மலேசியாவில் நோன்பு மாதம் என்பது உண்மையிலேயே மனதுக்கு இதம் அளிக்க கூடியது. இன்னும் சில தினங்களில் நோன்பை எதிர் நோக்கியிருக்கும் இந்த நேரத்தில் மலேசியாவில் எப்படியிருக்கும் என்ற முன்னோட்டம்தான் இது.
நோன்பில் மாலை 2 மணிக்கெல்லாம் நோன்பு திறக்க உணவு வகைகளின் கடை திறந்து விடுவார்கள். மாலை 5 மணிக்கெல்லாம் உள்ளே நுழைய முடியாத அளவு இந்த இடங்களில் கூட்டம் நிரம்பி வழியும். காரணம் இங்கு மலாய்க்காரர்கள் வீட்டில் ஆரம்ப பள்ளி படிக்கும் மாணவர்கள் முதற்கொண்டு அனைவரும் நோன்பு வைப்பதுதான். நோன்பு வைக்காமல் இருப்பவர்களை ஒட்டு மொத்தமாக கேவளமாக பார்ப்பார்கள்.
உணவு வகைகள் எல்லாம் ஒழுங்காக அடுக்கி சுத்தமாக வைத்திருப்பார்கள். இதை சமயங்களில் ஹெல்த் டிப்பார்ட்மென்ட் வந்து சோதிப்பதும் உண்டு. தவறு செய்திருந்தால் லைசன்ஸ் போய்விடும்.
தராவிஹ் தொழுகைக்கு கூட்டம் அதிகம் இருக்கும். தொழுகைக்கு பிறகு பள்ளிவாசலில் அமர்ந்து பேசி விட்டு, எல்லோரும் வீடு செல்ல அதிகநேரம் எடுக்கும்.
நோன்புக்கு முன்னால் தொடங்கி , நோன்பு ஆரம்பிக்குமுன் முடிவடையும் அனைத்துலக குர்-ஆன் ஓதும் போட்டி.
சமயங்களில் கேள்விப்படாத நாடுகளிலிருந்து வருபவர்கள் கூட முதல் பரிசு பெற்றுவிடுவார்கள். எனக்கு தெரிந்து இத்தனை முஸ்லீம்கள் உள்ள இந்தியாவிலிருந்து ஒருவர்கூட பரிசு வாங்கியதாக தெரியவில்லை.
பெருநாளைக்கு தனது சொந்த ஊர் திரும்பும் கூட்டம் ..ஹைவே முழுக்க கார்களின் அணிவகுப்பு. இந்த மாதிரி சூழ்நிலையில் வெளியூருக்கு கிளம்பினால் கார் ஓட்டியே வாழ்க்கை வெறுத்துவிடும். ட்ராஃபிக் ஜாமில் சாது கூட தீவிரவாதி ஆகி விடுவார்.
பெருநாள் காலங்களில் கிராமங்களில் ஒற்றுமையாக இருந்து கிராமத்துக்கு தேவையான விசயங்களை செய்வதும் உண்டு. இந்த மர வீட்டையே எல்லோரும் தூக்கி நகர்த்துவது அதற்கான சான்று. இன்னும் ஒற்றுமையுடன் ஊரை சுத்தம் செய்வது எல்லாம் மிகவும் இன்ட்ர்ஸ்டிங் ஆன விசயம்.
ஊரை கூட்டாக சுத்தப்படுத்துவதற்கு மலேசிய மொழியில் Gotong Royong என்று சொல்வார்கள். எனக்கும் சில கனவுகள் உண்டு எப்போதாவது ஒரு முறை இது போன்ற ஒற்றுமையான செயல்களை நான் பிறந்த அதிராம்பட்டினத்தில் பார்க்க வேண்டும்.
கனவு நனவாகுமா?
ZAKIR HUSSAIN
4 Responses So Far:
//எனக்கும்சிலகனவுகள்உண்டு.எப்போதாவதுஒருமுறைஇதுபோன்றஒற்றுமையான செயல்களை அதிராம்பட்டினத்தில் பார்க்கவேண்டும். கனவுநினைவாகுமா?//இந்தக்கனவுபகல்கனவைவிடமிகமோசமானது.ஏதோசெய்த்தான்கோளாறினால் வந்தகனவு.படுக்கும்போது ஒதிக்கிட்டுபடு
எல்லாஞ்சரிதான்.
ஆனா, அங்கேர்ந்து வர்ர ஃபோட்டோக்களில் உடுப்புக்கு மேலே பட்டாபட்டி மாதிரி ஏதோ (கைலி ?) கட்றாங்களே... கண்றாவியா இருக்கு.
ஏதாவது ட்ரேடிஷனல் பின்புலம்?
//படுக்கும்போது ஒதிக்கிட்டுபடு //
வாய் விட்டு சிரித்தேன்
/உடுப்புக்குமேலேபட்டாபட்டிமாதிரிகைலி கட்டுறாங்களே.....// மருமகன் சபீர்கேட்டது.கைலியோபைஜாமாவோகட்டும்போதுசிலநேரங்களில் சிலஆண்களின்ஆண்குறிஅமைப்புகளும் கைலிக்கு மேலே கடிகார பெண்டுலம் போல் அங்கும்மிங்கும்அசையும்.அந்தஅசைவுமற்றவர் பார்வைக்கு வராமல்இருக்கவே இந்தமினிகைலி. இதுமலாய்கார்களின் Tradition.
Post a Comment