Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஏன் ஹிஜாப்? - (பொன்முத்து சம்பத் - இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை) 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 04, 2015 | ,

இவ்வருடத்தின் ஹிஜாப் தினத்தை முன்னிட்டு. இஸ்லாமியப்பெண்மணி தளமும் டீக்கடை முகநூல் குழுமமும் இணைந்து நடத்திய “ஏன் ஹிஜாப்?” கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று ரூ 4 ஆயிரம் பரிசுத்தொகை பெற்ற சகோதரர் பொன்முத்து சம்பத் அவர்களின் கட்டுரை:

மரப்பட்டைகளை அணிந்து,  பட்டாடைகளை அணிந்து  பண்பாட்டில்(Culture) வளர்ந்தது மானுடம். நாகரிகம் (Civilization) என்ற பெயரில், பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைத்து வெளியிடங்களில் திரிவதால் முகம் சுளிக்கிற நிலையும் தேவையற்ற பிரச்சனைகளும் எழுவதை அன்றாட செய்திகளாய், ஊடகங்களில் காண முடிகிறது. ‘ஆள்பாதி, ஆடைபாதி’ என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலப்பல. கல்லூரிகளில், கடைத்தெருக்களில் காணப்படும் பெண்களை கேலி கிண்டல் செய்யும் அநாகரிப் போக்கும் வன்முறையே.  இதனைத் தவிர்க்கும் வகையில் ஆண், பெண்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.     இதுவே முஸ்லிம் பெண்களின் ஹிஜாப். இதைக் கடைப்பிடிக்கும் பெண்கள் கண்ணியத்திற் குரியவராகிறார்கள்.  இக்கலாச்சாரம் மேலைநாடுகளிலும் வேரூன்றி வருகின்றது. இதனால் ஈவ்டீஸிங்கிலிருந்து விடுபடலாம்.

(நபியே!) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக்கொள்ளும்படியும், தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்.  இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும்.  அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக இறைவன் நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.

மேலும், (நபியே!) இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும், அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்.  தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும்.  தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்.  அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர, மேலும் தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். (24:30-31)


இந்த இறைவசனங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மிக உன்னதமான ஒழுக்க நெறிகளை வகுத்துத் தருகின்றன. ஹிஜாபை அணிவது இன்றைய நவநாகரிக உலகில் அவசியமற்றது என்பவர்களுக்கும் வாகனங்களில் பயணம் செய்கிறபோது தடையாக இருக்கிறது என்பவர்களுக்கும்  தோஹாவில் நடைபெற்ற 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியைச் சுட்டலாம்.

Ruqaya Al-Ghasra

2006 டிசம்பர் 11 அன்று  200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.19 விநாடிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி ருக்கையா அல்-கஸரா.  இதில் என்ன அதிசயம் எனில்,   இஸ்லாமியப் பாரம்பரிய உடையான ஹிஜாப் அணிந்து, ஓட்டப்ப பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதுதான்.  அவரை மொய்த்த ஊடகங்களுக்கு அவர் அளித்த பதில்:


‘பாரம்பரியமான இஸ்லாமிய உடை என் ஓட்டத்தைத் தடை செய்யவில்லை. ஓட்டத்திற்கு உடை ஒரு தடை என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இஸ்லாமிய உடை என்னை ஊக்கப்படுத்தியது; உற்சாகப்படுத்தியது. பஹ்ரைனில் என்னை யாரும் இந்த உடைதான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. நானாகத்தான் வெள்ளை நிற ஹிஜாபைத் தேர்வு செய்து ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டேன். ’ 

இஸ்லாமிய உடைகளைச் சுமையாகக் கருதுகிற இஸ்லாமியப் பெண்கள் என்றில்லாமல் அனைத்து மதப் பெண்களுக்கும் இது ஒரு சவுக்கடி. இஸ்லாம் ஒழுங்குபடுத்தியுள்ள உடை பெண்களின் எத்தகைய நியாயமான முன்னேற்றத்திற்கும் தடையாக  இருப்பதில்லை  என்பதற்கு பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹஸனா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டே ஆண்டுதோறும் விளையாட்டுப்  போட்டியில் கலந்து கொள்கின்றனர் என்பது சான்று.

முக்காடு போடுவதும், முகத்தை மறைப்பதும், மூளையை மறைப்பதாகக் கருத இயலாது. அந்நிய ஆடவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, இஸ்லாம் வகுத்த இந்தப் பழக்கம் உண்மையில் பாராட்டுக்குரியது.   இஸ்லாம் மதத்தின் மீது இருக்கிற மதிப்பையும் மரியாதையையும் விட கூடுதலான மதிப்பும் மரியாதையும் ஹிஜாபையும், புர்காவையும் அணிகிற பெண்களின் மீது ஏற்படுகிறது. எனவே, ஹிஜாப் அணிகிற இந்த நடைமுறையை  அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் கடைபிடிக்கலாம் என்றும் தோன்றுகிறது

2 Responses So Far:

Unknown said...

"இஸ்லாமிய பெண்மணியின்" இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரரே...

Iqbal M. Salih said...

பெண்கள் ஹிஜாப் அணிவதன் அவசியம், அதனால் அவர்களுக்குக் கிடைக்கும் கண்ணியம், பாதுகாப்பு பற்றிய அருள்மறை குர்ஆனின் வசனங்களைப் பொருத்தமான வகையில் எடுத்துக் காட்டியிருக்கும் சகோதரர் பொன்முத்து சம்பத் அவர்கட்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மென்மேலும், நேரிய வழியில் நின்று, உண்மைகளை தன்மையுடன் மற்றவர்க்கு விளக்கிக் காட்டும் ஞானத்தை எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்குத் தருவானாக!

இந்த அருமையான கட்டுரைப் போட்டியை ஏற்பாடு செய்தளித்த இஸ்லாமியப் பெண்மணி தளத்திற்கும் டீக்கடை முகநூல் குழுமத்தினருக்கும் என் அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு