Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள் - 19 5

அதிரைநிருபர் பதிப்பகம் | July 08, 2015 | , , ,

வாழ்க்கையில் முன்னேறத்தான் எல்லோரும் சிந்திக்கிறோம். பணம் / சொத்து / ஹெல்த் / உறவுகள், இருப்பினும் சமயங்களில் ஏன் நாம் எதில் சிந்திக்கிறோமோ அதில் பின்னோக்கி போகிற மாதிரி இருக்கிறது.

இது இன்றைக்கு வந்த கேள்வியல்ல, மனித நாகரீகம் தோன்றிய காலத்திலேயே இதுவும் தோன்றியிருக்கலாம். 

முன்பு நான் சொன்ன கான்சியஸ் மைன்ட் / சப்கான்சியஸ் மைன்ட் விசயங்களில்  கவனிக்க வேண்டிய விசயம். பிரைன் செல்ஸ். நாம் தொடர்ந்து எந்த விசயத்தை நமது மைன்ட் தன் வசம் வைத்துள்ளது என்பதை செக் செய்ய வேண்டியது நம் கடமை. தொடர்ந்து ஒரு விசயத்தை நினைக்க நினைக்க அது ப்ரைன் செல்லாக உருவாகிறது. அதனால்தான் சின்ன வயதிலிருந்து நல்ல விசயங்கள கேட்க பழக்கப் படுத்துகிறார்கள். நாம் வளர்ந்த பிறகு கேட்கும் குப்பைகளை தூர வீசத்தெரியவில்லை என்றால் உள்ளுக்குள் இருந்து குடைச்சல் போடும். இப்போது முன்னேர முடிவெடுத்தவர்கள் ஏன் தொடர்ந்து முன்னற முடியாமல் போவதற்கான காரணம். முடிவெடுத்த பிறகு அவர்களின் தொடர் சிந்தனைகள் வாழ்க்கையின் பிரச்சினைகளை மட்டும் எப்படி சமாளிப்பது என்ற ஒரே சி.டி யை திருப்பி திருப்பி கேட்டுக் கொண்டிருக்கும்.இப்போது புரிந்திருக்கும் தொடர்ந்து கேட்கப்படும் "பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?" சி.டி சுபிட்சத்துக்கு  இழுத்து செல்லாமல், பிரச்சினைகளுடன் உங்கள் மைன்டை முழு "ரேம்" ஐ பயன்படுத்தி ஒட்டிக் கொண்டிருக்கும். மைன்ட் மட்டுமல்ல, மண்டையும் சூடாகுமா ஆகாதா?.

கமன்டோ பயிற்சிகளில் கண்ணுக்கு நேராக நின்று சத்தம் போட்டு பயிற்சியில் ஈடுபடும் வீரர்களை ஒரே விசயத்துக்கு தயார் படுத்துவது இதற்காகத்தான். உங்கள் எனர்ஜியுடன் உங்களை இணைப்பதற்கான பயிற்சிகளில் ஒன்று கண்ணாடி முன்னால் நின்று உங்கள் கண்ணில் உள்ள சின்ன கறுப்பு வளையத்தை கவனிப்பது [ஒரு 10 நிமிடமாவது]. கொஞ்சம் கஷ்டம்தான் என்றால் மூச்சுகளுக்கான இடைவெளி  மீது கவனம் செலுத்துவது Between Inhalation and exhalation.

இதை நான் எழுதக் காரணம் நம் வாழ்க்கை எதை ஆணித்தரமாக நம்மிடம் கேட்கிறதென்றால் ஒவ்வொரு நிமிடத்தின் உண்மைகளையும் உங்களை வைத்தே சந்திக்க வைக்கிறது.[அதுதான் தெரியுமே!!என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட வேண்டாம்]உண்மையை சொன்னால் பெரும்பாலும் நாம் நிதர்சனங்களை சந்திக்காமல் தப்பிக்க பார்க்கிறோம்.

நம் மனதுக்கு எது சந்தோசம் தருகிறதோ அதை நாம் சந்திக்க தயார். ஆனால் எது கவலை அளிக்கிறதோ அதை சந்திக்காமல் அதற்கான காரணத்தை உங்கள் கற்பனையில் உதிக்கும் ஏதாவது காரணத்தோடு இணைத்து விடுவது.

ஒரு உதாரணமாக சொன்னால் நல்ல சம்பாதியம் இருந்தால் நன்றாக செலவு செய்வது, சம்பாத்யம் குறைந்தால் அதற்கு எந்தவகையிலும் தானும் ஒரு காரணம் என்ற உண்மையை மீறி அவன் / இவன் / காலம் / சூழ்நிலை என்று அடுக்கிக் கொண்டே போவது.

எப்போதெல்லாம் தப்பிக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் வாழ்க்கையை நீங்கள் சந்திக்கவில்லை. வாழ்க்கையை எப்போது சந்திக்கவில்லையோ அங்கே நீங்கள் இல்லை. 

அதனால்தான் உங்களை நீங்கள் முதலில் சந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

எப்போதெல்லாம் உங்களை சரியாக நீங்களே சந்திக்கும் தருனம் வருகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் ஒரு கிரியேட்டர் [புதிதாக உருவாக்குபவர்] ஆகிறீர்கள்.அதனால்தான் வாழ்க்கையின் போராட்டம் / சவால்  எதுவானாலும் "விழிப்புணர்வுக்கும் - விழிப்புணர்வு இல்லாத" தொடர்பே பிரதானம். அல்லது மையப்புள்ளி.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரு விதமான சூழ்நிலையை சந்திக்கும்போது அவர்கள் தப்பிக்காமல் எதிர் கொண்டதாலேயே வெற்றியடைந்ததாக சொல்வார்கள்.
  • உன்னால் ஒரு காசுக்கும் புண்ணியமில்லை...
  • உன்னால் என்ன சாதிக்க முடியும்?
  • எப்படி எங்களை விட்டு போய் வாழ்ந்து விடுவாய் என்று பார்க்கிறேன்.
இதுபோன்ற கேள்விகள் தன்னை அழித்து க்கொள்ளும் தற்கொலைக்கும் தூண்டக் கூடியது. எப்போது  சவால்களை ஏற்றுக் கொள்கிறோமோ அப்போதே நமக்குள் இருக்கும் கோழை இறந்து விடுகிறான்.

தொடக்கூடிய தூரத்திலும் , பார்க்க கூடிய தூரத்திலும் உள்ள விசயங்களில் நம்பிக்கை வைப்பது ஒன்றும் பெரிதல்ல. பார்க்க முடியாத தூரத்தில் உள்ள விசயங்களையும் நம்பி சாதிப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

Impact of Negativity in Life:

எவ்வளவு பெரிய சாதனையாளருக்கும் சறுக்குதலை ஏற்படுத்துவது நெகட்டிவான விசயங்கள். இதை முதலில் மனரீதியாக கட்டுப் படுத்துவதை விட நம்மை சுற்றி நடக்கும் நெகட்டிவ் விசயங்கள் மற்றவர்கள் நமக்குள் வந்து கொட்ட அனுமதிப்பதுதான்.

பொதுவாக இவர்களுடைய அறிவுரைகளை கேட்டு அதற்கு நமது மைன்டில் ஒரு ஃபைல் உருவாக்கி பிறகு அவர்களிடம் என்ன பேசுவது அல்லது நமது தொழிலை அல்லது படிப்பை கெடுக்க வரும்போது எப்படி சமாளிப்பது என்று அதிகம் சிந்திக்காமல் அதற்கு நேரமும் ஒதுக்கி கொண்டு இருக்காமல் அவர்களை சரியாக கையாள்வது என்னவென்றால் அவர்களை தவிர்த்து விடுவதே சிறந்த முடிவு.

ஒரு சிறந்த கம்பெனியின் சி.இ.ஓ போன்றவர்கலுக்கும் இதுபோன்ற நெகட்டிவ் ஆட்களை சமாளிக்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும், அதற்காக அவர்கள் அதிக நேரம் ஒதுக்குவதில்லை, செக்ரட்டரியிடம் சொல்லி ' சார் முக்கிய மீட்டிங்கில் இருக்கிறார்" என்ற பதிலே வரும். சரி பிராக்டிக்கல் வாழ்க்கைக்கு செக்ரட்டரிக்கு எங்கே போவது என்று கேட்கலாம். குறைந்தபட்சம் உங்கள் வாசல் கதவுகளை திறந்து வைத்து வரவேற்காமல் இருக்கலாம் அல்லவா?.

நான் முன்பு இருந்த ஆபிசின் நுழைவாயிலில்  ஒட்டியிருந்த வாசகம்...சில சமயங்களில் இது போன்ற வாசகங்களும் வாழ்க்கையை செதுக்கும்.

Small people talk about Other People,
Average people talk about Things,
Great people talk about Ideas
இன்னும் சந்திப்போம்
ZAKIR HUSSAIN

5 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//Great people talk about idea//மதநல்லிணக்க கூட்டம் நடத்துவதுபோல்இளையர்களுக்குமுன்னேற்றIdeaக்களைதூண்டும் கூட்டங்களையும்செமினார்களையும்இப்பவேதொடங்கவேண்டும்.எவ்வளவுநாள்தான் வெளிநாடுகளுக்குகப்பல்ஏறி-கப்பல்ஏறி பிழைப்பு நடத்துறது. இதுஎன்Idea.Good or Bad. pleas let me know.

sheikdawoodmohamedfarook said...

Pleasஎன்பதுதவறுPleaseஎன்றுதிருத்திக்கொள்ளுங்கள்Please!

sheikdawoodmohamedfarook said...

//நம்மைசுற்றிநடக்கும்நெகடிவ்விசயங்களைமற்றவர்கள்நமக்குள்கொட்ட அனுமதிப்பதுதான்.// ''அடி!காசரும்மா! கேட்டியாடிசங்கதியே!'' என்று வீடு தேடிவந்து'புறம்பேசிய'காலம்மலைஎறிபோச்சு!இதுசெல்போன்காலம். அதிலேயேகாமசூத்திராவிலிருந்துகருச்சிதைவுவரைகாதோடுகாதாக கலந்துரையாடப்படுகிறது.

ZAKIR HUSSAIN said...

//மதநல்லிணக்க கூட்டம் நடத்துவதுபோல்இளையர்களுக்குமுன்னேற்றIdeaக்களைதூண்டும் கூட்டங்களையும்செமினார்களையும்இப்பவேதொடங்கவேண்டும்.//

அன்புமிக்க ஃபாரூக் மாமா அவர்களுக்கு..,.

நீங்கள் சொன்ன விசயம் நல்ல விசயம்தான். சகோதரர் இப்ராஹிம் அன்சாரி போன்றவர்கள் மேடையில் பேசும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள். அவர்களின் பேச்சிலும் முன்னேற்றத்திற்கான விதையை இளைஞர்களின் மனதில் இப்போதே பதிய வைக்க வேண்டும். அப்படி ஒரு அறிமுகம் கிடைத்து விட்டால் நீங்கள் சொன்ன செமினார்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

70 களின் தொடக்கத்தில் முன்னேற்றம் பற்றிய செமினார்களை மலேசியாவில் சீனர்கள் அதிகம் நடத்திவிட்டார்கள். இப்போது அதெல்லாம் நடத்துவதில்லை., ஏனெனில் 70 களில் இளைஞர்களாய் இருந்தவர்களின் பிள்ளைகள்தான் இன்றைய இளைஞர்கள்...முன்னேற்றம் தானாகவே வாழ்க்கையின் பாடமாக அமைந்துவிட்டது.

நம் ஊரிலும் அப்படி ஒரு சூழ்நிலை வரவேண்டும் .

நம் ஊரில் உழைக்காமல் சாப்பிடுவது தவறு எனும் மனப்பான்மை 100 % வந்துவிட்டதாக எனக்கு தெரியவில்லை. அப்படி வந்து விட்டால் முன்னேறுவது மிகவும் சுலபம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

மை உடன் ஊக்கம் கலந்த எழுத்து
I like it boss

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு