Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 22 22

அதிரைநிருபர் பதிப்பகம் | January 27, 2014 | , ,


கருவளையம்: 

கருவளையங்களுக்கான காரணங்கள் பல. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரியாக்கலாம்.  சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகக் குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்பியூட்டர், டி.வி. முன் அதிக நேரம் இருப்பது போன்றவைகளாகும். 

“கண்களின் வார்த்தைகள் புரியாதா” என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். 

பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள்.     கருவளையம் வராமல் தடுக்க, தூங்கும் போது எந்த விதமான மன உளைச்சல்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  உறங்கும் முன் சூடான பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும். மனதையும், உடலையும் டென்ஷன் ஆக வைத்துக் கொள்ளாமல் ரிலாக்சாக இபேருப்பதும், நல்ல தூக்கத்திற்கு வழி செய்யும்.

பகல் நேரத்தில் உள்ளங்கைகளைக் குவித்து கண்களின் மேல் வைத்து மூடியபடி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறப்பது போலச் செய்வது, அதற்கு ஒருவித மசாஜ் மாதிரி அமையும்.  கண்களை இறுக மூடவும். பிறகு அகலமாகத் திறக்கவும். இதே போல 5 முறைகள் செய்யவும். புருவங்களைக் குறுக்காமல், கண் இமைகள் மட்டும் மூடி, மூடித் திறக்க வேண்டும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக்கட்டும். 

இந்தப் பயிற்சி கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கான அற்புதப் பயிற்சி. கருவளையங்களைப் போக்க இதைத் தொடர்ந்து செய்து வரலாம்.  கருவளையம் ரொம்பவும் அதிகமிருந்தால் பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற ஐ மசாஜ் பலனளிக்கும்.

கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். 

பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.

பேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும்.         

கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.

வெள்ளரிகாய், உருளைகிழக்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக கட் செய்து கண்களுக்கு மேல் வைக்கவும், இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். 

வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை போக்கும்.  

கண்களை அழகாக வைத்திருக்க பால், பால்பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உண்பதோடு போதிய அளவு தண்ணீர் குடிக்கவேண்டியதும் மிக முக்கியம்.

கருவளையங்களை தவிர்க்கும் வழி:

கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்க தினமும் உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவும். படுக்கும் முன் தினமும் வைட்டமின்ணி எண்ணெயை கண்ணைச் சுற்றி மசாஜ் செய்யவும். மலச்சிக்கலைத் தவிர்க்கவும். கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்ட பின் கழுவவும். பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.

கண்ணின் கீழ் ஏற்படும் கருவளையங்களுக்கு, ரெட்டீன் - A (Retin - A) எனப்படும் ரெட்டினாயிக் அமிலம் கொண்ட புதிய மருந்து நல்ல பலன் தருகிறது. இது சூரிய ஒளியால் உண்டாகும் பாதிப்பை நீக்கி, சருமத்தின் மேற்புறமுள்ள பகுதிகளுக்கு இரத்தவோட்டத்தையும் அதிகரிக்கின்றது. 

தினசரி இரவு தூங்கச் செல்லும் முன் கண்களுக்கு கீழ்புறம் சிறிதளவு ரெட்டீன் -ஏ க்ரீம் தடவி வந்தால் போதும். க்ரீமின் அளவு அதிகமானால் முகத்தில் வீக்கத்தினையும், வறட்சியையும் ஏற்படுத்தக்கூடிய பண்பு இதற்கு உள்ளது. 

கூடிய வரைக்கும் வெயிலில் செல்லும் போது சருமத்தைப் பாதுகாக்கக் கூடிய (Sunscreen Ointment) க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும். ரெட்டீன் -ஏ ஒரு சில மாதங்கள் சென்ற பின்னரே நல்ல பலனளிக்கிறது.

வேதிச் சிகிச்சை: 

வயதாக ஆக, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெல்லிய கோடுகள் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களின் மேற்புறங்களில் ரெட்டினாயிக் அமிலக் கரைசலைத் தடவி வர கண்களைச் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் காய்ந்து புண்கள் உரிவதைப் போன்று உதிர்ந்து விடுகின்றன. அப்பகுதியை நன்று ஆறியவுடன் பார்த்தால் மென்மையாகவும், வெண்மையாகவும் இருக்கும்.

கொலாஜென் சிகிச்சை (Collagen Treatment): 

சருமத்தை வழு வழுவென்று வைக்கக் கூடிய பண்பு கொலாஜென்னிற்கு உண்டு. இயற்கையில் கிடைக்கக் கூடிய இப்புரதமானது எல்லா உடல் திசுக்களிலும் காணப்படுகிறது. இச் சிகிச்சையில் கொலாஜென் ஊசி மூலமாக சுருக்கங்கள் தோன்றியுள்ள பகுதிகளில் செலுத்தப்பட்டு குழிவு ஏற்பட்டுள்ள இடங்களில் வைத்து நிரப்பப்படுகிறது. இச்சிகிச்சைக்கான செலவு சிறிது அதிகமானாலும், அடிக்கடி தேவைப்படுவதில்லை. குறுகிய கால சிகிச்சையே நல்ல பலனைத் தருகிறது.

இதை தொடர்ந்து அடுத்து பெறும்பாலான் மக்களின் குழப்பத்தை தீப்பதற்காக கண்தானம் பற்றி அடுத்த தொடரில் பார்போம். இது முக்கியமான சப்ஜக்ட் யாரும் படிக்க தவறவிடாதீர்கள்.
தொடரும்...
அதிரை மன்சூர்

22 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//கண்களை வேகமாக மூடித்திறப்பது// நீங்க சொல்றியலேன்னு தெரியா தனமா அழகிய இளம் பெண்கள் முன் அப்படி செஞ்சு மாட்டிகிட்டா தப்பிக்கிற வழியும் சொன்னா தேவலை!. குறிப்பு: பாதகமான 'மாட்டு' தலுக்கே உங்க உதவி தேவை. சாதகமான ''மாட்டுதலை'' அவங்க அவங்க பாத்துக்குவாங்க. நீங்க கண்டுங்காணாமே ஒதுங்கிக்குங்க!

sheikdawoodmohamedfarook said...

அன்புள்ள தம்பி அதிரை மன்ஸூர்! அஸ்ஸலாமு அலைக்கும்.மேலேஉள்ள என் கமன்ட் வெறும் ஜோக்குகாக போட்டது.தவறாக நினைக்க வேண்டாம்.'கண்கள் இரண்டும்' பற்றிய உங்களின் கட்டுரையில்கூறும் விஷயங்கள் யாவையும் ஒரு முதிர்ச்சி பெற்ற கண் டாக்டர் கூட தன்னிடம் சிகிச்சை பெறவரும் ஒரு நோயாளிக்கு நீங்கள் சொல்வதுபோல் தெளிவாக சொல்வதில்லை.இது ஒரு கட்டுரையல்ல! மனிதாபிமானதொண்டு. அல்லாஹ் இந்த தொண்டுக்குரிய பலனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அளிக்க அவனை பிரார்த்திக்கிறேன்.ஆமீன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பயனுள்ள அழகுக் குறிப்புகள்.

Ebrahim Ansari said...

கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்க சில களிம்புகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை தரும் விதத்திலும் அவற்றுக்கு பதிலாக இயற்கை ப் பொருட்களான வெள்ளரிக்காய், தக்காளி, பால், மஞ்சள், முட்டை வெள்ளை சாமந்திப் பூ என்றும் அவற்றை பயன்படுத்தும் விதங்களையும் விளக்கி அழகாக அறிவுரைகள் வழங்கி இருப்பது இந்தத்தொடரின் ஆரோக்கிய குறிக்கோளை உச்சத்துக்கு எடுத்துச் செல்கிறது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

உண்மையை சொல்லப் போனால், இந்தத் தொடர் தொடங்கப் படும்போது இவ்வளவு சிறப்பாக பயன்படும் விதத்தில் அமையுமென்று நினைக்கவில்லை. EXCELLENT.

Shameed said...

//இதை தொடர்ந்து அடுத்து பெறும்பாலான் மக்களின் குழப்பத்தை தீப்பதற்காக கண்தானம் பற்றி அடுத்த தொடரில் பார்போம். இது முக்கியமான சப்ஜக்ட் யாரும் படிக்க தவறவிடாதீர்கள்.//


கண் தானம் பற்றி அண்ணன் pj என்ன சொல்றார் மௌலானா ஷம்சுதீன் காசி என்ன சொல்றாருன்னு கொஞ்சம் விபரமா சொல்லிடுங்கோ ஏன்னா ரெண்டுபேரும் கொலப்புற கொலப்புலே என்னை போன்ற சாமானியர்கள் ரொம்பவே கொலம்பி போய் கிடக்கின்றோம்

sabeer.abushahruk said...

அருமையான, முழுமையான, தெளிவான குறிப்புகளும் ஆலோசனைகளும். கொஞ்சம் முயற்சி செய்தால் கண் டாக்டர் ஆகியிருப்பீர்கள்.

மிக்க நன்றி.

தொடர வாழ்த்துகள்.

ஒரு அத்தியாயம்கூட வாசித்து வருபவன் என்கிற முறையில் சொல்கிறேன். "எதிர்பார்த்ததைவிட சிறப்பாக எழுதுகிறீர்கள். "

adiraimansoor said...

அன்பு சகோதரர் ஷைக் தாவூத் முஹம்மது பாரூக்

அஸ்ஸலாமு அலைக்கும்

முதலாவதாக
இத்தனை காலமாக நீங்கள் எனக்கு தம்பியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்
இந்த வார பதிவின் பின்னூட்டத்தில் என்னை தம்பி என்று எழுதி இருந்ததை வைத்து உங்கள் வயதை என்னால் கணிக்க முடிய வில்லை
நீங்கள் யார் என்றும் எனக்கு தெரியவில்லை
ஒரு வேலை என்னை பற்றி அறிந்துதான் தம்பி என்று எழுதுகின்றீர்கள் என நினக்கின்றேன்
தயவு செய்து உங்களை பற்றிய சிறிய அறிமுகம் எனக்கு தந்தால் நன்றாக இருக்கும்

sabeer.abushahruk said...

மன்சூர்,

அது ஃபாரூக் மாமா. நம்ம ஹமீதின் வாப்பா.

நாங்கதான் உங்களுக்குத் தம்பி.

adiraimansoor said...

///'கண்கள் இரண்டும்' பற்றிய உங்களின் கட்டுரையில்கூறும் விஷயங்கள் யாவையும் ஒரு முதிர்ச்சி பெற்ற கண் டாக்டர் கூட தன்னிடம் சிகிச்சை பெறவரும் ஒரு நோயாளிக்கு நீங்கள் சொல்வதுபோல் தெளிவாக சொல்வதில்லை.இது ஒரு கட்டுரையல்ல! மனிதாபிமானதொண்டு. அல்லாஹ் இந்த தொண்டுக்குரிய பலனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அளிக்க அவனை பிரார்த்திக்கிறேன்.ஆமீன்////

சகோதரர் ஷைக் தாவூத் முஹம்மது பாரூக் அவர்களே உங்களின் இந்த துஆவிலேயே நான் உழைத்த உழைப்புக்கு மட்டு மல்ல இந்த பதிவின் பயனையும் இன்ஷா அல்லாஹ் நான் பெறுவேன்

உங்களின் கருத்துப்படி இதில் நான் நினைத்ததைவிட கண்களைப் பற்றி மிக அதிகமான தகவல்கள் தந்துள்ளேன் என்பதை உங்களைப் போன்ற அன்பு சகோதரர்களின் பின்னூட்டத்தின் வாயிலாக அறிந்து பெருமிதம் அடையவில்லை மாறாக இந்த தகவல்கள் நிறையபேருக்கு பலன் அளிக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கின்றேன் இந்த பதிவிற்கு நல்ல மதிப்புரை அளித்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
ஜஸாகல்லாஹ் கைர்

adiraimansoor said...

///'கண்கள் இரண்டும்' பற்றிய உங்களின் கட்டுரையில்கூறும் விஷயங்கள் யாவையும் ஒரு முதிர்ச்சி பெற்ற கண் டாக்டர் கூட தன்னிடம் சிகிச்சை பெறவரும் ஒரு நோயாளிக்கு நீங்கள் சொல்வதுபோல் தெளிவாக சொல்வதில்லை.இது ஒரு கட்டுரையல்ல! மனிதாபிமானதொண்டு. அல்லாஹ் இந்த தொண்டுக்குரிய பலனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அளிக்க அவனை பிரார்த்திக்கிறேன்.ஆமீன்////

சகோதரர் ஷைக் தாவூத் முஹம்மது பாரூக் அவர்களே உங்களின் இந்த துஆவிலேயே நான் உழைத்த உழைப்புக்கு மட்டு மல்ல இந்த பதிவின் பயனையும் இன்ஷா அல்லாஹ் நான் பெறுவேன்

உங்களின் கருத்துப்படி இதில் நான் நினைத்ததைவிட கண்களைப் பற்றி மிக அதிகமான தகவல்கள் தந்துள்ளேன் என்பதை உங்களைப் போன்ற அன்பு சகோதரர்களின் பின்னூட்டத்தின் வாயிலாக அறிந்து பெருமிதம் அடையவில்லை மாறாக இந்த தகவல்கள் நிறையபேருக்கு பலன் அளிக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கின்றேன் இந்த பதிவிற்கு நல்ல மதிப்புரை அளித்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
ஜஸாகல்லாஹ் கைர்

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

இப்ராஹீம் அன்சாரி காக்காவின் பாராட்டுக்களுக்கு
நன்றி
நான் இந்த தொடரை ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பித்தேன் அதன் பயன் ஒரு மருத்து வமேதையின் புறத்திலிருந்து எழுந்த தகவல்கள் போல் அளவில்லா அல்லாஹ்வின் கருணையினால்
ஓரளவு என்னால் முடிந்தவரை தந்துள்ளேன் இன்ஷா அல்லாஹ் இன்னும் வளரும் அது எதுவரை என்று எனக்கு
தெரியாது எல்லாம் உங்களின் தூண்டுதல்களே இத்தனை தொடரை தாண்டி இருக்கின்றேன்.

கண்ணில் இவ்வளவு விஷயம் இருக்கா என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு என் பதிவு அமைந்தது எனக்கு முதல் வெற்றி அல்ஹம்துலில்லாஹ்

adiraimansoor said...

ஹமீது அவர்களே பிஜேயின் கண்ணோட்டத்தில் கண்தானம் பற்றி கருத்தும் இன்ஷா அல்லாஹ் பின்னால் இடம்பெறும் சம்சுதீன் காஸ்மியின் கண்தானம் நிலைபாடு பற்றி எனக்கு இதுவரை அறிய கிடைக்கவில்லை

sabeer.abushahruk said...

//ஒரு அத்தியாயம்கூட வாசித்து வருபவன் //

"ஒரு அத்தியாயம்கூட விடாமல் வாசித்து வருபவன்" என்று இருக்க வேண்டும்.

விடாமல் என்னும் வார்த்தை விடுபட்டுப் போயிற்று.

Ebrahim Ansari said...

கண்தானம் பற்றி மார்க்கம் சொல்வதை எழுதுங்கள்.

அவர் இவர் சொல்வதை எல்லாம் எழுதி உங்களின் சக்தியை விரயம் செய்ய வேண்டாம்.

காரணம் நீங்கள் கண் என்றால் அது கண் அல்ல புண் என்று சொல்வார்கள்.

நீங்கள் புண் என்றால் அல்ல அது பன் என்பார்கள். மீறிப் பேசினால் வசைமொழிகள் வரும். வாசலுக்கும் ஆள் வரும்.

ஒவ்வொருவர் கருத்திலும் உண்மையைவிட உள்நோக்கமே பெரிதாக இருக்கிறது. நான் என்கிற அகந்தை இப்போது அதிகம் இருப்பது மார்க்க அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்களிடம்தான். இவர்களை மீண்டும் மதரசாவுக்கு அனுப்பி ஓதவைத்தால் நலமென்று தோன்றுகிறது.

ஏன் இந்த வம்பு? நீங்கள் அறிவியலை- மார்க்கத்தை- நீங்கள் அறிந்ததை எழுதுங்கள்.

adiraimansoor said...

////கண்தானம் பற்றி மார்க்கம் சொல்வதை எழுதுங்கள்.

அவர் இவர் சொல்வதை எல்லாம் எழுதி உங்களின் சக்தியை விரயம் செய்ய வேண்டாம்.

காரணம் நீங்கள் கண் என்றால் அது கண் அல்ல புண் என்று சொல்வார்கள்.

நீங்கள் புண் என்றால் அல்ல அது பன் என்பார்கள். மீறிப் பேசினால் வசைமொழிகள் வரும். வாசலுக்கும் ஆள் வரும்.

ஒவ்வொருவர் கருத்திலும் உண்மையைவிட உள்நோக்கமே பெரிதாக இருக்கிறது. நான் என்கிற அகந்தை இப்போது அதிகம் இருப்பது மார்க்க அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்களிடம்தான். இவர்களை மீண்டும் மதரசாவுக்கு அனுப்பி ஓதவைத்தால் நலமென்று தோன்றுகிறது.

ஏன் இந்த வம்பு? நீங்கள் அறிவியலை- மார்க்கத்தை- நீங்கள் அறிந்ததை எழுதுங்கள்.////

கக்கா
சரியாக சொன்னீர்கள்
சமீபத்தில் நடக்கும் பிஜே சம்சுதீன் காஸ்மியின் போராட்டமே ஒரு எடுத்துக்காட்டாகும்
னீங்கள் சொல்வது போன்று மீண்டும் இவர்களை மதரஸாவிற்கு தலவுலேயிருந்தே அனுப்பவேண்டும்
என்றுதான் தோன்றுகின்றது மக்களுக்கு நல்வழிகாட்டுவதாக் கூறிக்கொள்ளும்
சமுதாயத் தலைவர்களின் நிலமை இப்படி மோசமாக போய்க்கொண்டிருந்தால் அவர்களை பின்பற்றுபவர்களின் நிலமை சொல்லத் தேவையில்லை

அப்துல்மாலிக் said...

கருவளையம் போக்க கொடுத்திருக்கும் செயல்முறை அனைத்தையும் செய்யனுமா? இல்லை ஏதாவது ஒன்றைமட்டும் தினமும் செய்யனுமா?

adiraimansoor said...

தம்பி மாலிக்
கருவளையத்திற்கு எல்லாவற்றையும் செய்ய வேஏன்டிய அவசியம் இல்லை கருவளையத்தைப் போக்க பல வழிகள் அவற்றில் எது செய்ய சாதகமாக இருக்கின்றதோ அதை செய்யலாம்

sheikdawoodmohamedfarook said...

அன்புத்தம்பி அதிரைமன்சூர் அஸ்ஸலாமு அலைக்கும்/// சென்ற மாதம் ஊர்வந்திருந்தபோது எங்கள் வீட்டிற்க்குவந்து என்னை சந்தித்தீர்கள். ஜென்னத்துல்பிர்தௌஸ் வாசனை திரவியம் தந்தீர்கள்.வாசனை எனக்கு பிடிக்கும். அதாவது G.K.வாசனை அல்ல.நறுமணம் கமழும் திரவப்பொருளை சொல்கிறேன். கண் பிரச்னை காரணமாக கணிணியில் அதிகம் இருக்கக்கூடாது. என் Bio data முழுதும் என் மைத்துனர் இப்ராஹிம் அன்ஸாரி எழுதுவார்.அஸ்ஸலாமு அ லைக்கும்.

sheikdawoodmohamedfarook said...

// இவர்களை மீண்டும் மாதர்சாவுக்கு அனுப்பி ஒ தவைத்தால்// வேண்டாம்! வேண்டாம்.அதையும் குட்டிசுவர் ஆக்கி விடுவார்கள்.

adiraimansoor said...

பாரூக் காக்கா
நீங்கள் எஸ்.எம்.பாரூக் என்று வந்துவிட்டு
இப்பொழுது முழுப்பெயருடன் வந்து கொண்டிருப்பது நான்வேறு ஆளாக நினத்துவிட்டேன்
சபீர் விளக்கம் கொடுத்திருந்தார்

நான் புறப்படும்போது ஒரே தெருவில் இருந்துவிட்டு உங்களை சந்திக்காமல் வந்தது இன்னும் மனசுக்கு கஷ்ட்டமாகத்தான் இருக்கின்றது
சில வாரங்களுக்கு முன்புகூட

உங்களை என் கண்கல் இரண்டும் அதிரை நிருபரில் தேடியதை பொதுவில் வைத்தேன்


இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் உங்களின் கண்பார்வை பற்றி விளக்கி இருந்தார்கள்

உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்
உங்கள் கண் பிரட்சனை நீங்கி
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீங்கள் வாழ
இறைவனிடம் துஆ செய்கின்றேன்
உங்கள் பொன்னன கருத்துக்களை அடிக்கடி நாங்கள் படிக்கவேண்டும்

nandinisree said...

பயனுள்ள தகவல்,உடல் பருமனுக்கும் கற்றாழை ஒரு எளிய தீர்வு. மேலும் படிக்க
www.manam.online/Health/2016-AUG-26/Aloevera-Benefits

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு