அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரைநிருபரில் வலம் வரும் பேசும் படத்திற்காக அதிரை மற்றும் அதனைச் சுற்றிய ஊர்களையும் கிளிக்கிக் கொண்டிருந்த மூன்றாம் கண்ணுக்கு தேடலின் பார்வை விரிந்தது (பார்வையைகூட யோசிக்க வைத்தது அதிரைநிருபரின் ஆஸ்தான கவி சபீர் அவர்களின் கவிதா(க்)கம்). மூன்றாம் கண்ணின் தேடலோ விமானம் ஏறி சிங்கப்பூருக்கே சென்றது (அட நம்ம பே.ம.த. ஊராச்சே!). இரவு பத்து மணிக்கு நண்பர் அவரின் குடும்பத்தோடு நம்மை வரவேற்க ஏற்போர்ட்டுக்கு வந்திருந்தார்.
சுத்தம் சோறு போடும் என்பார்கள் இங்கு சிங்கப்பூரில் சோறு போடும் இடமும் சுத்தமாத்தான் இருக்கு. மார்க்கெட்டில் மாட்டுக்கறி வியாபாரம் கொடிக்கட்டி பறந்தது அங்கும் சுத்தம்தான் (அங்கு மாடு ரயிலில் அடிபட சான்ஷே இல்லைங்க).
சிங்கப்பூரில் உழைத்தால்தான் சாப்பிடமுடியும் என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். வயதானவர்கள் கூட ஹோட்டல்களில் படு சுறுசுறுப்பாக வேலை செய்கின்றார்கள் இலவசங்களை கொடுத்து அங்கு மக்களை சோம்பேறியாக்க வில்லை.
என்னை அதிகமதிகம் ஆச்சர்யப்படுத்தியது அங்கு உள்ள மெட்ரோ ரயிலோ, சுத்தமோ, உயர்ந்து நிற்கும் கட்டிடமோ அல்ல நம் நாட்டு மக்கள் அங்கு உள்ள சட்ட திட்டங்களை மதித்து நடப்பதுதான். அதே ஆட்கள் நம் நாட்டின் மண்ணில் கால் பதித்து விட்டால் நம் நாட்டு சட்டத்தை மிதித்து(தான்) நடக்கிறார்களே என்ற ஆதங்கமும், ஏக்கமும் விஞ்சியதை தவிர்க்க முடியவில்லை.
சிங்கப்பூரில் நம் மூன்றாம் கண் கிளிக்கியதை உங்களின் கண்களுக்கு விருந்தாக பகிர்ந்துள்ளேன்…
கோடு போட்ட ரோடு போடுவேன்னு சொல்வாங்களே ஆனா இங்கே உல்டாவா ரோடு போட்டு கோடு போட்டு இருக்காங்களே !
எங்கே ஒருத்தரையும் விளையாட காணோம் இதைவிட நல்ல இடமா பார்த்து விளையாட போய்டாங்களா !
கலர்புல் கலர்புல்ன்னு சொல்வாங்களே அது இதுதானோ !
அதிரை பட்டினத்தில் இதேபோல் ஒரு மைதானம் அமைந்தால் எப்படி இருக்கும் !?
வலைத்து வலைத்து கட்டுறதுன்னு சொல்வாங்களே அது இதுதானோ
டேபிள் செட்டபெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா முக்கியமான ஐட்டம் சாப்பாட்டை காணோம் (அதான் கூட்டத்தையும் காணோமோ )
கொடல கையில புடிச்சிக்கிட்டு போனேன்னு சொல்வாங்களே அது இதுலே போறதையா?
அங்கே எல்லாம் ரோட்டுலே சோறு போட்டு தின்னலாம் என்று விடுவாங்களே ஒரு புருடா அது இந்த ரோடு தானோ !
சிங்கப்பூரில் என்னதான் பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டினாலும் பழசை மறக்காமல் சுற்றுலா தளங்களில் மரங்களில் கூடாரம் அமைத்து அழகு பார்க்கின்றனர்.
இதை தொங்கு பாலம்முன்னு சொல்றதா அல்லது தொட்டில் பாலம்ன்னு சொல்றதா
புது மாப்பிள்ளையைதான் வசியம் பண்ணிட்டாங்கன்னு சொல்வாங்க ஆனா இந்த பறவையை எப்படி வசியம் பன்னுனாங்கன்னு தெரியலே
Sஹமீது
27 Responses So Far:
துபையிலிருந்து ஜுபைர்
அஸ்ஸலாமு அலைக்கும்
மிகவும் அருமையான படங்கள் அதற்க்கேற்றவாறு உங்களுடைய கமண்ட் வாழ்த்துக்கள்.
அதுதான் நமதூர் சேர்மன் அவர்கள் நம்மூர் மக்களும் இதில் குறைந்தப்பட்சம் சுத்தத்தையாவது கடைபிப்பார்களா என அவரால் முடிந்த முயற்ச்சியினை செய்கிறார் போலும்.
நான் சுவாசித்த சுகாதாரம் நம்மூர் மக்களும் சுவாசிக்க வேண்டும் என
அல்லாஹ் அவருடைய சுகாதார முயற்சியில் நம் அனைவரையும் ஒன்றுபடுத்தி நம்மையிம் நமது சந்ததிகளையும் நோயின்றி வாழ அருள்புரிவானாக ஆமீன்
அருமை ஹமீது காக்கா, ரெண்டாவது படத்துலே உள்ளது சிறிய ஓய்வு பார்க், இதன் சிறப்பு என்பது 5 கட்டிடங்களுக்கு இடையே ஒன்று இதுமாதிரி பார்க் அமைந்திருக்கும், அதை சுற்றியுள்ள பெரியவர்களூம் குழந்தைகளும் பொழுதை கழிக்க நல்ல ஏற்பாடு... பார்க் என்று ஒன்றை தேடிப்போகவேண்டியதில்லை..
Salam ayya best article superb how? how? how ayya!!!
zubair சொன்னது…
துபையிலிருந்து ஜுபைர்
//நான் சுவாசித்த சுகாதாரம் நம்மூர் மக்களும் சுவாசிக்க வேண்டும் என//
வலைக்கும் முஸ்ஸலாம்
யான் கண்ட சுகத்தை இவ் வையகமும் காண வேண்டும்
என்பதை மாற்றி அமைத்தது மிக பொருத்தம்
அழகிய கலர்புல் படங்கள் !
வாழ்த்துகள் புகைப்படக்கலை வல்லூனருக்கு.......
நன்றி சகோதரா Shameed
எப்போது இதுபோல் "கிளிக்"னீர்கள்...சொல்லவே இல்லே....
/ அதிரை பட்டினத்தில் இதேபோல் ஒரு மைதானம் அமைந்தால் எப்படி இருக்கும் !?///
பெண்கள் கூட்டங்களால் கலைக்கட்டும்.
// புது மாப்பிள்ளையைதான் வசியம் பண்ணிட்டாங்கன்னு சொல்வாங்க ஆனா இந்த பறவையை எப்படி வசியம் பன்னுனாங்கன்னு தெரியலே //
பறவையை வசியம் பண்ணியதால் யாருக்கும் எந்த பாதிப்புமில்லை.ஆனால் ஸ்டேஜில் உள்ளவர்கள் நம்மளை பார்த்து வசியம் பண்ணாமல் இருந்தால் சரிதான்.
சிரிக்கும் சிங்கபூரை (கிள்ளி ) மன்னிக்கவும் கிளிக் செய்து கலக்கிட்டிய காக்கா .
மருமகன் ஷா. ஹமீது!
பாராட்டுக்கள். அழகு!அருமை!தெளிவு!
தெளிவான புகைப்படங்கள் சிங்கப்பூரை அபரிதமான அழகாய் காட்டுகின்றன.
எனினும்
சிங்கப்பூர் க்ளாமர் எனில்
எங்கவூர் ஹோம்லி!
சிங்கையின் அனைத்தும் மனிதன்
தன்கையால் வடித்தது!
எங்கவூரின் யாதும் இறைவன்
சங்கையாய் படைத்தது.
எதிர்வரும் மாதத்தில்
எந்தவூரையும்விட
எங்கவூரையே நாடுது!
எனிமும்,
சாலையா
கருப்பு நிறச் சோலையா
பாலமா
வரைந்து வைத்த கோலமா
நிழற்படங்களா
நேர்த்தியில் நிஜ இடங்களா
-என வியக்கவைக்கும் திறமையான புகைப்படங்களுக்க் வாழ்த்துகள் ஹமீது.
புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை
படத்திற்கு விளக்கமே தேவை இல்லை
படங்களே பேசியது ...புகழ் பெற்ற பத்திரிக்கையில்
கூட இப்படி பட்ட புகை பட கலைஞர்கள் உள்ளார்களா ?
என்பது சந்தேகமே அ.நிருபர் ..நல்ல புகைப்பட வல்லுனரை
பெற்றுள்ளது ,,சந்தோசம் ..வாழ்த்துக்கள் ,,
சிங்கப்பூர் ....
சோலைகள் நடுவே ..
சாலைகள் ...
காலையும் ,மாலையும்
சுத்தம் செய்வதுதான் ..
இவர்கள் வேலை போலும் ..
பாராட்டுக்கள். அழகு! ////(அட நம்ம பே.ம.த.ஊராச்சே!)////மார்க்கெட்டில் மாட்டுக்கறி வியாபாரம் கொடிக்கட்டி பறந்தது? ரொம்ப குசும்புதான், ஹமீது காக்கா,
பாராட்டுக்கள். அழகு! ////(அட நம்ம பே.ம.த.ஊராச்சே!)////மார்க்கெட்டில் மாட்டுக்கறி வியாபாரம் கொடிக்கட்டி பறந்தது? ரொம்ப குசும்புதான், ஹமீது காக்கா,
கண் குளிர வண்ண படங்களும் வார்த்தை ஜாலத்துடன் வர்ணனையும் சிங்கப்பூரு சூப்பரு!
சிங்கப்பூர் மற்றும் சண்டோசாவில் சந்தோசமான கிளிக் ! 2 வது படம் செம கலக்கல் !
அமெரிக்க பயணமாகும் வேளையில் சிங்கை வழியாகச் சென்றேன்; அரை நாள் மட்டும் அனுமதி பெற்றுச் சிங்கையில் சில மணி நேரம் என் கண்கள் குளிரக் கண்ட தூய்மை இன்னும் என் நினைவை விட்டு அகலாமல் இருக்கும்; இன்று இப்படங்களைக் காணும் பொழுது எப்பொழுது மீண்டும் சிங்கையின் சிங்காரப் பேரழகைக் காண்போம் என்ற ஆவலைத் தூண்டிவிட்டன.
அஸ்ஸலாமு அலைக்கும். அழகான படங்கள். குறிப்பாக அந்த விளையாட்டு மைதானம். மருமகன் எஸ். ஹமீதின் ஆசைபோல் மற்றும் தம்பி எல். எம். எஸ். எ. சொன்னதுபோல் இதுபோன்றதொரு விளையாட்டு மைதானம் நமதூரில் அமையப்பெற்றால்., முழங்கால் வலிக்கும் வரை பந்தை உதைத்து செல்லும் வீரர்களை துரத்தி கொண்டே செல்லலாம். இந்த வயதில் வேறு என்ன செய்ய? இன்ஷா அல்லாஹ் இதுபோன்று அழகுற அமையாவிட்டாலும் பெரியதொரு விளையாட்டு மைதானம் நமதூருக்கு அவசியம். முயற்சிப்போம்.
மருமகன் S ஹமீதுக்கு நன்றி.
MOHAMED THAMEEM
ஹமீத் காக்கா,, அஸ்ஸலாமு அலைக்கும்,
தற்சமையம்.. அழுக்கு புடிச்ச சிங்கார சென்னையில் இருக்கிறேன்.
உங்கள் புகைப்படங்கள் கண்ணுக்கு குளிச்சி மட்டுமல்லா... சென்னை வந்த எனக்கு இலவசமாக சிங்கப்பூர் சுற்றுலா சென்று வந்த உணர்வு... சுற்றுலாவுக்கான கைடு சார்ஜ் கேட்டுப்புடாதிய... நீங்க கேட்ட அங்கே முசெமு நெய்னா ஊரின் பழைய நினைவுகள் அடிக்கடி ஞாபகப்படுத்துவதால் அவரும் கட்டணம் கேட்க ஆரம்பித்துவிடுவார்... நமக்கு கட்டாது காக்கா...
மூன்றாம் கண் பெத்தபிள்ளைகள் கொள்ள அழகு....வாப்பாவுக்குதான் எல்லா பெருமையும்...
அஸ்ஸலாமு அலைக்கும் இன்று நான் ஊருக்கு புறப்பட்டு போவதால் என்னால் அனைவருக்கும் தனித்தனி பின்னுட்டம் இடமுடியவில்லை இன்ஷா அல்லாஹ் ஊர் போய் சேர்ந்ததும் எனது விரிவான பின்னுட்டத்தை இடுகின்றேன்
தலைத்தனையன் சொன்னது…
//மருமகன் S ஹமீதுக்கு நன்றி.//
MOHAMED THAMEEM
வலைக்கும் முஸ்ஸலாம்
மன்னிக்கவும் எனக்கு உங்களை சரிவர விளங்கவில்லை கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன்
//இன்று நான் ஊருக்கு புறப்பட்டு போவதால்//
இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை (13/07/2012) வரை ஊரில் இருப்பேன்; 14/07/2012 சனிக்கிழமை காலையில் அபுதபிக்குப் பயணமாக உள்ளேன்; முடிந்தால் என்னைத் தொடர்பு கொள்க; அலைபேசி இலக்கம்: 7200332169
அஸ்ஸலாமு அலைக்கும். எஸ்.ஹமீத், தங்கள் மாமா (கிழங்கு) ஹாஜா அலா உதீன் -னின் பால்ய நண்பன்.
MOHAMED THAMEEM
இந்த இரண்டாவது புகைப்பதில் இருக்கும் சிறுவர் விளையாட்டு மைதானம் என் வீட்டில் இருந்து கிளிக்கியதுதான். மைதானம் என்னமோ நேரில் பார்க்க சுமார்தான். ஆனால் கிளிக்கிய விதம்தான் மிக மிக அருமை.
சிங்கபூரில் இருந்து ஹாஜா ஷரிப்
Post a Comment