Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 19 15

அதிரைநிருபர் பதிப்பகம் | January 06, 2014 | , ,


லேசர் சிகிச்சை

பதினெட்டு வயது பூர்த்தியாகிய பிறகு தான் ஒருவர் இந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும், ஏனென்றால் அதற்கு பிறகு தான் நம் கண்ணின் அமைப்பு மாறாது. நீங்கள் Contact Lens உபயோகிப்பவரானால் மருத்துவரை அணுகுவதற்கு குறைந்தது ஒரு 15 நாட்கள் முன்பே அதை தவிர்க்க வேண்டும். பின் பல்வேறு சோதனைகள் செய்து நீங்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள தகுதியானவரா என்பதை மருத்துவர் முடிவு செய்வார். இதற்கு நீங்கள் குறைந்தது ஒரு ஐந்து மணி நேரம் ஒதுக்க வேண்டும். பின் மருத்துவர் உங்களுக்கு எப்படி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பதை மிக தெளிவாக விளக்குவார், கடுகளவேனும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம் மேல் `லேசிக்' செய்து கொண்டால் கண்களில் உள்ள பார்வைக் குறைவை முழுமையாக சரி செய்ய இயலும். லேசிக் செய்த பின்பு கண்ணாடி மற்றும் கன்டாக்ட் லென்ஸ் அணிய தேவையில்லை. `லேசிக்' பார்வைக் குறைபாட்டை நிரத்தரமாக சரிசெய்யும். தற்போது லேசிக் சிகிச்சை முறையில் மேலும் ஒரு வளர்ச்சியாக இன்ட்ரா லேசிக் (intra lasik) முறை உள்ளது. 


இதில் அனைத்து சிகிச்சைகளையும் மிக நுண்ணிய லேசர் கதிர்கள் மூலமாக செய்யப் படுகிறது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைக்கு உள்படுகிறவர்கள் ராணுவம் மற்றும் விமான போக்குவரத்திலும் பணிபுரியலாம். இந்தியாவிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், கஜலட்சுமி தியேட்டர் அருகில் உள்ள லோட்டஸ் கண் மருத்துவமனையில், கண் பார்வை குறைபாடு, "பவர்' வித்தியாசங்கள் உள்ளிட்ட பிரச்னைக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. கண்ணாடி மற்றும் காண்டாக்ட் அணிபவர்கள், துல்லிய பார்வை பெறும் வகையில் "லாசிக்', "எபிலாசிக்' "சையாப்டிக்ஸ்', "எபிசையாப்டிக்ஸ்' சிகிச்சை லோட்டஸ் கண் மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. லேசிக் சிகிச்சை மூலம் கருவிழியில் லேசர் செலுத்தி கண்ணில் உள்ள குறைபாட்டை சரி செய்து கொள்ளலாம். 

லோட்டஸ் கண் மருத்துவமனை சேர்மன் சுந்தரமூர்த்தி கூறியதாவது:கண் பவர் குறைபாடுகளான கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் "சிலிண்டிரிக்கல் பவர்' குறைபாடு உள்ளவர்கள், கண்ணாடியில் இருந்து விடுதலை பெறவும், தெளிவாக பார்க்கவும் "லாசிக்', "எபிலாசிக்', "எபிசையாப்டிக்ஸ்', "இன்ட்ராலேஸ்' உள்ளிட்ட அதிநவீன லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு லாசிக், எபிலாசிக் சிகிச்சை அளித்துள்ளோம். "வேவ் லைட் டெக்னாலஜி' என்ற ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான லாசிக் மெஷின் திருப்பூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக தரம்வாய்ந்த, உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய கண் சிகிச்சை, திருப்பூரில் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 0421 - 4346 060, 4346 161, 77081 - 11036, 77081 - 11018 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

மேலும் இதில் பல வகைகள் உண்டு, பொதுவாக Lasik சிகிச்சை தான் பல மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகிறது, இதற்க்கு காரணம் அதற்கு ஆகும் செலவு தான் (சற்று அதிகம் தான்). இந்த சிகிச்சை மேற்கொள்ள நான் விசாரித்ததில் Agarwal 40,000/- Sankara Nethralaya 35,000/- Reya Laser Vision Centre 38,000/- மற்றும் Lasik Laser Associates 30,000/- இப்படியாக உள்ளது. இந்த நேரத்தில் நான் ஒன்றை குறிப்பிட வேண்டும், பாதுகாப்பு துறையில் இந்த முறை சிகிச்சை செய்துகொள்பவர்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால் இப்பொழுது புதிதாக வந்துள்ள Intralasik முறையில் (Microkeratome என்ற நுண்ணிய கத்தி உபயோகப்படுத்தாத முறை) நீங்கள் சிகிச்சை செய்து கொண்டால் முதன் முறையாக அமெரிக்க ராணுவம் அனுமதி அளித்துள்ளது

லேசிக் லேசர் சிகிச்சை குறித்து  கொஞ்சம் பார்ப்போம்

லேசிக் லேசர் என்பது ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். எப்படின்னா ஹை பவர் கண்ணாடி போடறவங்களுக்கு காலையில் எழுந்ததும் கண்ணாடி போடவில்லையென்றால் பார்வை தெரியாது. அவங்களுக்கு லேசிக் லேசர் சிகிச்சை ங்கிறது வரப்பிரசாதம். லேசிக் லேசர்ங்கிறது என்னன்னா கண்ணாடியும் போட வேண்டிய அவசியம் இல்லை. காண்டாக்ட்  லென்சும் போட வேண்டிய அவசியம் இல்லை.

கண்ணாடி போடறவங்க முகம் அழகாகத் தெரியணும் என்பதற்காக காண்டாக்ட் லென்சுக்குப் போறாங்க. காண்டாக்ட் லென்ஸில் சில பாதுக்காப்பா வெச்சுக்கணும் என்பதற்காகவும், காண்டாக்ட் லென்ஸ் வைத்து முகம் அலம்பக் கூடாது, தூங்கக்கூடாது இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் அவங்களுக்கு இந்த சிகிச்சை மிகவும் நல்லது.

இது லேசிக் லேசரால் செய்யப்படும் அறுவை சிகிச்சை. கண் கருவிழியின் வடிவமைப்பை மாற்றி சீரமைப்பது. இது சின்ன ப்ரொசீஜர் தான். கண்டிப்பா 18 வயது தாண்டியவர்களுக்குதான் செய்யணும்.

கண்ணின் கரு அமைப்பு, கார்னியாவின் ஷேப் சரியா இருக்கணும். விழித்திரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கணும். இப்படி இது எல்லாம் இருந்தால் கண்டிப்பாக லேசிக் லேசர் சிகிச்சை செய்யலாம். 

இந்த சிகிச்சை செய்ய, ஒரு கண்ணுக்கு இரண்டு அல்லது நான்கு நிமிடம் தான் ஆகும். ஒரு வாரம் கண்ணில் தண்ணீர் தூசு படாமல் இருந்தால் வாழ்நாள் முழுக்க பார்வை நன்றாக இருக்கும். 

Lasik சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது என்பதை விளக்க கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

 ஒரு மிக நவீன மிக சிறிய பிளேடு (Microkerotene) கொண்டு நம் கண்ணின் முன்பு உள்ள பகுதியில் (cornea)  ஒரு சிறிய பகுதியை (few microns) திறந்து (பயம் வேண்டாம்) அதை சற்று நீக்கிய பின்பு சிறிது விநாடிகள் லேசர் கற்றைகள் நம் கண்ணில் செலுத்தப்படுகிறது. பின் அந்த பகுதியை திறந்த மாதிரியே மூடி விடுகிறார்கள். அவ்வளவு தான் மேட்டர் ஓவர். ஒரு கண்ணுக்கு இதை செய்ய ஆனா நேரம் நான்கு நிமிடங்களுக்கும் சற்று குறைவு தான். வலி என்பது ஒன்றும் இல்லை. சிகிச்சை மேற்கொண்ட சற்று நிமிடங்களிலே பார்வையில் நன்றாக வித்தியாசம் உள்ளது.

அன்று ஒரு நாள் மட்டும் கண்னை திறக்காமல் மூடி இருப்பது நல்லது. சிலருக்கு கண் எரிச்சல், நீர் வடிதல் போன்ற தொல்லைகள் அன்று ஒரு நாள் மாட்டும் ஏற்பட வாய்ப்பு உண்டு ஆனால் எனக்கு ஒன்றும் தொந்தரவு இல்லை. மருநாள் முதல் பலுவற்ற வேலைகள் செய்யலாம். சொட்டு மருந்து விட வேண்டும். இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் வெயிலில் செல்லும்பொழுது கருப்பு கண்ணாடி அணிவது நல்லது, அது கூட பரவாயில்லை ஆனால் மொத்தம் இரண்டு வாரங்களுக்கு இரவில் என்னால் வாகனம் ஓட்டிசெல்ல முடியவில்லை அவ்வளவு Glare. ஆனால் படிப்படியாக நல்ல முன்னேற்றம் இன்று ஒரு பிரச்னையும் இல்லை. கணினி உபயோகம் மற்றும் சற்று சிரமமாக உள்ளது, தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் உபயோகப்படுத்த இயலவில்லை.

முடிவாக நான் சொல்லுவது என்னவென்றால் வருடம் ஒரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று பிறகு கண்ணாடி மாத்தி, இந்த வேலையெல்லாம் செய்து சிறிது சிறிதாக செலவு செய்வதைவிட மொத்தமாக ஒரே முறை இந்த சிகிச்சை மேற்கொண்டு நிம்மதியாக இருங்கள்.  நான் சென்ற இந்த நாலு இடத்திலும் நான் பார்த்த வரையில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது ஐந்து சிகிச்சை செய்கின்றனர் தினமும். எந்த ஒரு வலியும் இல்லாம நோகாத நொங்கு உரிக்கிற வேல.

இந்த சிகிச்சை முறைக்கு இன்ஸ்யூரன்ஸ் கட்டுப்படுமா என்றால் கட்டுப்படாது

கண்டிப்பாக. கடந்த எட்டு வருடங்களாக இன்ஸ்யூரன்ஸ் பெரிய அளவில் மருத்துவ துறையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுக்கு முன்னால் நடுத்தர மக்களுக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் மக்களுக்கும் பெரிய சிறந்த அறுவை சிகிச்சை கிடைப்பது பொருளாதார பிரச்சினையால் சிரமமாக இருந்து வந்தது. அவங்களுக்கு அரசு மூலமாக இந்த இன்ஸ்யூரன்ஸ் நல்ல பலனைக்கொடுக்கிறது. தலை முதல் கால் வரை பல நோய்களின் சிகிச்சைக்கு நல்ல மருத்துவங்கள் கிடைக்கின்றன. அரசு இன்ஸ்யூரன்ஸ்,  பல தனியார் இன்ஸ்யூரன்ஸ் பல ஸ்கீம்கள் வைத்திருக்கிறாங்க. இதனால் மக்கள் சிறந்த பலனை அடையலாம்.

மற்ற கேடராக்ட், ரெடினா, கிளக்கோமா போன்றவை கண் பார்வை குறைபாடுகளுக்கான சிகிச்சை என்பதால் இதில் வரும். ஆனால், கண்ணாடி போட்டாலும் பார்வை தெரியும் காண்டாக்ட் லென்ஸ் போட்டாலும் பார்வை தெரியும் எனும்போது லேசிக் லேசர் சிகிச்சை தன்னுடைய வசதிக்காக செய்யப்படுவதால் அதற்கு இன்ஸ்யூரன்ஸ் கிடையாது. பிற்காலத்தில் வரலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது.

பள்ளி பாட சாலைகளில் குழந்தைகள் கண்களை தேய்ச்சுகிட்டிருப்பாங்க. போர்டை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பின்னாடி வரிசையில் இருந்தால் கண் தெரியவில்லை என்பார்கள். ஆசிரியர்கள் இதை பெற்றோரிடம் சொல்லவேண்டும்.

கண் பார்வையை எப்படி காப்பாத்தணும், கண்ணுக்கு வரும் வியாதிகள் என்னென்ன என்றும் முக்கிய உடல் ரீதியான பிரச்சனைகள் என்னென்ன என்றும் கண்டிப்பாக  சொல்லித்தர வேண்டும். அதற்கென்றே ஒரு பீரிடு ஒதுக்கி அதற்கென்று உதவும் பல பொதுநல தொண்டு நிறுவனங்களை அனுகி பிரத்தியோக நபர்களை கொண்டு மாணவ மாணவிகளுக்கு சொல்லித்தரவேண்டும்.

லேசர் கண் அறுவை சிகிச்சை

கண்ணு நல்லாருக்கும். ஒரு பிரச்சனையும் வராது அதீதமான வெளிச்சம் வந்தால் கண் மிகவும் கூசும்னு சொல்லுவார்கள் அல்லவா அதீதம்னா என்னன்னு கேட்டீங்கன்னா - இராத்திரி கார் ஓட்டுணம்னா - ஹை வேல - இருட்டுல - எதிர் கார்களோட ஹை-பீம் லைட் அதீதமா இருக்கும். ரொம்ப நேரம் ஓட்ட முடியாது - கண்ணுக்குள்ள அடிச்சிட்டு போற மாதிரி இருக்கும். நல்ல பழக்கம் உள்ள ட்ரைவர்கள் எதிர்ல கார் வந்தா ஹை-பீம் கம்மி பண்ணுவாங்க ஒவ்வொரு முறையும். இது ( ஹை வேல - இருட்டுல - ஹை-பீம் ) அறுவை சிகிச்சை செய்யாதவங்களுக்குமே கஷ்டமாதான் இருக்கும். இப்படி இரவில் ட்ரைவிங் செய்யக்கூடியவர்களுக்கு  இந்த சிகிச்சை மிகவும் அவசியமாகும்

நான் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆராய்ச்சி பண்ணுனேன் இதைப் பத்தி. ஆராய்ச்சின்னா சும்மா இன்டெர்னெட்ல நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிச்சுப் பாத்தேன் - மருத்துவர்கள் என்ன சொல்றாங்க - சிகிச்சை பெற்றவங்க என்ன சொல்றாங்க - எல்லாமே. என்னன்ன கெட்ட விளைவுகள் வரலாம்னு ஒரு லிஸ்டு போட்டு பாத்தேன். கார்னியா போனா, புது கார்னியா போடலாம்னு தெரிஞ்சுக்கிட்டேன்! அதுக்கு எவ்வளவு பணம் ஆகும், எப்படி தானம் பண்றாங்க, எந்த மாதிரி மருத்துவமனைகள்ல பண்றாங்க எல்லாம் தெரிஞ்சிக்கிட்டேன். 

பஸ்ல ட்ரைன்ல போகும் போதெல்லாம் குருடர்களை கவனித்துப் பார்த்தேன். டி.சி. ட்ரைன்ல ஒரு முறை பார்த்த குருட்டுத் தம்பதியரின் அன்பு பரிமாறல்கள் இன்னும் மனசில இருக்கு. சின்னப் புள்ளையில இருமினாலே வாழ்வே மாயம் வியாதி, வயிறு வலிச்சா கேன்சர்னு கனவு காணுற மாதிரியான அல்பத்தனம்தான். இப்ப நினைச்சா பயங்கர சிரிப்பா இருக்கு.

இந்த சிகிச்சைக்கு மிகவும் முக்கியமானது - தடிமனான கார்னியா. கார்னியா தடிமும் பார்த்து, லேசர் செய்ய முடியுமா முடியாதான்னு பாக்குறதுக்கு ஒரு டெஸ்ட் இருக்கு. அதை லேசர் சிகிச்சை அளிக்க கூடிய டாக்டர்களே பார்த்து நம் கணகளுக்கு அந்த சிகிச்சை செய்யமுடியுமா முடியாதா என்று சொல்லிவிடுவார்கள்

அறுவை சிகிச்சை பத்தே நிமிடம். நாமதான் ஒத்துழைக்கணும். நம்முடைய ஒத்துழைப்புல தான் சிகிச்சையின் வெற்றி இருக்கு சிகிச்சை செய்து கொண்ட ஓரிரு நாட்களில் கண்கள் பழைபடி நன்றாக பார்க்கலாம்.

சவுண்ட் ஸ்கேப்

கண்பார்வை இல்லாதோருக்கு வேறு வகையிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அவற்றை பார்ப்போம்.

காதில் பொருத்தப்படும், விசேஷ கருவியின் மூலம், கண் பார்வையற்றோரும், காட்சிகளை காணும் வகையிலான அதிநவீன கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கண் பார்வையற்றோரும் காட்சிகளை காணும் வகையிலான கருவியை வடிவமைப்பதில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆராச்சியாளர்களும், கடந்த பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆராய்ச்சியின் பலனாக, காட்சிப் பதிவுகளை ஒளி அலைகளிலிருந்து ஒலி அலைகளாக மாற்றம் செய்து, அதற்கான மொழியின் மூலம் அதை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றி, மூளைக்கு கொண்டு செல்லும் அதிநவீன கருவியை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

இதன் மூலம், பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் கூட, காதில் பொருத்தப்படும் விசேஷ கருவியின் உதவியுடன் காட்சிகளை காண முடியும் என, ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர், அமிர் அமேதி கூறியதாவது, கண் பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்த கருவி, காட்சிகளை ஒளி அலைகளின் அதிர்வுகளை உள்வாங்கி, அதை ஒலி அலைகளாக பதிவு செய்யும் தன்மை கொண்டது.

இந்த கருவிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில், “விஷூவல் வேர்டு ஃபார்ம்” எனப்படும் காட்சிகளுக்கான, ஒளி மற்றும் ஒலியியல் மொழிகள் எழுதப்பட்டுள்ளன. எனவே, இவை உள்வாங்கிய ஒளி அலைகளை, விஷூவல் வேர்ட் ஃபார்மில் ஒலி எழுத்துகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது. மூளையில் உள்ள காட்சிப் பதிவுகளை அறியும் பகுதியில், இவை மீண்டும் ஒளி அலைகளாக மாற்றம் செய்யப்படுவதால், இந்த கருவியின் மூலம் பார்வையற்றோரும் காட்சிகளை காண முடியும்.

இந்த கருவியில் உள்ள, “சென்சரி சப்ஸ்டிடியூசன் டிவைஸ்கள்” ஒலி அலைகளின் மூலம் பதிவு செய்யப்படும் காட்சிப்பதிவுகளை, “விஷூவல் டூ ஆடியோ மற்றும் ஆடியோ டூ விஷூவல்” என்ற முறையில், காட்சியாக மாற்றம் செய்கிறது. இதற்கு “சவுன்டுஸ்கேப்” என்று பெயர். (பக்கர் வாய்ஸ் சவுண்ட் சர்வீசை உள் அடக்கியது  அல்ல)  இந்த கருவியை பார்வையற்றோரிடம் பரிசோதனை செய்ததில், நல்ல பலன் கிடைத்துள்ளது. அவர்களால், காட்சிகளை தெளிவாக காண முடிகிறது. இந்த கருவியில் நிறை காட்சிகளுக்கு ஒலி வடிவம் கொடுத்து அதற்கான மொழியை எழுத வேண்டியுள்ளது.

முதற்கட்ட ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளார்கள் இதற்கான முழு பணிகளும் முடிந்த பின், இந்த கருவியை வெற்றிகரமாக வெளியிடுவார்கள். இதன் மூலம், பார்வையற்றோரின் நீண்டநாள் கனவு நிறைவேறும். அவர்களும் காட்சிகளை கண்டு மகிழ முடியும். பிறகென்ன ரயில் பயணத்தின்போது இனிய குரல்களில் பாடல்களை கேட்க முடியாது. நமதூரில் ஆட்டோவில் விளம்பரம் செய்பவரின் (பெயர் தெரியவில்லை) வர்ணனைகள் கூடுவதோடு அல்லாமல் வார்த்தை ப்ரயோகம் மிக அற்புதமாக அமையும். இப்பொழுது கண்பார்வை இல்லாமலே இந்த போடு போடுகிறார். அப்புறம் சொல்லாவா வேண்டும்.

இதை அடுத்து "குளுக்கோமா (Glucoma)" என்னும் கண்களை குருடாக்கும் கண் பிரஸர் நோய் பற்றி இதை தொடர்ந்து  அடுத்து வர இருக்கும் அத்தியாயத்தில் பார்போம். 
தொடரும்
அதிரை மன்சூர்

15 Responses So Far:

Yasir said...

மாஷா அல்லாஹ்...ஒவ்வொரு மனிதனும் தன் கண்ணை பற்றி அறிந்து கொள்ளக்கூடிய தகவல்கள்....லேசிக்-கை பற்றிய முழுமையான தகவல்கள்....ரொம்ப நன்றி காக்கா

Yasir said...

பை த வே..மன்சூர் காக்கா உங்களை இப்ப ஃப்ரோபைல் போட்ட பார்த்த பிறகுதான் எனக்கு நன்றாக தெரிந்தது..நாம் நிறைய தடவை சந்தித்து இருக்கின்றோம்...இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் ஒரு நாள் சந்திப்போம் ஊரில்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல அனுபவப்பூர்வமான விளக்கங்களுக்கு நன்றி மன்சூராக்கா.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கண்களை பாதுகாப்பது , சிகிச்சை செய்வது பற்றிய விரிவான விளக்கமான தொடர். வாழ்த்துக்கள் சகோதரரே!

Ebrahim Ansari said...

ஐந்து ஆறு வருடம் கண் மருத்துவத்துக்காக பட்டப்படிப்பு படிக்கும் ஒரு கண் மருத்துவருக்குக் கூட இவ்வளவு விபரங்கள் தெரியுமா என்று எனக்கு சந்தேகம்.

அப்படியே புட்டுப் புட்டு வைக்கும் தம்பி மன்சூருக்கு அனைவரின் கை தட்டுக்களுடன் கூடிய அன்பான பாராட்டுக்கள்.

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…
//ஐந்து ஆறு வருடம் கண் மருத்துவத்துக்காக பட்டப்படிப்பு படிக்கும் ஒரு கண் மருத்துவருக்குக் கூட இவ்வளவு விபரங்கள் தெரியுமா என்று எனக்கு சந்தேகம்.//நான் சொல்ல இருந்ததை முன்கூட்டியோ நீங்கள் சொல்லிவிட்டீர்கள் மாமா

Shameed said...

ஆட்டு தலையின் பிடரிக்கு மேர்ப்புரம் இருக்கும் அந்த இரு கண்களை உண்டு சுவைத்த நமக்கு நம் கண்களை பற்றி அறிய தகவல்களை சுவைப்பட எழுதும் மன்சூர் காக்கா அவர்களுக்கு நன்றி

ZAKIR HUSSAIN said...

லேசர் சிகிச்சைக்காண வழிமுறைகள். [ கான்டாக்ட் லென்ஸ் போடாமல் இருப்பது ] கார்னியா தடிமனாக இருக்க வேண்டும் எனும் விதி ...இவைகளை விளக்கிய விதம் சூப்பர். சமீபத்தில் எனக்கு தெரிந்தவரை இந்த சிகிச்சைக்காக அழைத்துசென்றேன். இதில் கூறப்பட்ட அத்தனையும் நான் பார்த்தேன்.

sabeer.abushahruk said...

கண்கள் இரண்டும் தொடர்மூலம் அதிரை நிருபரை ஆப்தால்மால்ஜி இன்ஸ்டிடியூட்டாக மாற்றிவிட்டாக மன்சூர்.

ஆரம்பத்தை வாசித்தபோது இது கண்கள் மற்றும் பார்வை சம்மந்தமான சமூகவியல் தொடர் என்றுதான் நினைத்தேன். ஆனால், இது ஒரு முழுமையான மருத்துவத் தொடராகவல்லவா பரிணமித்துள்ளது!

குட் ஒர்க்!

sheikdawoodmohamedfarook said...

கண்கள் பற்றிய தொடரும் இதர கட்டுரைகளும் படிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.காரணம் என் கண்ணைப்பற்றிய நோய்.

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்

என்னை வாழ்த்தி என்னுடைய உழைப்புக்கு நேச கரம் நீட்டிய தம்பி யாசர் அவர்களுக்கும், எம் ஏ ஹெஜ் ஜாபர் சாதிக்கிற்கும், சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கும், இந்த தொடருக்கு நல்ல சர்ட்டிபிக்கேட் கொடுத்து என்னை மகிழ்வித்த இப்ராஹீம் அன்சாரி காக்கா மற்றும் அருமை நன்பர் சபீர் அவர்களுக்கும், நன்பர்கள் ஹமீத், ஜாஹிர் ஹுசைன் ஆகியோருக்கும்

இந்த கண்கள் இரண்டின் முந்தைய தொடர்களை படிக்க முடியாமல் மனம் வருந்திய சகோதரர் ஷேக் தாவூத் ஷேக் முஹம்மது பாரூக் அவர்களுக்கும் நன்றி

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.அருமையான தொடர் கண்னைப்பற்றி இப்படி ஒரு பார்வை நான் உங்கள்ளிடமிருந்து எதிர் பார்க்கவில்லை!ஆனாலும் இந்த பார்வையில் கண்னைப்பற்றி அலசலும், படைத்தவைனைப்பற்றி சிந்தினை ஊட்டளும் ஒரு சேர வரும் படி எழுதியது புறக்கண், அகக்கண் ஆகியவற்றை அறிய முடிந்தது மச்சான். வாழ்துக்கள்.

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

அன்சாரி கக்கா
இந்த தொடரின் இருதியில் படித்தீர்களா நீங்கள் எழுதச்சொன்ன "குளுக்கோமா" என்னும் கண்களை குருடாக்கும் கண் பிரஸர் நோய் பற்றி அடுத்த தொடரில் வருகின்றது

adiraimansoor said...

க்ரவுன் மச்சான்
இரண்டும் இரண்டு கண்கள் அல்லவா அதுதான் "கண்கள் இரண்டும்" என்ற தலைப்பே உங்களுடன் பேசுகின்றது

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு