Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 33 ( நமது கல்வி- 5 ). 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2014 | , , , , ,

நமது கல்வியின் நிலை பற்றிய ஒரு அலசலை, கல்வி வளர்ப்போம்! ஒற்றுமையாய் கரங்கள் இணைப்போம் ! என்ற தலைப்பில் இதே அதிரைநிருபர் வலை தளத்தில் 2012 பிப்ரவரி 04-ஆம் நாள் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அந்தப் பதிவில் கல்வி பற்றிய பகுதியை இங்கு நினைவு கூறி, மேலும் சில கருத்துக்களுடன் இந்தத்தொடரை நிறைவு செய்ய விரும்புகிறோம். இதோ அந்தப் பதிவின் பகுதி.

ஒரு காட்டில் ஒரு சிங்கம் ராஜாவாக இருந்தது. அந்த ராஜா சிங்கத்தை ஒரு முயல் ஏமாற்றி கிணற்றில் தள்ளிவிட்டது என்ற கதையையும், ஒரு நதியில் ஒரு முதலை இருந்தது அந்த முதலை ஒரு நாவல் மரத்தில் இருந்த குரங்கு ஏமாற்றியது என்ற கதையையும் பள்ளிகளில் இளம் வகுப்புகளில் படித்து இருக்கிறோம். எவ்வளவு வலிமை பொருந்தியவர்களாக இருந்தாலும் தனது அந்த வலிமையை உணராவிட்டால் உண்மையிலேயே அவர்களுக்கு வலிமை இல்லை என்பது வெள்ளிடை. அதேபோல உலகில் மாபெரும் சமுதாயமாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயம் தனது பலத்தை தான் உணரவில்லை. அதனால் யானை படுத்துவிட்டால் ஈக்களும் எறும்புகளும் கூட மேலே ஏறி மொய்க்கத்தான் செய்யும்.

அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விபரப்படி உல்கில் இன்று முதன்மை சமுதாயமாக உருவெடுக்கும் வகையில் - கிருத்துவ மதத்தை பின் தள்ளி வளர்ந்துவிட்ட மார்க்கம் நாம் சார்ந்து இருக்கும் நம்முடைய இஸ்லாம் மார்க்கம் என்று – நெஞ்சு நிமிர்த்தி – மகிழலாம்.

உலக அளவில் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் ந்ம்மை நோக்கி படையெடுத்து வந்து தங்களை இந்த இந்த அமைதி மார்க்கத்தின்பால் இணைத்து வருகிறார்கள். சொந்த அனுபவத்தை கூறி சுட்டிக்காட்ட வேண்டுமானால் நான் துபையில் வேலை செய்யும் குழுமத்தில் 2006 முதல் இன்றுவரை 24 பேர் இஸ்லாத்தை தழுவி இருக்கிறார்கள். மாஷா அல்லாஹ்! அனைவரும் ஆப்ரிக, எகிப்திய, ஜோர்டானிய, பிலிப்பினிய நாட்டை சேர்ந்த பெண் கிருத்துவர்கள். ஒரு கர்னாடக மாநில இந்து சகோதரர்.

புள்ளி விபரங்கள் இப்படி பேசுகின்றன.

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் மட்டுமே உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் சிதறிப்போய் உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகாவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.

உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.

ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.

ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.

ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.

ஆனாலும் உலக அரசியல் அரங்கில் நடப்பது என்ன? சிங்கத்தை முயல் வெல்வதுபோல், முதலையை நரி ஏமாற்றியது போல் , யானையை எறும்பு மொய்ப்பதுபோல் யூதர்களையும் ஏனையோரையும் எதிலும் வெல்ல முடியாமல் இஸ்லாமிய உலகம் ஏமாந்து நிற்பதுதான் கசப்பான உண்மை; தற்கால சரித்திரம்.

மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் இஸ்லாமிய உலகம் முன்னேறவில்லை? ஏன் பின் தங்கி இருக்கிறது? ஏன் சக்தியற்று இருக்கிறது?

மக்கள் தொகையில் குறைவாக இருந்தும் ஏன் மற்றவர்கள் முன்னேறி இருககிரார்கள்? தொழில் வளர்ச்சியிலும், இராணுவம் உட்பட்ட சக்தி களையும் பெற்று பெருபான்மையை நடுங்கவைக்கவும், விரும்புகிறபடி அரசியல் சதுரங்கம் விளையாடவும் , ஆட்சி அமைப்புகளை மாற்றவும், அநியாயமாக படை எடுக்கவும், அதிகாரங்களை கைப்பற்றவும் ,ஆட்சி செய்தவர்களை தூக்கிலடவும், துரத்தி அடிக்கவும் எப்படி முடிகிறது?

நம்மிடையே கல்வியறிவு இல்லாமை, நமக்குள் ஒற்றுமை இல்லாமை.

நம்மை விட ஏன் யூதர்களும், கிருத்துவர்களும் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே என்ற கோசத்தை மட்டும் முன்வைக்கிற நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்து விடுகின்றோம் மறுத்து விடுகிறோம். யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.

காரணம் ஒன்றே ஒன்றுதான் அதுதான், அவர்களின் கல்வி வளர்ச்சி.

இதோ இந்த புள்ளி விபரத்தையும் பாருங்கள். 

அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.

இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

ஆனால் பரிதாபமாக உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன. உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை. 

உலக கிருத்துவர்களில் கல்வியறிவு பெற்றோர் 90%:; ஆனால் இஸ்லாமியர்கள் 40% மட்டுமே.

முழுக்க முழுக்க கிருத்துவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் அவர்கள் 100% கல்வியறிவு பெற்ற நாடுகள் 15. ஆனால் முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை.

அடிப்படைக்கல்வியை பூர்த்தி செய்துள்ள கிருத்துவ நாடுகள் 98%. ஆனால் இஸ்லாமிய நாடுகள் 50% கூட தேறவில்லை. 

உயர் படிப்புக்கு செல்கின்ற கிருத்துவர்கள் 40% ஆனால் நாமோ 2% கூட உயர்படிப்புக்கு செல்வதில்லை.

ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.

ஆனால ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.

ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர். ஆனால் , ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

கிறிஸ்தவ நாடுகள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.ஆனால் இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.

கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

ஆனால் 1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்.

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். கல்வியை பொருத்தவரை மிகவும் பின்தங்கி அதில் முனைப்புக்காட்டாமல் வெற்றுகூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இறைவனின் நிந்தனைக்கு ஆளானோர், அவன் தந்த நன்நெறிவிட்டு அகன்றோர் கல்வியில் மேம்பட்டு நம்மை உலகெங்கும் ஆட்டிப்படைக்கின்றனர். கல்வி நிலையங்களை தங்களின் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள். ஏன் நாம் கூட நமது பிள்ளைகளை பாஸ்டன் பள்ளியிலும் , புனித சேவியர், பீட்டர், அந்தோனியார் பள்ளிகளில் தானே சேர்க்கிறோம். அல்லது சேர்க்கத்தானே பிரியப்படுகிறோம். 

தமிழகத்தை பொருத்தவரை கூட கடவுள் மறுப்பு கொள்கை வைத்திருக்கும் தி.க கட்சி கூட தனக்காக ஒரு பல்கலைக்கழகம் வைத்து இருக்கிறது. அதேபோல் இந்து மத கோட்பாடுகளை பின்பற்றும் மடாலயங்கள் சாஸ்தா போன்ற பல்கலைக்கழகங்களை வைத்திருக்கின்றன. அலிகர் முஸ்லிம் பல்கலை கழகத்தையும், ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகத்தையும் தவிர இந்தியாவில் நமக்கு பெயர் சொல்ல ஏது வேறு பல்கலைக்கழகம்? இந்தியாவை பல ஆண்டுகள் கட்டித்தான் ஆண்டோம்- கல்வியை ஆளவில்லையே.! ஆனால் ஆண்ட ஆண்டுகளில் எத்தனை கல்வி நிலையங்களை ஆங்கில கிருத்துவ ஆட்சி இந்தியாவில் உருவாக்கி இருக்கிறது? தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், ஏதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பைக் கொண்ட பல்கலைகழகத்தை தொடங்கி சேவை மனப்பான்மையில் நடத்த துணிந்ததுண்டா? .

என்பதே அக்கட்டுரையின் பகுதி 

ஆயினும் பலமுறை பலருடைய இடிப்புரைகளுக்குப் பிறகு கல்வியின் முக்கியத்துவத்தைப் படிப்படியாக உணரத்தொடங்கிய சமுதாயம், பல ஊர்களிலும் கல்வி நிலையங்களையும் களை மற்றும் பொறியியல் கல்லூரிகளையும் நிறுவத் தொடங்கியது. இதிலும் சில வேதனையான விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறோம். 

அரசியல் அமைப்புச் சட்டப்படி மைனாரிட்டி சமூகம் என்ற பெயரில் பள்ளிகளும் கல்லூரிகளும் தொடங்கப் பட்டாலும் மைனாரிட்டி என்கிற வார்த்தையை வைத்து அங்கீகாரமும் அரசின் சலுகைகளும் பெற்றுக் கொள்வது ஒரு வணிக நோக்கில் அமைந்ததே தவிர உண்மையான சமுதாய முன்னேற்ற சிந்தனை இப்படித் தொடங்கப் பட்ட பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இல்லை. நம்மைப் போலவே மைனாரிட்டி சமூகமாக இருக்கிற கிருஸ்தவ சகோதரர்கள் தங்களின் மதத்தின் மேல் வைத்து இருக்கும் பற்று மட்டும் நடை முறையில் பாதி கூட நமது கல்வி நிலையங்களில் இல்லை. தொழுகைக்காக மட்டுமல்ல ஜூம்ஆ தொழக்கூட வசதிகள் செய்து தராத கல்வி நிலையங்கள் முஸ்லிம் மைனாரிட்டி கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கி வருவதுடன், பெரும் பணத்தை வசூல் செய்து தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்கின்றனவே தவிர, பின் தங்கி இருக்கும் சமுதாயத்தின் கல்வி நிலையை உயர்த்த உணமையாகப் பாடுபடுகிறோம் என்று எல்லா நிறுவனங்களும் சொல்ல இயலாது. இது ஒரு வேதனையான உண்மை. 

மற்றொரு வேதனையான உண்மை என்ன வென்றால் தப்பித்தவறி, பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் கூட தான் படித்த படிப்புக்குத்தகுந்த அரசு மற்றும் தனியார் வேலைகளைத் தேடிக் கொள்வது இல்லை. அண்மையில் தமிழ்நாடு மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையங்கள் நிறைய வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரங்களை வெளியிட்டன. எத்தனை முஸ்லிம்கள் இத்தகையப் போட்டித்தேர்வுகளில் பங்கெடுக்க விண்ணப்பிக்கிறார்கள் என்று கணக்கை எடுத்துப் பார்த்தால் – இப்படி நாட்டில் ஒரு நிகழ்வு நடக்கிறதா என்று கூட நமக்கெல்லாம் தகவலோ அல்லது அவற்றில் கலந்துகொள்ளும் ஆர்வமோ அறிவோ இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். பாரத ஸ்டேட் வங்கி, நிறைய வேலைவாய்ப்புகளை விளம்பரப் படுத்தியது. அதே போல் பொதுத்துறை நிறுவனங்களும் வேலைக்கு ஆட்கள் வேண்டுமென்று அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் நம்மில் படித்துத் தகுதிகள் இருந்தும் இப்படிப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிப்பது இல்லை. அண்மையில் வெளியான ஐ. ஏ. எஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இதற்குக் காரணம் , நமது சமூக வாழ்வில் ஊடுருவி ஆணிவேர்விட்டு வளர்ந்து நிற்கும் நமது வெளிநாட்டு மோகமே என்பதை ஐநா சபையில் கூட அறிவிக்கலாம். 

இந்தப் பதிவை எழுதும் நாங்கள் இருவருமே இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறோம் . குற்றவாளிக் கூண்டில் நாங்களும் நிற்கிறோம். தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் பங்கு பெற்று, பத்துக் காசு செலவில்லாமல் சிபாரிசுக் கடிதம் இல்லாமல் கூட்டுறவுத்துறையில் பயிற்சி தணிக்கையாளராக பணியாற்றிய இப்ராஹீம் அன்சாரியும் , அதே கூட்டுறவுத்துறையில் உதவி அலுவலளாராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பகுருதீனும் அரசு தந்த வேலைகளை தூக்கி எறிந்துவிட்டு வெளிநாடு தேடி ஓடிய குற்றத்தை இங்கு ஒப்புக் கொள்கிறோம். இதே போல் எத்தனை பேர்?

கல்வியறிவு பெற ஆர்வமின்மை, கல்வி நிலையங்களின் சமுதாய நலனைப் பின்தள்ளி பணம் பார்க்கும் பழக்கம், படித்த படிப்பை அதே துறையில் பயன்படுத்தி முன்னேறும் ஆர்வமின்மை ஆகியவை நமது சமுதாயத்தின் சாபக்கேடு. 

கல்வியில் ஆர்வம உள்ள முஸ்லிம்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிகள் தேவைப்பட்டால் அந்த நோக்கத்துக்காக உதவும் பல பொதுநல அமைப்புகளை அதிரையின் சகோதரர் மீராசா ராபியா அவர்கள் ஒரு முறை பதிந்து இருந்தார். அவருக்கு நன்றி கூறி அந்தப் பட்டியலை இங்கு தருவதில் மகிழ்கிறோம். பிளஸ் டூ தேர்வுகள் முடிந்து, பத்தாம் வகுப்புத்தேர்வுகள் ஆரம்பமான நிலையில் பலருக்கு இந்தப் பட்டியல் உதவலாம். இன்ஷா அல்லாஹ்.

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை, அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445.

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க், ராயபேட்டைநெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, கிரீம்ஸ் ரோடு, சென்னை - 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் , 4, மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) Phone:+91-44-42261100 Fax: +91-44-28231950 Download Aplication

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், 82,Dr. Radha Krishnan Road,Mylapore, Chennai, 600004, Phone : +91-44-28115935 Mob : 93805 31447

7. முஹம்மது சதக் அறக்கட்டளை , 144/1 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34. Tel: 044-2833 4989, 2833 4990 http://www.sathaktrust.com

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன், 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03

11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம் அறக்கட்டளை, மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207

14. டாம்கோ, 807, - அண்ணா சாலை, 5 வது மாடி, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான், (Managing Director Professional Courier’s), 22, மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18

16. மியாசி, புதுக் கல்லூரி வளாகம்,பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14

17. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை .

மேலும் முஸ்லிம்களால் நடத்தப் படும் கல்லூரிகள் மற்றும் பொறியால் கல்லூரிகளின் பட்டியலும் நமக்கு இந்த நேரம் பயன்படலாம். 

இஸ்லாமியா கல்லூரி வாணியம்பாடி

புதுக்கல்லூரி சென்னை

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி

ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரி (SIET) சென்னை

காதிர் முகைதீன் கல்லூரி அதிராம்பட்டினம்

ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி உத்தமபாளையம்

சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி மேல்விஷாரம்

முஹையத் ஷா சர்குரு வக்ஃப் வாரியக் கல்லூரி மதுரை

மஸ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்

டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை திருநெல்வேலி

காயிதேமில்லத் கல்லூரி மேடவாக்கம், சென்னை

முஸ்லிம் கலைக்கல்லூரி திருவிதாங்கோடு

தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை

அய்மன் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி , சாத்தனூர், திருச்சி, 

முஹம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி, சோழிங்கநல்லூர்- சென்னை

ராஜகிரி, தாவூத் பாட்சா கலை, அறிவியல் கல்லூரி பாபநாசம், கும்பகோணம் அருகில் 

ராபியாம்மாள் மகளிர் அறிவியல் கலைக்கல்லூரி, திருவாரூர்

செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரி , இராமநாதபுரம் 

அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக் கல்லூரி, அம்மாபட்டினம்.

முஸ்லிம்களால் நடத்தப் படும் பொறியியல் கல்லூரிகள் 

1. Crescent Engineering College, Chennai
2. Mohammed Sathak Engineering College, Kilakarai, Ramnad Dist
3. C. Abdul Hakeem College Of Engg. & Technology, Melvisharam, Vellore Dist
4. Noorul Islam College Of Engineering, Thiruvithancode, Kanyakumari Dist
5. M.I.E.T. Engineering College, Gundur, Trichy
6. M.A.M. Engineering College, Trichy
7. Sethu Institute Of Technology, Kariapatti, Virudhunagar Dist
8. Popular Engineering College, Tirunelveli
9. National Engineering College, Tirunelveli
10. A.M.S. College Of Engineering, Chennai
11. MEASI Academy Of Architecture, Chennai
12. Al Islam College of Engineering – Thirumangalakkudi- Aduthurai. 

அன்பானவர்களே! நேற்று! இன்று! நாளை ! என்கிற தலைப்பில் வந்த இந்த தொடர் தற்காலிகமாக விடை பெறுகிறது. 

இன்ஷா அல்லாஹ் சூடான நடப்பு அரசியல் கட்டுரைகள் அந்த இடத்தை அலங்கரிக்கும்.

ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

14 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நமது கல்வி நிலை, மற்றும் கல்வி நிலையங்களை பட்டியலிட்டதன் மூலம் விழிப்புடன் பலன் பெறுவோமாக!

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்காஸ்

adiraimansoor said...

///உலகில் மாபெரும் சமுதாயமாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயம் தனது பலத்தை தான் உணரவில்லை. அதனால் யானை படுத்துவிட்டால் ஈக்களும் எறும்புகளும் கூட மேலே ஏறி மொய்க்கத்தான் செய்யும்.///

காக்கா இதுதான் நம் சமுதயத்திற்கு நடந்து கொண்டிருக்கும் உண்மை நிலையை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள்
முஸ்லீம் லீக் இஸ்மாயில் சாஹிபு அவர்களுடன் அந்த சகாப்தம் முடிந்துவிட்டது அதை தொடர்ந்து வந்த சில தலைவர்களின் செயல்பாட்டில் நிறைய குறை இருந்ததால்தான் மாற்று இயக்கம் கண்டோம்
ஆனால் அந்த இயக்கத்தில் ஆரம்ப அடிச்சுவடியே ஒற்றுமை என்னும் கயிறை பற்றி பிடியுங்கள் நீங்கள் வழிதவறமாட்டீர்கள் என்று மேடைக்கு மேடை முழங்கி கொண்டே நம்மை நாம் நம் ஆனவத்தாலும் அகாங்காரத்தாலும் ஈகோவாலும் ஒற்றுமை என்ற கயிறு நழுவி பல இயக்கம் கண்டு இன்று ஒற்றுமை இழந்து நிற்கின்றோம் இதை நினைக்கும்போது முன்னாடி இருந்த முஸ்லீம்லீக்கே நல்லதாக தோன்றுகின்றது
அவர்கள் செயல்பாட்டில் குரைவாக இருந்தார்களே தவிற ஒன்னுவிட்ட சகோதரர்களை அடித்து சாப்பிடும் அளவுக்கு வெறியை வளர்க்கவில்லை வளர்த்துக் கொள்ளவுமில்லை இப்பொழுது அதை உணர முடிகின்றது

நம் எழுத்துக்களில் நம் சகோதரர்களின்
குறைகளை அழகான முறையில் எடுத்துச்சொல்வோம்
அவர்கள் செய்யும் குறைபாட்டை தனிப்பட்ட முறையில் குத்திகாட்டுவது நமக்கிடையே இன்னும் குரோதத்தை உண்டுபன்னும்

நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் அதே கருத்து வேறுபாடுகலை கழுத்தை அறுக்கும் வேறுபாடாக நாம் மாற்றக்கூடாது அவர்கள் வல்கரை கையாண்டால் நாம் நலினத்தை கடைபிடிப்போம்
நம் சகோதரர்களின் குறைபாட்டை நலினமாகத்தான் எடுத்துச்சொல்கின்றோம் அதை அவர்கள் நலினமாக எடுத்துக்கொண்டால் நமக்குள் கழுத்தருக்கும் போராட்டமாக இல்லாமல் கருத்தை அறுக்கும் போராட்டமாக இருந்தால் அது வரவேற்க்கதக்கது

இஸ்லாம் எல்லோருக்கும் சொந்தமானது அவன் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிட்டான் என்று யாரும் யாருக்கும் நாம் பத்வா கொடுக்க முடியாது
இஸ்லாத்தில் முறன்பாடுகள் இல்லை என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம் அதை புரிந்துகொள்வதில் ஏற்படும் விஷயங்களுக்காகவோ அல்லது புரியவைக்கும் விசயத்திற்காகவோ நலினத்தை கையால்வோம்

adiraimansoor said...

///ஆனாலும் உலக அரசியல் அரங்கில் நடப்பது என்ன? சிங்கத்தை முயல் வெல்வதுபோல், முதலையை நரி ஏமாற்றியது போல் , யானையை எறும்பு மொய்ப்பதுபோல் யூதர்களையும் ஏனையோரையும் எதிலும் வெல்ல முடியாமல் இஸ்லாமிய உலகம் ஏமாந்து நிற்பதுதான் கசப்பான உண்மை; தற்கால சரித்திரம்.///

மிக சரியான வார்த்தை

adiraimansoor said...

///ஆனால் பரிதாபமாக உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன. உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை.///

மிக துள்ளியமான விளக்கம் இவையெல்லாம் உலக கல்விக்கு அவசியமே

adiraimansoor said...

எல்லாமே மிக துள்ளியமான விளக்கம்
ஜஸாக்கல்லாஹ் கைர் காக்கா

இப்னு அப்துல் ரஜாக் said...

இதெற்கெல்லாம் காரணம் நாம் குரானை கை விட்டதுதான்.
குரானை நாம் வாழ்வியல் நெறியாக கொண்டு வந்துவிட்டால்,இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.

sheikdawoodmohamedfarook said...

// நம்மிடையே கல்வி ஒற்றுமை இல்லாமை// இதோடு போராமையும்+பண்ணிக்கொள்ளலாம்.மலேசியாவில்எனக்கு தெரிந்த ஒருவர் BBA படித்திருக்கும்தன்மகனை.மலேசியாவுக்கு கொண்டு வந்து அவனுக்கு பொருத்தமான வேலை ஒன்றை தேடிக்கொண்டிருந்தார். ஒருசிறிய வியாபாரம் செய்து கொண்டு தன்மகனை ஒரு பெரியபடிப்பு படிக்கவைத்து விட்டாரே என்று பொறாமை கொண்ட ஒருவர் ''பெரிய வேலை ஏதும் கிடைக்காது! வீட்டுக்கு வீடு பேப்பர் போடும் வேலை இருக்கிறது ! ஒருநாளைக்கு அஞ்சுவெள்ளிதருவார்கள்! அனுப்பிவிடுங்கள் அது அவனின் சாப்பாட்டுசெலவுக்கு ஈடுகட்டும்' என்றாறாம். ஆனால் அதேபடிப்பு படித்த தன் மகனுக்கு அதிக சம்பளத்தில் நல்ல வேலை வாங்கி கொடுத்தார்.முன்னுக்குவரமுயல்வோரையும் பின்னுக்கு தள்ளும் பொறாமை கொண்ட இந்திய நண்டுகள் நம்மில் நிறையவே உண்டு! நம் பிற்போக்கு நிலைக்கு இவர்களை போன்ற கறுப்புஆடுகளும் ஒரு காரணம்.இதில் முக்கிய மானபாயிண்ட்என்னவென்றால்இவர்இஸ்லாமியமதஇலாக்காவில்பணியாற்றுகிறார்!அந்நிய மாதத்தவர்க்கு இஸ்லாத்தின் சிறப்பை விளக்கி கூறி அவர்களை இஸ்லாத்திற்க்கு கொண்டு வருவதே இவர் பணி! ஆட்டுமந்தைகளுக்கு ஓநாய் காவல்?

Yasir said...

மாஷா அல்லாஹ் சிறந்த தொடர்..பல விசயங்களையும் பாடங்களையும் நம் அனைவருக்கும் அளித்த தொடர்...பல புள்ளி விபரங்களை எந்த வித பலனுமின்றி தொகுத்தளிப்பது என்பது சமுதாய அக்கறை உள்ளவர்களால் தான் முடியும் அந்த வகையில் பெருமுயற்ச்சி எடுத்து எங்களுக்கு இத்தொடரைத் தந்த சகோ.முத்துப் பேட்டை பகுருதீன் அவர்களுக்கும்
இப்ராஹீம் அன்சாரி மாமா அவர்களுக்கும் துவாக்களும் வாழ்த்துக்களும்

sabeer.abushahruk said...

பல தடங்கல்கள் மற்றும் உதவாக்கறை தொல்லைகளுக்குமிடையே மிகச் சிறப்பாகக் கொண்டு சென்று நிறைவுற வைத்திருக்கும் இரண்டு காக்காமார்களுக்கும் அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

sheikdawoodmohamedfarook said...

கடந்தகாலநிகழ்வுகளை மீண்டும் நெஞ்சுக்கும் நினைவுக்கும் யாருக்கும் அஞ்சாமல் தந்த மைத்துனர் அன்ஸாரிக்கும் சகோதரர் பகுருதீன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும். மீண்டும் எப்பொழுது ஒன்று கூடு வீர்கள்?

Ebrahim Ansari said...

//கடந்தகாலநிகழ்வுகளை மீண்டும் நெஞ்சுக்கும் நினைவுக்கும் யாருக்கும் அஞ்சாமல் தந்த மைத்துனர் அன்ஸாரிக்கும் சகோதரர் பகுருதீன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டும். மீண்டும் எப்பொழுது ஒன்று கூடு வீர்கள்?//

இன்ஷா அல்லாஹ் தேர்தல் முடிந்து .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... காக்காஸ் !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்...

எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில், நேற்றையதை அலச கிளம்பி, இன்றையதை அசைத்துப் பார்த்து, நாளை எப்படியெல்லாம் என்ற நேர்மையான எழுத்துக்களால் காலச் சூழலுக்கேற்ற அற்புதமான பணியை செய்து இருக்கிறீர்கள் !

இதில் சிலருக்கு உடண்பாடில்லாமல் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தொண்டைக் குழிக்குள் முட்டி மோதலாம் ! எது எப்படியாகினும், பெரும்பாலோரின் ஏகோபித்த ஆதரவுடனும் அதே நேரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாடல்களை ஏந்திக் கொண்டு வெளி வந்த இந்த தொடர் மன நிறைவே !

விமர்சனங்களை ஏற்கும் பக்குவமும் அதே நேரத்தில் கண்ணியமான எழுத்தாற்றலால் அதனை நேர் கொண்டு சந்த்திக்கு திராணி பெற்றவர்களால் மட்டுமே இவ்வாறு சாதிக்க முடியும் !

மீண்டும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன், இ.அ.காக்கா மற்றும் P.பகுருதீன் காக்கா இருவருக்கும்.

தங்கள் இருவரின் ஆரோக்கியத்தை பேணிக் கொள்ளுங்கள் (இது அன்பில் சொல்வது - அலைபேசி அம்பெய்யா அன்பு !)

Ebrahim Ansari said...

அன்பான தம்பி அபூ இப்ராஹீம் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ்ஸலாம்

தங்கள் முதலான அனைத்து அதிரை நிருபரின் அன்பான சகோதரர்களுக்கும் அவர்கள் காட்டிய அன்புக்கும் அரவணைப்புக்கும் பாராட்டிய பண்புக்கும் எங்களது மகிழ்வைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

அதே போல் மென்மையாகவும் , நன்மையாகவும் விமர்சித்த சகோதரர்களுக்கும் எங்களின் நன்றி.

சில கடுஞ்சொற்கள் எங்கள் மீது வீசப்பட்டன. விமர்சனங்களை எங்களைப் பண்படுத்தும் என்று எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை இறைவன் அளித்தான் தவிர அவை எங்களைப் புண்படுத்தவில்லை. அப்படி எங்களைப் புண்படுத்தியதன் மூலம் பண்படுத்திய சகோதரர்களுக்கும் எங்களின் நன்றி.

சமுதாய வேட்பாளர்களுக்கான தேர்தல் பணிகளில் ஈடுபட நேரம் ஒதுக்க வேண்டி இருப்பதால் தற்காலிகமாக இந்தத்தொடர் நிறுத்தப் படுகிறதே தவிர, இன்ஷா அல்லாஹ் மீண்டும் தொடரும்.


Shameed said...

//எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பைக் கொண்ட பல்கலைகழகத்தை தொடங்கி சேவை மனப்பான்மையில் நடத்த துணிந்ததுண்டா? .//

இப்படி இயக்கங்கள் பல்கலைகழகம் தொடங்கதவரை நமது சமுதாயத்திற்கு நல்லதே ! காரணம் இப்போது இருக்கும் இயக்கங்கள் தமது தொண்டர்களையோ மூளை! சலைவை செய்து மூடர்களாக்கி வைத்திருக்கின்றது இதுபோன்ற இயக்கம் பல்கலைகழகம் தொடங்கினால் மாணவர்களையும் முட்டாளாக்கி சமுதாயத்தை மேலும் சீரழித்துவிடுவார்கள் .

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு