நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

யார் அங்கே ? எங்கே போனார்கள்? - தேடல் - 1 18

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மார்ச் 05, 2014 | , , , , ,

அதிரைநிருபரின் பிரபல்யமானப் பதிவர்களுக்கிடையே நிலவும் மந்தநிலையைக் குத்திக்காட்டும் விதமாக அவர்களைப்போலவே அவர்களின் பாணியில் பதிவு எழுதி கிண்டலடிக்கும், உசுப்பேத்தும் உக்தியாக இதுபோன்ற பதிவுகளை எழுதும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.  (அல்லாஹ் இவர்களின் வக்தில் பரக்கத் செய்து மீண்டும் அதிகம் எழுத வேண்டும் என்பதே உள்ளாசையும் துஆவும்).

அவ்வகையில், இந்த முறை விஞ்ஞானப் பதிவுகள் எழுதி பெயர் வாங்கிய Sஹமீது பாணியில்….

)-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-()-(

எக்ஸ்கவேட்டர் (excavator): 

ட்டுமானப் பணிகளுக்கான எந்திரங்களின் வகையில் இவர் முக்கியமானவர். ஒரு நாளைக்கு 20-30 பேர் செய்யும் வேலையை இவர் ஒருத்தர் தன்னந்தனியாக வேர்க்காமல் விறுவிறுக்காமல் செய்து முடித்துவிடுவார்.

Excavator என்பது ஒரு காரணப் பெயர். எக்ஸ்கவேஷன் என்னும் ஆங்கிலப் பதத்திற்கு 'அகல்தல்' என்பது பொருள். இதைத் தமிழில் தோண்டுதல் என்றும் மொழி பெயர்க்கலாம். தோண்டும் வேலை செய்வதால் இவரைத் தோண்டுவான் என்னும் அர்த்தத்தில் எக்ஸ்கவேட்டர் என்று அழைப்பர். வயதான மெஷின்களைத்தான் எக்ஸ்க்வேட்டர் என்றும்; புதிய, இளம் எந்திரத்தை எக்ஸ்கவேட்டன் என்று மரியாதைக் குறைவாகவெல்லாம் அழைக்க அனுமதி இல்லை.

இருப்பினும் இந்த இயந்திரத்தை பொக்லைன் என்று சொன்னால்தான் துட்டுக்காக ஓட்டுப்போடும் பழக்கம் உள்ள சனநாயக மனிதர்களுக்கு விளங்கும். "அது ஏனுங்கோ அப்டி?"என்று குழம்புபவர்களுக்காக மட்டுமே அடுத்த பத்தி. ஏனைய சனங்கள் அடுத்த பத்தியை ஸ்கிப் செய்துவிட்டு தொடர்ந்து வாசிக்கலாம்.


முதன்முதலில் மண்கோதும் எந்திரத்தை வடிவமைத்து சாதித்தது பொக்லைன் என்னும் நிறுவனம். அது முதல் மண்கோதும் எந்திரங்களைக் கேட்டர்பில்லர், கொமாட்ஸு, வோல்வோ, ஹிட்டாச்சி, ஹ்யுண்டாய் போன்ற நிறுவனங்கள் உருவாக்கினாலும் பார்க்கிற பயபுள்ளைக "டேய் பொக்லைண்டா" என்றே கூவி வருகின்றனர். 

தேவைக்காக உருவாக்கப் படுபவையே எந்திரங்கள். அந்த வகையில் மண் தோண்டுவதற்காக கையைப் போல ஒரு உபகரணம் செய்து அதற்கு பூம்(boom)என்று பெயர் சூட்டி, மணிக்கட்டுக்குக் கீழ்க்கையை “பக்கெட்(bucket)” என்றாக்கி, அதை முழங்கையோடு இணைக்க “ஸ்டிக்(stick)” என்றொரு தொடுப்பையும் செய்து, இந்தக் கை, தொடுப்பு மற்றும் மேற்கை  மூன்றையும் ப்பின்(pin) என்றழக்கைப்படும் உருளைகளைக் கொண்டு இணைத்து கோதும் சாதனம் செய்தாயிற்று. 

ஒவ்வொன்றையும் தேவைக்கேற்ப ஆட்டி அசைக்க ஹைட்ராலிக் ஜாக்(hydraulic jack) களைப் பொறுத்தி இயந்திரத்தின் தோள்பட்டையில் இணைத்தாயிற்று.  இதை இயக்க  கன்ட்ரோல் லீவர்ஸ்(control levers) அல்லது ஜாய் ஸ்டிக்ஸ்(jot sticks), கட்டுப்பாட்டுடன் முடுக்க கன்ட்ரோல் வால்வ்(control valve), பாதுகாப்பிற்கு ஹோல்டிங்(holding) மற்றும் சேஃடி வால்வுகள்(safety valves) அமைத்தாயிற்று. இவை யாவற்றிற்கும் அழுத்தம் கடத்தவும் உராய்வின் உஷ்ணம் உலோகத்தைத் தேய்க்காதிருக்கவும் குறைந்த பிசுபிசுப்புடைய (viscosity) ஹைட்ராலிக் எண்ணெயும் (hydraulic oil) இந்த எண்ணெய்க்கு அழுத்தம் தர ஒரு ஹைட்ராலிக் பம்ப்(hydraulic pump).  இந்தப் பம்ப்பைச் சுழற்ற ஒரு எஞ்ஜின்(engine).  அவ்ளோவ்தான்.

ஒரே இடத்திலிருந்து 360 டிகிரியும் சுழன்று வேலை பார்த்தால் கீழேயிருந்து மேலே போகும் ஹைட்ராலிக் பைப்கள் பிசுக்குப்பிடித்த பைத்தியக்காரப் பெண்ணின் சடைபோல பிண்ணி விடாதா? அதனால் ச்சாஸிஸ்க்கும்(chassis) இம்ப்ளிமென்ட்ஸுக்கும்(implements) இடையே நடுவுல ஸ்வைவல்(swivel) என்றொரு சாதனம் இருக்கும். இதுவும் ஒன்னும் சீனத்தி வித்தை அல்ல.  நம்ம ஊர் மீனவர் ஒருவர் சொல்லக் கேட்டதுண்டு. 

“என்னத்துக்கு வலையை பொத்திக்கிட்டு நடு சாமத்ல கடலுக்குப் போய்க்கிட்டு வலை வீசி மீன் பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படனும்? ரெண்டு வையாறு(wire) ஒரு பாம்பு(bomb) கடல்ல வீசி, டமார்ன்டு வெடிச்சி, மீனெல்லாம் செத்து. அப்டியே அரிச்சிக்கிட்டு வந்துடலாம்”

என்னும் நம்மூரு அட்டு ட்டெக்னிக்தான்.

இரண்டு உருளைகள் ஒன்றுக்குள் ஒன்று ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டின்படி பொறுத்தப்பட்டிருக்கும்.  வேலை செய்யும்போது ச்சாஸிஸை நிலைநிறுத்தி பூம் மட்டும் சுழலும்போதெல்லாம் இந்த உருளைகள் ஒன்றுக்குள் ஒன்று சுழன்று ப்ரெஸ்ஸெரைக் கடத்தும். அதுவும், நான் அனுப்பிய சாமானை எங்கூட்டுக்கும் சபீர் அனுப்பியதை அவர் பேரனுக்கும் அபு இபு அனுப்பியதை இபுறாகீமுக்கும் சரியாக, மிகச்சரியாகக் கடத்திவிடுவது ஸ்வைவல்தான்.

ஒரே இடத்தில நின்று வேலை செய்தால் பூமியில பொத்தல் விழுந்துடாது? அதனால நகருனும்ல?.  நகருவதற்காக இரண்டு பல்லு சக்கரங்களும்(sprocket) இரண்டு ஐட்லர்களும்(idler) ஆக நாலு பக்கமும் ரெண்டு ரெண்டா பொருத்தியிருப்பார்கள்.  இவற்றை முறையாகவும் கொத்தாகவும் சுழற்ற ட்ராக்(track) பொறுத்தி மேலும் ஸ்திரமான நகர்தலுக்காக 80 செமி அல்லது 60 செமீட்டர்ல ஷூஸ்(shoes) போட்டு உட்டுடுவாங்க.  மேலும், இரெண்டு பக்கமும் உருளைகளும்(track & carrier rollers) அவற்றைக் காவந்து பண்ண கார்ட்களும்(roller guards) பொருத்தியிருக்கும்

இந்த எந்திரத்தில் 6 ஸிலின்டர் எஞ்ஜின் பொறுத்தியிருப்பதால் ஓங்கி அடிச்சா ஒன்றர ட்டன் எடைக்கே அந்தரத்ல பறப்பதைப் பார்த்த நமக்கு 10லேர்ந்து 32 ட்டன் வெயிட்ல அடிச்சா எப்படி இருக்கும்!  செவுளு மட்டுமா பேர்ந்து போகும்?

எஞ்ஜின் மாடல்கள் 3116 மற்றும் 3306 பரவலாகப் பொறுத்தப்பட்டிருக்கும்

(வேணாம்….)

ஏழு மீட்டர்லேர்ந்து 22 மீட்டர் வரையும் கையை உட்டுத் துலாவி மண்ணை வாரி இறைக்கும்.  தர்ஹாக்களுக்கு முன்னால் பயன்படுத்தக் கூடாது என்று ஃபத்வா இருக்கிறது.

(வேணாம்… வேணாம்…)

3,500லேர்ந்து 4,000 பி எஸ் ஐ ஹைட்ராலிக் ப்ரெஸ்ஸர்ல சந்தோஷமா வேலை செய்யும்.

(வேணாம். அழுதுடுவேன்)

சரி இதற்குமேல் ட்டெக்னிக்கலாப் போனா அழுதுடுவீங்க என்பதால்…வேணாம்.  ஜாலியா சில விஷயங்களை டிஸ்கஸ் பண்ணிடுவோம்.

இதை இயக்கும் ஆபரேட்டர்களுக்கு மாசம் 50,000 ரூவாக்கு மேலே சம்பளம் கிடைக்கிறது; பழுது பார்த்து சேனாத்தி பண்ற மெக்கானிக்குகள் நாலைந்து நட்டு போல்ட்களை முடுக்கிவிட்டுட்டு 60,000 வரை வாங்குறாங்க.  இப்படி ஒர் 10, 20 பேர்களை வைத்து அதிகபட்ச வேலை வாங்கும்  கங்காணிகளுக்கு 1 லட்சமும் இவுகளில் 4, 5 பேர்களை வழிநடத்துபவருக்கு 2 லட்சம் வரை சம்பளமும் கொடுத்து துணை நிர்வாகி என்று பதவியும் கொடுப்பார்கள்.  இதே ரூட்ல நூல் புடிச்ச மாதிரி வந்தால்  பணிமனை நிர்வாகி என்னும் இடத்துக்கு வந்த இயந்திரங்களைவிட இரும்பாகிப் போன மனுஷங்களோடு மல்லுக்கட்டலாம். ஆனால், நம்ம மக்களில் பெரும்பாலோர் ஐ ட்டி, கம்ப்யூட்டர் சையன்ஸ், எம் பி ஏ என்று கூட்டம் கூட்டமாப் படிக்கிறாங்களே தவிர நம்ம வழியிலே வர ஒரு மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கோ (ட்ரஸ்ல க்ரீஸ் பட்டுடுமாம்), எலெக்ட்ரானிக்ஸோ(பிள்ளைக்கு ஷாக் அடிச்சிட்டா), இன்ஸ்ட்ருமென்டேஷனோ(அப்டீன்னா? பேங்க் படிப்பா?) படிச்சிட்டு வர ஆர்வம் காட்டுவதில்லை.

தவிர, 

“நம்ம பயலுக்கு ஒரு விசா ஏற்பாடு பண்ணுங்களேன்”, 

“என்ன காக்கா படிச்சிருக்கான்?”, 

“படிப்பு ஏறல தம்பி, ஆனா, எந்த வேலை கொடுத்தாலும் செய்வான்” 

என்கிற பாரம்பரியம் மிக்க உரையாடல்களின் விளைவாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் ஹெல்ப்பர்கள் என்னும் பணியில் நாய் படாத பாடு படுவது கட்டுமானம் மற்றும் இந்தத் துறையிலும்தான் அதிகம்.

கடுமையாக உழைக்க மன உறுதியும் நேர்மையான வழியில் சீக்கிரம் பணக்காரனாக ஆசையும் இருக்கிறதா?  மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கோ, எலெக்ட்ரானிக்ஸோ, இன்ஸ்ட்ருமென்டேஷனோ படிச்சிட்டு இந்த லைன்ல வாங்க. உழைப்புக்கு அங்கீகாரமும் வெகுமதியும் கண்டிப்பாகக் கிடைக்கும்.

பி.கு.: நானோ ட்டெக்னாலஜி அசுர வளர்ச்சி கண்டு வரும் இக்காலத்தில் ஒரு மைக்ரோ எக்ஸவேட்டர் செய்து, எப்போதும் மூக்கை நோண்டிக் கொண்டிருக்கும் அந்த க்ளர்க்கிடம் கொடுத்து, அருகிலேயே “டேஞ்சர், டீப் எக்ஸ்கவேஷன்” என்று மைக்ரோ போர்டும் வைக்கும் நாள் ‘ஒளி வருட’ தூரத்தில் இல்லை.

Sஹமீது எழுதியதல்ல
(எமது அடுத்த தாக்குதல் அன்பிற்குரிய கவிதையென்றால் கச்சல் கட்டுபவருக்கு)

18 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

//ஏழு மீட்டர்லேர்ந்து 22 மீட்டர் வரையும் கையை உட்டுத் துலாவி மண்ணை வாரி இறைக்கும். தர்ஹாக்களுக்கு முன்னால் பயன்படுத்தக் கூடாது என்று ஃபத்வா இருக்கிறது//.

இத வச்சு ஒரே அடியில தர்காவ காலி பன்ன முடியாதா காக்கா?


ZAKIR HUSSAIN சொன்னது…

நம்ம பயலுக்கு ஒரு விசா ஏற்பாடு பண்ணுங்களேன்”,

“என்ன காக்கா படிச்சிருக்கான்?”,

“படிப்பு ஏறல தம்பி, ஆனா, எந்த வேலை கொடுத்தாலும் செய்வான்”
-------------------------------------------------------------------------------------------------------------------


படிக்கும் காலத்தில் கல்வி என்ன செய்ய சொல்கிறதோ அதை செய்ய வேண்டும்...அப்படி செய்தால் நாம் சொல்வதை உலகம் கேட்கும்...இல்லாவிட்டால் உலகம் சொல்வதை நாம் கேட்க கேட்க வேண்டியிருக்கும்.

crown சொன்னது…

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

//ஏழு மீட்டர்லேர்ந்து 22 மீட்டர் வரையும் கையை உட்டுத் துலாவி மண்ணை வாரி இறைக்கும். தர்ஹாக்களுக்கு முன்னால் பயன்படுத்தக் கூடாது என்று ஃபத்வா இருக்கிறது//.

இத வச்சு ஒரே அடியில தர்காவ காலி பன்ன முடியாதா காக்கா?
-------------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். ஹா!ஹா!ஹா நானும் இதையே வழிமொழிகிறேன். இதை வைத்து இணைவைக்கும் தர்காவை தகர்க்கமுடியாதா?

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

//இத வச்சு ஒரே அடியில தர்காவ காலி பன்ன முடியாதா காக்கா?//

The right approach and challenge is not to demolish the building but to demolish the wrong believes and perceptions in the minds. The question itself a reflection of helplessness of demolishing the wrong thing.

I mean a poisonous tree(lets say Karuvelam tree) is growing well because of the root is strong and healthy. Cutting the branches and leaves won't destroy the tree of strong and healthy root.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Ahamed Ameen சொன்னது…

//இத வச்சு ஒரே அடியில தர்காவ காலி பன்ன முடியாதா காக்கா?//

Again... if the question is just for fun here. It could be considered as not serious matter.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari சொன்னது…

என்னைத் தேடிப்புடாதிய.

நான் கடந்த வாரம் தொடரும் வரும் வாரத்தொடரும் அனுப்ப இயலாத நிலையில் இருக்கிறேன். முறைப்படி விடுப்பு எடுத்து இருக்கிறேன். விடுப்பு முடியும் முன்பே ஆஜராகிவிடுவேன்.

இன்ஷா அல்லாஹ்.

நேற்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கவிமணி அப்துல் கபூர் அவர்கள் பற்றிய கருத்தரங்கம்.

அனைவர் பேச்சிலும் முக்கியப் பங்கு வகித்தது ?

கண்ணீர்!

தண்ணீர் வேண்டுமே தண்ணீர் சொன்னது…

படிப்பதற்கு நல்லதாக இருக்கின்றது.

மழை இல்லை, தண்ணீர் இல்லை, ஊரில் தண்ணீர் இல்லை, பொது மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர்.

அதிரை எவர் கோல்டு பில்டிங்கில் மட்டும் தண்ணீர் தட்டுப்பாடு கிடையாது. அங்கு இருபத்தி நான்கு மணிநேரமும் ஊத்திக்கொண்டே இருக்குதான் நமதூர் தண்ணீர்.இது எப்படி முடிந்தது?

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

//“படிப்பு ஏறல தம்பி, ஆனா, எந்த வேலை கொடுத்தாலும் செய்வான்” //

There are wrong belief and ego based arguments from the uneducated brothers that education will NOT give great future lives. Uneducated people too are earning well. But they will sure realize the importance of education sooner or later one day.

Another wrong idea is to stop educating and learning oneself once they get the degree.

Mr. Satya Nadalla an Indian(Hyderabad) is now CEO (Chief Executive Officer) of Microsoft. He said that the reason for his growth is believing and amazed in learning ability of human and by continuously educating himself. He was appointed in Microsoft before 22 years. During weekend holidays he studied his MBA by traveling by flight to another state in US and return to work on Mondays.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Shameed சொன்னது…

இது ரொம்ப அநியாயமா இருக்கு வரலாறை சொன்னதுக்கே முகத்திரை கிழிந்தது ஜட்டி கிளிந்ததுன்னு கத்தினாங்க இப்போ எல்லாமே நான் சொல்வது (எழுதுவது )போல் சொன்னதற்கு நான் எதை கிழிப்பது என்று யோசிததுவிட்டு மீண்டும் வந்து கிழிக்கின்றேன்

sabeer.abushahruk சொன்னது…

ஏறத்தாழ ஹமீதின் கைப்பக்குவம் வந்திருக்கிறது என்றாலும் அவர் எழுத்தில் இருக்கும் ஒரு ஃப்ரெஷ்னெஸ் இல்லாமல், ஒரு நாள் வச்சிந்திருந்து சாப்பிடும்போது ஏற்படும் ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது.
எப்படி இந்த குறையை நிவர்த்தி செய்வது?
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.
ஆயாளைக் கொண்டுதன்னே எழுதாம்பறைஹுஹா!
அப்ப இனி லிஸ்ட் களைகட்டுமுன் முந்திக்கொள்வது நல்லது.
அ.நி.: லிஸ்ட்ல நான் இல்லைல?

Shameed சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…

//அ.நி.: லிஸ்ட்ல நான் இல்லைல?//

லிஸ்ட்ல மொத ஆளு நீங்கதான் சீட்டு குலுக்கி போட்டதுலே மொத பேரு எம்பெரு உலுந்துருசி

Your One Stop Pre-Post Press Printing Solutions Destination சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Yasir சொன்னது…

காக்கா..அருமை..ஆமா இந்த லிஸ்டல நான் இல்லைல்லெ....அப்படி எதுவும் ஃபிளான் வச்சிருந்தா முன்னமே சொல்லிடுங்க....இரண்டு நாள் ஆஃபிஸை லீவு போட்டுவிட்டாவது எழுதி தந்துவிடுகின்றேன்....

Yasir சொன்னது…

இது எக்ஸாகவேட்டரா....நான் தினமும் எங்க பிரிண்டிங் பிரஸ் போற வழில பார்த்துட்டு...என்ன காக்கா சில நேரம் கொடிமரத்தை ஏத்தி வச்சிருக்காக சில சமயம் இறக்கி வச்சிருக்காக என்று யோசித்தது உண்டு....விஞ்ஞானியாக்க சாயலில் நிறை டெக்னிக்கள் விசயங்ளை தந்து இருக்கின்றீர்கள்

Yasir சொன்னது…

படிக்கிற வயசுல படிப்பதை விட்டுவிட்டு ஏதாவது ஒரு வேலைக்கு இங்கே வந்துவிட்டு நாட்டையும் அடுத்தவர்களையும் குறைக் கூறி திரியுதுங்க ஒரு கூட்டம்.....சுயப்பரிசோதனை செய்து கொள்ளாத ஜென்மங்களுக்கு என்றுமே அடுத்தவர்களை குறை சொல்வதே வேலை

Yasir சொன்னது…

எல்லாம் சரி, பொக்லைன் வேலை செய்வதை அப்படியே உள்ளபடியே சொல்லி இருக்கீங்களே...அந்த கம்பெனிகாரங்க..காப்பி பேஸ்ட செய்யும் எஞ்சினீய நிருபர்கள் என்று கிள்ம்பிவிட்டால் என்ன செய்வீங்க.....

sabeer.abushahruk சொன்னது…

யாசிர்/ஹமீது,

இது ஹமீது எழுதியதல்ல என்றுதானே போட்டிருக்கு? நீங்க ரெண்டு பேரும் என்னமோ நான் எழுதின மாதிரில சொல்லியிருக்கீங்க?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

கச்சல் கட்டுபவருக்கான தாக்குதலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நம்மை தாக்குமுன் அல்லாஹ் வக்தில் பரக்கத் செய்து மீண்டும் அதிகம் எழுத வேண்டும். இன்சா அல்லாஹ்.

//இன்ஸ்ட்ருமென்டேஷனோ படிச்சிட்டு இந்த லைன்ல வாங்க. உழைப்புக்கு அங்கீகாரமும் வெகுமதியும் கண்டிப்பாகக் கிடைக்கும்//
2 வருசத்தில் அந்த லைன்ல நம்மாளு ரெடியாகுது "ஹெல்ப் ஹிம் ப்ளீஸ்"

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+