சென்றவாரத்தின் கண்களை அலங்கரித்தல் தொடர்ச்சியே இந்த வாரமும் தொடர்கின்றது இது உங்கள் கண்களை அழகாக்கும். இந்த தொடர் பெண்களுக்கு மட்டுமே
கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம்.
பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது.
அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.
கண்களுக்கு தனி கவனம் செலுத்தி மேக் அப் போடுவதால் கண்களின் அழகு அதிகரிக்கும். முகத்திற்கும் தனி பொலிவு கிடைக்கும். கண்களுக்கு போடும் மேக்அப் சாதனங்களை சரியானதாக தேர்வு செய்யவேண்டும்.
கண்மை, ஐ லைனர், ஐ ஷேடோ போன்றவை தரம் வாய்ந்தவையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அலர்ஜியினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.
கண்களுக்கு போடும் மேக் அப் கலர் சரியானதாக இருக்கவேண்டும். உங்களுடைய ஸ்கின் டோனுக்கு ஏற்ற சரியான கலரை தேர்ந்தெடுத்து போடவேண்டியது அவசியம்.
கண்களின் வடிவத்திற்கு ஏற்ப கவனம் செலுத்தி மேக் அப் போடவேண்டும். அப்பொழுதுதான் சரியான அளவில் அழகாய் மேக் அப் போடமுடியும். தரமான மேக் அப் கண்களுக்கு இரவில் திக்காகவும், பகல் நேரத்தில் லைட்டாகவும் மேக் அப் போடவேண்டும்.
அப்பொழுதுதான் இயற்கையான ஒரு லுக் கிடைக்கும். கண்கள் மென்மையானவை அவற்றிற்கு தனி கவனம் செலுத்தி மேக் அப் போடவேண்டும்.
லேட்டஸ்ட் மேக் அப் போடுவதன் இளமையாக, ஸ்டைலாக காணப்படுவீர்கள். முதலில் நல்ல தரமான பவுண்டேஷன் தடவ வேண்டும். பிறகு விருப்பமான நிறத்தில் ஐ ஷேடோ தடவ வேண்டும்.
காலை வேளைகளில் லைட்டான ஷேடுகளிலும் மாலை மற்றும் இரவு வேலைகளில் டார்க் நிறங்களையும் உபயோகிக்கலாம். பிறகு ஐ லைனர் தடவ வேண்டும். இப்போதெல்லாம் திக்காக ஐ லைனர் தடவுவதுதான் பேஷன்.
சிறிய கண்களாக இருந்தால் ரொம்பவும் திக்காகப் போட வேண்டாம். கீழ் பாகத்தில் முழுவதுமாக ஐ லைனர் தடவ வேண்டாம்.
பிறகு மஸ்காரா, காலை வேளைகளில் ஒரு கோட்டும் மாலை வேளைகளில் இரண்டு மூன்று கோட்டுகளும் தடவலாம். மஸ்காராவிலேயே இப்போது பிரவுன் நீலம் மாதிரி நிறங்கள் கூட வந்துவிட்டன. விருப்பமுள்ளோர் அவற்றையும் தடவிப் பார்க்கலாம்.
கடைசியாக காஜல் அதாவது கண் மை. இது கண்களுக்குள்ளே போகக் கூடியது என்பதால் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
மேக் அப்பை கலைக்க: கண்களில் போடப்பட்ட மேக்கப்போடு இரவு தூங்கக் கூடாது. அதை அகற்றி விட்டே தூங்கச் செல்ல வேண்டும்.
கண்களின் மேக் அப் கலைக்கும் போது சோப், சோப் ஆயில் பயன்படுத்தவது கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அதற்கென உள்ள கிளன்சர்ஸ் பயன்படுத்திதான் மேக் அப் கலைக்கவேண்டும்.
தினசரி இரவு தூங்கும் முன்பாகக் கண்களுக்குள் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டால் காலையில் கண்கள் பளிச்சென்று இருக்கும்..
அடுத்து, சாதாரணமான மஸ்காரா உபயோகிக்காமல் Volume Enhancer அல்லது Lash Fantasy போன்ற மஸ்காரா உபயோகித்தால் கண் இமைகள் அழகாக தெரிவதுடன் கண்களும் எடுப்பாக தெரியும்.
Kohl பென்சிலைக் கொண்டு கண்களின் கீழ் அழுத்தமாக மெலிதான ஒரே ஒரு லைன் மட்டும் போடுங்கள். இப்படி அழுத்தமான அதே சமயம் மெலிதான லைன் வேண்டுமென்றால் Kohl pencil ஐ ஒரு பேப்பரில் நன்றாக ஒரு முறை கிறுக்கிவிட்டு பிறகு உபயோகப்படுத்தினால் அழகாக வரும். அதிகமான அடர்த்தியில் Kohl பென்சிலைப் போட்டால் கண்கள் பளிச்சென்று தெரியாது. இன்னும் சிறிதாக தெரியும்.
அழகு குறிப்புகள்:பெண்களின் இளமை கண்களில் தெரியும்!
பெண்களின் அழகைக் குறிப்பிடும்போது கவிஞர்கள் அவளின் கண்களைப் பற்றி கூறத் தவறுவதில்லை. கயல்விழி என்றும், காந்தக் கண் என்றும்,
அத்தகைய அற்புதமான கண்கள் சரியான முறையில் பேணப்படாமல் போகின்ற போது நேருகின்ற கேடுகள் அநேகம். கண்கள் கவனிக்கப்படாமல் விடப்படுகின்ற போது கண்களைச் சுற்றிலும் சுருக்கங்களும், கருவளையங்களும் உருவாகி கண்களை ஒளிகுன்றச் செய்து காலத்திற்கு முந்தியே கண்களுக்குச் சோர்வையும், களைப்பையும் உண்டு பண்ணி மூப்படைந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்...
கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும்.
பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள்.
கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.
சிறிய கண்களைக் கொண்டவர்கள்.. நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷேடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.
இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.
உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு... கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும்.
மேலே குறிப்பிட்ட அணைத்து அழகு குறிப்புகளும் தங்கள் காவன்மார்கள் வழி தவறி போய்விடாமல் தங்கள் கணவன் மார்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கும் பெண்களுக்காக மட்டும் இது உங்கள் கண்களை அழகாக்கும். இந்த தொடர் பெண்களுக்கும் இதற பெண்களுக்கும் தன் கணவன் மார்களுக்கு மட்டும் அழகு செய்து காட்டும் நோக்கத்தில் எழுதப்பட்டது
அடுத்து வரும் தொடரில் கண்களை பாதுகாப்பது பற்றி வரும்
(வளரும்)
அதிரை மன்சூர்
15 Responses So Far:
என்ன மச்சான்,மாஸ்காராவுக்கு விளம்பரம் செய்யும் அட்வர்டைஸ்மென்ட் கம்பெனி நடத்துகிறீர்களா?
இப்ப்டி பிச்சு உதறுறீங்க.
சுருமா இட்ட கண்கள் எப்படி இருக்கும்?விளக்க முடியுமா?
இந்த அத்தியாயத்தில்...
கண்கள் இரண்டும் அல்ல...
கண்கள் திரண்டும் வந்து இருக்கிறது !
தலைப்பு படத்திற்கு கட்சி சாயம் பூசாமல் இருந்தால் சரி ! :) அங்கே பச்சை வெள்ளை கருப்பு இல்லை இருந்திருந்தால் !!?
கண்கள் ரெண்டுக்கும் அழகு சேர்க்கிறீர்கள்!
//தலைப்பு படத்திற்கு கட்சி சாயம் பூசாமல் இருந்தால் சரி ! :) அங்கே பச்சை வெள்ளை கருப்பு இல்லை இருந்திருந்தால் !!?//
அங்கே பச்சைக்கு பதில் சிகப்பு இருக்குதே! அவங்க வலுக்கட்டாயமாக அணைக்கும் கட்சி என்பதாலா?
தம்பி மன்சூர் ! நீங்கள் அருகில் இருந்தால் உங்களை அப்படியே கட்டிப் பிடித்துப் பாராட்ட வேண்டும் போல இருக்கிறது.
எப்படியோ ஆரம்பித்த தொடர் , இவ்வளவு அழகாக பலவித பரிணாமங்களையும் உள்ளடக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது. பாராட்டுக்கள்.
புருஷனை மயக்க இவ்வளவு மையாபோடணும்! ?மை கிய் எதுவும் போடாதபொண்டாட்டிகிட்டேயே எத்தனையோ ஆம்புளைங்க பொட்டிபாம்பா அடங்கி கெடக்குறாங்க. அவங்கட்டே போய் ஐடியா கேட்டா மை வாங்குற காஸு மிச்சம் தானே! எதுக்கு வீண்செலவு?
புருஷனை மசக்க 'மை' சொன்னீங்க! பொண்டாட்டியை மசக்க எப்போ மை சொல்லுவீங்க?
//தினசரி இரவு தூங்கும் முன்பாகக் கண்களுக்குள் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டால் காலையில் கண்கள் பளிச்சென்று இருக்கும்.//
இது போன்ற வீட்டுக்குறிப்பு சமாச்சாரங்களுக்கு எப்போதும் Clinically Proven ஆன research result இருக்க வேண்டும்.
காரணம் Anterior க்குள் எண்ணெய் போய்விட்டால் பார்வைக்கு பிரச்சினைதான். பிறகு கண் அறுவைசிகிச்சைக்கு படித்த டாக்டர்தான் இதை சரி படுத்த முடியும்.
விளக்கெண்ணய் போட்டதால் தேவையில்லாமல் டாக்டரிடம்' விளக்கெண்ணை" என்று திட்டு வாங்க வேண்டி வரும்.
இப்படியோ காலை மாலை இரவு என்றுமேக்அப் போட்டு கலைத்து கொண்டிருந்தால் கணவனுக்கு சோறு ஆக்கி போடுவது யாராம். ( மன்சூர் காக்கா ஹவான் ஹோட்டலை கை காட்ட கூடாது)
கண்கள் இரண்டும் தொடர் உச்சகட்டத்தை நெருங்குகிறதா, கலை கட்டுகிறதே!!!
மச்சான் இன்ஷா அல்லாஹ் சுர்மா இட்ட கண்ணை பற்றி ஓரிரு எப்சோடனில் தொடரும்
///தலைப்பு படத்திற்கு கட்சி சாயம் பூசாமல் இருந்தால் சரி ! :) அங்கே பச்சை வெள்ளை கருப்பு இல்லை இருந்திருந்தால்///
நெய்னா தம்பி
நான் தலையங்கம் டிசைன் செய்யும்போது என் கற்பனையில் ஓடியது காவியமே கட்சியல்ல பார்ப்பவர்கள் கட்சி சாயம் பூசிவிடாமல் இதை ஓவியமாகவே நினைத்துக்கொள்ளட்டும்
எந்த கலரும் எந்த கட்சிக்கும் சொந்தமானது அல்ல அவர்கள் உபயோகிப்பது போன்று நாமு கலரை உபயோகின்றோம்
பாரூக் காக்காவின் பின்னூட்டம் எப்பொழுதுமே கிலுகிலுக்கின்றது
///புருஷனை மசக்க 'மை' சொன்னீங்க! பொண்டாட்டியை மசக்க எப்போ மை சொல்லுவீங்க?//
கக்கா இந்த வயசிலுமா?
///இப்படியோ காலை மாலை இரவு என்றுமேக்அப் போட்டு கலைத்து கொண்டிருந்தால் கணவனுக்கு சோறு ஆக்கி போடுவது யாராம். ( மன்சூர் காக்கா ஹவான் ஹோட்டலை கை காட்ட கூடாது)///
ஆமாம் அப்படி ஒன்னு இருக்கோ ஏற்கனவே பல சீரியல்களினால் அரை வயிறு அதோடு இதையும் சேர்த்துக்கிடுங்கள்
சில்பேருக்கு பொண்டாஇ நல்லா மேக்கப் போட்டு வந்தா சோறு கீறூ தேவைப்படாதே உங்களுக்கு அப்படி யில்லையோ
///தம்பி மன்சூர் ! நீங்கள் அருகில் இருந்தால் உங்களை அப்படியே கட்டிப் பிடித்துப் பாராட்ட வேண்டும் போல இருக்கிறது.
எப்படியோ ஆரம்பித்த தொடர் , இவ்வளவு அழகாக பலவித பரிணாமங்களையும் உள்ளடக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது. பாராட்டுக்கள்.///
இப்றாஹீம் அன்சாரி காக்கா
உங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும் ஜஸாக்கலாலஹ் கைரன்
///கண்கள் இரண்டும் தொடர் உச்சகட்டத்தை நெருங்குகிறதா, கலை கட்டுகிறதே!!!///
சபீர் எப்பொழுதுமே திறமைசாலிதான்
Post a Comment