Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி 9

அதிரைநிருபர் | January 28, 2014 | , , ,


மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.

இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது.

கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.” என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.

இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.

- சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.

- இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி

- இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

- மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

- செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

- மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

- தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

- மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும்.

எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இம்மருத்துவ குறிப்பு ஏற்கனவே மின்னஞ்சல் மூலமாக நமக்கு கிடைத்திருந்தாலும், நல்ல பயனுல்ல தகவல் என்பதால் இங்கு அனைவரின் பார்வைக்கு தருகிறோம். இச்செய்தியை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துக்கொண்ட அஸ்கர் (மாதவலாயம்) அவர்களுக்கு மிக்க நன்றி.

தகவல்: அதிரை அஹ்மது
இது ஓர் மீள்பதிவு

9 Responses So Far:

adiraimansoor said...

காக்கா இஞ்சியின் பயணை சொல்லி மாலாது
எனக்கு செரிமானக் கோலாரு வந்தால் சிறியதுண்டு இஞ்சோடு கொஞம் சீனியும் சேர்த்து அப்படியே கடித்து மெண்டு சாப்பிடுவேன் சரியாக 15 அல்லது 20 நிமிடங்களில் அதன் ரிசல்ட் தெரியும்

adiraimansoor said...

இஞ்சியின் மகத்துவம் குறித்து கண்கள் இரண்டும் போல் பெரிய தொடரே எழுதலாம்
அதன் இன்னும் சில மருத்துவ குணங்களை கீழே பாருங்கள்
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

இஞ்சியை உணவில் சேருங்கள்:
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இஞ்சியை, தட்டி தேனீர் கொதிக்க வக்கும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து தேனீர் பருகலாம். சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது.
சில சமையல் வகைகளில் இஞ்சியை மசித்துப் போட்டு செய்வார்கள். அதுபோன்ற உணவு வகைகள் வயிற்றைக் கெடுப்பதில்லை.

adiraimansoor said...

இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.
இதன் வேறு பெயர்கள்:

இஞ்சம்,
வெந்தோன்றி,
கொத்தான்.

sheikdawoodmohamedfarook said...

இது வரையில்இஞ்சியைபற்றி நமக்கு தெரிந்தெல்லாம்'' இஞ்சி இடுப்பழஹி'' பாடலும் இறைச்சி கறிக்கு தட்டி போடுவதுமட்டுமே ! அதுக்குமேலேகொஞ்சம்போனால்குளிர்காலத்தில்சூடான இஞ்சி டி ஒரு கிளாஸ்.முன்பெல்லாம் அதாவது இங்க்லீஷ் டாக்டர்கள் நம் ஊருக்கு வருவதற்கு முன்னே கற்ப்பவதிக்கு ஏழாம் மாதம் இஞ்சியே தட்டி ஸார் பிழிந்து இரும்பு துண்டை நன்றாக நெருப்பில் காயவைத்து இஞ்சிசாற்றில் வைத்து முறித்து கொடுப்பார்கள். கத்தாழை[Aloe Vera ]வேர் சாற்றையும் அஞ்சாம் மாதம் கற்ப்பவதிக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது . அப்பொழுதெல்லாம் பத்தாம் மாதம் உரலில் உட்கார்ந்து கொடி கைற்றை பிடித்துக்கொண்டு இடுப்பு வலியால் பத்துமாதநிறை சூழி கத்தோ கத்தென்றுகத்துவாள் கதறுவாள். இன்றைக்கு அந்த கத்து போச்சு! கத்திதிவந்தது. அன்றைக்கு கத்தி ப் பிறந்ததுபிள்ளை இன்றைக்கு கத்தி போட்டுபோட்டு பிறக்கிறது!

Shameed said...

//கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.//

அதான் நம்ம ஆளுக பிரியாணியை வச்சி அடிச்சி உட்டுட்டு அதுக்கு மேலே இஞ்சி டீ யை எரக்குறாங்க!!!!

Ebrahim Ansari said...

இஞ்ச்சிருங்கோ இஞ்ச்சிருங்கோ சேதி கேட்ட சந்தோசங்கோ !

பித்தம வாதம் கபம் போக்கும் இஞ்சி முரப்பா போல கட்டுரை இனிப்பு உறைப்பு என சூப்பர்.

கடைப் பிடிப்போமே!

sheikdawoodmohamedfarook said...

எறச்சி சோத்துக்கு இஞ்சி மொரபாவும் ஏத்தமான வஸ்த்துதான்! முன்னே யெல்லாம் எங்கே பாத்தாலும் 'சி!சி' ன்டு கெடக்கும். இப்போ யாருமேஇங்கே இஞ்சி மொரபா விக்ககாணோமே! அதுஎங்கே விக்கும்?[ 'தொண்டையில்.விக்கும்'என்று சொல்லப்படாது ] கரம்சாயா இஞ்சித்தண்ணி' யெல்லாம் எங்கே போச்சு?

sheikdawoodmohamedfarook said...

//அது எங்கே விக்கும்?தொண்டையில்விக்கும் /இது நான் சொன்னதல்ல!அவ்வையாருக்கு நாகை பொடி பசங்கள் சொன்ன பதில்.கதைக்கு வருவோம்// ஒரு நாள் அவ்வையார் நாகபட்டினம் வந்த போது அவளுக்கு பசி எடுத்துவிட்டது.அப்பொழுது அங்கு பாக்கு விளையாடிய சிறு பையன்களிடம் ''சோறு எங்கே விக்கும்?''என்று கேட்டார்.சிறு பசங்கள் தானே சாதாரண பேச்சுத் தமிழ் பேசினால் போதும் என்ற எண்ணத்தில் ஔவையார் அப்படிக்கேட்டார். ''சோறு தொண்டையில்விக்கும் பாட்டி!இது உனக்கு தெரியாதா?'' பசங்கள் சொன்ன பதிலோ தமிழ் மூதாட்டியே திடுக்கிட வைத்தது . அப்பொழுது ஔவையார் ஒரு பாட்டு பாடினார். அந்தப்பாட்டு '' பாக்கு தெறித்து விளையாடும் பாலகர் தம் நாக்குத் தறித்த நன் நாகை!'' என்பதே அந்தப்பாட்டு.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இஞ்சிப் பால்..!

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்ப்பது நலம்.

(இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலிருந்து)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு