Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் பெருநாள் - மறுநாள் மந்தி எனும் வீண் விரயம் ! 25

அதிரைநிருபர் | July 30, 2014 | , , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… 

அருட்கொடையாளன் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால், இந்த வருட ரமளான் மாதம் மிகச் சிறப்பாக அமைந்ததற்காக நம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் உதவியால் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் உள்ள நம் அதிரைச் சகோதர சகோதரிகள் தங்களின் நண்பர்கள், மற்றும் சொந்தங்களுடனும், அவர்களோடு தங்கியிருக்கும் சக முஸ்லிம் சகோதரர்களோடும் பெருநாளை சந்தோசமாக கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள். இதற்கு மேல் ஊரில் உள்ள நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள், குடும்ப சொந்தங்கள், நண்பர்கள் அனைவருடன் அன்பும் நட்பும் பாராட்டி வழக்கம் போல் ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் அல்ஹம்துலில்லாஹ்!

'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.  புகாரி 12.  Volume :1 Book :2

அதிரையில் நம்மோடு நெருங்கிப் பழகும் சகோதரர்களின் நட்பு பாராட்டும் ஏற்பாட்டால், பெருநாள் விருந்து என்று 400க்கு மேற்பட்டவர்களுக்கு விருந்து பரிமாறி தங்களின் உணவு உண்ணும் நிகழ்வை நடத்தி ஈகை திருநாளின் புனித நோக்கத்திற்கு மாற்றாக அமையப் பெற்றதை ஒட்டு மொத்த அதிரை முஸ்லீம்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த ‘மந்தி’ விருந்தோம்பலில் கலந்து கொண்ட 90% சதவீதத்திற்கு மேற்பட்ட சகோதரர்கள் தங்களின் அன்றைய உணவுக்கு திண்டாடுபவர்களல்ல. 

பெருநாள் தினத்தன்று அதனைத் தொடரும் விடுமுறை நாட்களில் தாய் தந்தை, மனைவி, குழந்தைகள், உடன்பிறந்த சகோதர சகோதரிகள் என்று ஒன்று கூடி சந்தோசமாக கொண்டாடப்பட வேண்டிய நாட்கள், இந்த மந்தி விருந்திற்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தங்களுக்கென்று வீடு குடும்பம் இல்லாமல் இருப்பவர்களுமல்ல !

குடும்பங்கள் ஒன்று கூடும் வீட்டில் தாய், தந்தை, சகோதர சகோதரிகள், மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு இவ்வாறான விருந்தோம்பல் அவசியம் தானா ?

ஒன்று கூடல் பெருமைக்கும் பகட்டுக்காகவும் இவ்வகை விருந்து வீண் விரையங்கள் நடைபெறுகிறதே, இதனை எடுத்துக் கூறி நல்வழியில் செலவிடச் சொல்ல ஊரில் எந்த ஒரு இயக்கத்திற்கும் அல்லது மார்க்க அறிஞர்களுக்கும் தோன்றவில்லையா?

அனாச்சாரங்களை தட்டிக்கேட்க வேண்டியவர்களே பம்மிக் கொண்டு நமக்கொரு அழைப்பில்லையே என்று ஏங்கிக் கொண்டிருகிறார்களா? என்னவோ ! அவர்களெல்லாம் எங்கே ? பொதுக் காரியங்களில் ஈடுபடும் சகோதரர்கள் இவ்வாறான பகட்டுக்காக புகைப்படமெடுத்து விளம்பரப்படுத்தப்படும் விருந்துகளில் கலந்து கொள்வது அவர்களின் பொதுநலச் சேவைகளை கேள்விக் குறியாக்காதா?

பெருநாள் பகல் தினத்திலோ அல்லது பெருநாள் முடிந்த அடுத்தடுத்த நாட்களிலோ ஏழைக் குடும்பங்களின் திருமணத்தை நடத்தி வலிமா என்ற பெயரிலா இவ்வாறான மந்தி விருந்து கொடுக்கப்பட்டுள்ளதா?

கடந்த சில வருடங்களாக தங்களின் பொருளாதாரத்தை அர்த்தமற்ற இது போன்ற பொழுதுபோக்கு மற்றும் பகட்டுக்கான விருந்துகளுக்கு பண உதவி செய்பவர்கள் அதற்கு உடந்தையாக செல்பவர்கள் பின்வரும் இறைவசனத்தை கொஞ்சம் நிதானமாக வாசித்துப் பாருங்கள்.

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 4:36. 

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. குர் ஆன் 7:31

(ஒருவேளை உணவுக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பமும், சத்திய சஹாபாக்களும் எவ்வளவு கஷ்டப்பட்டிருபார்கள்? அந்த கஷ்டத்தில் ஒரு துளி உணவின்றி நாம் கஷ்டப்பட்டிருப்போமா? நம் கண்களின் கண்ணீர் வர வைக்கும் அந்த சம்பவங்களை  சிறிதளவேனும் அறிந்து கொள்ள இங்கே சுட்டிப் பாருங்கள் http://adirainirubar.blogspot.in/2013/05/8.html)

இது போன்ற அனாச்சார விருந்துக்கு செலவு செய்யும் பணத்தில், ஊரில் எத்தனையோ பேர் வட்டி என்ற கொடுமையால் அறிந்தோ அறியாமலோ விழுந்து கஷ்டப்படுகிறார்கள், அவர்களில் வருடத்திற்கு ஒருவரையாவது மீட்டெடுக்க முன் வரக்கூடாதா?

ஊரில் எத்தனையோ எழை கன்னிப் பெண்கள் தங்களது திருமணச் செலவு செய்ய நாதியற்று இருக்கிறார்களே, இது போன்ற பெருநாள் தினத்தில் மந்திக்காக ஒன்று கூடுபவர்கள் அந்த ஏழைகளுக்கு பெருநாள் தினத்தில் திருமணம் நடத்தி வலிமா விருந்தை அல்லாஹ்வுக்காக ஒன்றுகூடி மந்தி சமைத்து அந்த ஏழை குடும்பங்களிடம் மகிழ்ச்சியை வரவழைக்க  முன்வரக் கூடாதா?

அனாதை பிள்ளைகள் உள்ள நமதூர் எத்தீம்கானா மதர்ஸாவுக்காகவது அன்றைய தினம் இது போன்ற மந்தி சமைத்துக் கொடுத்து அந்த அனாதைகளின் முகத்தில் மகிழ்ச்சியை மிளிரவிட்டு நன்மையை அள்ள முந்தக் கூடாதா?

பல வருடங்களாக இஸ்லாமியர்கள் ஏற்றம் பெறவும் முஸ்லீம் ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இயங்கி வரும் அதிரை பைத்துல்மாலை அணுகி நாங்கள் 400 ஏழைகளுக்கு உணவளிக்க இருக்கிறோம் என்று சொல்லி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் தினத்திலோ அல்லது அடுத்த நாளோ மந்தி சமைத்து உணவளிக்க முன்வரக் கூடாதா?

ஊரில் பெருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும், குலப்பெருமையாலும் பிரிந்து கிடக்கும் பிறதெரு சொந்தங்களை அழைத்து ஒற்றுமையின் அவசியத்தை வழியுறுத்தி உறுக்கமான, கவலையான மார்க்க உபதேசங்கள் செய்து சந்தோசமாக ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த மந்தி சமைத்து ஊர் ஒற்றுமையை நிலை நாட்ட முயற்சிகள் செய்யக் கூடாதா?

முஸ்லீம்கள் என்றால் பிரியானி, ஆட்டுக்கறி தின்பவர்கள் என்று சொல்லும் பிற மதத்தவரை அழைத்து, பெருநாள் விருந்து என்று நம்முடையை அழகிய விருந்து உபசரிப்பை காட்டி, அவர்களுக்கு நாங்கள் இஸ்லாத்தில் இருப்பதால் எவ்வளவு சந்தோசமாக உள்ளோம் என்பதை சொல்லி தூய இறை மார்க்கத்தை எத்தி வைக்க ஓர் வாய்ப்பாக மந்தி சமைத்து முந்திக் கொண்டு நன்மையின் பக்கம் அழைக்கக் கூடாதா?

உணவுப் பழக்கமோ அல்லது சுகாதரச் சூழலோ எதன் விளைவோ அல்லது வேறு எதனாலோ ஊரில் நிறைய பேர் உயிர்கொல்லி நோயான கேன்சரில் பாதிக்கப்பட்டுள்ளார்களே, அவர்களை கண்டறிந்து அவர்களின் நோய்கான செலவுகளுக்கு இதுபோன்ற அனாச்சார செலவுகளுக்கு கிடைத்த தொகையை கொடுத்து உதவ முன்வரக் கூடாதா?

வசதி வாய்பின்றி கல்வி பயில கஷ்டப்பட்டு வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ இஸ்லாமிய சொந்தங்கள் உள்ளார்கள், ஏன் சில தினங்களுக்கு முன் கல்வி உதவி கேட்டு வலைப்பூக்களில் நிதியுதவி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்கள், இது போன்றவர்களின் கல்வி செலவுக்கு மந்திக்கு ஆகும் செலவை கொடுத்து நன்மையை அள்ளிக் கொள்ளக்கூடாதா?

ஊரில் எத்தனையோ மனநோயாளிகள் சரியான பராமரிப்பின்றி அன்றாடம் சிரமத்துக்கு உள்ளாகிறார்களே, குறைந்த பட்சம் பெருநாள் தினத்திலாவது நல்ல உடையுடுத்தி, நல்ல உணவு கொடுத்து கவுரவித்து சந்தோசப்படக் கூடாதா?

எத்தனையோ நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் பல சிரமத்துக்கு மத்தியில் உள்ளார்கள், இது போன்ற பெருநாள் தினத்தில் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு உணவோ அல்லது உதவியோ செய்து, இஸலாமியர்கள் இவ்வளவு கருணையாளர்கள் என்று அவர்களின் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தூய இஸ்லாத்தை நாடி அவர்கள் நம் வழி நாடி வர ஒரு தூண்டுகோலை ஏற்படுத்தக்கூடாதா? 

என்னதான் நடக்கிறது ஊரில்? 

ஒவ்வொரு பெருநாள் காலங்களில் என்ன ஆனது நமதூர் ஊர் செக்கடிமேடு நண்பர்களுக்கும், இளைஞர்களுக்கும் எத்தனை நாட்களுக்கு இப்படியே சாப்பாட்டையும் அரட்டையையும் முன்னிருத்தி பெருமையடிப்பார்கள்? இன்னுமா திருந்தவில்லை? ஏன் இந்த அவசியமற்ற பெருமை? நாளை நமது பிள்ளைகள் இவ்வாறே தொடர்ந்தால் அதன் விளைவாய் ஏற்படும் அந்த வலியை சொல்லிக்காட்ட ஆள் இருக்காது கிள்ளிப் போடத்தான் சுற்றியிருக்கும் கூட்டம்.

தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்காக ஓட்டு கேட்கவும் கூட்டுகளை உடைக்கவும் பல கூட்டணிகளில் பங்கெடுக்கும் நம் சகோதரர்கள், மந்தியென்றதும் முந்திக் கொண்டு இந்த சாப்பாட்டுக் கூட்டணி ஏன்? [ஒற்றுமையின் அவசியம் அறிந்துதான் செயல்படுகிறோம் என்றால் இதில் மட்டுமல்ல இன்னும் ஏனைய காரியங்களிலும் முன்னிருத்தி காட்டுவதுதான் சிறந்தது].
காஸாவில் முஸ்லீம்களுக்குஎதிராக இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாதத்தில் நாளுக்கு நாள் மக்கள் கொல்லப்படும் இந்த சூழலில் செக்கடிமேடு சார்ந்த சில  சகோதரர்கள் இப்தார் நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள். ஆனால் அதே சகோதரர்கள் இந்த மந்தி விருந்தை அங்கீகரித்திருப்பது எவ்வகையான நிலைபாடு என்பது புரியவில்லை.

வீண் பெருமை, வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்று தனது திருமறையில் தெள்ளத் தெளிவாக அறிவித்து விட்டானே, வீண் பெருமைக்காக, தேவையின்றி வீண் விரயமாக செய்யப்படும் இவ்வாறான செயல்களால் அல்லாஹ்வின் நேசம் நெருங்குமா என்பதை நம் சகோதரர்கள் அனைவரின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

மேற்கண்ட கேள்விகள் உங்களின் சிந்தனையை சிதைக்கவல்ல, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயே எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அன்பான எங்கள் நண்பர்களே, சகோதரர்களே மேலே சொன்னவை எந்த ஒரு தனி நபர்கள் மேல் வெறுப்பு கொண்டு எடுத்து வைக்கப்பட்டது அல்ல. மாறாக நாம் எங்கே செல்கிறோம்? நம்முடைய வருங்கால சமுதாயத்திற்கு எவ்வகை அனாச்சார செயலை நற்செயலாக முன்னுதாரனமாக காட்டுகிறோம்? நாளை நமது பிள்ளை இதே வழியை நாடினால் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில் இருப்போமா? அல்லது அவர்களின் நேர்வழி வேண்டி இறைஞ்சுவதில் இருப்போமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நோன்பு காலத்தில் நீங்கள் கேட்ட மார்க்க சொற்பொழிவுகளில் நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹாபாக்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். பர்மா, சிரியா, பாலஸ்தீன், ஈராக் போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டு நாளுக்கு நாள் உண்ண உணவிற்கு எண்ணிலா துயரங்களை சந்திக்கிறார்களே என்று எண்ணி, அல்லாஹ் நம்மை இந்த அளவுக்கு வைத்திருக்கிறானே என்று அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துங்கள்.

இது போன்ற வீண் விரய விருந்துகளை புறக்கணியுங்கள், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இதற்கு ஆதரவு கொடுத்திருந்தால் அதற்காக, அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்கள். இந்த வீண் விரய உணவு உபசரிப்பில் கலந்து கொண்டிருந்தால் அதற்காக பரிகாரம் தேடுங்கள். இந்த வீண் விரய விருந்தை முதன் முதல் ஆரம்பித்து வைத்த சகோதர்களுக்கு இதன் தொடர் பாவங்கள் அவர்கள் கணக்கில் சேர்ந்து வருகிறது என்பதை உணர்ந்து அவர்களும் அல்லாஹ்விடம் பரிகாரம் தேடட்டும்.

அல்லாஹ் நம் எல்லோரையும் இது போன்ற வீண் விரையங்களை ஏற்படுத்தும் விருந்து உபசரிப்புகளிருந்து தடுத்து அனைவரையும் பாதுகப்பானாக. ஆமீன் !

அதிரையின் செய்தி ஊடகங்களில் பங்கெடுக்கும் சகோதர்களுக்கு மீண்டும் அன்பான வேண்டுகோள், நீங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளை சுடச் சுட செய்திகளாக பல இன்னல்களுக்கு மத்தியில் வெளியிட்டு வருகிறீர்கள் மாஷா அல்லாஹ்!, இதனை மிகப்பெரும் நற்பணியாக செய்து வருகிறீர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால்  இது போன்ற வீண் விரய அனாச்சார நிகழ்வுகளை வெறும் செய்தியாக மட்டும் போடாமல், அந்த அனாச்சாரங்களை திட மனத்திடத்துடன் கண்டித்தும் வெளியிடுங்கள். இதுதான் இஸ்லாமிய ஊடகக்காரர்கள் செய்ய வேண்டிய துணிச்சலான செயலாக இருக்க முடியும். சமுதாய பெறுப்புணர்வுடன், எதிர்கால சந்ததிகளுக்கு நாம் எதை பதிந்து வைக்கிறோம் அவர்களுக்கு வரலாற்றில் ஏடாக எதைக் கொடுக்கப் போகிறோம் என்ற கவலையுடன் செய்திகளை வெளியிடுங்கள். கேடுகெட்ட தினசரிகளைப் போன்று இஸ்லாமியர்கள் பங்கெடுக்கும் ஊடகங்களும் அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதை வேண்டுகிறோம்.

இது போன்ற விரயங்களை தற்பெருமையாக இணையத்தில் வெளியிட்டு இதனை படிப்பவர்கள் சந்தோசமடைவார்கள் என்று தவறான நோக்கத்துடன் இருக்கிறார்கள் மந்தி விருந்து ஏற்பாட்டாளர்கள். இதற்கு விதிவிலக்காக அதிரையில் மார்ர்கத்திற்கு புறம்பான வீண் விரயங்களை சுட்டிக்காட்டி அதிலிருந்து நம்மக்களை தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படும் இன்ஷா அல்லாஹ். இதனை பிற வலைப்பூக்கள் செய்யத் தவறினாலும் நாம் அதிலிருந்து பிறழாமல் எவருக்கும் அஞ்சாமல் செயல்படுவோம், மவுனமாக இருக்க மாட்டோம் என்பதற்கு இந்த பதிவும் முந்தைய பதிவுகளும் சாட்சி பகரும்.

இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மிக நெருக்கமானவர்களே அவர்கள் ஒவ்வொருவரையும் நேரிலோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அழைத்து எடுத்துச் சொல்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் இதனை ஒரு கண்டன பதிவாகவே பொதுவில் உங்கள் அனைவரின் முன் வைக்கிறோம். 

இஸ்லாமிய சமுதாய, நம்மக்களுக்கு ஒவ்வாத, புறம்பான செயல்கள் எதுவாயின் அதனை விமர்சிக்கவும், அவற்றிலிருந்து நம்மக்களை தவிர்த்திட வைக்கவும் அதிரைநிருபர் தளம் தயவு தாட்சனைகளின்றி செயல்படும் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்
editor@adirainirubar.in

25 Responses So Far:

- - - - - - - - - - - said...

மந்தி உண்டால் தொந்திதான் வளரும்! அறிவு வளராது!

citizen of adirai said...

Adirai nirubar sonna karuthai vara verkiren.

- - - - - - - - - - - said...

கனண செதுக்கும் கலாம்,உன்னவில்லை மந்தி,
கனண யேவும் காசா மக்கள் உன்னாத மந்தி,
செக்கடியில் வதந்தி பேசும் தம்பி உன்னும் மந்தி,

sheikdawoodmohamedfarook said...

மந்திவிருந்து!அமெரிக்கமற்றும்வெளிநாட்டுபணத்தின்அட்டகாசம்! வரவிருக்கும்அல்லாவின்கொடியசாபத்திற்குகொடுக்கும்வரவேற்ப்பு.

sheikdawoodmohamedfarook said...

மந்தி/இந்தஒருவார்த்தைக்குஇரண்டுபொருள்தருகிறதுஅகராதி[1][அஜீரணம்போன்றகாரணத்தால்]பசியற்றநிலையில்இருத்தல் [2]பொதுவாக குரங்கு .குறிப்பாகபெண்குரங்கு ..செக்கடிமோட்டு மந்திக்கு என்னபொருள்?

Aboobakkar, Can. said...

சகோதரர்களுக்கு .......செக்கடி மேடு என்ற ஒரு குறிப்பிட்ட தெரு அதிரை வாசிகளால் நடத்தப்படும் இந்த மந்தி விருந்து மாற்று தெரு சகோதரர்களால் அதிகம் விமர்சிக்கபடுவதாக எண்ணுகின்றேன்.....

அதை தவிர்க்கவும் வாழ்க ஊர் ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் .......நாம் அனைவர்களையும் அல்லாஹ் கருத்து ஒற்றுமை உள்ள மக்களாக ஆகிவைக்க அனைவரும் துஆ செய்யுவோம் ...ஆமீன் .....

Shameed said...

//இதனை எடுத்துக் கூறி நல்வழியில் செலவிடச் சொல்ல ஊரில் எந்த ஒரு இயக்கத்திற்கும் அல்லது மார்க்க அறிஞர்களுக்கும் தோன்றவில்லையா? //

இயக்கங்களுக்கு போஸ்டர் ஒட்டவே நேரம் போதவில்லை இதில் அவங்க எங்கே இதையெல்லாம் கண்டு கொள்ள போறாங்க !

Shameed said...

boobakkar, Can. சொன்னது…
//சகோதரர்களுக்கு .......செக்கடி மேடு என்ற ஒரு குறிப்பிட்ட தெரு அதிரை வாசிகளால் நடத்தப்படும் இந்த மந்தி விருந்து மாற்று தெரு சகோதரர்களால் அதிகம் விமர்சிக்கபடுவதாக எண்ணுகின்றேன்.....//

அதை தவிர்க்கவும் வாழ்க ஊர் ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் .......நாம் அனைவர்களையும் அல்லாஹ் கருத்து ஒற்றுமை உள்ள மக்களாக ஆகிவைக்க அனைவரும் துஆ செய்யுவோம் ...ஆமீன் ....



தவறு யார் செய்தாலும் அது செக்கடி மேடு செய்தாலும் சரி வெட்டிகுள தெரு செய்தாலும் சரி கண்டிப்பாக கண்டிக்கப்படவேண்டும் .



செக்கடி மேடு செய்யும் தவறை வேட்டிகுளம் கண்டிப்பதில் தவறே இல்லை இதில் தெரு பாகுபாட்டை புகுத்த வேண்டாம்

Ebrahim Ansari said...

பெருநாளை ஊரில் கொண்டாடுவதற்காக தொலை தூரங்களில் உள்ள நாடுகளில் பணியாற்றும் சகோதரர்கள் ஒரு சங்கமம் என்கிற முறையில் ஒரு பொது இடத்தில் இயற்கை சூழலில் ஆனந்தமாக சந்தித்து இருக்கிறார்கள். இதை தவறு என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை.

மற்றொன்று, இதேபோல கெட்டுகெதர் நிகழ்வுகள் அவர்கள் பணியாற்றும் நாடுகளில் அடிக்கடி நடப்பவைதான். அந்த முறையில் இதை ஏறாது செய்து இருப்பார்கள்.

இதில் ஒரு குறிப்பிட்ட பகுதி சகோதரர்கள் ஏற்பாடு செய்து இணைந்து இருக்கிறார்கள். இன்று சமுதாயம் இருக்கும் துயரமான சூழலில் இந்த நிகழ்வை அவர்கள் பெரிய மனதோடு தவிர்த்து இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரம் அவர்களின் மனமகிழ்வுக்காக ஒன்று கூடுவதை நாம் கண்டிக்க வேண்டியதில்லை.

ஒருவேளை அங்கு ஏதாவது மார்க்கத்துக்கு விரோதமான விஷயங்கள் பரிமாறப்பட்டிருந்தால் அதைக் கண்டிக்கலாம். ஆனால் அப்படி இல்லை.

நமக்கென்று அடையாளப்படுத்த ஒரு பழமொழி இருக்கிறதல்லவா?

sheikdawoodmohamedfarook said...

அன்புள்ளAboobakkar-can.நான்செக்கடிமேட்டை குறிபிட்டது வேற்றுமை அல்லது பகைமை எண்ணத்தில்அல்ல! இந்தவிருந்தை செக்கடிமேட்டு நண்பர்கள்செய்ததாகஅதிரைவலைஒன்றிலும்அதிரைநிருபர்Editorialலிலும் படித்தபின்னேஎன்கருத்தைவெளியிட்டேன்.செக்கடிமேட்டுமந்திவிருந்தை பற்றியேவலைதலங்கள்பேசின. அப்பொழுதெல்லாம் சும்மா இருந்த நீங்கள் இப்பொழுது தெருபாகுபாடுபேசுகிறீர்கள். இஸ்ரேல்பாலஸ்தீனத்தைஅழித்துகொண்டுவரும்வேளையில்நாம் ஏதேனும் ஒருஅற்பவிசயத்தில் கவனம் செலுத்தி நமக்குள் வேற்றுமைவளர்க்கிறோம். இதுவேநம்எதிரியின்முதல்ஆயுதம்.

sabeer.abushahruk said...

பட்டுக்கோட்டையிலிருந்து திரும்பி வரும் வழியில் சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் கார்களிலிருந்து தெரிந்து கொண்டேன் அது வசதியானவர்களின் கெட் டுகெதர் என்று.

ஒரு சந்திப்பு என்னும் கோணத்தில் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று மந்தி உண்டதை சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளலாம், கீழ்க்கண்ட நிபந்தனைகளின் பேரில்:

-அந்த விருந்திற்கான ஏற்பாட்டுச் செலவில் ஒரு பகுதி காஸா மக்களுக்காக நிதியாக வழங்கப்படுவது.

-பால்ஸ்தீன முஸ்லிம்களுக்காக துஆ கேட்கப்படுவது

-உணவில் ஒரு பகுதி ஏழைகளுக்கு வழங்கப்படுவது.

போன்றவை அவ்விருந்தில் பரக்கத் ஏற்படுத்தும்.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
Adirai pasanga😎 said...

என்னதான் எடுத்து சொன்னலும் நம் மக்களுக்கு புரியவே மாட்டேங்குது. எதிலுமே இல்லத ஒற்றுமை
இதில் மட்டுமே!.
ஆட்டை கழுதை ஆக்குனது அந்தக்காலம்
ஆட்டை மந்தி ஆக்குவோம் இது இந்த காலம்

ஓரு காலம் வரலாம் இதே நிலை நீடித்தால்
அப்போ ஆடு இருக்கும் சாப்பிட ஆள்தான் இருக்குமோ என்னவோ அல்லஹ்தான் அறிவான்.

adiraimansoor said...

///பெருநாளை ஊரில் கொண்டாடுவதற்காக தொலை தூரங்களில் உள்ள நாடுகளில் பணியாற்றும் சகோதரர்கள் ஒரு சங்கமம் என்கிற முறையில் ஒரு பொது இடத்தில் இயற்கை சூழலில் ஆனந்தமாக சந்தித்து இருக்கிறார்கள். இதை தவறு என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை.

மற்றொன்று, இதேபோல கெட்டுகெதர் நிகழ்வுகள் அவர்கள் பணியாற்றும் நாடுகளில் அடிக்கடி நடப்பவைதான். அந்த முறையில் இதை ஏறாது செய்து இருப்பார்கள்.

இதில் ஒரு குறிப்பிட்ட பகுதி சகோதரர்கள் ஏற்பாடு செய்து இணைந்து இருக்கிறார்கள். இன்று சமுதாயம் இருக்கும் துயரமான சூழலில் இந்த நிகழ்வை அவர்கள் பெரிய மனதோடு தவிர்த்து இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரம் அவர்களின் மனமகிழ்வுக்காக ஒன்று கூடுவதை நாம் கண்டிக்க வேண்டியதில்லை.

ஒருவேளை அங்கு ஏதாவது மார்க்கத்துக்கு விரோதமான விஷயங்கள் பரிமாறப்பட்டிருந்தால் அதைக் கண்டிக்கலாம். ஆனால் அப்படி இல்லை.

நமக்கென்று அடையாளப்படுத்த ஒரு பழமொழி இருக்கிறதல்லவா?///

மூத்த அறிஞரின் இந்த கருத்தை முழுமனதாக ஏற்றுகொள்கின்றேன் இதில் தவறு ஒன்றுமில்லை நமது சகோதர ஒற்றுமையை வெளிப்படுத்தும் இதுபோன்ற கெட்டு கெதெர்களை கொச்சை படுத்தி அதன் ஏற்பாட்டாளர்களையும், அதன் ஆதரவாளர்களையும் தேவையில்லாமல் சீண்டி இதன் நமக்குள் பகமை பாராட்டுவதை நிறுத்துவதே சாலசிறந்தது
அடுத்த மந்திவிருந்தாலிகளுக்கு ஆக்கபூர்வமான ஆலேசனைகளை கூறும் பதிவாக இந்த பதிவை அமைத்துக் கொள்ளும்படி
அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

அரபு நாடுகளில் தினமும் வேஸ்ட்டாகும் டன் கணக்கில் வேஸ்ட்டாகும் மந்திகளை பற்றி விமர்சியுங்கள் அரபு பத்திரிக்கை உலகிற்கு உங்கள் பதிவை மொழிமாற்றம் செய்து அனுப்புங்கள்
அதிரையில் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இப்படிபட்ட சந்தோஷங்களை விமர்சிக்காதீர்கள் மந்தியை உணவைதேர்ந்தெடுப்பதின் காரணாம் என்ன என்பதை சற்று சிந்தியுங்கள் எத்தனையோ சகோதரர்கள் கடந்தகாலங்களிலும் நிகழ்வுகாலங்களிலும் அர்பு நாடுகளில் பனிசெய்து வந்த வருகின்ற நிலைகளில் தான் அடிக்கடி உட்கொண்ட உணவை அதிரையில் வருடத்திற்கு ஒரு முறை கூட்டமாக சேர்ந்து உண்பதில் எப்படி தவறு கண்டு பிடிக்க முடியும்
ஆனபடியால் இதுபோன்ற பதிவுகளை எதிகாலங்கலில் அதிரை நிருபரில் பதிய வஏண்டாம்

Ebrahim Ansari said...

பாலஸ்தீன சகோதரர்களுக்கு அனுதாபம் தெரிவித்து நாம் அவர்களுக்கு பலவகையில் உதவக் கடமைப் பட்டு இருக்கிறோம். நமது துஆக்களில் அவர்கள் நலனுக்காக - மறு வாழ்வுக்காக- அமைதிக்காக பிரார்த்திப்போம்.

ஆனால் ஒன்றை வேதனையுடன் குறிப்பிடுகிறேன். இந்த உணர்வு அரபு நாடுகளின் கொழுத்த பணக்கார ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா? அப்படி இருந்து இருந்தால் பெருநாள் அன்று வண்ணத்தோரணங்களும் வானவேடிக்கைகளும் நடந்து இருக்குமா?

துபாயில் வெடிக்கப்பட்ட ஒரே ஒரு வகை வாணவேடிக்கைக்கு ஆனா செலவு கூட இந்த மந்தி விருந்துக்கு ஆகி இருக்காது. அரபு நாடுகளின் இத்தகைய பணத்திமிர் பிடித்த வேடிக்கைகளையும், ஊருக்கு ஊர் நடக்கும் கந்தூரி கொண்டாட்டங்களையும் நிறுத்த நம்மால் முடியவில்லையே.

பெருநாளைக்கு அடுத்த நாள் முத்துப் பேட்டை அல்லோகலப்பட்டது. அரபி அப்பா பள்ளி கந்தூரி கொடி ஊர்வலம். தாரை தப்பட்டை, ஆட்டம் பாட்டம், பேண்டு வாத்தியம் இத்யாதி இத்யாதி. ....

உண்மையில் பணக்கார அரபு நாடுகள் தங்களின் உணர்வைக் காட்டி இருந்தால் குறைந்த பட்சம் உயிர்ப்பலியாவது நிறுத்தப் பட்டு இருக்கும்.

அதிரை நண்பர்களின் மந்தி விருந்து நிருத்தபடுவது ஐ நா சபையால் கவனிக்கபடப் போகிறதா? அல்லது அரபு லீக் என்று வைத்து வெறும் காகிதத்தில் கண்டனத் தீர்மானம் போடுகிறார்களே அவர்கள் ஒன்று சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக ஒரு இராணுவ நடவடிக்கை எடுத்தால் அது சரித்திரத்தில் இடம் பெறுமா?

நான் அறிந்தவரை இந்த மந்தி விருந்தை ஏற்பாடு செய்தவர்களும் பாலஸ்தீனப் பிரச்னையில் உணர்வுப் பிழம்பாகவே இருக்கிறார்கள். ( நான் கலந்து கொண்டேனாஎன்று கேட்காதீர்கள்- இல்லை எனக்கு அழைப்பு இல்லை ) ஆனாலும் ஒரு வேலை அவர்களது மகிழ்வுக்குத் தடை போடா வேண்டாம் என்பது எனது கருத்து.

அந்த சங்கமத்தில் பரிமாரபப்ட்டது மந்தி உணவு மட்டுமல்ல சமுதாய உணர்வுகளும்தான்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் பாசம் நிறைந்த இபுறாஹீம் அன்சாரி காக்கா,

மந்தி பந்தி தொடர்பாக நான் கருத்திடாமல் இருக்கவே இருந்தேன், ஆனால் தங்களின் சமீபத்திய கருத்து என்னை இங்கு கருத்திட வைத்துள்ளது.

தங்களின் கருத்தை மதிக்கிறேன். தங்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்தே என்னுடைய இந்த கருத்தை பதிகிறேன்.

இது தங்களுக்கான பதிலாக எழுதவில்லை, பொதுவான என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன்.

அதிரையில் வருடா வருடம் அரங்கேரும் இந்த அனாச்சாரமான மந்தி விருந்தின் FLASH BACK தங்களுக்கு முழுமையாக தெரிவிக்கப் படவில்லை என்பதாகவே நான் கருதுகிறேன்.

இஸ்ரேலை எதிர்க்க கையாலாக அரபு நாடுகளின் நிலையை எண்ணி நாம் அனைவரும் கோபமும், வேதனையும் படாமல் இருக்க முடியாது. அரபு நாடுகளை அதிரைவாசிகள் ஒன்று கூடும் ஒரு இணையதளத்திலிருந்து வெளியிடும் கருத்துப்பரிமாற்றத்தில் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அதிரையில் நிகழும் அனாச்சார செயல்களை சுட்டிக்காட்டுவதால் நிச்சயம் அதிரைக்காரர்களில் ஒருவரையாவது திருத்தும் என்பதை நாம் நம்பலாம். ஒரு அரபு நாடுகளின் தவறை வைத்து ஒரு ஊரின் தவறை நியாயப்படுத்துவதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள இயலாது.

செக்கடிமேட்டு மந்தித்தனமான மந்தி விருந்து அரசியல் வேறு, பலஸ்தீனத்தை வைத்து உலக மந்திகளில் அரசியல் விளையாட்டுக்கள் வேறு என்பதை நினைவூட்டுவதற்காக வெளிப்படையாக ஒரு சில செய்திகளை இங்கு பதிந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.

அதிரையில் இந்த வருடம் மந்தி விருந்து ஏற்பாடு செய்தவர்களாட்டும், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பாலனவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதை முதலில் பதிவு செய்கிறேன்.

comment 2 will contiue

தாஜுதீன் (THAJUDEEN ) said...

விருந்து என்பது நாம் விரும்பி நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுப்பதே. ஆனால் செக்கடிமேட்டு நண்பர்களின் இந்த மந்தித்தனமான மந்தி விருந்தின் ஆரம்பமே அடாவடித்தனமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வரும் நண்பனிடம் வலுக்கட்டாயமாக ரூ 2,000 அல்லது ரூ 4,000 அல்லது இதற்கு மேலும் வம்பு பண்ணி வேண்டா வெறுப்பில், விடுப்பில் வந்த நண்பன் “சனியனுவ தொலைந்து போகட்டும்” என்று கொடுத்த பணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட விருந்தே இந்த மந்தி விருந்து. பணத்தை பிடுங்கி ஆரம்பிக்கப்பட்டதால் இதை மந்தித்தனமான விருந்து என்று சொல்லியுள்ளேன்.

சில வருடத்திற்கு முன்பு நான் ஊரில் இருக்கும்போதே ஒரு சில செக்கடிமேட்டு நண்பர்களால் இது போன்ற அடாவடித்தனமான விருந்து நடத்தப்பட்டபோது, அதற்கு அன்றே ஒரு சில சகோதரர்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். தொடர்ந்து இந்த மந்தி விருந்து நடைபெரும்போது எதிர்ப்பு தெரிவித்தார்கள் இருப்பினும் இந்த அளவுக்கு வலைத்தளங்களில் பிரபலப்படுத்தி வெளியிடாமல் மந்தி விருந்து சிறிய அளவில் 15 நண்பர்களுடன் 4 சுவற்றுக்குள் தொடர்ந்து நடைபெற்றது.

பின்னர் அடாவடித்தனான இந்த மந்தி விருந்து பரிணாமம் அடைந்து, பொதுவில் வலைத்தளங்களில் புகைப்படங்களாக வெளியிடப்பட்டு பெருமையடிக்கப்பட்டதோ. அன்று தான் இது பொதுவில் எதிர்க்கப்பட்டுகிறது. இந்த மந்தித்தனமான விருந்திற்கான எதிர்ப்பு இன்று ஏற்பட்டதல்ல என்பதை இங்கு பதிவு செய்யவே மேலே உள்ள தகவல்.

சரி இந்த மந்தித்தனமாக விருந்துகளின் மூலம் செக்கடிமேட்டு நண்பர்கள் சாதித்தது என்ன? யாராவது பட்டியல் தர இயலுமா?

comment 3 will contiue

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பரிமாறபட்ட மந்தி உணவு மட்டுமல்ல சமுதாய உணர்வுகளும் தான் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். செக்கடிமேட்டி நண்பர்களின் சமுதாய உணர்வுகள் எடுத்துக்காட்டாக இதோ ஒரு சிலவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.

செக்கடிமேட்டு நண்பர்களால் ஊரில் இன்றலவில் நடைபெரும் பிற மத கலச்சாரமான கந்தூரியை இவர்கள் சார்ந்திருக்கும் முஹல்லக்களில் நிறுத்த முடிந்ததா? சமூக அக்கரையுள்ள இந்த நண்பர்கள் பெரும்பாலரின் பெண்களையாவது அந்த கந்தூரி கன்றாவிக்கு செல்லுவதை தடுக்க முடிந்ததா? கடற்கரைத்தெரு, மேலத்தெரு கந்தூரிக்கு ஆட்டொக்களில் அதிகம் செல்லுபவர்கள் செக்கடிமேட்டு நண்பர்கள் சார்ந்த முஹல்லாவாசிகளின் விட்டில் உள்ள பெண்கள் தான் அதிகம் என்பதை யாரும் மறுக்க இயலாது.

அல்லாஹ்வை வணங்கப்படக்கூடிய பள்ளிகளில் இன்றும் இணைவைப்பு மெளலூதுகள் பாடப்பட்டுக் கொண்டிருக்கிறதே, செக்கடிமேட்டு நண்பர்கள் சார்ந்திருக்கும் முஹல்லா பள்ளிவாசல்களில் பலவற்றில் இன்றும் நடைபெறுகிறதே, இதனை தடை செய்ய அல்லது நிறுத்த இந்த சமூக உணர்வுள்ள இவர்களுக்கு துணிவு இருக்கா?

அதே செக்கடிமேட்டு நண்பர்கள் சார்ந்திருக்கும் முஹல்லா சார்ந்த சில இளம் வாலிபர்கள், குடிகார்களாகவும், பெண் பித்தர்களாகவும் உள்ளார்களே, அவர்களை திருத்த இந்த சமூக உணர்வுள்ள செக்கடிமேட்டு நண்பர்கள் என்ன செய்தார்கள்?

சில வாரங்களுக்கு முன்பு, அதிரை மெயின் ரோட்டில் சில ரவுடிகளால் அடிக்கப்பட்ட சகோதரர் ஹாஜா செரீப் (மன நலம் பாதிக்கப்பட்டவர்), அவருக்கு தகுந்தந்த சிகிச்சை அளிக்காவிட்டாலும் பரவாயில்லை, இவரை வைத்து கேளியும் கிண்டலும் செய்துவந்தார்களே…. எங்கே போனது இவர்களின் சமூக உணர்வுகள்? இது போல் நல்ல மனநிலையோடு இருந்த பலரை, சகோதரர் ஹாஜா சரீபு போல் மனநலம் பாதிப்பட வைத்தது இந்த செக்கடிமேட்டு சில நண்பர்கள் என்பதை மனசாட்சியுள்ள செக்கடிமேட்டு நண்பர்கள் சார்ந்துள்ள முஹல்லாவாசிகளால் மறுக்க முடியாது.

அதிரை ஒற்றுமைக்காக குரல் கொடுத்து, தன் உயிரை தியாகம் செய்த தியாகி அப்பாஸ் ஹாஜியார் அவர்கள் பெயரை வைத்து செக்கடிமேட்டில் ஒரு படிப்பகம் ஆரம்பித்து, இன்றளவில் அங்கு அறிவை வளர்க்கும் ஓர் புத்தகம்கூட இல்லை, ஆனால் வீண் பேச்சுக்களும், வீண் விளையாட்டுக்களும் அதனுள் விளையாடப்படுகிறதே. இது தான் தியாகி அப்பாஸ் ஹாஜியார் அவர்களை மதிக்கும் செயலா? இது தான் இவர்களின் சமூக உணர்வா?

இன்றும் செக்கடிமேட்டு வழியாக பொது பாதையில் பல பெண்கள் நடப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் காரணம், அவ்வழியே கட்டப்பட்டிருக்கும் திண்ணைகள், கடைகள், காலை முதல் இரவு வரை ஆண்களின் ஆக்கிரமிப்பு. பெண்களை அவ்வழியே நடப்பதற்கு தடையாக உள்ளது. இதை கேட்க ஒரு நாதியில்லை, இதுதான் இவர்களின் சமூக உணர்வா?

comment 4 will continue

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஊரில் ஒரு மார்க்க அறிஞர் மேல் போலீசில் “தீவிரவாதி” என்று புகார் கொடுக்கப்பட்ட போதும் சரி, அந்த மார்க்க அறிஞருக்கு எதிராக அரசியல்வாதி ஒருவரால் ஊரில் உள்ள லெப்பைமார்களை வைத்து பிரச்சினை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட போதும் சரி, செக்கடிமேட்டு முஹல்லா சார்ந்த தக்வா பள்ளியிலும், நடுத்தெருவிலும் அவருடைய மார்க்க சொற்பொழிவை நிறுத்தி, தங்களின் இஸ்லாமிய மார்க்க விரோத அரிப்பை தீர்த்துக்கொண்ட கயவர்களுக்கு எதிராக போராடதவர்களிடம் எவ்வகையான சமூக உணர்வு உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை.

அதிரை பேரூராட்சி தேர்தல் வரலாற்றில் செக்கடிமேட்டு நண்பர்கள் சார்ந்துள்ள ஒரு வார்டிலாவது ஒரு மித்த கருத்தை வைத்து ஒரு பொது வேட்பாளர்களை நிறுத்த முடிந்துள்ளதா? அப்படியே நிறுத்தினாலும், போட்டி வேட்பாளர்கள் நிறுத்தி அதே செக்கடிமேட்டு நண்பர் கூட்டம் அரசியல் கூத்தடிக்காமல் இருந்துள்ளதா? வருடா வருடம் நாங்கள் மந்திக்கு மட்டும் தான் ஒன்றுகூடுவோம், சமூகம் சார்ந்தவகளில் நாங்கள் ஒன்றுகூட மாட்டோம் என்றிருப்பது எவ்வகையான சமூக உணர்வு என்பது எனக்கு புரியவில்லை?

சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்தெடுக்க பல தடைகளாக இருப்பவர்கள், இந்த செக்கடிமேட்டு முஹல்லா சார்ந்த அரசியல்வாதிகள், பணக்காரர்கள். எங்களுக்கு அரசியல் வேண்டாம், இயக்கம் வேண்டாம் என்று தூக்கி வீசிவிட்டு சங்கத்தின் எதிர்கால நலன் கருதி நல்ல தகுதியுள்ள இளம் உலமாக்களை (இணை வைப்பு, பித் அத்துக்கள் செய்யாதவர்களை) நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க செக்கடிமேட்டு நண்பர்களால் சமூக உணர்வுகளோடு செய்ய இயலுமா?

இப்படி செக்கடிமேட்டு போலி சமூக உணர்வுகளை(?) பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். இந்த பட்டியலில் உள்ளவைகள் அனைத்தையும் அறிந்து ஆதங்கப்படும் பெரும்பான்மையினர் இந்த விருந்தில் கலந்துள்ளார்கள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

முக்கிய குறிப்பு: சென்ற வருடம் மந்தி விருந்து ஏற்பாட்டில் ஈடுபட்ட ஒரு சில சகோதரர்கள், தாங்கள் செய்வது அனாச்சாரம், வீண் பெருமை என்று உணர்ந்து இந்த வருட மந்தியிலிருந்து தங்களை தூரமாக்கிக்கொண்டுள்ளார்கள் என்பதை இங்கு கூடுதல் தகவலாக பதிவு செய்கிறேன். இவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

comment 5 will continue

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நானும் செக்கடிமேட்டு நண்பர்கள் சார்ந்துள்ள முஹல்லாவாசி தான். பிற முஹல்லாக்களில் உள்ள ஒற்றுமை, சமூக அக்கறை, சமூக உணர்வு நான் சார்ந்துள்ள முஹல்லாவில் இல்லையே என்ற கவலையும். இன்னும் பணக்காரர்கள், அரசியல் சார்ந்த நிலைபாட்டோடு உள்ளவர்களின் ஆதிக்கத்தில் சிக்கிக்கொண்டுள்ளதே என் முஹல்லா, மேலும் ஷிர்க் பித் அத்துக்களை எதிர்த்து குரல் கொடுக்கூடிய உலமாக்களை தலைவர்களாக ஆக்காத முஹல்லாவாசியாக உள்ளோமே என்ற ஆதங்கமும். நான் சார்ந்துள்ள முஹல்லா நண்பர்கள், சொந்தங்கள், மந்திக்கு அடிமையான சமூக உணர்வற்றவர்கள் என்று வருங்காலங்களில் பேசப்படக்கூடாது என்பதன் வெளிப்பாடே என்னுடைய இந்த நீண்ட கருத்தே அன்றி. யாரின் மேல் உள்ள கோபமே, வெறுப்போ அல்ல. இதற்கு அல்லாஹ் ஒருவனே சாட்சி.

விளம்பரப்படுத்தாமல், பெருமையடிக்காமல் ஏற்பாடு செய்யப்படும் விருந்தோம்பல் தவறில்லை, மார்க்க விரோதமல்ல. ஆனால் அரசியலாபத்திற்காகவும் அல்லது பெருமைக்காகவும் அல்லது அதிகம் ஏழைகள் இல்லாத இது போன்ற அனாச்சார விருந்துகள் மார்க்க விரோதம் என்பதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களே சாட்சி.


சமூக உணர்வோடு எழுதிய கருத்தை பதிந்துள்ளோன், இது யாருடைய மனத்தையும் புண்படுத்தி இருந்தால் தயவு செய்து அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும், தவறை சுட்டிக்காட்டவும், திருத்திக்கொள்கிறேன்.

ஜஸக்கல்லாஹ் ஹைரா..

M. தாஜுதீன்
tjdn77@gmail.com

Ebrahim Ansari said...

அன்பின் தம்பி தாஜுதீன்!

இதுதான் போட்டு வாங்குவது.

தங்களின் தகவல்களுக்கு நன்றி.

இவ்வளவு விஷயங்களை சமூக வாஞ்சையுடன் கொட்டித் தீர்த்து இருக்கிறீர்கள்.

ஆனால் எனக்குத் தரப்பட்ட விபரப் பக்கங்களில் இவ்வளவு விபரங்களும் மறைக்கபட்டிருந்தன.

அதிரை நிருபரின் முக்கியப் பங்குவகிக்கும் பதிவாளர் என்கிற முறையில் என்னிடம் சிலர் கேட்ட கேள்விகளையே நான் பதிந்தேன்.

உங்கள் மூலம் உலகோர் அறிய எடுத்துக் காட்டப்பட்டு இருக்கிறது.

அடுத்த வருடம் இந்தத் தவறு நிகழாமல் அல்லாஹ் காப்பானாக!

அன்பான சலாம்.

Aboobakkar, Can. said...

என்னின் மதிப்பிற்குரிய அதிரை நிருபர் வலைதள மூத்த எழுத்தாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நான் தெரிவிப்பது ......பாலஸ்தீனம் ஒரு உலகளாவிய அரசியல் ...........இதில் அவர்களுக்காக கண்ணீர் வடிப்பதை தவிர நமக்கு அல்லாஹ் வேறு எந்த சக்தியையும் தரவில்லை.......ஆகவே சிறு சிறு விடயங்களுக்கு பாலஸ்தீனத்தை உவமை படுத்துவதும் அதில் நம்மை கட்டுபடுத்துவம் நம்மில் நமக்கு ஏற்படும் ஆர்வ கோளாறும் மற்றும் அறிமையாமைஎன்பதை தெளிபடுத்த விரும்புகின்றேன் ...

அல்லாஹ்வால் ஏற்றுகொள்ளபட்ட வழிகளை நாம் பின்பற்றுகின்றோமா ?

சற்றே சிந்தியுங்கள் ................

ஊருக்கு ஒரு அமைப்பு .........தெருவுக்கு ஒரு அமைப்பு ...........பண மமதை .......

மக்களிடம் அதிகம் காணப்படும் கருத்து வேறுபாடுகள் ...........

அமைப்புகளில் சேர்ந்தால் தன்னுடைய சுயநல காரியங்களை அதிகாரத்துடன் சாதிக்கலாம் என்ற நர்பாசை .......

தெரு பாகுபாடு ................உண்மையை வெளிப்படையாக சொல்லுபவர்களை பைதியகாரர்களாக சித்தரிக்கும் ராஜதந்திரம் ..........

ஊரின் பிரபலங்கள் என்று கூறிக்கொள்ளும் முக்கியஸ்தர்களின் விளம்பர பிரியம் ............அடுக்கலாம் அடுக்கலாம் அடிக்கிக்கொண்டே போகலாம் ...........
குடும்ப அரசு நடத்தும் அரபுக்கள் .........மற்றும் அதை சார்ந்த பெட்ரோல் வளம் கொழிக்கும் குட்டி நாடுகள் ..............

அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடாமல் அமெரிக்கர்களை நம்பும் அரபு நாடுகள் ..............
யா அல்லாஹ் எங்களை நல்வழி படுத்துவாயாக

......ஆமீன் .....

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அல்ஹம்துலில்லாஹ்..

ஜஸக்கல்லாஹ் ஹைரா.. இபுறாஹீம் அன்சாரி காக்கா.

உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மன்னிக்கவும் !

சமூக பொறுப்பொணர்வு !?

எவருக்கேனும் இந்த கண்டனத்தில் மாற்று கருத்து இருப்பின் பதிவின் நிறைவில் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டிருக்கிறது அதில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த பதிவு எதிர்க்க வேண்டும் என்பதற்கா மட்டுமல்ல, பந்தியில் உட்கார்ந்தவர்கள் இனிமேலாவது எழுந்து நிற்க வேண்டும் என்ற ஆதங்கத்திலும் கவலையிலும் பதிக்கப்பட்டது.

ஊடகங்களுக்கும் பொறுப்புண்டு, எதை தான் சார்ந்த மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும் என்று, இதனைக் கூட இனவெறி, இயக்க வெறி, மதவெறியர்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டுமா ?

இன்று நேற்றல்ல, நேரிலும் பல்வேறு வகையிலும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நாங்கள் பொதுவில் விளம்பரப்படுத்தப்படும்போது அதனை வகையில் கண்டிப்பதே சரி..

தயைகூர்ந்து பொறுமையாக வாசிக்கும் சகோதரர்கள் சிந்தியுங்கள்...

அப்துல் கபூர் said...

Well said Thajudeen!
தாஜுதீனுடைய குமுறல் தனி கட்டுரையாக வெளியிட வேண்டியவை.

சிறிய அளவில் செக்கடி மேடு கோஷ்டியால் ஒரு பொழுது போக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொந்தி விருந்து, இப்படி விஸ்வரூபமெடுக்கும் என்பதை நினைத்துக் கூட பார்த்ததில்லை.

'அடாவடி' வசூல் மன்னர்கள் வெளி நாட்டிற்கு சென்று விட்டார்களாமே? அவர்கள் வேலையை யார் செய்கிறார்களோ?

10 வருடங்களுக்கு முன் என்னிடமும் அந்த அடாவடி கோஷ்டி முயற்சி செய்தது, நான் பிடி கொடுக்கவில்லை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு