அதிரைநிருபரில் தொடர்ந்து இடம் பெற்று வரும் சிந்திக்கத் தூண்டும் சித்திரங்களின் வரிசையில் இங்கு இடம் பெற்றிருக்கும் சித்திரங்கள் யாவும் அதன் வண்ணங்களின் பாத்திரங்கள் ! அவை ஒவ்வொன்றும் தனக்கே உரிய நுட்பத்தை மட்டுமல்ல தன்னகத்தே உள்ளடக்கிய தகவல்களோடு பளிச்சிடுகிறது !
முதல் சித்திரம் முதல் நிறைவுச் சித்திரம் வரை உங்கள் மனதில் உதிக்கும் சிந்தனைகளை இங்கே சிறகடிக்க விடுங்கள் !
ஷஃபி அஹ்மது
23 Responses So Far:
அற்புதம் ! அருமை! பாராட்டுக்கள்.
முதல் படம் : "நகரா"
இந்த படத்தைப்பார்த்த்வுடன் நினைவுக்கு வருவது , மறைக்காபள்ளிவாசலின்
இடதுபக்கம் மாடிப்படியின் மேல் டூமில் உள்ள நகராதான் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வரும். மிகப்பழங்கால தொழுகை அழைப்புக்காக உள்ள நகரா.
பழைய துளுக்காப்பள்ளியின் (இன்றைய தக்வா பள்ளி) நகராவும் , எங்கள் இளமைக்கால நினைவுகளை மனதினில் தோன்றச்செய்யும் நகராவாகும்.
யார் ரொம்ப நேரம் நகரா அடிப்பது என்ற போட்டியில் (தொடர்ந்தது அடிக்க வேணும்) நகராவே பதுவாச்செயும் அளவுக்கு அடிக்கும் போட்டி எல்லாம் நடைபெறும். இதில் சாபு கம்பை வேறு ஒளித்து வைத்துவிடுவார் . அவரிடம் கெஞ்சி, பாங்கு சொல்லும் நேரம் வருவதற்கு பத்து அல்லது பதினைந்து நிமிடம் முன்பு கேட்டு வாங்கி வைத்துக்கொள்வது. அவர் பல நிபந்தனைகளுடன் அதை தருவார்.
நிபந்தனைகள் :
1. ஒரு வக்து தொழுகையில் இரண்டு பேருக்கு மேல் அடிக்க அனுமதி இல்லை.
2. இந்த தொழுகைக்கு அடித்தவனுக்கு அடுத்த தொழுகைக்கு கிடையாது.
அடுத்தநாள்தான் அனுமதி.
3. தொழுகைக்கு வராதவனுக்கு நகரா அடிக்க அனுமதி இல்லை. ( தொழுகைக்கு வராதவன் என்று ஓரளவு சாபால் கண்டு பிடுத்துவிடமுடியும் )
4. சண்டை சச்சரவு செய்தால் என்றுமே நகாரா அடிக்க அனுமதி இல்லையென்றாகிவிடும்.
மற்றும் பல நிபந்தனைகளுடன் ( சில ஞாபகத்தில் இல்லை ) கம்பு கைக்கு வரும்.
அபு ஆசிப்.
பள்ளியின் நகரா எம் நெஞ்சை விட்டு நகராமல் உள்ளது.
ஆகாய வானமும்,அழகிய கடலும் சந்திக்கும் இடம் நோக்கி புறப்பட்டதோர் படகு.
புளியோதரையும்,பப்படமும்,ஊறுகாய்,வத்தலும்,தயிரும் பூரிப்புடன் குரூப் போட்டோ எடுக்குது விருந்து உபசரிப்புக்கு முன்.
கார் மேகமும், வெண் முகிலும் வானில் காட்சி தந்து எம் உள்ளத்தில் ஆட்சி செய்யுது.
யாரது வான்வெளியில் சாணை பிடித்தது? நெருப்புப் பொறிகளால் மேகப்புடவை கிழிந்து விட்டதே!
நம் நாட்டில் சாத்தியமே இல்லாத வாகனமேதும் இல்லா அழகிய சாலை.
வரிசையில் நின்று சாராக காலின்றி காத்திருக்கும் பழங்கள்.
அழகிய மஞ்சள் பூவே கையுறையாய் மாறி யாருக்கு இங்கு பிரசவம் பார்க்க?
வண்ண,வண்ண இருக்கைகள் வரிசையாய் நின்றாலும் பஜ்ஜியின் கலர் என்னவோ மஞ்சை மட்டும்.
கடிக்கா வனவிலங்குகள் யாவும் தஞ்சமடையும் குடை ஊஞ்சலில் மட்டும்.
பறவைகளே கூட்டமாய் பறந்து செல்லாதீர். இது தேர்தல் வர இருக்கும் நேரம். பிறகு அரசியல்வாதிகள் உங்களையும் பயன்படுத்திவிடுவர்.
கண்ணாடியை யார் பயங்காட்டியது? இப்படி வியர்த்து விட்டதே!
இலைகளின் குடும்ப போட்டோவை அதன் அனுமதியில்லாமல் யார் இங்கு வந்து வெளியிட்டது?
தம்பி ஷஃபியின் ஃபோட்டோக்கள் எல்லாம் அருமை எழுதத்தான் நமக்கு சரிவர நேரம் கிடைப்பதில்லை.
ஆகா அனைத்து படங்களும் அருமை
நகரா இதை பார்த்ததும் கை துருதுரு என்கிறது அடிப்பதற்கு
அஸ்ஸலாமுஅலைக்கும். முதல் படம் நகரா!ஆனால் நம் நினைவுகள் பின்னோக்கி நகரும் படி செய்கிறது.
குளிர வைக்கும் படங்கள்...
பீச் -ல உள்ள சேர்/குடை மட்டும் கலரா இருக்கு..இது இந்த மாதிரிதான் எடுத்ததா...இல்லை போட்டா எடுத்தபின் பெயிண்ட அடித்ததா :)
ஷஃபியின் புகைப்படங்கள் வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் உள்ளன.
அவற்றை எம் எஸ் எம்மின் கவிதைகள் அலங்கரிக்கின்றன.
(ஒரு வேலை சோலி மிக்க நாளில் பிரசுரித்தமையால் இப்ப வீட்டுக்கு வந்த பிறகுதான் நிதானமாக ரசிக்க வாய்த்தது)
வெல் டன் ஷஃபி
வெல் டன் எம் எஸ் எம்
கண்ணாடியை யார் பயங்காட்டியது?
இப்படி வியர்த்து விட்டதே!
Wow!
முழு கவனத்துடன் நகரா வேகமாக அடிக்கும் போது சிலருக்கு தலையில் இருந்து தொப்பியெல்லாம் கீழே விழும் பாருங்கோ ......அதன் நகைசுவையே தனிதான் ....
3 வது சாப்பாடு போட்டோவில் என்ன சிந்திக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை....எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியம்.
சென்னையை இவ்வளவு அருமையாக எடுத்து இருக்கிறீர்கள்......வாசமில்லா கூவம். தூசியில்லா சாலை..மொத்தமாக சூப்பர் படங்கள்.
இந்த இனிப்பு பதார்த்தங்கள் எல்லாம் நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையில்லா அற்ப காரணத்திற்காக விவாகரத்து செய்துபின் நிரந்தரமாக பிரிந்து வருந்தும் அழகிய மனைவிக்கு ஒப்பாகும்.
நகரா அடித்து அழைத்தும் - தொழ
நகரா ஆட்களுக்கு
நரகே இலக்கு!
sabeer.abushahruk சொன்னது…
நகரா அடித்து அழைத்தும் - தொழ
நகரா ஆட்களுக்கு
நரகே இலக்கு!
----------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். இதுக்கு நிகரா!பகரா! சின்னவரிகளில் வேறு யாரும் கவிதை சொல்லமுடியுமா? என் கவிச்சக்கரவர்த்திக்கே வாய்த்த வரம் இது. அல்ஹம்துலில்லாஹ்.
sabeer.abushahruk சொன்னது…
நகரா அடித்து அழைத்தும் - தொழ
நகரா ஆட்களுக்கு
நரகே இலக்கு!
---------------------------------------------------------------
ஓங்கி அடித்துசொல்லுங்கள். இதை பறை( நகரும் நகரா இது?????)சாற்றுங்கள்.
பறை=சின்ன வடிவ நகரா!இது நகர் எங்கும் நகர்ந்து செய்திகளை பகிர்ந்து வரும், நகரும் நகரா! இது பெரு நகரா? சிறு நகரா ? என பேதம் பார்ப்பதில்லை . ஆனால் இதை பறை சாற்றுபவர்களை(அடிப்பவர்களை)தாழ்த்தி சொல்லாலும்,கல்லாலும் அடிக்கும் சிலர் சாதி! அங்கே எங்கே நீதி? ஒரே வெளிச்சம் தரும் ஜோதி இஸ்லாமே!
பிச்சர் ப்ளஸ் பின்னணி சூப்பரு!
//நகரா அடித்து அழைத்தும் - தொழ
நகரா ஆட்களுக்கு
நரகே இலக்கு!//
டச் !
(நச்... இச்... எல்லாம் சொல்லியாச்சு) ! :)
எட்டு வார்த்தைகளில் தட்டும் குட்டு !
அதெப்படி !?
--------------------------------
//3 வது சாப்பாடு போட்டோவில் என்ன சிந்திக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை....எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். //
பஞ்ச் !
//கண்ணாடியை யார் பயங்காட்டியது?
இப்படி வியர்த்து விட்டதே!
Wow!//
கண்ணாடிக்குள் கவிதையின் கததப்பு !
அதனால்தான் ஒரே பரபரப்பு !
//பறை சாற்றுபவர்களை(அடிப்பவர்களை)தாழ்த்தி சொல்லாலும்,கல்லாலும் அடிக்கும் சிலர் சாதி! அங்கே எங்கே நீதி? ஒரே வெளிச்சம் தரும் ஜோதி இஸ்லாமே!//
கிரவ்னு !
இதுதான் கொடுக்கும் அமைதி !
//பறை=சின்ன வடிவ நகரா!இது நகர் எங்கும் நகர்ந்து செய்திகளை பகிர்ந்து வரும், நகரும் நகரா! இது பெரு நகரா? சிறு நகரா ? என பேதம் பார்ப்பதில்லை . ஆனால் இதை பறை சாற்றுபவர்களை(அடிப்பவர்களை)தாழ்த்தி சொல்லாலும்,கல்லாலும் அடிக்கும் சிலர் சாதி! அங்கே எங்கே நீதி? ஒரே வெளிச்சம் தரும் ஜோதி இஸ்லாமே//
ஆச்சா, கிரவுன்?
வாடிக்கையாளர்களுக்கு முன்னால் விரித்துப் போடும் வண்ணச் சேலைகளைப்போல பரப்பி வைக்கிறீர்கள் தமிழை.
பிறகு அவற்றை பத்திரமாக மடித்து கலிஃபோர்னியாவிலேயே பதுக்கி வைக்கிறீர்கள்.
அதிலிருந்து எடுத்து அம்சமாக அடுக்கி அதிரை நிருபருக்கு துபாய் விலாசத்திற்கு அனுப்பி வைத்தால் குறைந்தா போவீர்கள்?
அலைபாய்கின்றன பறவைகள்...
ஆகாயத்தில் சுனாமியா?
பத்தரின் கைப்பட்டால் தங்க நகை ஜொலிக்கும் எங்க வார்த்தை சித்தரின் கைப்பட்டால் மொழியின் சொற்க்கள் பளபளக்கும்...(உப்பு/புளி போட்டு விளக்கபடும் பித்தளையும் தோற்க்கும் )அப்பப்பா நடுங்கும் குளிரிலும்..எங்களுக்குகெல்லாம் மனதில் இன்பத் தளிர் விட வைக்கும் எழுத்துக்கள் எங்கள் மகுடத்திடமிருந்து..உங்களுக்கும் என் துவா என்றும் உண்டு...துன்பத்தில் இருந்தபோது ஆறுதல் சொன்ன உங்கள் நட்பை என்றுமெ மறக்க முடியாது
இங்கே பதியப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் சிறப்பானவையே..!! என்றலும்.. நகரா மட்டுமே மனதை விட்டு நகரவில்லை..
Post a Comment