அன்றையச் சூழலில் ஆராவாரமாக அதிரை இணைய வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு இளம் படை, பெய்து கொண்டிருந்த தொடர் மழையின் தாக்கத்தையும், அதன் சூழலையும் அலசி ஆராயப் புறப்பட்டது. கொட்டும் மழையை அள்ளிக் கொண்டு வரலாம் என்று சென்றவர்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடையான மழையை அளவுகோல் வைத்து அளந்து சொல்லும் ஓர் ஆராய்ச்சி மையம் ஒன்று கண்ணில் பட்டது.
அங்கே ! ஓர் பெண்மணி அலுவலகப் பொறுப்பாளர் திருமதி சின்னத்தாய் Msc., B.Ed. இவர், முன்னாள் பள்ளி ஆசிரியை, அதிரை வானிலை கண்கானிப்பு மையத்தின் அலுவலக பொறுப்பாளராக தன்னடக்கத்துடன் எங்களை வரவேற்று, அவர்களுக்கே உரிய ஆசிரியர் பணியின் அற்புதத்தால் அங்கே பயிலும் மாணாக்களாக சென்ற எங்களுக்கு விளக்கிய விதம் அருமை.
வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டு மழை வருமா? வந்தால் பள்ளிக்கூடங்கள் விடுமுறை விடுமா? என்ற காத்திருக்கும் மாணவர்களைப் போல் நாமும் அங்கிருந்த அனைத்து ஆராய்ச்சி பயண்பாட்டுச் சாதனங்களை பார்த்ததும் கேள்விகள் கேட்டோம், ஆச்சர்யப்பட்டோம் இதுநாள் வரை அதிரையில் இப்படியான மையம் இருப்பதை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் ?
இந்த ஆராய்ச்சி மையத்தின் தொடர் பங்களிப்பாக, ஆகாய மார்க்கத்திர்க்கும், தரை வழி மற்றும் கடல் வழித் தடங்களுக்கும் எந்த அளவு பயன்படுகிறது என்பதனை திருமதி சின்னத்தாய் அவர்கள் தெளிவான பாடம் எடுத்தார்கள்.
அதிரைநிருபர் பதிப்பகம்
நன்றி : அதிரைபிபிசி
0 Responses So Far:
Post a Comment