Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பாவம் செய்தவர் பழத்துடன் திரும்பினார்... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 23, 2014 | , ,

நபிமணியும் நகைச்சுவையும்... தொடர் அத்தியாயம் 5-லிருந்து !

மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கும் இறை விசுவாசிகளின் பாவங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மன்னித்து விடுவது மட்டுமல்லாமல், அந்தப் பாவங்களை நன்மையாக மாற்றி, பகரமாக பரிசுகளை இந்த உலகிலும் சுவனத்தை மறு உலகிலும் தரவிருக்கும் அற்புத நிகழ்வை கீழே காணலாம்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது,  அவர்களின் சபைக்கு ஒரு சஹாபி வருத்தத்துடன் வருகிறார்.

நபியவர்களால் மட்டுமே நமக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையுடன் சலாம் உரைக்கின்றார்.

சஹாபி : "இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!" (பாவம் செய்து விட்டேன்! )

நபி (ஸல்) : (புன்னகையுடன் "என்ன நடந்தது?) " உமக்கு என்ன நேர்ந்தது?"

சஹாபி : "நான் நோன்பு வைத்துக்கொண்டு, என் மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட்டேன். (இப்போது என்ன செய்வது?)"

நபி (ஸல்) : "அப்படியா? தவறு செய்து விட்டீரே! நீர் இதற்கு கஃப்ஃபாரா[*] கொடுக்க வேண்டும் . விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?"

சஹாபி : "இல்லை!" யா ரஸூலல்லாஹ்"

நபி (ஸல்) : "இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?"

சஹாபி : "அதுவும் என்னால் ஆகாத விஷயம் அல்லாஹ்வின் தூதரே!"

நபி (ஸல்) : "அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு ஆகுமான வசதி இருக்கிறதா?'"

சஹாபி : "அறுபது ஏழைகளுக்கா? அந்த அரிதான விஷயம் என்னால் முடியவே முடியாது நாயகமே!"

அனைத்து கேள்விகளுக்கும் அவர் இயலாது எனச்சொன்னதால் இவருக்கு வேறு எப்படி உதவலாம் என்ற யோசனையில், அல்லாஹ்விடமிருந்து உதவியை எதிர்நோக்கி அண்ணலார் மௌனமாகிவிட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் அற்புதம் அப்போது நிகழ்ந்தது! பெருமானாரின் சபைக்கு இனிய பேரீச்சம் பழங்கள் நிறைந்த கூடை [அரக்**] கொண்டுவரப்பட்டது. மகிழ்ச்சியுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்தவாறு...

நபி (ஸல்) : "கேள்வி கேட்டவர் எங்கே?"

சஹாபி : "இதோ நானே! (இங்குதான் இருக்கிறேன்!) யா ரஸூலல்லாஹ்"

நபி (ஸல்) : "இதை எடுத்துக்கொண்டுபோய் ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக. அதுவே உமது பாவத்துக்குப் பரிகாரம்!"

சஹாபி : "இறைத்தூதர் அவர்களே! என்ன? என்னை விட ஏழையாக இருப்போருக்கா என்னை தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்? கருங்கற்கள் நிறைந்த, இதோ இந்த இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியாகிய இந்த மதீனா நகரில் வாழும் அனைவரிலும் என் குடும்பத்தினரைவிடப் பரம ஏழைகள் யாருமே இல்லையே, யா ரஸூலல்லாஹ்!"

இதைக்கேட்டதும் நபி (ஸல்) தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்துவிட்டார்கள் .

நபி (ஸல்) : "இதை எடுத்துக் கொண்டுபோய், உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!" ஆதாரம்: புஹாரி : 1936  அறிவிப்பு : [***]அபூ ஹுரைரா(ரலி).

அல்லாஹ்வின் வாக்கு:

ஆனால் (அவர்களுள்) ஈமான் கொண்டு, தவ்பாச் செய்து, ஸாலிஹான (நற்)செயல்கள் செய்கின்றவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும் மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்:25:70).

[*] குறிப்பு 1 : கஃப்ஃபாரா என்பது  அவசரத்தால்/அறியாமையால் செய்யப்படும் பாவங்களுக்கான பரிகாரமாகும்.

[**] குறிப்பு 2 : 'அரக்' என்பது 15 'ஸாஉ' முகத்தலளவு கொண்ட கூடையாகும்; 1 'ஸாஉ' என்பது 4 'முத்'களாகும்; 1 'முத்' என்பது வயதுவந்தவர்களது இரு கரங்களால் ஒருமுறை அள்ளப்படும் தானியங்களின் அளவாகும்.

[***] குறிப்பு 3 : அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் மேற்காணும் நிகழ்வின் தொடர்புடைய சான்றுகள் - புகாரி எண் 5368 எண் 6087 எண் 6164 எண் 6709

இக்பால் M.ஸாலிஹ்
இது ஒரு ரமளான் ஸ்பெஷல் மீள்பதிவு...

7 Responses So Far:

adiraimansoor said...

மாஷா அல்லாஹ் மிக அருமையான விளக்கட்துடன் கூடிய ஹதீஸ்

adiraimansoor said...

இக்பால்
உனக்கு கல்யாணம் முடித்த புதிதில் ஆசையுடய கூற்றில்
இப்படி ஏதாவது சம்பவம் ஏற்பட்டதுண்டா
அது அறியாமை காலமாச்சே அதனால் சும்மா கேட்டுவைக்கின்றேன்

Iqbal M. Salih said...

அப்படி ஏதும் சம்பவம் எனக்கு இல்லை மன்சூர்!

தவிர, நம் தலைவர் (ஸல்) அவர்களுக்கு 'வஹீ' அருளப்படுவதற்கு முந்தைய காலகட்டத்திற்கே வரலாற்றில் "அய்யாமுல் ஜாஹிலிய்யா" என்று குறிக்கப்படும் வார்த்தை அது, பிந்தைய எந்த காலத்திற்கும் 'அறியாமைக்காலம்' என விளிக்கப்படுவது பொருத்தமாக இராது என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்!

அனைத்திற்கும் மேலாக, சகல பெருமைக்கும் கண்ணியத்திற்கும் உரித்தானவன், உயர்ந்தோனாகிய அல்லாஹ் அஸ்ஸவஜல் மட்டுமேயாகும்! இந்தப் புனித ரமளானின் இறுதியில் இருக்கும் நாம், அவனையே போற்றிப் புகழ்வோம். அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்!

உன் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

Unknown said...

பாரக்கல்லாஹு ஃபீயிக்...

மிகவும் தரமான, கண்ணியமான, அறிவூட்டும் - ரமலான் குறித்த வழிகாட்டலுடன் கூடிய நல்ல பதில்!

அல்ஹம்துலில்லாஹ்.

Iqbal M. Salih said...

Va feekum Baarakallah Ahlekum va Maalekum.

Kul 'aam va anthum be khair.

adiraimansoor said...

///அது அறியாமை காலமாச்சே அதனால் சும்மா கேட்டுவைக்கின்றேன்//

சின்ன திருத்தம் நமக்கு அறியாமை காலமாச்சே என்பதை மொட்டையாக அறியாமை காலமாச்சே என்று எழுதிவிட்டேன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு