Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 34 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2014 | , ,


சுர்மா – இத்மித் – குஹ்ல் என்னும் கண்-மை இட்டுக் கொள்வதை வழிபாடாகவே கருதுகிறது இஸ்லாம். அது நபிவழி (சுன்னத்) என்னும் அந்தஸ்த்தில் உள்ள காரியம். அது ஒப்பனையோ கற்பனையோ அல்ல. ஆன்மிகத்தின் அம்சம்.

’இத்மித்’ என்று அரபியில் அழைக்கப்படும் மூன்றாம் ஆண்டிமொனி சல்ஃபைடு பற்றி நபிகள் நாயகம் நயந்துரைத்த மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபி-மொழி:

“உங்கள் அஞ்சனங்களில் சிறந்தது இத்மித். அது பார்வையைத் தெளிவாக்குகிறது, இமையின் முடிகளை வளர்த்துகிறது” (நூற்கள்: சுனன் நஸாயீ #5113, சுனன் அபுதாவூத் #3837).

நபித்தோழர் அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

“நபி (ஸல்) தன் கண்களுக்கு மை இடுகையில் வலக் கண்ணில் மூன்று முறையும் இடக் கண்ணில் இரண்டு முறையும் இடுவார்கள்” (நூல்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா) 

சைக்கிள் கம்பியின் முனையை கூராக்கி சுர்மா டப்பாவுக்குள் தேய்த்து கண்களின் கீழும் இமைகளின் மேற்பரப்பிலும் ஒரு கோடு போடுவர் சில சமயம் கோடு போடும் போது இலேசாக கண்களுக்குள்ளும் சுர்மா தூள் சிதறி விழும் கண்கள் எறிந்து பின்னர் குளிர்ச்சியாக இருக்கும். சுர்மா இடுவது கண்ணுக்கு குளிர்ச்சி .

அந்த காலத்தில் பெரு நாட்களில் பள்ளிவாசல்களில் சில சுர்மா வியாபாரிகள் எல்லூருக்கும் கண்களில் சுருமாவிட்டு விடுவார்கள் பெருநாள் தொழுகை தொழப்போ னவர்கள் ஒவ்வொருவரும் வீடு திரும்பும்போது அவர்களின் கண்கள் எடுப்பாக காட்கியளிக்கும் அதை கானு துணைவியாருக்கோ அளவிலா மகிழ்ச்சியில் துணைவியாரிடமிருந்து கிடைக்க வேண்டியவை அதிகமாகவே கிடைக்கும் இப்பொழுதெல்லாம்  எங்கே ம்.. ஹூம் அந்த சுர்மா வியாபாரிகளை பார்க்கவே முடிவதில்லை

இஸ்மித் என்ற   (கருப்பு) கற்களால் சுர்மா இடுங்கள் அது பார்வையை கூர்மையாக்கும் இமைகளின் முடியை வளரசெய்யும்  என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்  என அறிவிக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்   (நபி ஸல்) அவர்களிடம் சுர்மாகூடு ஒன்று இருந்தது ஒவ்வொரு இரவிலும் இருகண்களிலும் மூன்று தடவை இட்டுக்கொள்வர்கள் என்றும் அறிவித்தார்கள்  நூல் :திர்மிதி 1757

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: எவர் சுருமா தீட்டுகிறாரோ அவர் ஒற்றைப்படையாக தீட்டுவாராக. எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவார்! எவர் (அவ்வாறு) செய்யவில்லையோ அதனால் தவறில்லை. 

கண்களுக்கு சுர்மா இடுவதினால் கண்பார்வையை கூர்மையக்குவதோடு கண் இமை முடிகளையும் வளரசெய்கிறது என்றும் மேலும் நபி (ஸல் ) அவர்களின் காலத்தில் கண்வலிக்கும் கண் நோய்களுக்கும் மருந்தாக இந்த சுர்மா பயன்பட்டிருக்கிறது

இஸ்லாமிய பார்வையில் முதல் தரமான சுர்மா

நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்தபோது, அவருடைய இறைவன் அவரிடம் பேசினான்; அப்போது மூஸா: ‘என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!’ என்று வேண்டினார். அதற்கு அவன், ‘மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!’ என்று கூறினான். ஆகவே, அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியை தோற்றுவித்தபோது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், ‘(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்; ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்” (அல்குர்ஆன்: 7:143)

அன்று கருகிய சினாய் மலை   எகிப்தின்  சினாய் குடாவிலுள்ள ஒரு மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,285 [மீற்றர்] உயரமானதாகும். சூழவுள்ள சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்து காணப்படுகிறது. இந்த மலையிலிருந்து பெறப்பட்ட  கருகிய கற்களையும்   தூள்களை கொண்டும்  யுனானி முறையில் கற்களை மருத்துவ முறையில் தேய்த்து எடுக்கப்பட்டு சுத்தமான முறையில் சுர்மா தயாரிக்கப்படுகிறது இதுவே அன்றைய அரபியர்கள் பயன் படுத்திய முதன்மை தரம் வாய்ந்தவையாகும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது இந்த தயாரிப்பின்                         

மருத்துவ பயன்கள்  ஒவ்வாமை இமைப்படல அழற்சி மற்றும் கண்களை குளிர்விக்கவும் பயன்பட கூடிய ஒரு மருத்துவ  பொருளாக பயன்படுகிறது .

சுர்மா வின் பயன்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும் பொழுது சுர்மா இடுங்கள் அது  கண் பார்வையை கூர்மையாக்கும் என்கிறார்கள் அதுபோலவே இன்றைய ஆராய்ச்சியாளர்கள்  சுர்மாவின் பயன்கள் பற்றி கூறுகையில் சுர்மா தயாரிக்கப் பயன்படும் கலினா சல்பேட்டின் பொதுவான குணம் அசுத்தங்களை சுத்தகரிக்க கூடிய ஒரு தாதுப்பொருள் என்றும் சுத்தமான   சுர்மா இடுவதினால் கண்கள் சுத்தமடைவதுடன் சூரிய கதிர்களால் ஏற்படும் கண் நோய்களையும் போக்கவல்லது கண்நோய்கள் வராமல் தடுக்கும் கண்களுக்கு ஒளியூட்டக் கூடிய ஒரு சிறந்த மருத்துவ பொருள் என்றும் அவர்களது ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்து இருக்கிறர்கள் அரபு நாடுகளிலும் எகிப்திலும் பரவலாக சுர்மா பயன்படுதக் கூடியவர்களின் கண்களில் கண் நோய்கள் இல்லாமல் இருப்பதாகவும்   அறிவித்திருக்கிறார்கள்

இந்த சுர்மா கலினா [ஈயத் தாது]  galena (lead sulfide) மற்றும் சில கூட்டுப்பொருட்களைக்கொண்டு  தயாரிக்கப்படுகிறது ஆரம்பகாலம்  முதல் எகிப்தில் செங்கடலுக்கு அருகில் வெட்டியெடுக்கப்பட்ட Galena  சினாய் மலையில் கிடைக்ககூடிய Galena கொண்டும்  தயாரிக்கப்பட்டு வந்தது  இன்று சிலசமயங்களில் எகிப்து கிராமபுறங்களில்  சில வெள்ளை கார்பனேட், குங்கிலியம் கொண்ட வாசனை பொருட்கள்  சூரியகாந்தி விதைகள் மற்றும் பாதாம் கிளிஞ்சல்களின் புகைக்கரி,ஆகியவற்றின் மூலமும்  தயாரிக்கப்படுகிறது.  இந்தியாவில் ஆயுர்வேத , சித்த மருத்துவத்திலும் சுர்மா தயரிப்பினயும் சுர்மாவின் பயன்களையும் காணமுடிகிறது இம் மருத்துவத்தில்  சந்தனக்கட்டை,மஞ்சள், கரிசலாங்கண்ணி ,ஆமணக்கு எண்ணெய்.  சுத்தமான நெய்  கொண்டு பலவிதமான  பதப்படுத்தி எரியூட்ப்பட்ட புகைகரி மூலம் சுர்மா தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது .

சுர்மா என்பது மிகவும் பழமை வாய்ந்த ஒரு கண்மருத்துவ மற்றும் அலங்கார பொருள் என்றாலும் அலங்காரத்தை விட கண் மருத்துவமே மேலோங்கி இருப்பதை நாம் பார்க்கிறோம் பண்டைய எகிப்தியர்கள் அவர்களின் பாரம்பரிய விசயமாக இதனை கருதினார்கள்  மேற்கு ஆப்ரிக்கா பகுதிகளில்  ஆண்களும் பெண்களும் பயன்படுத்துகிறார்கள் .இந்தியாவில் அதிகமாக பெண்களே பயன் படுதக்க்கூடியவர்களாக இருக்கிறார்கள்

நாம் இடும் சுர்மா முக்கியமாக  தரம் வாய்ந்தக இருக்க வேண்டும் ஒருசமயம் நாம் மலிவான விலையிலும் தரமற்ற சுர்மாவினை இடும் பொழுது அதனுடைய விளைவு மிக பயங்கரமானதாக  இருக்கும் என்று  அறிவியல் ஆய்வாளர்களும் .. ஆராய்ச்சியாளர்களும் மிகவும் வலியுறுத்தி கூறுகிறார்கள்  கலினா அல்லாத சில ததுப்போருட்களின் மூலம் தயாரிக்கபடும்  சுர்மா பயன்படுத்துவதினால் போதை மற்றும்  இரத்த சோகை  கண்நோய்கள் மற்றும் இதன் மூலம் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் …

பண்டைய கால எகிப்தியர்களின்  சினாய் மலையிலிருந்து பெறப்பட்ட  கருகிய கற்களையும்   தூள்களை கொண்டும்  யுனானி முறை தயாரிப்பான சுர்மா முதல் தரமாக இருக்கிறது எகிப்தியர்களின்சுர்மா  இடுவதினால் கண்களுக்கு எந்த தீங்கும் இல்லை எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் .. 

ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். ('இத்தா'வில் இருந்த அவளுடைய கண்ணில் வலி ஏற்பட்டதால்) அவளின் கண்கள் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். எனவே, அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவள் அஞ்சனம் இடவேண்டாம். (அறியாமைக் காலத்தில் கணவன் இறந்தபின்) மனைவி அவளுடைய 'ஆடைகளிலேயே மோசமானதில்' அல்லது 'மோசமான வீட்டில்' தங்கியிருப்பாள். (கணவர் இறந்து) ஒருவருடம் கழிந்து விட்டால் (அவ்வழியாகக்) கடந்து செல்லும் ஏதேனும் ஒரு நாய் மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) எனவே, அவள் நான்கு மாதம் பத்து நாள்கள் கழியும் வரை அஞ்சனம் இட வேண்டாம்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி) (நூல்கள் - புகாரி 5336, 5338, முஸ்லிம் 2975-2977, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ)

கண்களுக்கு சுர்மா இடுவது பார்வையைக் கூர்மையாக்குவதோடு இமைகளின் முடியை வளரச்செய்யும் என்றும்  மேலும், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கண் வலிக்கு மருந்தாகவும் சுர்மா பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் மேல்கண்ட அறிவிப்புகளிலிருந்து அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் தமது மேனியை பராமரிப்பதற்காக பிரத்தியேக ஏதும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார் என அறிவிப்புகள் எவற்றையும் நாமறியவில்லை.

இங்கே குறுப்பிடப்பட்டுள்ள சில கம்பனிகளின் தயாரிப்புகள் பயன்படுத்துபவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது சிறந்த சுர்மா இட்டு சுன்னாவினை பேண அல்லாஹ் அருள் புரிவானாக நபிகளாரின் மருத்துவத்தில் சுர்மா இடுவது பற்றி நபிகளாரின் தோழர்கள் மூலம் நாம் அறிய முடிகிறது இறைதூதராக அனுப்பப்பட்ட நமது கண்மணி நாயகம் ஸல் அவர்களின் வாக்கினை மெய்ப்பிக்கும் வண்ணமாக அவர்கள் காட்டித்தந்த அனைத்திலும் நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது …. சுபுஹகாணல்லாஹ்..

சுர்மா பற்றிய அணைத்து தகவல்களும் நன்றியுடன் பிரபஞ்சகுடில் என்ற தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது

இனி அடுத்த தொடரில் கண் இல்லாதோரின் கல்வி பற்றி தொடரும்

(வளரும்)

அதிரை மன்சூர்

7 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

முன்நாளில் பெருநாள் தொழுகைக்கு பின் ஆண்களுக்கு சுருமா விடுவோர் பள்ளிகளில் நிறைந்து இருந்தார்கள்.இப்பொழுது யாரையும் காணோம்.அப்படியே இருந்தாலும் கண்ணுக்கு மைஎழுத காத்திருந்தால் காலுக்கு யார் கொடுப்பார் செருப்பு ?

sheikdawoodmohamedfarook said...

//கணவன் கண்களில் சுருமாவிட்டு சென்றால் மனைவியரிடமிருந்து கிடைக்க வேண்டியது கிடைக்கும்// சுருமாவும் காதலின்அந்தக்கால S.M.S. தானோ?

Ebrahim Ansari said...

சின்ன வயதில் கடற்கரைத் தெருப் பள்ளியில் பெருநாள் தொழுகையின் போது தக்பீர் முழங்கிக் கொண்டு இருக்கும் போது( மர்ஹூம் ) ஹஜ்ஜு பாய் என்கிற பெரிய தைக்கால் தெருவைச் சேர்ந்தவர் வந்து பெரிய மனிதர்களின் எதிரே அமர்ந்து சுர்மா விடுவார்.

அந்த நினைவு வருகிறது.

பதிவுக்குப் பாராட்டுக்கள்.

sheikdawoodmohamedfarook said...

கண்ணுக்கு மை தீட்டுவது பெண்ணுக்கு அழகூட்டும் கலை யென்றே எண்ணம் இருந்தது.அது கண்ணுக்கு மருந்தாகவும் இருக்கிறது என்பதை இந்தகட்டுரை படித்தபின்பே அறிந்தேன்.இது கி.மு.வில்தொடங்கிஇன்றுவரை.அழியாதுதொடரும்அழகோடுகூடியமருத்துவம். ஆனால்பெண்கள் பலபல வண்ணங்களில் கண்ணுக்குஅஞ்சனம்தீட்டி காணும் காளையர் நெஞ்சுக்குள் ஈட்டியையும்பாச்சுகிறார்கள்.போகப்போக அரசியல் கட்சிக்கொடிகளின் வண்ணங்களும் பெண்களின் கண்ணோரம் தென் படுமோ?

ZAKIR HUSSAIN said...

//( மர்ஹூம் ) ஹஜ்ஜு பாய் என்கிற பெரிய தைக்கால் தெருவைச் சேர்ந்தவர்//

வித்தியாசமான தோற்றத்தை கொண்டவர். நோன்புக்கு சகருக்கு எழுப்புவதும், பிறகு அசருக்கு பிறகு கலக்செனுக்கு வரும் அவர் முன்னாளில் ஒரு மேன்வல் அலாரமாக இருந்தவர்.

இவர்களின் சந்ததியினர் இன்னேரம் நன்றாக படித்து முன்னேறி இருக்க வேண்டும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

கர்மமே கண்ணாய் சுர்மா பற்றிய அலசலுக்கு மச்சான் உங்களுக்கு நன்றி.

Ebrahim Ansari said...

//இவர்களின் சந்ததியினர் இன்னேரம் நன்றாக படித்து முன்னேறி இருக்க வேண்டும். //

படிப்பில் முன்னேறி பதவிகளைப் பெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதித்து அல்லாஹ் உதவியால் நல்ல நிலையில் இருந்து வருகிறார்கள் என்று தகவல்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு