Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரமளான் - மலேசியாவில் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | July 07, 2013 | , , , ,


மலேசியாவில் நோன்பு மாதம் என்பது உண்மையிலேயே மனதுக்கு இதம் அளிக்க கூடியது. இன்னும் சில தினங்களில் நோன்பை எதிர் நோக்கியிருக்கும் இந்த நேரத்தில்  மலேசியாவில் எப்படியிருக்கும் என்ற முன்னோட்டம்தான் இது. 

நோன்பில் மாலை 2 மணிக்கெல்லாம் நோன்பு திறக்க உணவு வகைகளின் கடை திறந்து விடுவார்கள்.  மாலை 5 மணிக்கெல்லாம் உள்ளே நுழைய முடியாத அளவு இந்த இடங்களில் கூட்டம் நிரம்பி வழியும். காரணம் இங்கு மலாய்க்காரர்கள் வீட்டில் ஆரம்ப பள்ளி படிக்கும் மாணவர்கள் முதற்கொண்டு அனைவரும் நோன்பு வைப்பதுதான். நோன்பு வைக்காமல் இருப்பவர்களை ஒட்டு மொத்தமாக கேவளமாக பார்ப்பார்கள்.


உணவு வகைகள் எல்லாம் ஒழுங்காக அடுக்கி சுத்தமாக வைத்திருப்பார்கள்.  இதை சமயங்களில் ஹெல்த் டிப்பார்ட்மென்ட் வந்து சோதிப்பதும் உண்டு. தவறு செய்திருந்தால் லைசன்ஸ் போய்விடும்.


தராவிஹ் தொழுகைக்கு கூட்டம் அதிகம் இருக்கும். தொழுகைக்கு பிறகு பள்ளிவாசலில் அமர்ந்து பேசி விட்டு, எல்லோரும் வீடு செல்ல அதிகநேரம் எடுக்கும்.


நோன்புக்கு முன்னால் தொடங்கி , நோன்பு ஆரம்பிக்குமுன் முடிவடையும்  அனைத்துலக குர்-ஆன் ஓதும் போட்டி.  


சமயங்களில் கேள்விப்படாத நாடுகளிலிருந்து வருபவர்கள் கூட முதல் பரிசு பெற்றுவிடுவார்கள். எனக்கு தெரிந்து இத்தனை முஸ்லீம்கள் உள்ள இந்தியாவிலிருந்து ஒருவர்கூட பரிசு வாங்கியதாக தெரியவில்லை.


பெருநாளைக்கு தனது சொந்த ஊர் திரும்பும் கூட்டம் ..ஹைவே முழுக்க கார்களின் அணிவகுப்பு. இந்த மாதிரி சூழ்நிலையில் வெளியூருக்கு கிளம்பினால் கார் ஓட்டியே வாழ்க்கை வெறுத்துவிடும். ட்ராஃபிக் ஜாமில் சாது கூட தீவிரவாதி ஆகி விடுவார்.


பெருநாள் காலங்களில் கிராமங்களில் ஒற்றுமையாக இருந்து கிராமத்துக்கு தேவையான விசயங்களை செய்வதும் உண்டு. இந்த மர வீட்டையே எல்லோரும் தூக்கி நகர்த்துவது அதற்கான சான்று. இன்னும் ஒற்றுமையுடன் ஊரை சுத்தம் செய்வது எல்லாம் மிகவும் இன்ட்ர்ஸ்டிங் ஆன விசயம்.


ஊரை கூட்டாக சுத்தப்படுத்துவதற்கு மலேசிய மொழியில் Gotong Royong என்று சொல்வார்கள். எனக்கும் சில கனவுகள் உண்டு எப்போதாவது ஒரு முறை இது போன்ற ஒற்றுமையான செயல்களை நான் பிறந்த அதிராம்பட்டினத்தில் பார்க்க வேண்டும். 

கனவு நனவாகுமா?

ZAKIR HUSSAIN

25 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா...

அழகான புகைப்படங்கள், அறியாத தகவல்கள்.. ஜஸக்கல்லாஹ் ஹைரன்.

நிறைவாக நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கனவு காண்பவர்களில் உங்களைப் போன்றவர்கள் போல் நானும் ஒருவன் காக்கா.. இன்ஷா அல்லாஹ் ஒற்றுமையோடு செயல்படும் காலம் நாம் பிறந்த அதிரையிலும் வரும். அதற்காக து ஆ செய்வோம், முயற்சி செய்வோம்.

نتائج الاعداية بسوريا said...

அழகிய ஒற்றுமையின் கயிறை பற்றிப்பிடிப்பது
என்பது இதுதானோ.

இன்ஷா அல்லாஹ், அதிரையிலும் இதேபோல் ஒற்றுமைக்கான கனாக்காண்போம். அக்கனவில் வெற்றிபெறுவோம். தம்பி தாஜுதீன் கனவு
நனவாக !

அபு ஆசிப்.

Abdul Razik said...

அழகான புகைப்படங்கள், அறியாத தகவல்கள்.

அப்துல்மாலிக் said...

ஜாகிர் காக்கா அரிய தகவல்...

நோன்பு காலங்களில் டூட்டியில் ஏதேனும் நேரம் குறைப்பு உண்டா, இங்கே 6 மணிநேரம்தான் வேலை

பெருநாளைக்கு அவரவர் தத்தமது ஊருக்கு செல்வது சென்னையிலிருந்து 27ம் கிழமைக்குள் ஊருக்கு வரும் சிரமத்தை காட்டுது...(அங்கே சொந்த டிரைவ் இங்கே பஸ், ட்ரைன் கிடைக்காமல் அவதி)

அப்துல்மாலிக் said...

எனக்கு ஒரு டவுட்டு, அது ஏன் ஹாக்கா பெருநாள் அன்றுமட்டும் வீட்டை அலேக்கா தூக்கி நகத்தது. அது ஒரு சடங்கா? அல்லது அப்போதான் எல்லோரும் ஊரில் இருப்பாங்க என்ற நம்பிக்கையா? இதுலே ஊரை சுத்தம் செய்வதிலும் அடங்கும்..

//இது போன்ற ஒற்றுமையான செயல்களை நான் பிறந்த அதிராம்பட்டினத்தில் பார்க்க வேண்டும். // நல்ல நோக்கம் பட் நிறைவேறுமா என்பது கேள்விக்குறி?

Anonymous said...

ஆயிரம் வார்தைகளில் சொல்லும் செய்தியை ஒரே ஒரு படம் காட்டி பாடம் நடத்தி விடலாம் என்பதற்கு இந்த போட்டோக்கள் ஒரு எடுத்து காட்டு. மலேசியாவின் என் பழைய நினைவுகளை என் நெஞ்சத் தாடகத்தில் நீச்சல் போடவைக்கிறது மருமகனே ஜாகிர் Uchapkan Selamat Bulan Puasa Untuk Anda dan Keluarga .Annak Saya Ham dan keluarga sudadatang ke india. Jumbalagi Trimakasehi

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நனவானதை படம் போட்டு கனவு காணச் சொன்ன விதம் அருமை !

நம்மவர் பொதுப் பிரச்சினைகளுக்கும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அதோடு ஊர் நிர்வாகத்திற்கும் உள்ள வித்தியாசங்களை விளங்கிக் கொண்டிருந்தால் கனவு நனவாகும் !

பொறுப்பில் இருப்பவர்களுக்கும் / இல்லாதவர்களும் / பொறுப்பற்றவர்களுக்கும் சேர்த்துதான் ! கனவு எல்லோருக்கும் கலரில்தானே தெரியும் !?

வரயிருக்கும் ரமளான் எல்லோருக்கும் நன்மையாக அமையட்டும் ! இன்ஷா அல்லாஹ்....

Yasir said...

கண்ணியத்திற்க்குரிய ரமலான் மாதம் வந்துவிட்டாலே சந்தோஷம்தான் அதுவும் ஜாஹிர் காக்கா அதனை தன் ஸ்டையிலில் ஆரம்பித்து வைத்திருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது...

Selamat Bulan Puasa Untuk Anda dan Keluarga : courtesy : Farook Mama / Google Translate

sabeer.abushahruk said...

அரிதான புகைப்படஙகள். (இவன் இதுவரை என்னிடம்கூட இவற்றைக் காட்டவில்லை. எப்பப்பார்த்தாலும் இவன் ஃபோட்டோவையே அனுப்பி ஃபோட்டோஅலர்ஜியோ நோயே வந்துடுச்சு.)

அந்தத் தராவீஹ் தொழுகையும் குர் ஆன் ஓதும் அரங்கமும் மிகவும் கவர்கின்றன.

உணவு வகைகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தும் அதிகமாக இனிப்பு வகைகள் இருப்பதுபோல் தெரிகிறது.

பிற மத சகோதரர்களை அழைத்து தொப்பி அணிவித்து நோன்பு துறக்க வைப்பீர்களா, எங்களைப் போல?

முஸ்லீம் தீவிரவாதிகளைப் பிடிக்கும் விஜயகாந்த்துக்கே தொப்பி போட்டு நோன்பு துறக்க வைப்பவர்கள் நாங்கள்.

கல கட்டுது.

sabeer.abushahruk said...

ஜாயிரு,

நீயும் இதத்தான் வாங்கி நோன்பு துறப்பியா அல்லது நோன்புக்கஞ்சி வாடாவா?

ZAKIR HUSSAIN said...

மெயின்கோர்ஸ் சாப்பாட்டுக்கு முன் மாதிரி இந்த கமென்ட்ஸ்:
[அப்பாடா 'என்ட்' போட்டுடாய்ங்கன்னு சந்தோசப்படவேண்டாம் ]

To bro Abdul Malik: ஸ்கூல் நேரங்கள் குறைவாக இருக்கும். ஆபிஸ் நேரங்கள் 1 மணிநேரம் குறைவு. ஆனால் லன்ச் பிரேக் இல்லை. சில இடங்களில் வேறுபடும்.

அந்த வீட்டை தூக்கி நகர்த்துவது , ஊரின் ஒற்றுமை தான் . இது எப்போதும் நடக்கும் சடங்கு அல்ல.

ஏழைகளுடன் சகனில் உட்கார்ந்து சாப்பிடவே முகம் சுளிக்கும் So Called முஸ்லீம்கள் இருக்கும் நம் ஊர்களில் ஒற்றுமை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணத்துக்காக வெளியிட்ட போட்டோ அது.

To Sabeer,

//எப்பப்பார்த்தாலும் இவன் ஃபோட்டோவையே அனுப்பி ஃபோட்டோஅலர்ஜியோ நோயே வந்துடுச்சு.//

பாஸ் நான் அழகாக பொறந்தது தப்பா பாஸ்??

நோன்பு திறக்க வீட்டில் நோன்பு கஞ்சி மற்றும் இது போன்ற கடைகளில் வாங்கும் KUIH [ தின்பன்டங்கள் ]

அன்புமிக்க பாரூக் மாமாவுக்கு, உங்களுக்கு மலேசியாவில் இருந்த ஞாபகம் வரும் என்று நான் எழுதும்போதே நினைத்தேன். வாழ்க்கையில் சுறுசுறுப்பான காலங்களை இங்கு செலவழித்ததால் வாழ்க்கை அப்படியே இருந்து இருக்க கூடாதா என்ற எண்ணம் இருக்கும். அது எல்லோருக்கும் இருக்கும்.இருந்தாலும் ஒய்வும் தவிர்க்க முடியாததுதான்.

பதில் எழுதாமல் விடுபட்ட சகோதரர்கள் ...ஒரு சின்ன இடைவேளைக்கு பிறகு சந்திப்போம்.Unknown said...

மலேசியாவில் ரமலான் பற்றி சந்தோச தகவல்.
நன்றி சகோதரரே!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கனவு நனவாகனும் அப்ப தான் நம்மூரு ஜனாதிபதியின் சிங்கப்பூர் கனவும் கொஞ்சமாவது நிகழ்வில் காணமுடியும். அதற்கு உங்க நாடு மாதிரி அதிரையிலும் "Gotong Royong" மாதிரி அப்பப்ப களங்காணனும்

படங்களின் வண்ணங்களும், மலேசிய மனங்களின் எண்ணங்களும் அருமை.

உங்கூரு உணவுகளின் வர்ணங்கள் கண்ணுக்கு குளுமை, ஆனால் நோம்புக்கு நம்மூரு மஞ்சக் கஞ்சியும் கிட்டத்தட்ட கருங்கலரின் வாடாக்கும் இணையாகுமா?

Anonymous said...

மலேசியா செல்ல நினைத்தால் நீங்கள் நோன்பு மாதத்தில் செல்லுங்கள். மலேசியா இந்தோனேசியா தமிழ்நாடு தாய்லாந்து சீன[ஹலால்] பல நாட்டு உணவுகளை நீங்கள் காணலாம். சுவைக்கலாம். அவரகளின் பலகாரங்கள் எல்லாம் சீனி மாவு சக்கரையால் செய்தது என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. அந்த வண்ண வண்ண பலகாரங்கள் எல்லாமே வானவில்லை உடைத்து போட்டு செய்த பலகாரங்கள்.

''எனக்கு சொந்தமான வான வில்லை உடைத்து இந்த மனிதர்கள் வாயில் போட்டு கொள்கிறார்களே' 'என்று வானம் வாய் வயத்துலே அடிச்சுகிட்டு அழும் கண்ணீர்தான் அங்கே' திடீர்-திடீர்'னு வரும் மழை. அது வானத்தின் வையத்து எரிச்சல்.

ஒரு எச்சரிக்கை: கோலாலம்பூர் ஜாலன் மஸ்ஜித் இந்தியா பகுதியில் இருக்கும் தென் இந்திய முஸ்லிம் பள்ளி வாசலுக்கு மட்டும் பெருநாள் தொழுகைக்கு போய் விடாதீர்கள். பிறகு மலேசியா பக்கமே தலை வைத்து படுக்க மாட்டீர்கள் பக்கத்தில் உள்ள' மஸ்ஜித் ஜாமேக்' பள்ளியில் தொழலாம். நீங்கள் கலா ரசனை கொண்டவராக இருந்தால் அந்த பள்ளி விட்டே நகர மாட்டீர்கள். [ஜாகிர் அந்த பள்ளியை தழுவி ஓடும் நதியோரம் நின்று கேமராவில் கிளிக் போட்டு A.N.நில் ஒரு படம் காட்டேன்] இவர்களும் ஒரு பார்வை போடட்டுமே!

S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்

ZAKIR HUSSAIN said...

//[ஜாகிர் அந்த பள்ளியை தழுவி ஓடும் நதியோரம் நின்று கேமராவில் கிளிக் போட்டு A.N.நில் ஒரு படம் காட்டேன்] இவர்களும் ஒரு பார்வை போடட்டுமே!//

Masjid Jamek, Kuala Lumpur என்று Google Imagesல் டைப் செய்தாலே அந்த பள்ளிவாசலின் பல போட்டோக்கள் இன்டர்னெட்டில் இருக்கிறது.

sabeer.abushahruk said...

//பாஸ் நான் அழகாக பொறந்தது தப்பா பாஸ்??//

*&*&%$%$#@%$&&*(*
ஃப்ளாஸ் நியூஸ்:
ஷார்ஜாவில் பயங்கரம். 
 
ஏதோ ஓர் அதிர்ச்சிதரும் செய்தியைக் கேட்டு ஷார்ஜாவில் வசிக்கும் சபீர் என்பவர் மயக்கம் போட்டு விழுந்ததால் அங்கே பப்பரப்பா…சாரி..பரபரப்பு நிலவியது.  யாசிரின் அறிவுரைபடி முகத்தில் ஜிஞ்சர் சோடா அடிக்கப்பட்டும் குடிக்கத்தரப்பட்டும் சுதாரித்த சபீர் சொன்னதாவது, “பிறந்ததுமுதல் ஒன்னாவே வளர்ந்ததால் தமக்கு ஜாகிரின் முகம் பிடித்துப் போனதே தவிர அவர் அழகாக இருக்கிறார் என்று தான் ஒருபோதும் சொன்னது கிடையாது என்றும் 8.3 ரிக்ட்டேர் அளவிலான அதிர்வு தரும் செய்தியான ‘தான் அழகா இருப்பதாக’ ஜாகிர் சொன்னதால்தான் மயக்கம் போட்டு விழுந்ததாக” செய்தியாளர்கள் என்று தவறாக எண்ணி வந்தவன் போனவனிடம் எல்லாம் சொல்லி புலம்புவதாக தகவல்.
 
ஃபாரூக் மாமாவின் பின்னூட்டம் கவித்துவமாக இருக்கிறது.

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர்!

இவை பற்றி நானும் செவி வழி கேட்டு இருக்கிறேன். கண்ணால் பார்க்க வைத்த காட்சிகளுக்கு நன்றி.

ஒரு கனவு சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு அந்தக் கனவெல்லாம் இல்லை. குறைந்த பட்சம் சுத்தமாக இருந்தாலே போதும். குறைந்த பட்சத்தில் அந்த தோசைக் கல்லில் விளக்குமாற்றால் கூட்டுவதும் அடங்கும்.

sabeer.abushahruk said...

ஜாயிரு,
சரி சரி நீ அழகன்தான். கோவிச்சுக்காதே வந்து ஏற்புரை எழுதிட்டுப் போ.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Zakhir Hussain,

Ramadan in Malaysia with pictorial depiction is nice. All pictures are nice, particularly I like the picture of spiritual interior of masjid with lot of people praying with Malaysian traditional dresses - lunghi, blue caps.

My father had been living in Jalan Masjid India, working in Hanifa Textiles for a while.

My friend here living in Dubai, was in Malaysis. He often compares Malaysia with UAE and proud of the living there in Malaysia.

I heard that living in Malaysia is unforgettable experience.

Thanks for sharing.

Best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Anonymous said...

//ஏழைகளுடன் சகனில் உட்கார்ந்து சாப்பிட முகம் சுளிக்கும் So Called Muslims வாழும்ஊர்இது//

அவ்வளவு தூரம் ஏன் போகணும்? walking போகையில் சலாம் சொன்னால் கூட பதில் சொல்லாதாவர்களும் உண்டு. நானும் விடாமல் பல தடவை சலாம் சொல்லி சொல்லியே ஒருவருக்கு 'இம்சை' கொடுத்தேன் ஒரு பதில் சலாம் கூட. இல்லவே இல்லை. இதை தினமும் விடாமல் தொடர்ந்தேன்..

என் 'இம்சை' தங்க முடியாத அவர் ''நீங்கள் யார்?'' என்று கொஞ்சம் அதட்டலுடன் கேட்டடார்!"

நான் சொன்னேன் 'நான் யாராக இருந்தால் பதில் சலாம் சொல்வீர்கள்?''

என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு போனவர்தான். பாதையை மாற்றி விட்டார் போலிருக்கிறது ஆளையே காணோம். நிலைமை இப்படி இருக்க எங்கே வரும் ஒற்றுமை?

S.முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்

ZAKIR HUSSAIN said...

To Bro Thajudeen,

//அந்த கனவு காண்பவர்களில் உங்களைப் போன்றவர்கள் போல் நானும் ஒருவன் //

கனவு மெய்ப்பட வேண்டும்.

To Bro Abdul Razik..இன்னும் இருக்கிறது அறியாத தகவல்கள். கொஞ்சம் கொஞ்சமாக எழுதலாம்

To bro Yasir
//elamat Bulan Puasa Untuk Anda dan Keluarga//

Selamat Menyambut Bulan Ramadhan.

To Sister Hasenna Ma .... உங்களுக்கும் நன்றி. நீங்களும் ஏதாவது ஆர்டிக்கிள் இந்த வலைத்தளத்தில் எழுதலாமே.

To Brother M.H. ஜஹபர் சாதிக். ..நீங்கள் சொன்ன ஒற்றுமை முன்பு நம்மிடம் இருந்தது. நான் எங்கள் தெருவில் எல்லோருடமும் சேர்ந்து குளம் தூர்வார்தல் / தெருவை சுத்தம் செய்தல்/ மையத்துக்கொள்ளையை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை நான் பார்த்து இருக்கிறேன்.

இப்போது எல்லாம் மிஸ்ஸிங்

To Bro Ebrahim Ansari,

//குறைந்த பட்சத்தில் அந்த தோசைக் கல்லில் விளக்குமாற்றால் கூட்டுவதும் அடங்கும். //


அது அடங்கினாலும் இவனுக அடங்க மாட்டாய்ங்க..திடீர்னு நல்ல படியா சுத்தமா நடந்தாலே கிண்டல் செய்யும் கலாச்சாரம் நிறைந்தது நம் பகுதி. [எ; போராரு பார்டா வெள்ளைக்கார துரை]

To Sabeer

//ஜாகிரின் முகம் பிடித்துப் போனதே தவிர அவர் அழகாக இருக்கிறார் என்று தான் ஒருபோதும் சொன்னது கிடையாது//

பாஸ் உங்களுக்கு பொறாமை பாஸ்

To Brother Ameen

//My father had been living in Jalan Masjid India, working in Hanifa Textiles for a while. //

Then is should have known your father.

அன்பு மிக்க பாரூக் மாமாவுக்கு,

//பாதையை மாற்றி விட்டார் போலிருக்கிறது ஆளையே காணோம்.//


சலாத்துக்கு பதில் சலாம் சொல்லாததால் மார்க்கத்தையே மாற்றி விட்டார் என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.Shameed said...

கட்டுரைக்கு ஏற்ற புகைப்படங்கள்


நானும் இதுபோல் ஒரு கட்டுரைய போட்டுரலாமுன்னு முயற்சி செய்றேன் முடியலையோ !!!

Shameed said...

//ஊரை கூட்டாக சுத்தப்படுத்துவதற்கு மலேசிய மொழியில் Gotong Royong என்று சொல்வார்கள். எனக்கும் சில கனவுகள் உண்டு எப்போதாவது ஒரு முறை இது போன்ற ஒற்றுமையான செயல்களை நான் பிறந்த அதிராம்பட்டினத்தில் பார்க்க வேண்டும்//


சில ஆண்டுகளுக்கு முன் தெரு கூடி தரகர் தெரு குளத்தை எந்த வித குல பெருமையும் இல்லாமல் தூர் வாரினர்

Unknown said...

Assalamu allaikum the artical is very superp especially the prayers and kira'ath competition jazakallah khairan

Unknown said...

Assalamu allaikum the artical is very superp especially the prayers and kira'ath competition jazakallah khairan

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு