Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அப்பாவும் பேரனும் - தொடர்கிறது ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | September 17, 2013 | , , , , , ,


[பேரன் வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைய எதிர்படும் அப்பாவிடம்..]

பேரன் : அஸ்ஸலாமு அலைக்கும் அப்பா..

அப்பா : வ அலைக்குமுஸ்ஸலாம். என்ன இந்நேரத்திலே எங்கிருந்து வர்றிய...

பேரன் : இன்னைக்கு ஸ்கூல் லீவு அதான் முடி வெட்டிகிட்டு குளிக்கப் போறேன்..

அப்பா : எங்க நீங்க குளிக்க... அதான் கெரண்டுமில்ல.. தண்ணியுமில்லண்டு உங்கம்மா கத்திக்கிட்டு கெடக்குது.... இதென்ன தல நடுவுல நாள்பட்ட கபுராட்டம் ஒரு  குமியலா....!?

பேரன் : போங்கப்பா.. இதுக்குப் பேர்தான் ஃபோஹாக் கட்டுன்னு பேரு. பெக்காம் கட்டுன்னும் சொல்லுவாங்க.

அப்பா : அப்படியா.. நல்லாத்தான் ஈக்கீது கொளத்துல போய் குளிங்க..

பேரன் : ச்சீ… உவ்வே.. என்னப்பா.. கொளத்துல போய் குளிக்கச் சொல்றிய..நஜீசுல..

அப்பா : அடங்கப்பா... எதெ நஜுசுன்னு சொல்றிய.. புதுசா பீடி குடிச்சாப்ல தூரமா நிக்காம கிட்டவாங்க சொல்றேன்... நாங்கெளெல்லாம் கொளத்துக்கு கெளம்புனம்னா திரும்பி வர மூணு நாலு மணியாவும்.அவ்வளவு நேரம் குளிச்சு வெளயாண்டுட்டு வருவோம், தெரியும்ல...?

பேரன் : மூணு நாலுமணி நேரமா… அப்படின்னா ஒன்னுக்கு, ரெண்டுக்கெல்லாம் கரையேர மாட்டியலா..?

அப்பா : ஹெ...ஹெ....! அதுக்கெல்லாம் கரையேற  மாச்சப்பட்டு கொளத்துக்குள்ளெயெ.....!!

பேரன் : ச்சீ ..அதெல்லாம் கொளத்துல்க்குள்ளெவா...!?

அப்பா : ஆமா...செல சமயம் தண்ணியால தள்ளிவுட்டா  பின்னே அதை மீன் திண்டுடும்.தெரிஞ்சுக்கிடுங்க.. 

பேரன் : அப்படின்னா… உங்களுக்கு காச்ச கீச்ச வராதா...?

அப்பா : அதெல்லாம் வராது… அப்படி காச்ச வந்தா வாயில மட்டும்தான் வரும்…!

பேரன் : அதென்ன வாயில மட்டும் காச்சல்...?

அப்பா : ஆமா. எங்கசாரு நோட்டு கேட்கிற அன்னைக்கி மாத்திர மட்டும் பள்ளி கொடம் போக கொஞ்சம் செரவடியாயிரிக்கும் அப்ப எவன் பள்ளிகொடம் பொறவன்ர வூட்டுல போய் லீவுலெட்டெர குடுத்து வுடுவோம். கொளத்துலே குளிக்கிற நாள்ல சீக்கும் கம்மி டாக்டர்மார்வளும் கம்மி. இப்ப நீங்களுவ கொளத்துல குளிக்காமயிருந்துதான் சீக்கும் புதுசு புதுசா  பெருவிப் போச்சு. ஆஸ்பத்திரியும் பெருவிடுச்சு. டோக்கன்னு நான் பாத்தது அப்ப வெளியூர் முஸாபர்களுக்கு சாப்பாட்டுக்காக பள்ளியாசல்ல குடுப்பாக அதான். இப்ப என்னடான்னா டாக்ட்டர்க்கிட்ட காமிக்கிறதுக்கு டோக்கன் வாங்கனும்னு சொல்றானுவ உங்க காலமெல்லாம் ரொம்ப பாவப்பட்ட காலமப்பா..

பேரன் : சரிப்பா… இப்ப கொளத்துல தண்ணியில்லாம பயனுவ கிரிகெட்டுல்ல வெளயாடுறானுவ.

அப்பா : எப்படிப்பா தண்ணியிருக்கும்...? வருசத்துல 2,3 தடவை c m p வாய்க்கலெ தண்ணிவரும் நாங்கெல்லாம் போய் குளிப்போம். மீனல்லாம் வரும், வேட்டி வச்சு புடிப்போம்.

பேரன் : வேட்டி வுடுத்திக்கிட்டு ஆத்துல குளிக்கிறதே கஷ்டம், அதெப்பெடி வேட்டிய வச்சு மீன் புடிக்க முடியும்..? பொய் சொல்லாதிய...

அப்பா : நான் பொய் சொல்வேனா, எப்ப சொன்னேன் வேட்டி வுடுத்திக்கிட்டு குளிச்சேன்னு...? மேலே கேளு. சொல்றேன் கடமட தண்ணி வேஸ்டா ஏன் கடலுக்கு போவனும் ஜனங்களுக்கு போவட்டுமே என்றுதான் அந்த காலத்து லேந்து வெட்டி வுட்டாங்க. அதுனால எல்லா வூட்டுக் கெணத்துலயும் தண்ணி கெடந்துச்சு, அதனால வூருல உள்ள கொளமும் கெண்ட பாஞ்சு கெடந்துச்சு.மழை பெய்ஞ்சா எல்லா கொளமும் ஒடச்சுக்கிட்டு ஊரெல்லாம் தண்ணி பெருவி,அங்கெங்கே கெடக்குற குப்பைகூளங்கள், செத்தகோழி, தெருவுல ஓடுற சாக்கட தண்ணியெல்லாம் அடிச்சிக்கிட்டு போய் கடல்ல கலந்திடும்.மொத்தத்தில ஊரையே கழுவிவுட்டடும்.

கொசுத்தொல்லையும் இல்ல,பத்தாதத்துக்கு இப்ப அடிச்சுக்கிறியல நெலத்தடி நெலதடி நீர்னு… அதுக்கும் பஞ்சமில்லாம இருந்துச்சு. ஏன்னா, எல்லா ஊடும் முத்தம் வச்சு கட்டி இருக்கும் மழை பேஞ்சா முத்த நெறஞ்சு சாராக்குழி வழியா தெருவுக்கு ஓடி தெருவும் குளிர்ந்திருக்கும்.

பேரன் : அதென்ன சாராகுழி...?

அப்பா : அதா ஒவ்வொரு ஊட்லயும் ஊட்டுத் தண்ணி தெருவுக்கு ஓட கட்டியிருப்பாங்க. மழை நாள்ல தண்ணி ஓடும், மத்தநாள்ல பெருச்சாளி ஓடும்.

பேரன் : ஹா… ஹா… சரிப்பா… c m p வாய்க்கா தண்ணி வரத்துயில்லையே..ஏன்..?

அப்பா : அப்புடிகேளு எம்பேரா… இப்ப சொல்றேன் ஊருல உள்ள கொளமெல்லம் அந்தந்த எடத்துல உள்ள பள்ளியாசலுக்கு சொந்தம், அதுல வர்ற வருமானமும் சொந்தமுன்னு ஆயிடுச்சு, இது பொறுக்காத அவிய்ங்க... நம்மூருக்கு வர்ற தண்ணியை மறுச்சு இவனுவளுக்கு ஏன் போவணும்னு ஐடியா பண்ணி தடுத்துட்டாணுவ...இத கேட்க நாதியில்லாம போச்சு.

பேரன் : அவ்யிங்கன்னா யாருப்பா...?

அப்பா : அதா.....சுன்னத்து பன்னாதனுவோ.....!

பேரன் : நீங்கதான் ஒட்டு போட்டு ஜெயிச்சவங்கள்ட்ட போய் சொல்ல வேண்டியதுதானே..?

அப்பா : அட நீ ஒன்னு… அவங்களுக்கு பொறம்போக்கு நெலத்தையே பாக்க நேரமில்லாம போச்சு.... இதப்போய் பாக்கவா போறாங்க... இப்ப ஒன்னும் கெட்டுபோகல.  நம்ம்மூரு சேர்மனாமே.. அந்த புள்ளையும் சுகாதாரம் வேணும்னு படிச்சு படிச்சு சொல்லுதாமே நீ கொஞ்சம் சொல்லி அதுக்குள்ள ஏற்பாட்டை பண்ணச் சொல்லு MLA, MP ன்னு பாத்து பேசச் சொல்லு... அப்படியுமில்லையா இந்த தெருமுனை பிரச்சாரம்னும், பள்ளியாசலை, மதுர்ஸாவை கழுவிவுட்டுட்டு போட்டாவெல்லாம் போடுதுல அந்த புள்ளகள்ட்டெயும் சொல்லி இந்த அவந்தரைக்கு ஒதவச் சொல்லு செய்வாங்க. அல்லாஹ் பரக்கத்து செய்வான்னு சொல்லு. மேலும், ஊருக்கு ஓதவனும்னு நெனக்கிற வலப்பூ கட்டி தெனமும் ஃபோட்டோவெல்லாம் போட்டு செய்தி போடுதுவொல அவங்க கிட்டே சொல்லு, ஊர் தேவைக்கெல்லாம் எழுதிப் போட்டு சரி செய்யுதாமுள்ள அந்தப் புள்ளையோ இன்னும் யாரு இதற்கு முயற்சி செய்றாங்களோ..... அல்லாஹ் நற்கூலி கொடுக்கப் போதுமானவன்........... 

வந்துடுச்சு...... வந்துடுச்சு.....

பேரன் : சீக்கிரம் போங்கப்பா...

அப்பா : அட நீ ஓடு கெரண்டு வந்துடுச்சுன்னு சொன்னேன் போய் நல்லா குளிங்க.

ZAEISA

12 Responses So Far:

sabeer.abushahruk said...

அப்பா... யபா!!!

என்னா சேடை! என்னா நக்கலு! அதிலயும் அந்த "நாள்பட்ட கபுறு" "புதுசா பீடி குடிக்கிறவமாதிர் ஒதுங்கி நிக்கிறது" படிச்சிட்டு சிரிப்பு வயித்த வலிக்குது.

அந்தக் கால மனுசர் அப்ப்பாபுக்கு இந்தக் கால பேரன் ஈடு கொடுக்கவே முடியல.

மேட்டர் என்னவோ வாட்டரைப் பத்தித்தான் என்றாலும் "கொளத்ல தண்ணீ" என்றெல்லாம் இல்லாததும் பொல்லாததும்லா அள்ளி வுட்றாக அப்பா.

அப்பா, வேணும்னா முதுகு சொறிஞ்சி விட்றோம்; பினாங்காண்ட்ட சொல்லி உங்களுக்கு கஞ்சிப்பிராக்கும் மிதிரிக்கட்டையும் கைலேஞ்சியும் உங்க பேரனுக்கு பல்லி முட்டையும் பிஸ்கோத்தும் ஐசோபி சட்டையும் வாங்கித் தறோம்...அடிக்கடி வாங்க.

ZAKIR HUSSAIN said...

பாஸ் அப்பாவுடைய மிதிரிக்கட்டை சைஸ் என்னானு கேட்டு 'வைபர்" / "ஸ்கைப்பே" லெ வாங்க பாஸ்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சூப்பரப்பா,
தொடரும்னு போடலயாப்பா,
இன்னும் தொடருங்கப்பா!

Yasir said...

அப்பா / பேரனின் அசத்தலான காமெடி...நம்மூரின் முக்கிய பிரச்சனைகளை அலசியவிதம் அப்பப்பா கலக்கல் சகோ.ஜெய்சா இப்படி அப்பப்ப வந்து நைசா இந்த மாதிரி தந்துட்டு போங்க

Anonymous said...

பொதுநலத் தொண்டை கருவாக கொண்ட கட்டுரை! அந்த காலம் கண்ணில் வந்து கண்ணை குளமாக்குகிறது!. குதித்து விளையாடிய குளமோ விதவை கோலம் பூண்டு வற்றி வறண்டு கிடக்கிறது! C.M.P.கால்வாயில் சாணியும் சாக்கடையும் தாலி கட்டி. குடும்பம் நடத்துகிறது' அரசியல்வாதிகளின் பணப்பசிக்கு 'வந்தேமாதரம்! ''வேளா வேளைக்கு நல்லா சோறு போடுது! வந்தேமாதரம்! பாரத மாதாகி ஜே! ஜனகனமன.......!. ஆடுவோமே பள்ளுபாடுவோமே.. [மற்றது மறந்து போச்சு]

S.முஹம்மது பாரூக், அதிராம்பட்டினம்

sabeer.abushahruk said...

ஜாயிரு,

அப்பா மிதிரிக்கட்டைப் போட்றதை வுட்டுட்டு சப்பாத்து போட்ற குளிர் தேசம் போய்ட்டாகளாம், அதனால குளிருக்கு கொரங்கு தொப்பி கேட்டாக.

சைஸ் நல்லா கோக்குமாக்கா கேள்வி கேட்கிற யாரையாவது பிடிச்சி அளந்துக்கோ.

Unknown said...

சபீர்

இந்த "நாள் பட்ட கபுறு" HAIR STYLE லே நெனச்சு நெனச்சு , தனியா இருக்கும்போதெல்லாம் என்ன சிரிக்க விட்டு வேடிக்க பார்ர்கின்றாறு இந்த சகோதரர் ZEISA.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்புள்ள அப்பா அவர்களுக்கு:

பேராண்டி எழுதியது !

அஜ்மான் பக்கமெல்லாம் போக வேனாம்னு சொல்லிட்டீங்க அப்பா, அதனால் இன்னைக்கு ஃபுல்லா உட்கார்து யோசிச்சேன்...! அதுலவேற தண்ணீ இருக்கிற பக்கம் போகலைன்னா போலீசு புடிச்சுடுவாங்கன்னு சொல்லிட்டீங்க !

அப்பா, துபாய்லேயெல்லாம் கொலமெலாம் இல்லை நாங்க பாட்டில்லதான் தண்ணீ வாங்கி குடிக்கிறோம். பைப்பை தொரந்தா தண்ணீ ஊத்தும்...!

நீங்க சொல்லிவுட்ட மாதிரிதான் அப்பா இருக்கோம், நல்ல புள்ளையலுவொலா... !

எங்களப் பத்தி வெசமம் புடிச்சவனுவொ ஏதாச்சும் சொன்னா காதுல போட்டுக்காதிய அப்பா...

இப்படிக்கு உங்க பேராண்டி !

Shameed said...

அப்பப்பா அப்பா என்ன இப்படி போட்டு தாக்குறார் அடிக்கடி வந்து இப்படி போட்டு வுடுங்க அப்பா

ZAKIR HUSSAIN said...

இருந்தாலும் அநியாயத்துக்கு அதிரை நிருபரின் பெயர் போட்டோவில் இருக்க வேண்டும் என்பதற்க்காக அந்த பிள்ளையின் கையில் மாடர்ன் வலையல் மாதிரி போட்டிருப்பது " அப்பாவும் பேத்தியும்" என்று திருத்தி வாசிக்க சொல்கிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்கா:

அப்பாகிட்டே பேரன் சொன்னது "அது ஸ்டைலு" ன்னு !

நாள் பட்ட கபுரை பார்த்த அப்பா, இந்த வளையல் செலவு இல்லாம போட்டு விட்டதால் சரின்னு சொல்லிட்டாங்க !

அதபு கொறைவு இருக்கான்னு மு.செ.மு.(n)தான் சொல்லனும்

adiraimansoor said...

அப்பாவின் செய்திகள் யாவும் உண்மை
அது எங்கே இந்த காலத்து பேரன்மார்களுக்கு தெரியப்போவுது
அந்த காலத்தில் கம்யூனிகேஷன் வசதிகள் இல்லாமல் இருந்தாலும்
அப்பொழுது இருந்த நிம்மதி ஜாலி எதுவுமே இப்பொழுது இல்லை
பாரூக் காக்கா அழகாக சொல்லி இருகின்றார்கள்
/// அந்த காலம் கண்ணில் வந்து கண்ணை குளமாக்குகிறது!. குதித்து விளையாடிய குளமோ விதவை கோலம் பூண்டு வற்றி வறண்டு கிடக்கிறது! C.M.P.கால்வாயில் சாணியும் சாக்கடையும் தாலி கட்டி. குடும்பம் நடத்துகிறது' அரசியல்வாதிகளின் பணப்பசிக்கு 'வந்தேமாதரம்! ''வேளா வேளைக்கு நல்லா சோறு போடுது! வந்தேமாதரம்! பாரத மாதாகி ஜே! ஜனகனமன.......!. ஆடுவோமே பள்ளுபாடுவோமே.. [மற்றது மறந்து போச்சு] ///
பாரூக் காக்காவுக்கு உண்மையான ஜே.............

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு