சமைப்பது போல்தான்
கவிதை
அமைப்பது வும்.
இதயமெனும் பாத்திரத்தில்
இயல்பெனும் எண்ணெயில்
தேக்கிவைத்த எண்ணங்களைத்
தங்க குணத்தில்
வதக்கி எடுப்பதுபோல்
செதுக்கி எடுக்கவும்
நாற்பது வரிகளில்
நான்கைந்தைத் தேர்ந்தெடுத்து
நறுக்கி வைத்துக் கொள்ளவும்
நல்லதாய்
நெஞ்சிற் தூண்டிய நினைவை
இஞ்சி பூண்டினைப் போல்
நசுக்கிப் போடவும்
மறவாமல் முதலிலேயே
ஞாபகமாக
கயமையறக்
கழுவி வைத்திருத்தல் அவசியம்
நவரசமாம்
ஒன்பது உணர்வுகளில்
ஒன்றிலாவது
ஒரு மணிநேரமேனும்
ஊறவைக்கவும்
தேவையான அளவு
தேன்மொழி கலந்து
இரண்டு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
இப்புவி தன்னின்
இயல்பு சேர்க்கவும்
உள்ளுணர்வுத் தணலில்
ஊர் மனம் நோகாமல்
வேக வைக்கவும்
நன்மையை ஏவி
தீமையைத் தடுக்க
எழுமிச்சை பிழிந்தூற்றி
தேங்காய்ப் பாலூற்றல்
தீங்கைப் போலுணர்ந்தால்
ஒரு கொதிப்பில் உடன் அணைத்து
அறுசுவைக் கொழிக்க
சமைத்த உணவைப் போல
அவனியும் செழிக்க
அமைத்த வடிவமே
கவிதை.
வாணலியிலிருந்து இறக்கி
வானொலியிலோ - அதிரைநிருபர்
வலைத் தளத்திலோ
வாசிக்கத் தந்தால் - கை
வசப்படும் கவிதை!
உண்பவர் ரசனைக்கேற்ப
வர்ண வர்ண ஏட்டில்
கால்புள்ளி அரைப்புள்ளி கலந்து
கேள்விக்குறி ஆச்சரியக்குறி
கிள்ளியெடுத்துத் தூவி
தொட்டுக்கக் கொஞ்சம்
துணைப் படமிட்டுப்
பரிமாறுவர் பதிவிடுபவர்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
கவிதை
அமைப்பது வும்.
இதயமெனும் பாத்திரத்தில்
இயல்பெனும் எண்ணெயில்
தேக்கிவைத்த எண்ணங்களைத்
தங்க குணத்தில்
வதக்கி எடுப்பதுபோல்
செதுக்கி எடுக்கவும்
நாற்பது வரிகளில்
நான்கைந்தைத் தேர்ந்தெடுத்து
நறுக்கி வைத்துக் கொள்ளவும்
நல்லதாய்
நெஞ்சிற் தூண்டிய நினைவை
இஞ்சி பூண்டினைப் போல்
நசுக்கிப் போடவும்
மறவாமல் முதலிலேயே
ஞாபகமாக
கயமையறக்
கழுவி வைத்திருத்தல் அவசியம்
நவரசமாம்
ஒன்பது உணர்வுகளில்
ஒன்றிலாவது
ஒரு மணிநேரமேனும்
ஊறவைக்கவும்
தேவையான அளவு
தேன்மொழி கலந்து
இரண்டு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
இப்புவி தன்னின்
இயல்பு சேர்க்கவும்
உள்ளுணர்வுத் தணலில்
ஊர் மனம் நோகாமல்
வேக வைக்கவும்
நன்மையை ஏவி
தீமையைத் தடுக்க
எழுமிச்சை பிழிந்தூற்றி
தேங்காய்ப் பாலூற்றல்
தீங்கைப் போலுணர்ந்தால்
ஒரு கொதிப்பில் உடன் அணைத்து
அறுசுவைக் கொழிக்க
சமைத்த உணவைப் போல
அவனியும் செழிக்க
அமைத்த வடிவமே
கவிதை.
வாணலியிலிருந்து இறக்கி
வானொலியிலோ - அதிரைநிருபர்
வலைத் தளத்திலோ
வாசிக்கத் தந்தால் - கை
வசப்படும் கவிதை!
உண்பவர் ரசனைக்கேற்ப
வர்ண வர்ண ஏட்டில்
கால்புள்ளி அரைப்புள்ளி கலந்து
கேள்விக்குறி ஆச்சரியக்குறி
கிள்ளியெடுத்துத் தூவி
தொட்டுக்கக் கொஞ்சம்
துணைப் படமிட்டுப்
பரிமாறுவர் பதிவிடுபவர்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
26 Responses So Far:
அன்புள்ள தம்பி சபீர்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
கறிவேப்பிலை போடாமலேயே இந்த மணம் மணக்கிறதே.
ஏதாவது ஒன்று விட்டுப் போவதும் சமையலின் இயல்புதான்.
This recipe for Kavithai or Kanzi.....?
கடுகும்காஞ்சமிளகாயும்போட்டுதாழிச்சுஊத்தினால்கூடவேஇன்னும் கொஞ்சம்ருசியும் மணமும்சேர்ந்துபோடப்போட கொண்டா!கொண்டாங்கும்
Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShahruk,
MashaAllah, nice poetic explanation. Simple and practicable formula for creating poem. Wonderful !!!.
Jazakkkallah khair,
B. Ahamed Ameen from Dubai.
வெகுநாட்களுக்குப் பிறகு.... உங்கள் ரிசிப்பியில் அற்புதமான சமையல் !
ஒவ்வொன்றும் தனித் தனி சுவையுடன் கலந்த கலவை...!
இன்னொரு மிஞ்சல் வழி கவியரங்க போட்டிக்கு தயாராகலமா ?
அடே(யாப்பா) கிரவ்னு... எங்கே இருக்கே.... சிக்கிரம் இங்கே வா(டா)ப்பா !
// தேவையான அளவு
தேன்மொழி கலந்து
இரண்டு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
இப்புவி தன்னின்
இயல்பு சேர்க்கவும்//
இவ்வளவு ஈட்டிலும் பாட்டிலும்
விரைவில் வேகவைக்க
மூடி போட்டு வாய்மூடி இருந்தால்
வாசனை விசிலோடு
வானத்தைப் பிளக்குமே!
நாசியைத் துளைக்குமே!
அன்பிற்குரிய காக்கா,
வ அலைக்குமுஸ்ஸலாம்.
கறிவேப்பிலை போடாதது மரபுப்படி பிழைதான். புதுக்கவிதைகளில் மரபு பின்பற்றப்படுவதில்லை என்றாலும் குற்றம் குற்றமே.
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.
ZAIESA,
கஞ்சின்னா கஞ்சி; கவிதைன்னா கவிதை!
எங்கே ஆளையே காணோம்?
ஃபாரூக் மாமா,
தாளிச்சாலும் தாளிக்காவிட்டாலும் மீகொரிங்கின் காரமும் சுவையும் கொண்டு வர என்னால் முடியாது.
நன்றி.
wa alaikkumussalam varah...
Dear thambi B. Ahamed Ameen,
Thanks that you like this posting. i just tried to mend recipe and poem but i am not professional in either if it. So, it may not taste good. :-)
thank you
அபு இபு,
//இன்னொரு மிஞ்சல் வழி கவியரங்க போட்டிக்கு தயாராகலமா ?//
முதலில் உமக்கு நேரம் இருக்கா ஓய்?
//முதலில் உமக்கு நேரம் இருக்கா ஓய்? // எல்லோரும் வரனும்போல...! :)
காக்கா, நார்மலுக்கு சீக்கிரமே வந்துடுவேன் இன்ஷா அல்லாஹ்...
preparation of delicious poetry is really nice.., tasteful.
அஸ்ஸலாமுஅலைக்கும்.அடைமழையா இது இல்லை மடை உடைக்கும் உற்சாக நதியா? இல்லை முடியாது என முட்டுக்கட்டையின் தடை உடைக்கும் படையா? எது இது வெண் பொங்களா? இல்லை நானமுறும் மென் பெண்களா?
ஆனாலும் சுவையின் மற்றொரு பரிமாணம் இதை வின்டு செறிமானம் ஆகும் படி பக்குவமாய் சமைத்த சமையல்.மையல் கொள்ளவைக்கிறது கைமணம்!
சமைப்பது போல்தான்
கவிதை
அமைப்பது வும்.
-----------------------------------------
இதில் நீங்கள் ஏற்ற பாத்திரம் அதன் திறம்.தரம்,வரம்,அதனால் அது கோடி பெறும்!
இதயமெனும் பாத்திரத்தில்
இயல்பெனும் எண்ணெயில்
தேக்கிவைத்த எண்ணங்களைத்
தங்க குணத்தில்
வதக்கி எடுப்பதுபோல்
செதுக்கி எடுக்கவும்
---------------------------------------------
இந்த தங்க எண்ணத்தை தனக்கென ஒதுக்கி பதுக்கி வைக்காமல் சமுதாயத்துக்கு தங்க பஷ்பமாய் தந்த தங்க உள்ளத்துக்கு என்றும் போல் வாழ்த்துக்களும், நன்றியும்.
நாற்பது வரிகளில்
நான்கைந்தைத் தேர்ந்தெடுத்து
நறுக்கி வைத்துக் கொள்ளவும்
------------------------------------------------------
சுருக்கி எடுத்தாலும் நல் விதமாய் பொருக்கி எடுத்து சுவையை பெருக்கியிருக்கும் பக்குவம் !பதம்!இதம்!
நல்லதாய்
நெஞ்சிற் தூண்டிய நினைவை
இஞ்சி பூண்டினைப் போல்
நசுக்கிப் போடவும்
மறவாமல் முதலிலேயே
ஞாபகமாக
கயமையறக்
கழுவி வைத்திருத்தல் அவசியம்
------------------------------------------------------------------
நினைவுகளை உசுப்பி எடுக்கும் வரிகள்!அழுக்காறு கொண்டவர்களின் எண்ணங்களை சலவைசெய்ய சொல்லும் சமயல் வழி பாடம்!பலே! பலே!
நவரசமாம்
ஒன்பது உணர்வுகளில்
ஒன்றிலாவது
ஒரு மணிநேரமேனும்
ஊறவைக்கவும்
-----------------------------------------------
ரசனையை தூண்டும்படி சொல்லிய விதம் அதன் வசம் இழுக்கும் பரவசம் பரப்பும் இனிக்கும் அதுரசமாய்.....புளிக்கும் புளிரசமாய்!இப்படி பலரசம்சொன்ன பழரசம் சூடு,சொறனை,உற்சாகம் சந்தோசம் என பலதை உணர்த்தும் வைர வார்த்தைகள்.
தேவையான அளவு
தேன்மொழி கலந்து
இரண்டு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
இப்புவி தன்னின்
இயல்பு சேர்க்கவும்
----------------------------------------------------
அருமை பக்குவம்,பக்குவம் இயல்பின் அவசியத்தை இப்படியும் சொல்லமுடியம் என்பதை நீருபித்துள்ளீர் கவிஞரே!இயல் தவரினால் அவனின் உண்மை சுவை(தன்மை)மாறிடும் என்பதை அழகாய் கையாண்டுள்ளீர்.சிலரின் அதீத நடப்பு அளவாய் இருக்க சொல்லி குட்டிய விதம் அடடா!
உள்ளுணர்வுத் தணலில்
ஊர் மனம் நோகாமல்
வேக வைக்கவும்
-----------------------------------------------
ஆற்று மணலில் ஊற்றாய் பீரிட்டு சூடுதனிக்கும் வார்தை நீர் ஊரோடு ஒத்து வாழ இப்படியும் பந்தியிட முடியும் என சொல்லும் சமையல் கூடம்!பள்ளிக்கூடமாய்!பகுத்தறிவு பாடமாய் நடத்தும் ஆசிரிய கவி!
நன்மையை ஏவி
தீமையைத் தடுக்க
எழுமிச்சை பிழிந்தூற்றி
தேங்காய்ப் பாலூற்றல்
தீங்கைப் போலுணர்ந்தால்
ஒரு கொதிப்பில் உடன் அணைத்து
---------------------------------------------------------------------
பக்குவமாய் பாலுட்டி அணைத்து செல்லும் லாவகம்!வயிற்றில் பால்வார்க்கும் வார்தை!மாசா அல்லாஹ் ,எல்லாபுகழும் அல்லாஹுக்கே இப்படியெல்லாம் சிந்தனை செய்ய வைத்தவன் அல்லாஹ் அல்லவா?கவிஞரே இது அதிரை அல்வா! அல்லவா?அல்வா கொடுக்காமல் அப்படியே அள்ளவா என அள்ளி கொடுக்கும் இனிய சுவை!
அறுசுவைக் கொழிக்க
சமைத்த உணவைப் போல
அவனியும் செழிக்க
அமைத்த வடிவமே
கவிதை.
---------------------------------
ஒரு சோறு ஒருபதம் ஓர் வார்தை நிஜமாய் பதமோ பதம்!
வாணலியிலிருந்து இறக்கி
வானொலியிலோ - அதிரைநிருபர்
வலைத் தளத்திலோ
வாசிக்கத் தந்தால் - கை
வசப்படும் கவிதை!
உண்பவர் ரசனைக்கேற்ப
வர்ண வர்ண ஏட்டில்
கால்புள்ளி அரைப்புள்ளி கலந்து
கேள்விக்குறி ஆச்சரியக்குறி
கிள்ளியெடுத்துத் தூவி
தொட்டுக்கக் கொஞ்சம்
துணைப் படமிட்டுப்
பரிமாறுவர் பதிவிடுபவர்!
-----------------------------------------------------------------
காணாமலே காணொளி கண்டது போல் கவிதை காட்சியாக வார்தை நடித்தும் ,படித்தும் காட்டியது அருமை!இப்படி சமைத்தால் எப்படி மறக்கும் உணவு என்றும் உண்ணும் படி,அதை அசை போட்டு எண்ணும் படி சமைத்துபக்குவமாய் பறிமாறப்பட்ட பந்தி இதன் முன் எந்த மந்தியிம் முந்தியிருக்க முடியாது!
வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்,
இப்பொழுதுதான் அப்பாடா என்றிருக்கிறது.
தங்கள் தமிழுரைக்கு மிக்க நன்றி.
//அடைமழையா இது
இல்லை
மடை உடைக்கும் உற்சாக நதியா?
இல்லை
முடியாது என
முட்டுக்கட்டையின்
தடை உடைக்கும் படையா?
எது இது
வெண் பொங்கலா? -இல்லை நாணமுறும் மென் பெண்களா?
ஆனாலும்
சுவையின் மற்றொரு - பரிமாணம்
இதை விண்டு - செறிமானம்
ஆகும் படி
பக்குவமாய் சமைத்த
சமையல்.
மையல் கொள்ளவைக்கிறது கைமணம்!//
தனியாக பதிக்காமல் விடுபட்ட தரமான தமிழ்க் கவிதை!
அருமை அருமை கவிதை அருமை என்ன ஒரு சுவைமணம்
Post a Comment