அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!
ஃதிக்ரின்
சிறப்பு:
(நபியே)
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில்
உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! ( அல்குர்ஆன் :
7:205 )
நம்பிக்கை
கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும்
துதியுங்கள்! ( அல்குர்ஆன் : 33:41,42 )
''நபி(ஸல்) அவர்கள் தொழுதால், கடைசி இருப்பில்
அத்தஹிய்யாத் மற்றும் ஸலாம் கூறுவதற்கு இடையே கடைசி வார்த்தையாக, ''அல்லாஹும்மஹ்ஃபிர்லீ மாகத்தம்து வமா அக்கர்து, வமா அஸ்ரர்து வமா
அஃலன்து. வமா அஸ்ரஃப்து, வமா அன்த அஷ்லமு பிஹி மின்னீ அன்தல் முகத்தமு, வஅன்தல்
முஅக்கரு, லாயிலாஹ இல்லா அன்த'' என்று கூறுவார்கள்.
பொருள்: இறைவா!
நான் முன் செய்தவற்றையும், பின் செய்தவற்றையும், ரகசியமாக செய்தவற்றையும்,
வெளிப்படையாக செய்தவற்றையும், வீண் விரயம் செய்தவற்றையும், என்னைப் பற்றி என்னைவிட
நீ அறிந்துள்ளவற்றையும் எனக்கு நீ மன்னிப்பாயாக! நீயே முற்படுத்தி வைப்பவன். நீயே
பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (அறிவிப்பவர்: அலீ(ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1424
)
''நபி(ஸல்)
அவர்கள் தன் ருகூஉவிலும், தன் ஸஜ்தாவிலும், ''சுப்ஹானக் கல்லாஹும்ம ரப்பனா
வபிஹம்திக, அல்லாஹும்மஹ்ஃபிர்லீ'' என்று அதிகமாக கூறுபவர்களாக இருந்தனர்.
(புகாரி,முஸ்லிம்)
பொருள்:
இறைவா! எங்கள் இரட்சகனே! உன்னைப் புகழ்ந்து தூய்மையானவன் என போற்றுகிறேன். இறைவா!
என்னை மன்னிப்பாயாக! (அறிவிப்பவர்: அன்னை
ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1425 )
''நபி(ஸல்)
அவர்கள் தன் ருகூஉ, ஸஜ்தாவில் ''சுப்பூஹுன்,
குத்தூசுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்''
என்று கூறுவார்கள்.
பொருள்
: அல்லாஹ் தூய்மையானவன், பரிசுத்தமானவன். மேலும் வானவர்கள், ஜிப்ரீல் (அலை)
ஆகியோரின் இறைவன். (அறிவிப்பவர்: அன்னை
ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1426 )
(தொழுகையின்)
ருகூஉவில் இறைவனை கண்ணியப்படுத்துங்கள். ஸஜ்தாவில் துஆச் செய்வதில் ஈடுபடுங்கள்.
உங்களுக்கு துஆ ஏற்கப்படக் கூடும் என்று
நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1427 )
''ஸஜ்தா
செய்யக்கூடிய அடியான் தான், தன் இறைவனுக்கு மிக நெருக்கமானவனாக உள்ளான். எனவே
(அதில்) துஆவை அதிகமாக்குங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1428 )
''நபி(ஸல்) அவர்கள் தன் ஸஜ்தாவில் ''அல்லாஹும்மஹ்ஃபிர்லீ ஃதன்பீ குல்லஹு, திக்கஹு, வஜில்லஹு,
வஅவ்வலஹு, வஆகிரஹு, வ அலானிய்யதஹு, வசிர்ரஹு'''
என்று கூறுவார்கள்.
பொருள்: இறைவனே!
என் பாவங்களில் சிறியவை, பெரியவை, முதன்மையானவை, இறுதியானவை, பகிரங்கமானவை,
இரகசியமானவை என அனைத்தையும் நீ மன்னிப்பாயாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1429 )
''ஒருநாள்
இரவு நபி(ஸல்) அவர்களைக் காணவில்லை என்பதால் தேடினேன். அப்போது அவர்கள் ருகூஉ
செய்தவர்களாக அல்லது ஸஜ்தா செய்தவர்களாக இருந்தார்கள். (அதில்) ''சுப்ஹானக்க, வபிஹம்திக்க, லாஇலாஹ இல்லா அன்த'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
பொருள்:
யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னைத் தவிர
வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
''என்
கைகள் அவர்களின் உள்ளங்கால்களை தொட்டது. அவர்கள் பள்ளியில் இருந்தார்கள். கால்கள் இரண்டும்
(ஸஜ்தாவில்) நட்டு வைத்த நிலையில் இருந்தது.''
அப்போது
அவர்கள் ''அல்லாஹும்ம இன்னீ அஊது
பிரிழாக்க மின் ஸக்திக, வ பி முஆபாதிக மின் உகூபதிக, வஅஊது பிக மின்க, லா உஹ்ஸீ
ஸனாஅன் அலய்க அன்த கமா அஸ்னய்த அலா நஃப்ஸிக ''
என்று கூறினார்கள்'' என மற்றொரு அறிவிப்பில் உள்ளது.
பொருள்
: இறைவா! உன் திருப்தி மூலம் உன் கோபத்தை விட்டும் உன் ஆதரவு மூலம் உன் தண்டனையை
விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் உன்னிடம் உன் வேதனையை விட்டும் பாதுகாவல்
தேடுகிறேன். உன்னை நீ புகழ்ந்தது போல் (எல்லையில்லா உன் புகழை) என்னால் முழுமையாக உன்னை
புகழ இயலாது. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1430 )
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.
5 Responses So Far:
அல்லாஹ்வை திக்ர் செய்வது ஆர்ப்பரிக்கும் மனத்தை அமைதிப்படுத்தும்!
நினைவூட்டலுக்கு நன்றி, அலாவுதீன்!
அமைதியான சூழலுக்கும், அள்ளிக் குவிக்கும் நன்மைகளுக்கும் திக்ர் அருமருந்து !
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...
நோன்பில் அசர் தொழுகைக்குப் பின் திக்ர் உடம்பை காற்றுப் போல் ஆக்கிவிடுகிறது. அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும் .
சகோதரர் அலாவுதீன் அவர்களே! ஜசாக் அல்லாஹ் ஹைரன்.
நினைவூட்டலுக்கு நன்றி, அலாவுதீன் காக்கா...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் : ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
Post a Comment