Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சாதனைச் செம்மல் முராத் கந்தவரு அலி மனிக்பான் 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2015 | , , , , ,

அரேபியாவில் இருக்கும் அறிஞர்களை நாம் அறிந்து வைத்திருக்கும் அளவு அலிமனிக்பான் அவர்கள் எங்களுக்கு மத்தியில் பிரபலம் பெற்றிருக்கவில்லை. சமுத்திரவியலாளர், சுற்றுச்சூழலியலாளர், வானியல் நிபுணர், பிரபல வர்த்தகர் என்று அலி மனிக்பான் அவர்களின் பட்டங்கள் நீண்டு செல்கின்றன.

பசுமையான பூமி, விவாசயத்துறை போன்றவற்றுக்கும் அவர் மகத்தான பங்களிப்புக்களை வழங்கிவருகிறார். இஸ்லாமிய சட்டத்துறையில் ஆழமான அறிவு அவருக்கிருந்தாலும், சமுத்திரவியல், மற்றும் வானியல் துறைகளின் அவருக்கிருக்கும் ஈடுபாடு அதிகமாகும். இந்தியாவின் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அலிமனிக்பான் ஆங்கிலம் ,அரபு, திவஹி, சிங்களம், ரஷ்யன் உட்பட 15 மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவார்.

ஆலி மனிக்பான் அவர்கள் 19 வகையிலான மீன் இனங்களை கண்டுபிடித்துள்ளார்கள். சமுத்திரவியல் உயிரியலாளரான கலாநிதி சாந்தப்பன் ஜோன்ஸ் அவர்கள்; அலிமனிபான் அவர்கள் பற்றி கூறியுள்ள கருத்துக்கள் ஆச்சரியமானவை ‘மனிக்பான் அவர்களின் ஆய்வு என்னை கவர்ந்துவிட்டது என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

இயற்கைக்கு உகந்த வகையில் அவரது ஆய்வுகளும், கண்டுபிடிப்பக்களும் அமைந்திருக்கின்றன. அலி மனிக்பான் அவர்கள் 1981ம் ஆண்டில் அயர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் டிம் செவேரின் (Tim Severin )என்பருக்காக ஒரு கப்பலைக் கட்டினார். 27மீட்டர் நீளமான கப்பலை நிர்மாணிக்கும் பணியை அலிமனிக்பான் வெறும் 12 மாதங்களில் கட்டிமுடித்தார். பண்டைய காலவடிவில் கட்டப்பட்ட கப்பலை நிர்மாணிக்க உலோகங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது சிறப்பம்சமாகும்.

டிம் செவேரின் இந்தக் கப்பலில் ஓமானில் இருந்து சீனா வரை 9600 கீலோமீட்டர்கள் பயணிக்க 8 மாதங்கள் கடந்துள்ளன. டிம் செவேரின் தனது அனுபவத்தை The Sinbad Voyageஎன்ற நூலில் பகிர்ந்துகொண்டுள்ளார் அலிமனிக்பான் சந்திர நாள் காட்டியை அறிமுகம் செய்திருக்கிறார். ஹிஜ்ரி நாள் காட்டி மற்றும் பிறை சர்ச்சை போன்ற விடயங்கள் பற்றியும் அதற்கான தீர்வுகளையும் 1999ல் சவுதி அரேபிய அராசங்கத்திடம் சமர்ப்பித்தார் இது விரிவாக ஆராய வேண்டிய பகுதியாகும்

(டாக்டர் அஹமட் ருஷ்டி அவர்கள் இது பற்றி அலிமனிக்பானுடன் விரிவாக கலந்துரையாடடியதாகவும் எனக்கு அறியக்கிடைத்தது. அலிமனிக்பான் அவர்கள் டாக்டர் ருஷ்டயை சந்தித்த பின்னரே எனக்கும் ருஷ்டி அவர்களுக்கும் இடையிலான தொடர்பு ஏற்பட்டது) இந்திய ஹிஜ்ரி நாட்காட்டி குழுவின் தலைவராகவும் அவர் கடமையாற்றுகிறார் !

அலி மனிக்பான் ஆய்வாளர் என்ற வட்டத்திற்கு அப்பால் பணிவான ஒரு மனிதர். சுற்றுச்சூழலை நேசிப்பவர். அவர்களுக்கு 77 வயதாகிறது. அல்லாஹ்தஆலா அன்னாரின் ஆயுளை நீடித்து வைப்பானாகவும்.

“யாரும் எவரிலும் தங்கி வாழக்கூடாது ஒவ்வொருவரும் தமக்குரிய வாழும் வழியைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் நம்மில் தங்கியிருக்க வேண்டும்” – அலி மனிக்பான்(حفظ

இவரைக் குறித்து விக்கி பீடியா தகவல் களஞ்சியத்தில் அறிய



இவர்குறித்தஆவணப்படம்:


நன்றி:  ‘அதிரை பிறை’
பரிந்துரை & எடிட்டிங்: அதிரை அஹ்மத் 

3 Responses So Far:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அலி மனிக்பான் அவர்களைப் பற்றி சுமார் 30 to 35 வருடங்களுக்கு முன் 'மறுமலர்ச்சி' வார இதழில் நாவலர் யூசுப் சாஹிப் அவர்கள் விரிவாக எழுதியிருந்தார்கள். அக்கட்டூரையிலிருந்து என் ஞாபகத்தில் நிற்கும் சில துளிகள்...

1. லட்சத் தீவை பூர்வீகமாக கொண்டவர்.
2. இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை என்ற கிராமத்தில்இ கடற்கரையோரம் சில காலம் வாழ்ந்தவர்.
3. கடலிலிருந்து நன்னீரை குழாய் மூலம் கொண்டு வந்து வீட்டின் கொல்லைபுறத்தில் மீன்கள் வளர்த்து அறுவடை செய்தார்.
4. அதே கடல் நன்னீரை கொண்டு கொல்லைப்புறத்தில் தோட்டம் வளர்த்தார்.
5. கடல் அரிப்பை தடுக்க ஒருவகையான செடியை கடற்கரையோரம் வளர்த்தார்.
6. தனது வீட்டு மின் தேவைக்காக பெரிய (பட்ட) பனைமரத்தின் உச்சியில் காற்றாடியை சுழலவிட்டு பேட்டரியை சார்ஜ் செய்து பயன்படுத்தினார்.
7. மண்ணெண்னை மூலம் இயக்கும் மோட்டாரை சைக்கிளில் பொருத்தி டெல்லி வரை சென்று வந்துள்ளார்.
8. இவர் கண்டுபிடித்த மீன் ஒன்று இவர் பெயராலேயே 'அலி மனிக்பான் ஃபிஷ்' என அழைக்கப்படுகிறது.
9. இவர் வடிவமைத்தை சிந்துபாத் பாய்மரக்கப்பல் (தேங்காய்) சிரட்டையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது.

வேதாளைக்கு பணிநிமித்தமாக சுமார் 17 வருடங்களுக்கு முன் செல்ல நேர்ந்தபோது இவரை நேரில் காணும் ஆவலில் விசாரித்தேன்இ பொதுவாக யாரும் அறிந்திருக்கவில்லை என்றாலும் ஒருவர் மட்டும் சொன்னார் 'ஆமாம்இ அந்த கடற்கரை பக்கம் ஒருத்தர் இருந்தாரு இப்ப ஊரை காலி பண்ணிக்கிட்டு போயிட்டாரு'' என்ற அசால்டான பதில் தான் கிடைத்தது;

குறிப்பு: மேலே துளிகளில் காணப்படுபவை என் நினைவுகளே. எனவே அதில் தவறான தகவலும் இருக்க வாய்ப்புள்ளது. உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள திருச்சியில் உள்ள மறுமலர்ச்சி பத்திரிக்கை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முயற்சிக்கவும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு