அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.
''நல்லதை
ஒருவர் பிறருக்கு அறிவித்துக் கொடுத்தால், அதை செய்தவனின்
கூலி போன்றது அவருக்கும் உண்டு'' என நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூமஸ்ஊத் என்ற) உக்பா இப்னு அம்ரூ அல்அன்சாரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 173)
'தான் விரும்பியதை
தன் சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் ஒருவர் இறை விசுவாசியாக மாட்டார்''
என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 183)
'உங்களில்
ஒருவர் தீமையைக் கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும்,
அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும் அதற்கும் இயலாவிட்டால்
தன் இதயத்தால் (வெறுக்கட்டும்). இது, இறை நம்பிக்கையில்
மிக பலவீனமானதாகும்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 184)
''பாதைகளில் உட்காருவதை உங்களுக்கு
எச்சரிக்கிறேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பாதைகளில் சிறிது நேரம்
பேசுவதற்காக உட்கார வேண்டியது ஏற்படுகிறது' என்று கூறினார்கள். 'உட்காரும் நிர்பந்தம்
ஏற்பட்டால் பாதையில் அதற்குரிய உரிமையை வழங்கி விடுங்கள்' என்று நபி(ஸல்) கூறியதும்
'இறைத்தூதர் அவர்களே! பாதையின் உரிமை என்றால் என்ன?' என்று கேட்டார்கள். ''பார்வையை தாழ்த்துவது, இடையூறு தருவதை நீக்குவது ஸலாமிற்கு
பதில் கூறுவது, நல்லதை ஏவுவது, தீயதை விட்டும் தடுப்பது தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 190)
'என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!
நீங்கள் நல்லதை ஏவுங்கள். தீயவற்றிலிருந்து தடுங்கள். இல்லையெனில் உங்கள் மீது தனது
தண்டனையை அல்லாஹ் இறக்கி வைப்பான். பின் அவனை அழைத்தாலும், அவன் உங்களுக்கு பதில் கூறமாட்டான்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 193)
''போரில்
மிகச் சிறந்தது, அநீதிக்கார
அரசனின் முன் நீதத்தை எடுத்துக் கூறுவதுதான்'' என் நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் ( முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 194)
'மறுமையில்
ஒருவர் அழைத்து வரப்பட்டு, நரகிலும்
போடப்படுவார். அப்போது அவரின் வயிற்றுக் குடல்கள் சரிந்து விடும். அவர் அந்த நிலையிலேயே
கழுதை செக்கைச் சுற்றுவது போல் சுற்றுவார். அவரிடம் நரகவாசிகள் அனைவரும் வந்து,
இன்னாரே! உனக்கு என்ன நேர்ந்தது? நீ நல்லதை ஏவி,
தீயதை விட்டும் தடுத்துக் கொண்டு இருந்தீர்தானே? என்று கூறுவார்கள். அதற்கு அவர்,
ஆம் நல்லதை ஏவிக் கொண்டிருந்தேன். அந்த நன்மையை நான் செய்ய வில்லை.
தீயதை விட்டும் தடுத்தேன். ஆனால் அந்த தீமைகளை நான் செய்தேன்''
என்று கூறுவார் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூஸைத் என்ற) உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 198)
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து
நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் : 3:104)
நம்பிக்கை கொண்டோரே!
உங்களை காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு
எந்தத் தீங்கும் தர முடியாது. (அல்குர்ஆன்: 5:105)
வேதத்தைப் படித்துக்
கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க
வேண்டாமா?
(அல்குர்ஆன் :2:44)
யாரேனும் நல்லறம் செய்தால் அது அவருக்கே நல்லது.
(அல்குர்ஆன் : 45:15 )
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
1 Responses So Far:
உண்மை உண்மை உண்மை
Post a Comment