முன்மாதிரி வடிவங்கள்!


என்னிடம் சில
வார்த்தைகள் இருப்பிலுண்டு
இவற்றால்
வாழ்க்கையை வடித்தெடுக்க
வாகாக உங்களிடம்
வார்ப்புகள் வைப்பிலுண்டா?

படிவங்களில் நிரப்பி
பத்திரப்படுத்த அல்ல
அடித்துத் திருத்திப் பின்
அலங்கோலப் படுத்தவுமல்ல

வடிவங்களாய் வார்த்து
எடுத்துக் காட்ட
படிப்பினை புகட்ட
பகிரங்கப் படுத்திப் பயிலரங்கம் நடத்த

சீரான வாழ்க்கையைச்
சிறப்பாகச் சொல்லித்தர
நேரானப் பாதையை
நிறைவாகக் காட்டித்தர
வாழ்ந்து அனுபவித்த
மாதிரி வார்ப்புகள்
கைவசம் உள்ளனவா?

பெய்து முடித்த ஒரு
பெருமழையின் பலனைப் போல
நெய்து எடுத்தப் புது
நேர்த்தியானத் துணியைப் போல

கொய்து தொடுத்த நறு
குளிர்மலர்கள் சரத்தைப் போல
செய்து முடித்த நற்
செயல்களின் வார்ப்புகளுண்டா?

உங்கள் முன்
ஏந்திய கைகளில்
மீந்தவை கொண்டேனும்
ஈந்ததாய் வார்ப்புண்டா?

உகுந்த கண்ணீரை
தகுந்த நிவர்த்தியால்
மிகுந்த கருணையோடு
துடைத்த விரல்கள் உளவா?

ஒட்டிய வயிறுகளின்
பட்டினிப் பிணி நீக்க
உணவளித்து உதவியதாய்
உமது நினைவில் இருப்புண்டா?

கூரையின்றி நலிந்தோர்க்கு
தாழ்வாரம் தாமாகி
வாழ்வாதாரம் வழங்கி
புகலிடம் தந்த வார்ப்புண்டா?

நீர்த்துப்போய் நிலவறையில்
நிரந்தரமாய் கிடத்துமுன்
தீர்ப்பு நாளை அஞ்சி
திருத்தங்கள் செய்ததுண்டா?

நகலெடுக்கத் தகுதிவாய்ந்த
நல்ல பழக்கங்களும்
வார்த்தெடுக்கப் பொருத்தமான
வாழ்வியல் வழக்கங்களும்
உலகுக்கு அறிவிக்க
முன்மாதிரி வடிவங்களாய்
வாருங்கள்
வாழ்ந்து காட்டுவோம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

35 கருத்துகள்

Ebrahim Ansari சொன்னது…

//நீர்த்துப்போய் நிலவறையில்
நிரந்தரமாய் கிடத்துமுன்
தீர்ப்பு நாளை அஞ்சி
திருத்தங்கள் செய்ததுண்டா?//

அவரவர் மனசாட்சியுடன் பேசவேண்டிய வரிகள்.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.முதலில் கவி"தை"க்குள் செல்லும் முன் இந்த வார்ப்புகள் யாவும் ஈர்ப்புகள் எனலாம்.செழுத்த தமிழில் பொறித்த முத்திரை இந்த வார்ப்புகள்.

crown சொன்னது…

என்னிடம் சில
வார்த்தைகள் இருப்பிலுண்டு
இவற்றால்
வாழ்க்கையை வடித்தெடுக்க
வாகாக உங்களிடம்
வார்ப்புகள் வைப்பிலுண்டா?
-----------------------------------------------------------------
கவிஞருக்கு கேட்கும் திரானியும்,தகுதியும் இருக்கு! நமக்கு ஒவ்வொருவரும் தனக்குள் கேட்கவேண்டிய கேள்வி இது!

crown சொன்னது…

படிவங்களில் நிரப்பி
பத்திரப்படுத்த அல்ல
அடித்துத் திருத்திப் பின்
அலங்கோலப் படுத்தவுமல்ல
---------------------------------------------------
இது சான்றிதழோ,சொத்து மதிப்பிடும் காகிதமோ(பத்திரம்)அல்ல!மொத்தத்தில் யாரையும் படுத்தவல்ல!சுயபரிசோதனைக்கு ஒரு ஊக்கி!அவ்வளவே!

crown சொன்னது…

வடிவங்களாய் வார்த்து
எடுத்துக் காட்ட
படிப்பினை புகட்ட
பகிரங்கப் படுத்திப் பயிலரங்கம் நடத்த

சீரான வாழ்க்கையைச்
சிறப்பாகச் சொல்லித்தர
நேரானப் பாதையை
நிறைவாகக் காட்டித்தர
வாழ்ந்து அனுபவித்த
மாதிரி வார்ப்புகள்
கைவசம் உள்ளனவா?
---------------------------------------------------
எம் பெருமானார்(ஸல்)அவர்களிடம் இருந்தது! நம்மிடம் சிறிய அளவினேனும் உண்டா? அதற்கு முயற்சி அல்ல ஒத்திகையோ,ஒத்துகையோ இருந்ததுண்டா?

adiraimansoor சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…

பெய்து முடித்த ஒரு
பெருமழையின் பலனைப் போல
நெய்து எடுத்தப் புது
நேர்த்தியானத் துணியைப் போல
----------------------------------------------------
சொட்டும்,தலைமேல் செல்லமாய் கொட்டும் குத்தும் ஊசி மழையல்ல!மொத்தமாய்,சத்தமாய்,பொத்,பொத் தென பொதுவில் கொட்டி தெருவில் ஆறாய் ஓடி அடையாளம் காட்டும் பெருமழைபோலும். நேர்த்தியாய் நெய்து,கண்களை கைது செய்யும் புதுத்துணி போலவும் ஈர்க்கும் ஏதேனும் அடையாளம் உண்டா நம் நற்செயலில்???

crown சொன்னது…

கொய்து தொடுத்த நறு
குளிர்மலர்கள் சரத்தைப் போல
செய்து முடித்த நற்
செயல்களின் வார்ப்புகளுண்டா?
------------------------------------------------------------
சின்ன,சின்ன நன்மைகள் சேர்த்து, நற் செயன்ல் எனும் நாறில் கோர்த்து மாலையாக தொடுத்த நினைவிருக்கா?

adiraimansoor சொன்னது…

///கூரையின்றி நலிந்தோர்க்கு
தாழ்வாரம் தாமாகி
வாழ்வாதாரம் வழங்கி
புகலிடம் தந்த வார்ப்புண்டா///

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
என்று அன்று அறிஞர் அண்ணா சொன்ன வார்த்தையை
காற்றில் பறக்கவிட்டனர் இன்றைய அரசியல் அண்ணாமார்கள்

அதை நினவுகூறும் விதமாக கவியன்பன் சபீர்
அழகிய வார்த்தைகளால் கவணிப்பாரற்று உலாவும் ஏழைகளின் வாழ்வாதாரம் பற்றி வடித்திருக்கும் கவிதை மிக அருமை வரியோர்களை வர்ணிக்கும் இந்த வார்த்தைகளால் அவர்களின் ஏழ்மையும் சேர்த்து பின்னப்பட்டுள்ளது

அவர்களுக்கு புன்னகையும் புகழிடமும் கொடுப்போர் மிக மிக சொற்பமானவர்களே

///நீர்த்துப்போய் நிலவறையில்
நிரந்தரமாய் கிடத்துமுன்
தீர்ப்பு நாளை அஞ்சி
திருத்தங்கள் செய்ததுண்டா?///

யாருடைய மனதில் அந்த தீர்ப்பு நாளை பற்றி அச்சம் இருக்கின்றதோ அவர்களைத்தவிற வேறு யாரும் ஏழையின் சிரிப்பில் இறைவனக்கான பாக்கியம் பெறாதவர்களே

crown சொன்னது…

மன்னிக்கவும் கனினியில் சில கோளாறு பிறகு தொடரலாம் இன்சாஅல்லாஹ்!

adiraimansoor சொன்னது…

///சொட்டும்,தலைமேல் செல்லமாய் கொட்டும் குத்தும் ஊசி மழையல்ல!மொத்தமாய்,சத்தமாய்,பொத்,பொத் தென பொதுவில் கொட்டி தெருவில் ஆறாய் ஓடி அடையாளம் காட்டும் பெருமழைபோலும். நேர்த்தியாய் நெய்து,கண்களை கைது செய்யும் புதுத்துணி போலவும் ஈர்க்கும் ஏதேனும் அடையாளம் உண்டா நம் நற்செயலில்???///

க்ரவுன் மச்சான் சிறுவயதில் மழைத்தண்ணீரில் விளையான்ட விளவுகளோ கொட் கொட்டென கொட்டுகின்றீர்களே

Unknown சொன்னது…

''பெய்து முடித்த ஒரு
பெருமழையின் பலனைப் போல
நெய்து எடுத்தப் புது
நேர்த்தியானத் துணியைப் போல

கொய்து தொடுத்த நறு
குளிர்மலர்கள் சரத்தைப் போல
செய்து முடித்த நற்
செயல்களின் வார்ப்புகளுண்டா?

உங்கள் முன்
ஏந்திய கைகளில்
மீந்தவை கொண்டேனும்
ஈந்ததாய் வார்ப்புண்டா?

உகுந்த கண்ணீரை
தகுந்த நிவர்த்தியால்
மிகுந்த கருணையோடு
துடைத்த விரல்கள் உளவா?

ஒட்டிய வயிறுகளின்
பட்டினிப் பிணி நீக்க
உணவளித்து உதவியதாய்
உமது நினைவில் இருப்புண்டா?
-----------------------------------------------------------------------------------------
அடித்து சுழற்றும் பம்பரமாய்
சுவாசங்களை தொலைத்து
திரியும் வேளையில்
சிதறிய சிந்தனைகளை
சில கணங்களில்
பூங்கொத்தில் அடித்து
சேர்த்த அற்புத சரம் ..............
----நிஜக்கவிசக்கரவர்த்தி நீங்கள்தான் ஷபீர்காக்கா ....
அன்புடன்
harmys

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவி'தை'க் கண்ணாடி பிம்பம் தனது நிஜத்தைப் பார்த்து கேட்டும் கேள்விகள் !

//----நிஜக்கவிசக்கரவர்த்தி நீங்கள்தான் ஷபீர்காக்கா ....
அன்புடன்
harmys//

அதே ! அதே ! அதே !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

முன்மாதிரி வடிவங்களின் நல்ல வார்ப்பு!

//நகலெடுக்கத் தகுதிவாய்ந்த
நல்ல பழக்கங்களும்
வார்த்தெடுக்கப் பொருத்தமான
வாழ்வியல் வழக்கங்களும்
உலகுக்கு அறிவிக்க
முன்மாதிரி வடிவங்களாய்
வாருங்கள்
வாழ்ந்து காட்டுவோம்!//

அவ்வண்ணமே வாழ்வோமாக!

Ebrahim Ansari சொன்னது…

//சிதறிய சிந்தனைகளை
சில கணங்களில்
பூங்கொத்தில் அடித்து
சேர்த்த அற்புத சரம் ..............// பின்னூட்டங்களையும் இப்படி அற்புத வரிகளால் அலங்கரிக்க முடியுமா?

Unknown சொன்னது…

கவி காக்காவின் வரிகளில் ஏதேனும் செய்தோமா? என்று யோசிக்க வைக்கிறது.

இதைப் படித்தவுடன் அட்லீஸ்ட் நம்மால் முடிந்த சிலவற்றையாவது மரணிக்கும் முன் செய்துவிட வேண்டும் என்று ஆர்வம் பிறக்கிறது.

RAFIA சொன்னது…

Shabaas SABEER BHAI !

Expecting more n more !

Rafia
JEDDAH.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

உலக உரிமங்கள் காலாவதியானால்
புதுப்பித்துக்கொள்ள அவகாசமுண்டு
மனித வாழ்க்கையே காலாவதியானால்
புதுப்பிக்க இந்த மூளையும் இருக்கா
முயற்சிக்க முண்டம் கூட இருக்கா

எனவே காலத்தே பயிர் செய்யச்சொல்லும்
கவிவேந்தரின் அற்புதமான கவிவரிகள்.

மறதியும்,சோம்பலும் எம்மை அவ்வப்பொழுது
சாம்பாலாய் ஆக்கிவிடுகிறது.

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…


தேர்வு எழுதி முடித்த மாணவனின் தவிப்போடுதான் இங்கு எண்ணங்களைப் பதிந்து விட்டு முடிவுக்காகக் காத்திருப்பது வழக்கம். அவ்வாறே காத்திருக்கையில் முதலில் வகுப்பெடுக்க வந்து விடைத்தாள் விநியோகித்த ‘பொருளாதார மற்றும் சமூக மேம்மாட்டு பேராசிரியர்” ஈனா ஆனா காக்கா அவர்களுக்கு நன்றி. (மரியாதை நிமித்தம் முழு பெயர் சொல்லி அழைக்க எனக்கு என்னவோ போல் இருப்பதால் விலாசம் சொல்லியே அழைக்கிறேன்).

பதிவின் கருவை நாடி பிடித்து இட்டக் கருத்து மனம் கவர்ந்தது.

இரண்டாவது வகுப்பெடுக்க வந்த “தமிழ் பேராசிரியர்” கிரவுனின் விரிவுரையில் வழக்கம்போல தேன் சொட்டிற்று; திகட்டாத தமிழ் கொட்டிற்று. முன் வரிசை மட்டுமன்றி கடைசி பெஞ்ச்சையும் கவர்ந்திழுக்கும் மொழியாற்றலும் தீங்கிழைக்காத சிலேடைகளும் கவனிக்கத் தக்கவை.

கவிதையில் “தை”யைப் பிரித்து தை மாதம் பிறந்ததை நாசுக்காக சொல்லும் மொழியாடல் இந்த வாத்தியாருக்கே "கை" வந்த கலை. இவரின் கிரவுனுரை மூலம் இந்தப் பதிவு டிஸ்டிங்ஷனில் பாஸான திருப்தி. நன்றியும் கடப்பாடும் கிரவுன்.

//
சொட்டும்,தலைமேல் - செல்லமாய் கொட்டும்
குத்தும்
ஊசி மழையல்ல!

மொத்தமாய்,
சத்தமாய்,
பொத்,பொத் தென
பொதுவில் கொட்டி
தெருவில் ஆறாய் ஓடி
அடையாளம் காட்டும் பெருமழைபோலும். //

ஆமாம் கிரவுன்,

அத்தகைய மழையால்தான்
உழவனின்
உயிர் சாகாதபடியும்
பயிர் சாகுபடியும்
பார்த்துக்கொள்ள இயலும்.

நீர்த்தேக்கம் நிறையும்
நீர்த்தாகம் தணியும்

கடல் கலக்குமுன்
நதிக்கறையிலெல்லாம்
உயிர் தழைக்கும்!!ZAKIR HUSSAIN சொன்னது…

சபீர்,

நீ எழுதியதை விட இதைப்புரிந்து கருத்திட்ட வாசகங்களே இன்னும் உயர்வாய் தெரிகிறது.

கவிதை வழக்கம்போல் சிறப்புடன்,

ZAKIR HUSSAIN சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அதிரை.மெய்சா சொன்னது…

//சீரான வாழ்க்கையைச்
சிறப்பாகச் சொல்லித்தர
நேரானப் பாதையை
நிறைவாகக் காட்டித்தர
வாழ்ந்து அனுபவித்த
மாதிரி வார்ப்புகள்
கைவசம் உள்ளனவா?//

சிந்திக்க வைக்கும் ஆழமான வரிகள். நெஞ்சைத்தொடும் வரிகள்.

வார்ப்புண்டா.? வார்ப்புண்டாயென வரிக்கு வரி கேட்டு வாய்பிழந்து வாசிக்க வைக்கிறது உனது கவிவரிகள். அருமை அருமை வாழ்த்துக்கள்.

crown சொன்னது…

உங்கள் முன்
ஏந்திய கைகளில்
மீந்தவை கொண்டேனும்
ஈந்ததாய் வார்ப்புண்டா?

உகுந்த கண்ணீரை
தகுந்த நிவர்த்தியால்
மிகுந்த கருணையோடு
துடைத்த விரல்கள் உளவா?

ஒட்டிய வயிறுகளின்
பட்டினிப் பிணி நீக்க
உணவளித்து உதவியதாய்
உமது நினைவில் இருப்புண்டா?
------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். இன்னும் தொடருவோமா? முதலில்:
உங்கள் முன்
ஏந்திய கைகளில்
மீந்தவை கொண்டேனும்
ஈந்ததாய் வார்ப்புண்டா?
-------------------------------
இரந்து நிற்பவர் முன் இறங்கி வந்து பிரியானியோ, இன்னும் பிற உயர் வகை உணவோ கொடுக்கவல்ல!
எஞ்சி இருக்கும் பழய சோறாவது( நீர் சோறு)ஈந்ததுண்டா? அந்த சில கவலசோற்றின் மேலாவது உங்கள் கவனம் திரும்பி இருக்கா????
------------------------------
உகுந்த கண்ணீரை
தகுந்த நிவர்த்தியால்
மிகுந்த கருணையோடு
துடைத்த விரல்கள் உளவா?
---------------------------------
பிறருக்காய் அழுததுண்டா? அவர்கள் துன்பத்தில் கலந்ததுண்டா? அவர்களின் தேவைகளில் பெரு அளவில் இல்லையேனும் சிறு அளவேனும் கிள்ளி போட்டதுண்டா?
-------------------------------------
ஒட்டிய வயிறுகளின்
பட்டினிப் பிணி நீக்க
உணவளித்து உதவியதாய்
உமது நினைவில் இருப்புண்டா?
-----------------------------------------------
ஏழையின் பசி நோய்க்கு,புசிக்க கொடுப்பதும் அதை பார்த்து ரசிக்க பழகுவதும், நாமே ருசிக்கும் படி இருக்கும் அப்படி ஒரு சந்தர்பமேனும் வாய்த்ததுண்டா?
இப்படியே எல்லா நலங்களும் ஏதாவது ஒரு பொழுதிலேனும் நிகழ்ந்ததுண்டா? என நன்மையை ஏவி, நன்மையை தூண்டும் செயல் செய்துள்ளார் கவிஞர்!ஒரு விபச்சாரி தாகத்தால் தவித்த நாயிக்கு தன் முந்தானையில் தண்ணீர் வார்த்து சுவர்கம் சென்ற படிப்பினையை நிவைவு படுத்தும்படி இருப்பது சிறப்பு.!

crown சொன்னது…

கூரையின்றி நலிந்தோர்க்கு
தாழ்வாரம் தாமாகி
வாழ்வாதாரம் வழங்கி
புகலிடம் தந்த வார்ப்புண்டா?
----------------------------------------------------------
வெயிலுக்கும், மழைக்கும் இடையே போராடும் நலிந்தோருக்கு தங்கம் கொடுக்காவிட்டாலும், தங்க ஒரு கூரை ,குடுசையாவது கொடுத்து அவர்களுக்கு நிழலாய் இல்லாவிட்டாலும் நிழக் கிடைக்கும் படி நிஜமாய் ஏதேனும் நடத்திய வார்ப்புகள் ஒன்றேனும் உண்டா?
இன்றோ புலிகளிடம் மாட்டிய ஆடுகளைப்போல் அல்லவா ஏழை பெண்களின் பெண்மை? வருமையின் நோயை காட்டி ,கூரை கொடுத்து வாழ்வு கொடுக்காமல், குடித்தனம் நடத்த அவர்களின் கற்பை,சூரையாடும் கயமைத்தனம் அள்ளவா அதிகம் நடக்கிறது!

crown சொன்னது…

நீர்த்துப்போய் நிலவறையில்
நிரந்தரமாய் கிடத்துமுன்
தீர்ப்பு நாளை அஞ்சி
திருத்தங்கள் செய்ததுண்டா?
---------------------------------------------
நெத்தியடி கேள்வி! விடை பெறும் நாளில் விடை நம் நன்மையை எடை போட்டு பார்க்கப்படும் நாளில் கிடைத்திடுமா கூடுதல் எடை?படைத்தவனை பயந்து வாழ்ந்தால் எல்லாம் சாத்தியம்! இது சத்தியம்!

crown சொன்னது…

நகலெடுக்கத் தகுதிவாய்ந்த
நல்ல பழக்கங்களும்
வார்த்தெடுக்கப் பொருத்தமான
வாழ்வியல் வழக்கங்களும்
உலகுக்கு அறிவிக்க
முன்மாதிரி வடிவங்களாய்
வாருங்கள்
வாழ்ந்து காட்டுவோம்!
---------------------------------------------------------
நல்லதை நகலெடுத்தல் அல்லதை புறம் தள்ளும்! நல்லதை காப்பி அடித்தாவது வாழ்கை தேர்வில் தேறிவிட இது போல அவ்வப்போது காப்பி அடிப்பது எந்த ஆசிரியருக்கும், மாணவருக்கும் நல்லதே!
-----------------------
கவிஞரின் மொழிஆற்றல் பட்டிமன்றம் வைத்து பந்திபறத்தலாம்!ஆழ்மை அதிகம்! நேரமின்மையால் இப்படி சட்டென முடிக்க வேண்டியுள்ளது. வாழ்த்துக்கள்

sabeer.abushahruk சொன்னது…

//அந்த சில
கவல சோற்றின் மேலாவது - உங்கள்
கவனம் திரும்பி இருக்கா????//

பதிவின் உத்கருத்துகளில் ஒன்றைத் தெளிவாக்கி உதவுகிறீர்கள்

//
ஏழையின்
பசி நோய்க்கு,
புசிக்க கொடுப்பதும் - அதை பார்த்து ரசிக்க பழகுவதும், -நாமே
ருசிக்கும் படி இருக்கும்
அப்படி ஒரு சந்தர்பமேனும் வாய்த்ததுண்டா?//

கவிதைக்கு கவிதையாலேயே விரிவுரை உங்களுக்கே சாத்தியம்.

//வருமையின் நோயை காட்டி ,கூரை கொடுத்து வாழ்வு கொடுக்காமல், குடித்தனம் நடத்த அவர்களின் கற்பை,சூரையாடும் கயமைத்தனம் அள்ளவா அதிகம் நடக்கிறது!
//
கேட்கவே பயங்கரமாக இருக்கிறது.

sabeer.abushahruk சொன்னது…

கண்களால் பார்ப்பதை மட்டுமே செய்து வந்த எங்களை, அந்தக் கண்களையே பத்திரமாக பார்த்துக்கொள்ள வைக்க அருமையான தொடர் எழுதி வரும் மன்சூர், ரசித்து வாசித்து கருத்துப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

//அடித்து சுழற்றும் பம்பரமாய்
சுவாசங்களை தொலைத்து
திரியும் வேளையில்
சிதறிய சிந்தனைகளை
சில கணங்களில்
பூங்கொத்தில்
முடிந்து (அடித்து) சேர்த்த அற்புத சரம் ..//

மிஸ்ஸிங் யு, அப்துர்ரஹ்மான்.

அபு இபு,

முதல் வாசிப்பிலேயே பிடித்துப்போய் பதியலாம் என்ற ஊக்குவிப்புக்கு நன்றி.

sabeer.abushahruk சொன்னது…

எம் ஹெச் ஜே,

அவ்வண்ணம் வாழ வாய்க்கிறதோ இல்லையோ முயற்சி செய்ய வேண்டும் என்று வேண்டுவதே பதிவின் நோக்கமும். நன்றி.

ஜாஃபர்,

நமக்கு நாமே கேள்விகள் கேட்டுக் கொண்டு, கிடைக்கும் பதில்களைக் கொண்டு தன்னிலை உணர்ந்து நன்மை செய்யத் தூண்டுவதே பதிவின் நோக்கம். அதே தாக்கம் உங்கள் கருத்தில். நன்றி.

Rafiya kaakkaa,

Thanks for your apreciation. Insha Allah, i will always keep sharing noble thoughts with our brothers.

எம் எஸ் எம்,

//
மறதியும்,சோம்பலும் எம்மை அவ்வப்பொழுது
சாம்பாலாய் ஆக்கிவிடுகிறது.//

உண்மை.

மறவாமையும் சுறுசுறுப்பும் சாம்பலிலிருந்து மீட்டு ஃபீனிக்ஸ் என வாழ்வளிக்காதா?

//புதுப்பிக்க இந்த மூளையும் இருக்கா
முயற்சிக்க முண்டம் கூட இருக்கா//

very smart note, bro.

வாழ்த்துகளுக்கு நன்றி.

sabeer.abushahruk சொன்னது…

ஜாகிர்,

எவருடைய எந்த எண்ணங்களும் எழுத்திலோ சொல்லிலோ வெளிக்கொணரப்படும்போது அது புரிந்து கொள்ளபட்டால் மட்டுமே கிரகிக்கப்படும்.

தம் திறமையைக் காட்ட பிறருக்குப் புரியாமல் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை; புரியாமல் போனாலும் புரிந்ததுபோல் கருத்திட்டு நடிப்பதிலும் ஆர்வமில்லை.

என்னான்றே?

கவிதைப் பதிவிற்கு கவித்துவமாகவே கருத்திடும் வாசகர்கள் அதிரை நிருபருக்கே உரித்தான உயர்தர ரசிக வட்டத்தின் சாட்சி.

மெய்சா,


கவிஞர்களால் விமரிசிக்கப்படுவதோ வாழ்த்தப்படுவதோ கவிதைக்கான மிகச் சிறந்த அங்கீகாரம்.

அவ்வகையில் உன் பாராட்டிற்கு மிக்க நன்றி.

Unknown சொன்னது…

Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer Ahmed AbuShahruk,

An amazing poem have the concepts and motivation to make ordinary lives extraordinary. Your thoughts push the minds to be responsible and can make individuals to become inspiring leaders(role models to be followed).

Keep it up brother.

Jazakkallah khairan.

B. Ahamed Ameen from Dubai.

Yasir சொன்னது…

அல்லாஹூ அக்பர் ..சுயபரிசோதனை செய்ய வைக்கும் வரிகள்
கவியின் மூலமும் அச்சத்தை வரவழைக்க முடியும் என்பதை உங்கள் கவிக்காக்கா அவர்கள் நிருபித்து இருக்கின்றார்கள்

//நீர்த்துப்போய் நிலவறையில்
நிரந்தரமாய் கிடத்துமுன்
தீர்ப்பு நாளை அஞ்சி
திருத்தங்கள் செய்ததுண்டா?// அல்லாஹூ அக்பர்

Yasir சொன்னது…

** எங்கள் கவிக்காக்கா - என்று மாற்றிப்படிக்கவும்

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/////நகலெடுக்கத் தகுதிவாய்ந்த
நல்ல பழக்கங்களும்
வார்த்தெடுக்கப் பொருத்தமான
வாழ்வியல் வழக்கங்களும்
உலகுக்கு அறிவிக்க
முன்மாதிரி வடிவங்களாய்
வாருங்கள்
வாழ்ந்து காட்டுவோம்! ////
**********************************************************************************************************
இன்ஷாஅல்லாஹ் முயற்சி செய்வோம்!
நல்லதொரு கவிதைக்கு! வாழ்த்துக்கள்!

sabeer.abushahruk சொன்னது…

Thanks brothers B.Ahmad Ameen, Yasir and Alaudeen for sharing your views on my post.