Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மானிடா... மாடு வருகிறார்...! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 05, 2015 | ,

நாம் என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும், என்ன மொழி பேச வேண்டுமென்பதை கூட மற்றவர்வகள் தான் தீர்மானிக்க வேண்டுமெனில் இதில் எங்கே இருக்கிறது சுதந்திரம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்பது இன்றையச் சூழலில் ஏட்டளவில் மட்டுமே உள்ளதாக பறைசாற்றி வருவதை வெகு இயல்பாக காண முடிகிறது. மாட்டிறைச்சி சாப்பிட விரும்புபவர்கள் பாகிஸ்தான் செல்லலாம், யோகா செய்யாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்பதன் மூலம் ஒரு சாராரின் கருத்துக்களையும் விருப்புகளையும் அனைத்து சமூக மக்களின் மீதும் திணிக்கும் முயற்சியும், அதனை புறக்கணிக்க எண்ணுபவர்களை நாட்டை விட்டு வெளியோறுமாறு கூவுவதும் தான் இன்றைய ஆட்சியாளர்களின் மதச்சார்பு உண்மையின் அடையாளங்களாகிப் போனது. 


மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக. ஒரு இந்தியர் கொல்லப்படுகிறார் எனில் இங்கு ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கவும் மனம் வெட்கப்படுகிறது. அதென்ன ஒரு பிரிவினரிடம் மட்டும் காட்டும் கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் கடுமையான தண்டணைகளையும் மாபெரும் கொலைக் குற்றவாளிகளிடம் எடுபடுவதில்லையே. அது ஏன்? அவா்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பதாலா? மனிதர்களை மலையென கொன்று குவித்த வேடர்களெல்லாம் உல்லாசமாக உலகை வலம் வந்து கொண்டிருக்கையில் மாட்டிறைச்சி சாப்பிட்டதா கூறி ஒரு உயிர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பசுவை தெய்வமாக பார்க்கிறார்கள் என எளிதில் இவ்விஷயத்தை கடந்து விடும் நடுநிலையாளர்கள், நாயும், பாம்பும் இன்னும் பிற  உயிரினங்களும் கடவுள்களாக பார்க்கப்படுவதையும் அவற்றை துன்புறுத்தவோ கொல்லவோ கூடாது என தடை விதிக்கவுமில்லையே, அவை இஸ்லாமியர்களுக்கு உணவோடு தொடர்பில்லாததாலா என்பதையும் சிந்திக்க மறந்துவிடுகின்றனர். ஐயோ புரிதலின் வறட்சி!

இதில் ஆச்சர்யப்படக்கூடிய செய்தி என்னவென்றால் நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதனால் நாட்டிற்கு கிடைக்கும் மிகுதியான வருமானம் குறித்த சம்பவம் தான். மாட்டிறைச்சி விற்கவும் , சாப்பிடவும் தடைவிதிக்கும் உத்தமர்கள்(?) அதனை ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டுவதில் துளியும் தயக்கம் காட்டுவதில்லை. அது குறித்து வெட்கப்படுவதுமில்லை.

இன்னுமொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என கூவும் தமிழக அரசியல் கட்சிகள்  யாரும் இச்சம்பவம் பற்றி ஒரு சிறிய துண்டறிக்கையோ அல்லது கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.  ஓர் சமூகம் மெல்ல மெல்ல ஒதுக்கப்படுவதையும் புறக்கணிக்கப் படுவதையும் ஏன் இழிவுபடுத்தப் படுவதையும்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போக்கு மிகவும் ஆபத்தானது. தேர்தல் நேரத்தில் மட்டுமே முஸ்லிம் என்றோர் ஒரு சமுதாயம் இந்தியாவில் உண்டு என இவர்களுக்கு  தெரியவரும் போலும்!

மாட்டிறைச்சி உண்பதில் இவர்கள் காட்டக்கூடிய தடைகளும் அதன் தொடர்ச்சியான வன்முறை சம்பவங்கள் என்னவோ ஒரு சமூசகத்தவரை குறிவைத்து நிகழ்த்தப்படாலும் அது மாட்டிறைச்சியை விரும்பி உண்ணக்கூடிய பிறமத சகோதர உறவுகளிடமும் வெறுப்பை தான் உண்டாக்குகிறது. 

மற்றவர்களின் மத மற்றும் மன உணர்வுகளை புண்படுத்துவதோடு நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்கொடுப்பதை தான் குறிவைக்கிறார்கள் டிஜிட்டல் இந்தியா மாட்டிறைச்சி அரசியலின் விற்பன்னர்கள்.

ஹசினா அப்துல் பாசித்

6 Responses So Far:

sabeer.abushahruk said...

//பசுவை தெய்வமாக பார்க்கிறார்கள் என எளிதில் இவ்விஷயத்தை கடந்து விடும் நடுநிலையாளர்கள், நாயும், பாம்பும் இன்னும் பிற உயிரினங்களும் கடவுள்களாக பார்க்கப்படுவதையும் அவற்றை துன்புறுத்தவோ கொல்லவோ கூடாது என தடை விதிக்கவுமில்லையே//

நல்ல நறுக்கென்ற கேள்வி. பிற மதத்தினரை வதைப்பதே இவர்கள் நோக்கம்; மாட்டிறைச்சி ஒரு சாக்கு, அவ்வளவுதான்.

சுருக்கமான ஆனால் தெளிவான கட்டுரை.

வாழ்த்துகள் சகோ.

Yasir said...

//மத மற்றும் மன உணர்வுகளை புண்படுத்துவதோடு நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்கொடுப்பதை தான் குறிவைக்கிறார்கள்// இதுதான் இவர்களின் அஜெண்டா...நல்ல கட்டுரை

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்,
சுருக்கமான ஆனால் தெளிவான கட்டுரை.

வாழ்த்துகள் சகோ

crown said...

ஐயோ புரிதலின் வறட்சி!
----------------------------------------------
வார்தை வறட்சியை விரட்டும் நீர் ஆகாரம் இந்த எழுத்து.எழுத்து கவர்ச்சியும் ,புரட்சியும் தொடரட்டும் ஆனாலும் மகிழ்சி தருக்கூடிய சூழலை விரட்டும் சூழ்ச்சிக்காரர்களின் முயற்சியை முறியடிக்கும் பயிற்சி களமாக அ. நி இருப்பதால் தொடர்சியாய் உங்கள் பங்களிப்பை வழங்கி நம் சமூகத்தை பட்டதீட்ட தொடர்ந்து வரவும்.ஊக்கம் தரும் ஆக்கம் தரவும்.பசுவின் மூலம் நம் மக்களுக்கு கொம்பு சீவி விடும் படி கட்டுரை இருப்பது மேலும் சிறப்பு.வாழ்த்துக்கள்.

crown said...

ஹசினா அப்துல் பாசித்
--------------------------------------------
பாசிசகும்பல் உங்கள் பெயரிலும் சீனா உள்ளது என்று உங்கள் தேசப்பற்றை சந்தேகிக்ககூட வரலாம் அப்படி வரலாறு திரித்து கூறும் கோனபுத்தி கோபாலாக இருக்கானுவ!அவன் துவேசமும்,வேசமும் களைய,கலைக்க நாம் என்றும் விழித்திருக்கனும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு