Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 20 14

அதிரைநிருபர் பதிப்பகம் | January 13, 2014 | , ,


"குளுக்கோமா (Glucoma)" என்னும் கண்களை குருடாக்கும் கண் பிரஸர் நோய்.

கண்கள் இரண்டும் என்ற இந்த தொடரின் 14வது தொடரில் இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் அவர்களின் பின்னூட்டத்தில் குளுக்கோமா பற்றி எழுதும்படி கேட்டு எழுதி இருந்தார்கள் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க இந்த பதிவை அவர்களுக்கும் அதிரைநிருபர் வாசகர்களுக்கும் தருகின்றேன். பயண் அடைந்து கொள்ளுங்கள். குளுக்கோமா நோய் என்பது கண்ணையே பறித்தெடுக்கும் நோய் என்பதை முதலில் கவணத்தில் கொள்ளவேண்டும். 

ஒவ்வொரு வருடமும் மார்ச் 12ம் தேதி சர்வதேச குளுக்கோமா தினத்தை அனுஷ்டிக்கப் படுகின்றது பெறும் உலகம் முழுவதும் சுமார் 3.9 கோடி மக்கள் பார்வைத்திறன் இன்றித் தவிக்கும் அதே நேரம் பார்வைக் குறைபாட்டோடு சுமார் 24.6. கோடி மக்கள் வாழ்கின்றார்கள்

கண்ணைப் பல விதமான நோய்கள் தாக்குகின்றன. சாதாரணமாக கண்ணைத் தாக்கும் கண்நோய் (Conjunctivitis) இலிருந்து பார்வை பறிபோகுமளவிற்குப் பயங்கரமான Optic neutitis (பார்வை நரம்பு அழற்சி) வரை பல்வேறுபட்ட பிரச்சனைகள் கண்ணிலே ஏற்படலாம்.

கண்ணில் காணப்படும் நீர்மயவுடநீர் மீண்டும் அகத்துறிஞ்சப்படாத பட்சத்தில் கண்ணின் உள்ளே அழுத்தம் அதிகரிக்கின்றது. இவ்வாறு கண்ணில் அழுத்தம் அதிகமாவதைக் ”குளுக்கோமா” என்று மருத்துவப் பெயரால் அழைக்கின்றார்கள்.

பொதுவாக கண்ணினுள்ள நீர்மயவுடநீரின் அழுத்தம் (பிரஸர்) 21 mm Hg ற்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலே அதிகரிக்கும்போது அந்த அழுத்தமானது பார்வை நரம்பைப் (Optic Nerve) பாதிக்கிறது.

கண்ணினுள் அழுத்தம் அதிகரிப்பதே குளுக்கோமா நோய்க்கு முக்கிய காரணமாக இருந்த போதிலும் இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த நோயானது அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி, நோயாளி உணராமலேயே அவரது பார்வையைப் பறிக்கின்ற ஒரு ஆபத்தான கண் நோயாகும்.

குளுக்கோமா நோயினால் பார்வை நரம்புகள் பாதிப்படைவதால் பார்க்கும் திறன் பாதிக்கப்பட்டு படிப்படியாக அதிகரித்து முழுமையாகக் குருடாக்கும். பார்வை நரம்பு என்பது நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது எமது கண் விழித்திரையில் விழுகின்ற அதன் விம்பங்களை மூளைக்குக் கடத்துகின்ற நரம்பாகும். நரம்பு என ஒருமையில் சொல்லப்பட்டபோதும் இது ஒரு மில்லியனுக்கு அதிகமான நுண்ணிய பார்வை நாரம்புகளைக் (Optic Fibers) கொண்ட ஒரு தொகுதியாகும். 

கண்பார்வையில் நிரந்தர இழப்பு ஏற்படுவதற்கு ‘குளுக்கோமா’ பாதிப்பே கூடுதலாகக் காரணமாகிறது. அதியுயர் குருதியமுக்கம் விழித்திரையிலுள்ள குருதிக்கலன்களை தடிப்படைய வைக்கும். தவிர திடீரென அதிகரிக்கும் குருதியமுக்கம் காரணமாக விழித்திரை பிரிவடைந்து நிரந்தர பார்வையிழப்பு ஏற்படலாம். குளுக்கோமா பாதிப்பு மோசமடையும் போது சிகிச்சையும் பலன் தருவதில்லை. ஆனால் குளுக்கோமா பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்தில் பார்வையிழப்பைத் தடுத்து நிறுத்த முடியும். 

எனவே தான் கண்வைத்திய நிபுணர்கள் குளுக்கோமா பாதிப்புத் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். நாற்பது வயதை நெருங்கும் ஒருவர் தனது கண்களை அவ்வப்போது கண்வைத்தியரிடம் பரிசோதித்துக் கொள்வது முக்கியம். கண்ணிலுள்ள கோளாறுகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து கொண்டால் பார்வைக் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க முடியுமென்து உண்மை. 

இலங்கையில் விழிப்புலன் இழந்தோரின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை இலட்சமெனக் கணக்கிடப்பெற்றுள்ளது. அதே சமயம் எமது நாட்டில் கண்பார்வை தொடர்பான பல் வேறு குறைபாடுகளால் சுமார் எட்டரை இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கண்பார்வை தொடர்பான கோளாறுகள் மக்கள் மத்தியில் அதிகரித்துச் செல்வதனால் ”கண்களின் பாதுகாப்பு” என்பது தற்போது கூடிய கவனத்துக்குள்ளாகின்றது.

பார்வைக் குறைபாடு இரு வகையானது. பிறவியிலேயே பார்வையிழப்பைக் கொண்டிருப்போர் ஒரு வகையினர். மற்றையோர் நடுத்தர வயதைத் தாண்டியதும் படிப்படியாகப் பார்வையை இழக்கின்றனர். பிறவியின் போது ஏற்படுகின்ற பார்வையிழப்பு தவிர்க்க முடியாதது. 

ஆனால் இடையில் தோன்றும் பார்வைக் கோளாறுகளைத் தவிர்க்க முடியும். மக்கள் மத்தியில் உள்ள உதாசீனம் காரணமாகவே பலருக்கு நடுத்தர வயதுக்குப் பின்னர் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. சிலர் துரதிர்ஷ்டவசமாக நிரந்தரமாகவே பார்வையை இழக்கின்றனர். 

கண்ணுக்கு பரம எதிரிகளான நோய்கள்தான் நீரிழிவும் (Diabetic mellitus) அதிக குருதியமுக்கமும் (hypertension). நீரிழிவை பொறுத்தவரை அது Cataract ஏற்படுவதை அதிகரிக்கிறது. தவிர நீண்ட நாட்களுக்கு கட்டுப்பாடற்று இருக்கும் நீரிழிவு நோயானது ”டயபிடிக் ரெட்டினோபதி (Diabetic retinopathy)” என்ற நோயை கண்ணில் ஏற்படுத்தும். 

இந்த நிலையில் விழித்திரையில் அதிக குருதிக்கலன்கள் உருவாவதால் பார்வையில் குறைபாடு ஏற்படும். இந்நிலை ஏற்படாது பாதுகாக்க நீரிழிவு நோயாளர்கள் தங்கள் குருதி வெல்ல நிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இந்த டயபிடிக் றெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் லேசர் கதிர் சிகிச்சை மூலம் கண்பார்வை மேலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும். 

ஆனால் தற்போது கண் அழுத்தத்தை செவ்வையாக அளக்கும் கருவிகளும், நீர்மயவுடனீர் உருவாதலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் தற்போது சர்வ சாதாரணமாக பாவனையில் உள்ளதால் குளுக்கோமா. நோயை சுலபமாக கண்டறிந்து சிகிச்சை செய்ய முடிகின்றது.

கண்பார்வை பற்றி சொல்லும் போது விற்றமின் ஏ பற்றிப் பலருக்கு ஞாபகம் வரலாம். கண்பார்வை நிறப் பொருளை ஆக்குவதற்கு விற்றமின் ”ஏ” இன்றியமையாதது. விற்றமின் ”ஏ” குறைபாடு ஏற்படும் போது கண்களில் புள்ளியும் உலர்வுத் தன்மையும் காணப்படும். பால் மற்றும் ஈரல் போன்ற விலங்குணவுகளிலும், மஞ்சள் நிறமான பழவகைளிலும் (மாம்பழம்) விற்றமின் ”ஏ” அதிகமாகக் காணப்படும். இலங்கையைப் பொறுத்தவரை விற்றமின் ”ஏ” குறைபாட்டால் பார்வை பாதிக்கப்படுவது குறைவாகவே காணப்படுகிறது.

வயதானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை கற்ராக்ட் (Cataract) எனப்படும் விழியின் ஊடுபுகவிடும் தன்மை (வில்லையில்) குறைந்து போதல். இவற்றுக்காக செய்யப்படும் சத்திரசிகிச்சையில் வில்லை அகற்றப்பட்டு செயற்கை வில்லைகள் பொருத்தப்படும். இது தற்போது இலகுவாக செய்யப்படக் கூடிய சத்திர சிகிச்சையாக உள்ளது.

குளுக்கோமா என்ற கண் விழி விறைப்பு நோய்தான் நம் நாட்டில் பார்வையிழப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


குளுக்கோமா என்றால் என்ன?

நம் கண்களின் அமைப்பிலேயே ப்ளம்பிங் போல் குழாய் அமைப்புகள் உள்ளன. இந்த குழாய் அமைப்பானது கண்களின் கருவிழிப்பகுதிகள் மற்றும் லென்ஸ் ஆகியவற்றிற்கு வேண்டிய திரவத்தை எடுத்துச் செல்கிறது. இந்த ப்ளம்பிங் அமைப்பில் கோளாறுகள் ஏற்பட்டால், அதாவது திரவம் வரும் வழியிலோ அல்லது வெளியேறும் வழியிலோ தடை ஏற்பட்டால் கண்ணிற்குள் திரவத்தின் அழுத்தம் அதிகமாகும். ஆனால் இந்த திரவத்திற்கும் கண்ணீருக்கும் சம்பந்தம் இல்லை.

திரவத்தின் உற்பத்திக்கும், அது வெளியேறும் அளவிற்கும் இடையே ஏற்படும் சமமின்மையால் அழுத்தம் கூடுகிறது. இதனால் விழிகளுக்குப் பின் உள்ள விழி நரம்புகள் பாதிப்படைகிறது.

குளுக்கோமா யாருக்கு ஏற்படும்?

* 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
* குளுக்கோமா நோயாளிகளின் ரத்த உறவினர்களுக்கு
* அதிகிட்டப்பார்வை உள்ள நபர்களுக்கு (myopes)
* சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு

குளுக்கோமா ஏற்படக் காரணம் என்ன?முதற்கட்ட குளுக்கோமா நோய் ஏற்பட அடையாளம் காணக்கூடிய காரணம் எதுவும் இல்லை. பெரும்பாலும் மரபுக் கூறுகளால் இது ஏற்படுகிறது. கண்ணின் அமைப்பே சிலருக்கு சில வகை குளுக்கோமா நோயை தோற்றுவிக்கலாம்.

குளுக்கோமா நோய்களில் பல வகைகள் உண்டு.

1. முதற்கட்ட திறந்த கோண குளுக்கோமா

கண் திரவம் பாயும் வடிகால் போன்ற அமைப்பின் கோணம் பழுதடையும்போது கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் அதிகரிக்கும்.

2. முதற்கட்ட கோண மூடுதல் குளுக்கோமா

திரவ வடிகால் கோணம் சில சமயங்களில் திடீரென தடைபடும். அதாவது வடிகாலின் வாய்ப்பகுதியில் ஒரு காகிதம் அடைப்பது போன்று ஏற்பட்டு திரவ வெளியேற்றத்தை தடுக்கும். இதனால் வேகமாக அழுத்தம் அதிகரித்து பார்வை மங்கல், கடும் வலி, குமட்டல், வாந்தி மற்றும் தலைவலி ஏற்படலாம். இந்த நிலை உடனடியாக கண் மருத்துவரை ஆலோசிக்க பரிந்துரை செய்கிறது. தவறினால் பார்வையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

குறை விறைப்பு குளுக்கோமா (Low Tention GLAUCOMA)

குளுக்கோமா வகையிலேயே இது ஒரு புதிரான தன்மை கொண்டது. கண்களில் உள்ள திரவத்தின் அழுத்தம் சாதாரணமாக இருக்கும் போது கூட optic nerve பழுதடையும் நிலை இது. பார்வை நரம்பிற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் இறுக்கமடைவதால் இவ்வகை குளுக்கோமா ஏற்படுவதாக சமீப ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் கட்ட குளுக்கோமா

நீரிழிவு அல்லது எரிச்சல், வீக்கம், கண்புரை தீவிரமடைந்த நிலை, ஸ்டெராய்ட் உள்ளிட்ட மருந்துகள், கண்களில் ஏற்படும் காயங்கள் ஆகியவற்றால் திரவ வடிகால் கோணம் சேதமடையும்போது இந்த வகை குளுக்கோமா ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்கும் போது குளுக்கோமாவுடன் சேர்த்து அடிப்படை பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிறவி அல்லது வளர்ச்சி நிலை குளுக்கோமா

குழந்தைகளையும், இளம் வயதினரையும் பாதிக்கும் மிகவும் அரிதான வகை குளுக்கோமா இதுவே. இது வம்சாவழியாகவோ அல்லது குழந்தை கருப்பையில் வளரும்போது அதன் கண் திரவ வடிகால் பாதைகள் வளரும்போது தவறாகவோ அல்லது பூர்த்தியடையாத வளர்ச்சியாகவோ அமைந்தால் ஏற்படும். 

குழந்தைகளிடம் பெற்றோர்கள் கீழ்வரும் அறிகுறிகளை கவனிப்பது நல்லது. விழி பெரிதாகுதல், விழிவெண்படலத்தில் மறைப்பு, கண்ணீர் அதிகமாக வருதல், வெளிச்சத்தை குழந்தை தவிர்த்தல் ஆகிய அறிகுறிகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். இத்தகைய நிலையில் குழந்தையை உடனே கண் மருத்துவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும், மறத்துப்போகும் மருந்து கொடுத்து மருத்துவர்கள் விரிவான பரிசோதனை மேற்கொள்வார்கள்.

நோயறிதல்

இந்நோய் அறிய 4 முக்கிய விஷயங்கள் கவனிக்கப்படும். கண் திரவ அழுத்தம், முன்பகுதியில் உள்ள அறையின் கோணம் optic nerve, வடிவம் மற்றும் நிறம் மற்றும். 

பார்வைப்புலம் ஆகியவைகள் கவனிக்கப்படும் குளுக்கோமா பெரும்பாலும் கட்டுப்பாட்டில் வைக்கப்படலாமே தவிர முழு குணம் சாத்தியமில்லை. பார்வையை அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டிருப்பதன் மூலம் இந்நோய் ஏற்படுவதை தடுக்கலாம். 

இதனால் மருத்துவரின் ஆலோசனைகளை அடிக்கடி பெறும்போதும், மருத்துவ அறிவுரைகளை தவறாமல் கடைபிடிப்பவர்களும் இதிலிருந்து பெரும்பாலும் தப்பி விடுகின்றன

இதை அடுத்து கான்டாக்ட் லென்சுகளின் உபயோகம் பற்றி இதை தொடர்ந்து அடுத்து வர இருக்கும் தொடரில் பார்போம். 
தொடரும்...
அதிரை மன்சூர்

14 Responses So Far:

Ebrahim Ansari said...

ஜசாக் அல்லாஹ் ஹைரன் தம்பி.

-நீர்மயவுடநீர் மீண்டும் அகத்துறிஞ்சப்படாத
- குருதியமுக்கம்
- ஊடு புகவிடும் தன்மை
- விழிவிறைப்பு -

போன்ற அழகான வார்த்தைகளுடன் அழகு தமிழ் கொஞ்சும் அருமையான ஆக்கம். பா ...............ராட்டுக்கள் தம்பி மன்சூர்.

Shameed said...

குளுக்கோமா பற்றி அலுங்காம குலுங்கமா அழகா தொகுத்துதந்த மன்சூர் காகா அவர்களுக்கு நன்றி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உயர்ந்த ஒளிரும் தகவல்களுக்கு நன்றி மன்சூராக்கா.

sabeer.abushahruk said...

ஆஹா...

அழகான தமிழ் வார்த்தைகளின் பிரயோகம் அகலமாகக் கண்களை விரிய வைக்கிறது.

ஸ்திரமாக முன்னேறுகிறது தொடர்.

வாழ்த்துகள் மன்சூர்.

adiraimansoor said...

பின்னூட்டமைட்ட அணைவர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் கைர்

பின்னூட்டம் இட்டவர்களைத் தவிற
இந்த தொடரை எத்தனை பேர் படிகின்றார்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது
அனேகமாக நெரியளருக்கு தெரிந்திருக்கும் என நினைகின்றேன்.

adiraimansoor said...

பின்னூட்டமைட்ட அணைவர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் கைர்

பின்னூட்டம் இட்டவர்களைத் தவிற
இந்த தொடரை எத்தனை பேர் படிகின்றார்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது
அனேகமாக நெரியளருக்கு தெரிந்திருக்கும் என நினைகின்றேன்.

adiraimansoor said...


கொஞ்ச நாட்களாக கவியன்ப கலாம் மற்றும் மூத்தரிஞ்சர் பாரூக் காக்கா ஆகிய இருவரையும் அதிரை நிருபர் பக்கமே பார்க்க முடியவில்லையே அவர்கள் இருவர் பற்றி அறிந்தவர்கள் தெரிவிக்கவும்

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர்!

கவியன்பன் கலாம் அவர்களைப் பற்றிய கேள்விக்கு அவர்கள்தான் பதில் அளிக்க வேண்டும்.

பெரியவர். பாரூக் மச்சான் அவர்களுக்கு கண்ணில்தான் பிரச்னை. முன்பு போல் அதிக நேரம் கணிணி முன் இருக்க இயலவில்லை. மருத்துவரும் தடுத்து வைத்து இருக்கிறார். இன்ஷா அல்லாஹ் நலமடைய வேண்டுவோம்.

adiraimansoor said...

ஜஸாக்கல்லாஹ் கைர் காக்க

தகவலுக்கு நனறி

நான் புறப்பட்டு வரும்போது அவர்களை பார்க்காமல் வந்தது தப்பாகிவிட்டது
இபோது என் கண்கள் இரண்டும் தேடுகின்றது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மன்சூர் காக்கா:

அதிரைநிருபர் தளம் பதிவுகளுக்கும், அதன் ஆளுமைக்கும் முன்னுரிமை கொடுப்பதால் தரம் நிமிர்ந்து இருப்பதை பலர் பாராட்டி வருகின்றனர் ! அல்ஹம்துலில்லாஹ் !

நம் சகோதரர்கள் தொடர்ந்து வாசித்து வந்தாலும் கருத்தாடலில் ஈடுபட முடியாமைக்கு பல காரணங்கள் இருக்கிறது, நேரமின்மை, வேலைப்பளு, அல்லது மாற்றுக் கருத்து இல்லாமை...

வாசிக்கத் தவறிய பதிவுகளையும் தேடிப் பிடித்து வாசிக்கவும் செய்கிறார்கள் !

இன்றளவும் வாசகர்கள் வருகை முன்னிலையில்தான் இருக்கிறது - அல்ஹம்துலில்லாஹ் !

சென்றடைய வேண்டிய தகவல்கள் எங்கே செல்ல வேண்டுமோ அவை சீராக சென்றடைகிறது...

வருகையாளர்களில் பலவகை உண்டு, சிலர் தலைப்பில் சுவராஸ்யம் இருப்பின் உள்ளே நுழைந்து வாசிப்பார்கள், மற்றும் சிலரோ பதிவின் பேசு பொருள் பிடித்திருந்தால் மேலும் தொடர்ந்து வாசிக்க முயற்சிப்பார்கள், மேலும் சிலரோ அவசியத் தேவையறிந்து வாசிக்கவும் செய்வர்.

இன்றையச் சூழலில், பரபரப்பு, அல்லது பிரச்சினைகளை அறியவும், சுடச் சுட என்று தானாக சூடு போட்டுக் கொள்ள்ளும் ஊடக மாயையில் சிக்காதோர் எவர்தான் உண்டு அவ்வகையில் அதுபோன்ற எதிர்பார்ப்புகளையும் மீறி நம் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது.

மனதை வென்றவர்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள், இன்னும் மணம் வீசுவோம் இன்ஷா அல்லாஹ் !

மீதி தனி மின்னஞ்சலில் !

அன்புடன்

அபூஇப்ரஹீம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த தொடர் கண்ணும் கருத்துமாக வாசிக்கிறோம் !

மருத்துவ தொடர்பு வாசிப்புகள் அந்த நேரத்தில் அதன் அருமை உணரப்படாவிடின், அதன் தேவை ஏற்படும்போது எங்கோ எப்போபோதோ வாசித்தோமே... என்று ஒரு ஜில்ல்ல்ல் தட்டுமே.... !

Yasir said...

அறிந்து கொள்ளவேண்டிய அரிய தகவல்கள்...அல்லாஹ் உங்களுக்கு நிறைய நன்மைகளை தரட்டும்

adiraimansoor said...


நெய்னாதம்பி மிக்க மகிழ்ச்சி
ஜஸாக்கல்லாஹ் கைர்

நாம் எழுதுவது எத்தனை பேருக்கு போய் சேருகின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று சும்மா ஒரு நப்பாசை அதான் கேட்டேன் தகவலுக்கு நன்றி

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) குளுக்கோமாவைப் பற்றி தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்!
எனக்கும் மதுரை அரவிந் மருத்துவரின் அறிவுரை - வருடம் ஒருமுறை குளுக்கோமா பரிசோதனை செய்து கொள்ளும்படி தொடர்ந்து செய்து வருகிறேன். காலையில் ஆரம்பித்து மாலைவரை ஒருநாள் முழுவதும் பரிசோதனை நடைபெறும். வல்ல அல்லாஹ் அனைவருக்கும் தெளிவான கண்பார்வையை வழங்கி நல்லருள் புரியட்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு