Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 29 15

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2014 | ,


கண்பார்வைக் கோளாறுகள் நீங்க

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.

இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

உணவு வகைகளில் கண்களைப் பாதுகாக்க...

வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுகளுக்கு கேரட், பீட்ரூட், வெண் பூசணி, முள்ளங்கி, வெண்டைக்காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம்.அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம். 

சத்துக் குறைவால் கண் நோய்கள் நீங்க...
சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இருவேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்) பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.

புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம். 

கண்பார்வை தெளிவடைய...

பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது. 

அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும். 

பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது. 

கண்களை பாதுகாக்க டிப்ஸ்:

சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண்களைக் கழுவவும். •சாதாரண மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்காரா என எல்லாமே தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டியது முக்கியம். •

கம்பியூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை சில நொடிகளாவது மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடிய பச்சை, நீல நிறங்களை அடிக்கடி சிறிது நேரம் பார்க்கலாம்.• கண்களைச் சுற்றி எப்போதும் மோதிர விரலால்தான். அதுவும் மிக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.. 

ஆரோக்கியமான கண்களே அழகான கண்கள். எனவே கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். கண்கள் சிவந்துபோதல், மேக் அப் அலர்ஜியால் கண்கள் பாதிக்கப்படுதல், கொண்டாக்ட் லென்ஸ், சன்ஸ்கிரீன் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

அடுத்து தொடரிலும் கண்களை அலங்கரித்தல் வரும்
(தொடரும்)
அதிரை மன்சூர்

15 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

பச்சை கீரைவகைகளை நம்அதிரைமுஸ்லிம்பெண்கள்மறந்து ரெம்பநாளாச்சு!அப்படியே அவைகளை வாங்கி கொடுத்து சாறுவச்சு-வதக்கி கேட்டாலும் கையில் க்லவ்ஸ் போட்டே கீரைகளை பச்சை காய்கறிகளை ஆய்கிறார்கள். கண் வியாதியை குணப்படுத்த செம்மறியாட்டு முன் சந்தில் ஏதும் மருந்து இல்லையா ? நான் சொன்னது செம்மறி ஆட்டு குட்டியின் முன்கால் சந்து! நடுத்தெரு முன்சந்து அல்ல!

sheikdawoodmohamedfarook said...

தம்பி மன்ஸூர்! ஒரு நாட்டு வைத்திரையும் விடசிறந்த மூலிகைமருந்தை கூறி இருகிறீர்கள்! கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக என் இருகால்களிலும் புண் வந்து தோல்வியாதி டாக்ட்டரிடம் காட்டி பை பையா மாத்திரைகள் சாப்பிட்டும் குணம் ஆகவில்லை.' குப்பை மேனி கீரை வதக்கி சாப்பிட்டால் குணமாகும் 'என்று ஒரு இந்து நண்பர் சொன்னார்.'' CMP கால்வாயில் நிறைய கிடக்கிறதே நான் பறித்து தருகிறேன்''என்று மூன்று நாள்பறித்து தந்தார்.புண்ஓரளவுகுணமானது. குளங்களுக்கு தண்ணீர்விடட்ராக்டர் கால்வாயே தோண்டியதில் அதிலிருந்தகுப்பையும் குப்பைமேனி கீரையும் போனது! இராண்டேநாள்மட்டும்கால்வாயில்தண்ணீர்வந்தது.பின்பு? [தொடரும்]

sheikdawoodmohamedfarook said...

நீர் வந்தபின்பு 'நீயா? நானா?' அரசியல் வந்தது !' வயிறு ஆர உண்ணலாம்' என்று கைகழுவி சகனில் உட்கார்ந்த காய்ந்தகுளம் இரண்டும் ''அல் ஹம்து லில்லா! சுக்கூர்'' என்று சொல்லி அரைவயிற்று சோற்றோடு கைகழுவி எழுந்தது! நீரோட தோண்டிய CNP கால்வாயில் அரசியல் ஒடியதால் நீர் வேறுதிசை நோக்கி பயணத்தை திருப்பியது! வழக்கம்போல் CMPமஞ்சள் இழந்து! மங்கலம் இழந்து!குங்குமம் இழந்து! கோலம் இழ்ந்து புருஷன் சாகுமுன் 'உடன்கட்டை' ஏற தயாரானது! நீரோடதோண்டிய அதன் மேனியில் மீண்டும்குப்பைகள்! கூலங்கள்!'தூண்டில் காரனுக்கு மிதப்பு மேல் கண்ணு ' என்பதுபோல் நான் CMPகுப்பையிலே குப்பைமேணி தேடினேன்! தேடத்தேடகுப்பையேதவிர வேரொன்றும்மில்லை! நீரோடிய CNPயில் நீரில்லை! குப்பையிலே குப்பைமேனிஇல்லை! நீரோடிய என் காலில் மட்டும் நீரோட்டம் நிற்க்கவில்லை!

sabeer.abushahruk said...

கண்கள் மற்றும் பார்வையை உள்ளடக்க்கிய ஒரு முழுமையான நெடுந்தொடர் தந்து எங்கள் அறிவுக்கண் திறக்க வைக்கும் மன்சூர் பாய்,

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

sabeer.abushahruk said...

/குப்பை மேனி கீரை வதக்கி சாப்பிட்டால் குணமாகும் '//

ஃபாரூக் மாமா,

குப்பை மேனி கீரை மனித மேனிக்கு அவ்வளவு நல்லது என்றால் அதை சகட்டு மேனிக்கு வளர்க்கலாமே!

இருக்கட்டும், தற்போது புண் குணமாகிவிட்டதா? இல்லேன்னா நம்ம தொகுதி வேட்பாளரிடம் சொல்லுங்கள். வாக்குப் பதிவுக்கு முன்னால் குணப்படுத்த ஏற்பாடு செய்வார்கள். சீசன் அப்டி.

நாட்டு வைத்தியம் ஒருபுறம் இருக்க, மெதனமாக இருக்காமல் முறையான சிகச்சை பெறவும்.

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர்! கீப் இட் அப்.

sheikdawoodmohamedfarook said...

மருமகன்சபீர்அபுசாருக்! நாட்டுவைத்திய மருந்து கட்சிசண்டையாலே பயந்துபோய் எங்கேயோ ஓடிபோச்சு. இனிநாட்டைநம்பிபலன்இல்லை! சொன்னயோசனைப்படிநம்மகாண்டி டேட்டுட்டே காலை காட்டி கறக்கலாம்ன்னு ஐடியா ! ஆனா 'கை' கரங்கிட்டே என்னத்தை காட்டுறது என்றுதான் ஒரே யோசனையா இருக்கு.கை காரன் காலுக்குகாஸுகொடுப்பான ?தெரிஞ்சவங்க ஐடியா சொல்லுங்களேன்!

sheikdawoodmohamedfarook said...

கைகாரன்கிட்டே காஸு புடுங்க ஐடியா சொல்றவங்களுக்கு கிடைக்கிறதுலேfift-fifty ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தகுபெற்றால்அந்த fifty குள்லேயே பங்கிட்டு கொள்ள வேண்டும்.இதில் வழக்குகள் கடல்கரைதெரு பஞ்சாயத்துக்கு மட்டுமே போகவேண்டும்.

sabeer.abushahruk said...

//இதில் வழக்குகள் கடல்கரைதெரு பஞ்சாயத்துக்கு மட்டுமே போகவேண்டும்.//

எதற்கு மாமா?

இன்னொரு கபுர் கட்டவா?

adiraimansoor said...

அனைத்து பின்னூட்டங்களும் நகைச்சுவை

மானல்லவோ கண்கள் தந்தது
ஆஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது
ஓஹோ
தேனல்லவோ இதழைத் தந்தது
ம் ஹும்
பினூட்டமெல்லாம் சிரிப்பைத் தந்தது

adiraimansoor said...

////நீரோடிய என் காலில் மட்டும் நீரோட்டம் நிற்க்கவில்லை!////

இத்தனை வேதனைகளுக்கிடையிலேயும் உங்கள் எழுத்தார்வமும் எழுத்தில் நகைசுவையும் கண்டு பிரமித்து போகின்றேன்
அல்லாஹ் உங்களது காலில் ஏற்பட்டிருக்கும் சுகக்குறைவை அல்லாஹ் குணப்படுதுவானாக ஆமீன்

காலில் நீர் வடிதல் அதற்கு எக்சிமா என்று பெயர்

இதற்கு இன்னொரு வைத்தியம் செய்து பாருங்கள்
ஆடாதோடைஇலை, இலுப்பை இலை, அவித்து
காலை கழுவிவிட்டு பின்னர் புங்கம் பட்டை, உப்பு, மஞ்சள், வெங்காயம், ஆகியவற்றை அரைத்து இரவில் பூசுங்கள்

அல்லது
புண்களில் நீர் வடிதல்,உணர்வற்ற நிலையில் தோன்றும் விரல் புண்கள், படுக்கை புண்கள் ஆகியவற்றை நீக்கி, அழுகலை அகற்றி, புண்களை எளிதில் ஆறச்செய்யும் அற்புத மூலிகை செவ்வரளி. வீடுகளில் அழகுக்காக வளர்க்கும் தடிமனான இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும் உடைய இந்தச் செடிகள் நஞ்சுத்தன்மை உடையது

நீரியம் ஓலியாண்டர் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அப்போசினேசியே குடும்பத்தைச் சார்ந்த செவ்வரளிச் செடியின் வேர், பட்டைகளிலுள்ள அலனின், ஆர்ஜினின், அஸ்பார்திக் அமிலம், சிஸ்டின், குளோட்டமின் அமிலம், டிரிப்டோபேன், டைரோசின் ஆகியன எதிர் நுண்ணுயிரிகளாக செயல்பட்டு, அழுகிய புண்களை ஆறச் செய்கின்றன.

அரளிப் பட்டையை 35 கிராமளவு எடுத்து, ஒன்றிரண்டாக தட்டி, அரளிப்பட்டை கசாயத்தால் அரைத்து, ஒரே உருண்டையாக உருட்டி 250 மி.லி., நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, பதத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதனை அழுகிய புண்கள் உள்ள இடங்களில் தடவி, பருத்தி துணியால் கட்டி வர விரைவில் ஆறும். படுக்கைப்புண்களில் இந்த தைலத்தை தடவி வரலாம். இது நஞ்சுத்தன்மை உடையதாகையால் உள்ளே சாப்பிடக்கூடாது
இன்ஷா அல்லாஹ் கூடியவிரைவில் அல்லாஹ் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுப்பானாக

தலைத்தனையன் said...

Assalamu alaikkum. From spirituality to physiology. maaple! Did you write some points on "how to protect our eyes from gazing on bad stuff"?

sheikdawoodmohamedfarook said...

//எதற்கு மாமா இன்னொரு கபுர்கட்டவா // தற்போதைய நிலையில் நாலு கபுர்கள் இருக்கிறது! காலம் சரியில்லாததால்'' நாலேபோதும் !நாலுக்குமேல்இப்போ வேண்டாம்!'' என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது ! பாவம் லெபைமார்கள்! கோடிகணக்கான சொத்துக்களை கொடுத்துவிட்டு தெருவில் நிற்கிறார்கள் ! முன்னைய பஞ்சாயத்து என்னிடம் ஒரு விவகாரத்தை முடிக்க ரூபாய் இரண்டு இலட்சம் 'தா'என்றது ! தரமாட்டேன் 'போ! என்று வந்துவிட்டேன்! அந்த காஸுவாங்கும் பஞ்சாயத்தை மக்கள் தூக்கி வீசினார்கள்! பணசாட்சி பஞ்சாயத்து போய் இப்போ மனசாட்சிபஞ்சாயத்து செயல்படுகிறது! அதனால்தான் அப்படி சொன்னேன்!

sheikdawoodmohamedfarook said...

அன்புத்தம்பிமன்ஸூர்! சொன்னபடிசெய்கிறேன்! அல்லாவின்உதவியாலும்உங்கள் எல்லோடைய துவாபரகத்தாலும் நோய்குணமாகும் என்ற நம்பிக்கைஉண்டு! நன்றி! அஸ்ஸலாமு அலைக்கும்! வேதனையுலும் சோதனையிலும்சிரிப்பது துன்பத்தை வெல்லும் படையாகும்! சிரிப்பும் ஒரு மருந்தே !

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு