Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

Pain...worth it! - வலி வழிச் செய்திகள்! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | October 12, 2015 | , , , , ,


Pain...worth it!

Pain...
in different forms
are needed in life !

so that
they can carve your soul
into
what they have to appear.

and
you cannot escape from
what has been decreed
upon you !

You
just have to pray
you will be
able to bear them !

And
you will be
surprised by your own self
for
what you have turned into !

Keep praying
for your sanity !

Keep praying
for your peace of mind !

The curves
on your lips
may change with time.

but
despite that..
oh human !
you are stronger
than
you have imagined l

You have this control
that
God has given you !

You can choose the path

You seem
you are trapped  -but
you have to look up into the sky
and realise...
Everything
soon
will end.

And
you will realise
the purpose of your life.

And
it will be all worth it.
the day
where your Creator smiles at you
for being pleased with you.

Hope for it ..
Work for it...
And may you reach that goal.
Insha Allah !

Shahnaz Sabeer Ahmed MBBS III year
வலி வழிச் செய்திகள்!

வலி
அதன் மாறுபட்ட பரிமாணங்களில்
வாழ்க்கைக்குத் தேவைதான்

அப்போதுதான் -அந்த
வலி
உணர்த்த வேண்டியது
ஆன்மாவில் ஆழப்பதியும்

உம்மீது
சுமத்தப்பட்டவையிலிருந்து
நீர் யாரும்
தப்பிவிட முடியாது

மாறாக
தூயவனைத் தொழுவதன் மூலம்
அதைத்
தாங்கிகொள்ள இயலுவதையும்

எத்துணைக் கடினமாக
அது உம்மை
மாற்றிக்காட்டியது என்பதையும்
கண்டு
உம்மீது நீரே
ஆச்சர்யப்பட்டுப்போவீர்

நுன்மதிக்கும் நிம்மதிக்கும்
தொடர்ந்து
தொழுது வாருங்கள்

காலமும்
கருப்பொருளும்
உமது
உதட்டு வளைவுகளின்
உரு மாற்றலாம்

ஆனபோதிலும்
ஓ மானிடரே
நீவிர்
கருதியிருப்பதைவிட
கடும் வலுவானவர் ஆவீர் நீர்
அறிக

அத்தகைய
கட்டுப்படுத்தும் சாதுர்யம்
உமக்கு
ஆண்டவன் கொடுத்த அருள்

உமது பாதையை
நீரே தேர்ந்தெடுக்கலாம்

பொறிக்குள் சிக்கிவிட்டதாக
உமக்குத் தோன்றலாம்
அவ்வாறல்ல
ண்ணாந்து சற்றே
ஆகாயம் பார்க்கையில்
உணர்வீர்கள்:
யாவும்
சடுதியில்
தீர்ந்துபோகும் என!

அத்தருணம் உமக்கு
வாழ்க்கையின் தாத்பரியம்
தெளியும்
உம் படைப்பின் நோக்கம்
புரியும்

உலகைப் படைத்தவன்
உம்மைப் பொருந்திக்கொண்டு
உம்மீது
புன்னகைக்கும்
அந்நாளில்...
எல்லா வலிகளும்
ஏற்புடையதாகவே அறிவீர்...

அதற்கான நம்பிக்கை கொள்வீர்
அதை நோக்கிச் செயல்படுவீர்

அவ்வாறே
ஆண்டவன் நாடிவிடட்டும்
இலக்கை
நீர்
எட்டிவிட!

தமிழில்: ஷஹ்னாஸ் வாப்பா

21 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !...

Daughter டாக்டரே ! அருமை....!

கவிக் காக்கா... ஆங்கில கருவுக்கு தமிழ் உருவம் கொடுத்த அழகு அருமை அருமை !

Riyaz Ahamed said...

சலாம்உண்மைகளை உணர்த்தும் சிறப்பாக கவிகள் ரொம்ப ரொம்ப அருமை கண்ணுகளே

Unknown said...

Assalamu Alaikkum

Dear sister Shahnaz and brother Mr Sabeer AbuShahruk,

Great and highly spiritual thoughts and Tamil Translation complements with depth to the meanings. Jazakkallah khair poets team!!!

B. Ahamed Ameen from Dubai

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அபு இபு,

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

சிந்தனைகளை எழுத்தாக்கும்போது எதைச் சொல்ல நினைத்தோமோ அதை அதன் அத்துணைப் பரிமாணங்களோடும் சொல்லிவிட்டாலே போதும் வாசிக்க வசீகரிக்கும்.

அவ்வகையில் என் மகள் தனக்குத் தோன்றுவதை 'வாட்ஸப்' செய்தியாக அனுப்ப அது என்னைக்கவர, சற்றே வடிவமைத்து எனக்குத் தெரிந்தளவு மொழிபெயர்த்துப் பதிந்திருக்கிறேன்.

இதுபோன்ற சிந்தனைகள் இளம்வயதில் தோன்றுவது ஒரு அருட்கொடைதான்.

துஆ செய்யுங்கள்.

நன்றி.

sabeer.abushahruk said...

ரியாஸ்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நம் கண்முன் பிறந்து வளர்ந்தவள் நமக்குத் தோன்றாத கோணத்தில் சிந்திப்பது வித்தியாசமாகப் பட்டதால் இதைப் பகிர்ந்தேன்.

காரணம், உடல்வலியோ உளவலியோ வேண்டுவோர் யாருமிலர்; வேண்டாம் என்பதுதான் மனித இயல்பு.

ஸஹ்னாஸ் வலி வேண்டும்தான் என்று துவங்கிய விதம் வித்தியாசப்பட்டதால் இந்தப் பதிவு.

பிள்ளைக்காக துஆ செய்.

sabeer.abushahruk said...

Dear brother B.Ahamed Ameen,

wa alaikkumussalam varah...

Thank you very much for your complement. I actually assumed that you would like both the English and Tamil versions of it and you did.

It basically involves lateral thought on a specific feel which is pain. As I happen to see such different angles in your write ups, i had no hesitation in looking for a positive comment from you.

Jazaakkallah khair and appealing your dhuA please.

Iqbal M. Salih said...


See... there an Elegant writer!
because,
She is... Sabeer's daughter!

Shameed said...

வாப்பாவும் மகளும் அசத்துறீங்க

Ebrahim Ansari said...

பொதுவாக , மருத்துவம் போன்ற அறிவியல் துறைகளில் பயிலுவோர் கவிதை போன்ற இலக்கியத்துறைகளில் சிந்திப்பதும் அதை செயல்படுத்துவதும் குறைவு என்பார்கள்.

அந்த எண்ணத்தை தவறு என்று நிருபித்திருக்கிறது மருமகளின் இந்தக் கவிதை.

தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்பார்கள். இந்தப் பழமொழி தந்தைக்கும் பொருந்தும் என்று நிருபித்திருக்கிறார்--------- மீண்டும் ஒருமுறை.

வாழ்க வளர்க என்று வாழ்த்துவதுதான் நமது கடமை.

Ebrahim Ansari said...

அமைதியான முகத்திற்குள்
ஆயிரம் புதிர்கள் உண்டு
புதிர்கள் இல்லாமல் மனிதன் இல்லை
சிரிப்பின் அலைகளுக்குள்
ஆயிரம் அழுகை உண்டு

அழுகை இல்லாமல் சிரிப்பு இல்லை
கவிதை சொல்லும் கண்களுக்குள்
ஆயிரம் கண்ணீர் துளிகள் உண்டு
கண்ணீர் இல்லாமல் கவிதை இல்லை

சிலையின் சிங்காரதிர்க்குள்
ஆயிரம் காயங்கள் உண்டு

காயம் இல்லாமல் சிலை இல்லை
வலிமையான வாழ்க்கை வேண்டுமா
வலியை தங்கிக்கொள்
வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை

—by Anusha

sabeer.abushahruk said...

Iqbal,

Thanks for your rhyming comment. Such encouragements from literal persons like you, is always a compliment.

Please ask dhuA for her.

sabeer.abushahruk said...

ஹமீது,

தத்தம் கருத்துகளை சொல்ல அவரவருக்கு இலகுவான வழியைக் கையாண்டால் எல்லோரும் அசத்தலாம் என்பதற்கு உங்கள் மூன்றாவது கண்ணான காமிராவில் நீங்கள் அசத்துவதே நிரூபனம்.

துஆ செய்யுங்கள்.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய காக்கா,

தங்கள் வாழ்த்திற்கு நன்றியும் கடப்பாடும். ஆக்கபூர்வமான எழுத்தில் கோலோச்சும் தாங்கள் பாராட்டுமளவுக்கு எழுத அருளிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

நல்ல ஒரு கவிதையை வாசிக்க தந்தமைக்கு நன்றி.

இப்னு அப்துல் ரஜாக் said...

//பொறிக்குள் சிக்கிவிட்டதாக
உமக்குத் தோன்றலாம்
அவ்வாறல்ல
அண்ணாந்து சற்றே
ஆகாயம் பார்க்கையில்
உணர்வீர்கள்:
யாவும்
சடுதியில்
தீர்ந்துபோகும் என!//

the day will come
one day,
you will thank ALLAH
for the door HE has closed.

the day will come
one day,
you will be grateful
that it didn't work out,

BECAUSE

ALLAH'S plans are better than
our wishes.


இப்னு அப்துல் ரஜாக் said...

the above sentence are not mine but it's from Dr.Bilal Philips.

Ebrahim Ansari said...

Dr. Bilal Philips - யார் என்ற அறிமுகத்தையும் தாருங்கள் தம்பி இ. அ. ர.

இஸ்லாத்தை வாழ்வின் முறையாக ஏற்றுக் கொண்ட ஒருவர் அவர் .
அவர் உள்ளத்தில் எந்த அளவு ஈமான் ஊடுருவி இருக்கிறது என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரியவரும்.

Ebrahim Ansari said...

Dr. Abu Ameenah Bilal Philips was born in Jamaica, but grew up in Canada where he accepted Islam in 1972.

He completed a diploma in Arabic and a B.A. from the College of Islamic Disciplines (Usul ad-Deen) at the Islamic University of Madinah in 1979.

At the University of Riyadh, College of Education, he completed a M.A. in Islamic Theology in 1985 and in the department of Islamic Studies at the University of Wales, U.K. he also completed a Ph.D. in Islamic Theology in 1994.

He taught Islamic Education and Arabic in private schools in Riyadh for over ten years and for the past three years he has been lecturing M.Ed. students in the Islamic Studies department of Shariff Kabunsuan Islamic University in Cotabato City, Mindanao, Philippines.

Since 1994 he has founded and directed The Islamic Information Center in Dubai, U.A.E., and the Department of Foreign Languages at Dar al Fatah Islamic Press in Sharjah, U.A.E.

Among the author's published works are translations of "Ibn Taymiyyah's Essay on the Jinn", "The Devil's Deception" and Arabic Calligraphy in Manuscripts.

He has also co-authored "Polygamy in Islam", and authored "Evolution of Islamic Law", "Through Repentance", "Islamic Studies", "Hajj and Umrah According to Quran & Sunnah", "Islamic Rules on Menstruation", "Arabic Reading & Writing Made Easy", "Arabic Grammar Made Easy" and "The Purpose of Creation".

Author's published works are translations of "Ibn Taymeeyah's Essay on the Jinn", and Arabic Calligraphy in Manuscripts.

He has also co-authored "Polygamy in Islam" and authored "The Quran's Numerical Miracle - Hoax and Heresy", "Evolution of Fiqh", "Islamic law and The Madh-habs", "Tafseer Soorah al-Hujurat", "The Ansar Cult", "The Fundamentals of Tawheed", "Hajj and ' Umrah According to Qur'aan and Sunnah", "Islamic Studies (Book:1)", and "Salvation Through Repentance".

His Website: www.BilalPhilips.com

இப்னு அப்துல் ரஜாக் said...

ரொம்ப நன்றி காக்கா for your introduction about Dr Abu AAmina Bilal Philips.

Yasir said...

Wow !!! Masha Allah Doctor

Stunning words
Spiritually charged lines

Yes,you are right no pain no gain
May Allah Bless you with more Iman & wisdom

Your knowledge partially powered by engal kavikka :), you have great talent …carry on

sabeer.abushahruk said...

தம்பிகள் இப்னு அப்துர்ரஸாக் மற்றும் யாசிர்,

வாசித்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

N. Fath huddeen said...

இலகு தமிழுக்கு ஏற்ற ஆங்கிலமா அல்லது இலகான ஆங்கிலத்துக்கு ஏற்ற தமிழா? என்று வியக்கும் அளவு தந்தை மகள் கவிதைகள் SORRY மகள் தந்தை கவிதைகள் இருக்கு! மாஷா அல்லாஹ்.

WHATSAPP-ல் படித்த போது அவ்வளவாக கவராத கவிதைகள் அதிரை நிருபரில் கவர்ந்து விட்டது.

கவிதையின் உட்பொருள் சோதனை இல்லாமல் சுவனம் இல்லை!

JO! SORRY FOR LATE COMMENTS.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு