுக்கு இடஒதுக்கீடு என்று இவர்கள் பேசுவதெல்லாம் ‘ஆடு நனைகிறேதே என்று ஓநாய் அழுவதற்கு’ ஒப்பானது.

முஸ்லிம்களே, மீண்டும் சொல்கிறேன். ததஜ என்பது தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் தவ்ஹீத் என்ற போர்வையில் உருவாகி வரும் புதியதொரு மதம்; காதியானிகள் எவ்வாறு முஸ்லிம்களுக்கு மத்தியில் உருவாகினார்களோ அதைப்போல.

அப்பாவி முஸ்லிம்களை ஈர்த்து தங்கள் இயக்கம் வளர்ப்பதற்காக இவர்கள் பின்னும் சதி பின்னல்களிலிருதும் கெட்ட நோக்கங்களிலிருந்தும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. எல்லா புதிய கொள்கைகளிலிருந்தும், நூதனமான புதிய நம்பிக்கைகளிலிருந்தும் தமிழ் முஸ்லிம் உம்மத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக.

அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி
ஷார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு