Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல..! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | April 13, 2014 | , ,

அரசியல் களம்
சமீபத்தல் தேர்தல் சூடுச் செய்திகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கான இடையிடையே ஊடகங்களின் மூலம் நம் அனைவருக்கும் எட்டிக் கொண்டிருக்கிறது, இவைகளில் ஒன்றோடு மன்றொன்றாக முன்னால் தமிழகத் தலைமை தேர்தல் தலைமை அதிகாரி நரேஷ் குப்தா வர இருக்கும் தேர்தல் சூட்டிற்கு பக்குவம் சொல்கிறார் இந்தப் பக்குவமான உரையாடல் .பிரபல வார இதழ் ஆனந்த விகடனில் 2011-ம் வருடம் வெளிவந்தது, ஆகவே (நன்றி ஆனந்தவிகடன்), இதனை கொஞ்சம் வாசிச்சுடுங்களேன்... அரசியல் களம் சூடாக இருக்கும் என்பதால் இடையிடையே குளிரவைக்கும் குதுகலமும் பதிவுக்குள் கொண்டு வந்திடுவோமே !

ஏப்ரல் 24.. என்று தமிழகத்தில் ஒரே நாளில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் என்றதுமே, கடந்த சட்டமன்றத் தேர்தல் அதற்கு முன்னர் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தல் பக்கம் நம் நினைவுகள் திரும்புவதைத் தவிர்க்க முடியவில்லை. வழக்கம்போல் இந்த முறையும், அள்ளி வழங்கும் வைபோகங்களும் அராஜக அத்து மீறல்களும் தமிழகத் தேர்தலில் கரை புரண்டு ஓடும் வாய்ப்பு இருக்கிறது. ஐந்து வருட ஆட்சியை மனதுக்குள் அசைபோட்டு, நியாயத் தராசை நெஞ்சுக்குள் ஆடவிட்டுக் கொண்டு இருக்கும் வாக்காளன், இந்தத் தேர்தலில் ஆற்ற வேண்டிய கடமை என்ன?

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நரேஷ் குப்தா பக்குவம் சொல்கிறார்...

''ஒவ்வொரு வாக்காளரின் முதல் கடமை, வாக்காளர் பட்டியலில் தங்க ளின் பெயர் இருக்கிறதா என்பதைஉறுதி செய்வதுதான். வாக்களிக்கும் ஆர்வமும் அக்கறையும் மட்டும் இருந்தால் போதாது. முறைப்படி வாக்காளர் அடையாள அட்டை பெற்று, நமக்கான வாக்கு உரிமையை நாம் பெற்றிருக்க வேண்டும். நமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா, இல்லையா என்பதை நாம் இணையதளம் மூலமே தெரிந்துகொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், இப்போதும் தாமதமாகி விடவில்லை. உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேருங்கள்.

வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில், அதிகாரிகள் அந்த வேலையில் தீவிரமாவதற்குள், வாக்காளர் பட்டியலில் நமது பெயரைச் சேர்ப்பது அவசியம். காரணம், நம் ஒவ்வொருவரின் வாக்கும் அந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது. 'வாக்களிப்பது புனிதமான கடமை’ என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். 1920-லேயே 'யங் இந்தியா’ புத்தகத்தில் வாக்களிக்கும் அவசியம் குறித்து மகாத்மா காந்தி வலியுறுத்தி இருக்கிறார். ஐந்து வருட அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியை நமது விரல் நுனிக்குக் கொடுத்திருக்கிறது ஜனநாயகம். 'என்னை யார் ஆள வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன்’ என்கிற உறுதிமொழியை ஒவ்வொரு வாக்காளரும் தங்களது தீர்க்கமான தீர்மானம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.

சமீப காலமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பதிவாகும் வாக்குகள் குறைவாகி வருகின்றன. 'க்யூவில் நிற்க வேண்டுமே’ என்கிற சலிப்பிலும், 'இன்றைய விடுமுறையை வேறு வேலைக்காகப் பயன்படுத்தலாமே’ என்கிற அக்கறையற்ற ஆசையிலுமே பலர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வது இல்லை. சினிமா தியேட்டரில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி வந்து இருக்கிறோமா? தடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம் வந்து விடுகிறோமா? ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக ஐந்து மணி நேரம் கூடக் காத்துக் கிடக்கலாம். பொறுமை இல்லாமல் புறக்கணிப்பு காட்டுபவர்களுக்கு இந்தப் புரிதல் அவசியம்.

இன்னும் சிலரோ, 'போட்டியிடுபவர்களில் ஒருவரும் சரி இல்லை’ என்கிற ஆதங்கத்தில் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். இன்றைய நிலையில், ஒரு தொகுதியில் 5 முதல் 15 பேருக்கும் குறையாத வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஒருவர் சரி இல்லை என்றாலும், இன்னொருவர் சரியானவராக இருப்பார் என நம்பலாம். அப்படி யாருமே நம் மனதுக்கு ஒவ்வாதவர்களாக இருந்தாலும், நமது புறக்கணிப்பைப் பதிவு செய்யும் விதமாக 49 ஓ படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்! [தற்போது புதிதாக வாக்கு பதிவு இயந்திரத்தில் பொத்தான் சேர்க்கப்பட்டுள்ளது அதில் Non of the Above - NOTA என்று இணைக்கப்பட்டுள்ளது]

'நம் ஒருவருடைய வாக்கால், எல்லாம் மாறிவிடுமா?’ என்கிற தயக்கமும் பலருக்கு இருக்கிறது. நாம் நினைப்பதையே ஒவ்வொரு அரசியல்வாதியும் நினைத்தால், நம் வீடு தேடி வருவார்களா? இன்றைய நிலையில், பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் மிகச் சொற்பமான எண்ணிக்கையில் அமைகிறது. 'நம் வாக்குதான், நாட்டின் போக்கு’ என்பதை இத்தகைய நிகழ்வுகள் நமக்கு அப்பட்டம் ஆக்குகின்றன. அப்படி இருந்தும் வாக்களிக்கும் ஆர்வம் பெரிய அளவில் பெரு காதது ஏனோ?!

தேர்தல் களத்தைச் சுற்றி வந்தவனாகச் சொல்கிறேன்... இன்றைய அரசியலில் அரசியல்வாதிகள் அதிகாரத்துக்காக எதையும் செய்கிற அளவுக்குத் துணிந்து விட்டார்கள். அதற்காகத் தேர்தல் விதி களை மீறி பணத்தை இறைக்கிறார்கள். வாக்காளர்கள் இதற்கு ஒருபோதும் மயங்கக் கூடாது. பணத்துக்கும், பிரியாணிப் பொட்டலத்துக்கும், மது பானத்துக்கும் வாக்குகளை அடகுவைக்கும் நிலை இனியும் தொடரக் கூடாது. 'எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் பொட்டில் அடித்தாற்போல் புரியவைக்க வேண்டும்.

முன்பெல்லாம் அரசியல்வாதிகள் ஓட்டு கேட்டு வரும்போது, 'எங்கள் பகுதிக்கு மருத்துவமனை வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், குடிநீர்க் குழாய் வேண்டும்’ என்று கோரிக்கை வைத்த வாக்காளர்கள் இப்போது, 'பணம் வேண்டும்’ எனப் பகிரங்கமாகவே கேட்கிறார்கள். பல இடங்களில், 'அந்தக் கட்சி வேட்பாளர் அதிகப் பணம் கொடுத்து இருக்கிறார். நீங்கள் குறைவாகக் கொடுக்கிறீர்களே?’ என வற்புறுத்திப் பணம் கேட்கும் நிலையும் நீடிக்கிறது. வாக்காளர்களின் மனப்போக்கு ஏன் இந்த அளவுக்குப் புரையோடிப் போனது என்று எனக்கு அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருக்கிறது!

இந்த நேரத்தில், ஒவ்வொரு வாக்காளரும் உணர வேண்டிய உண்மை... 'இப்படி எல்லாம் விரட்டி விரட்டிப் பறிக்கப்படும் நம் ஒவ்வொருவரின் வாக்கும் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கும்’ என்பதைத்தான்!

ஒரு வாக்கை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான் அதற்குப் பொறுப்பு. வேட்புமனு தாக்கல் செய்யும்போதே ஒவ்வொரு வேட்பாளரின் கல்வித் தகுதி, சொத்து விவரம், வழக்கு நிலுவை விவரம் என அனைத்தையும் அஃபிடவிட்டில் சொல்கிறார்கள். அதுபற்றி எல்லாம் வாக்காளர்கள் அறிந்து, தெளிந்து நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இன்றைய நிலையில் பெரும்பாலான வாக்காளர்கள் கட்சியையும், தலைவரையுமே மனதில் வைத்து வாக்கு செலுத்துகிறார்கள். 'வேட்பாளர்களில் யார் தகுதியானவர்?’ என்பதை ஆராய்ந்து, அதன்படி வாக்களிப்பதுதான் அரசியல் நலத்துக்கு வழிவகுக்கும். தரமான ஆட்களைத் தேர்வு செய்யும் பக்குவமும் அக்கறையும் நமக்கு உண்டாகும் நாளில், நிச்சயமாக இந்த தேசமே புத்துணர்ச்சி கொள்ளும்!

அக்கப்போரும், அமளி துமளிகளும் நிரம்பிவிட்ட அரசியலில் தர்மத்தை நிலைநாட்டும் கடமை ஒவ்வொரு வாக்காளருக்கும் இருக்கிறது. 'இவ்வளவு அழுக்கை அகற்ற ஒரு துளி போதும்’ என சலவை விளம்பரங்களில் வருமே... அதே போல் நம் விரலில் வைக்கப்படும் ஒரு துளி மையால், சமூக அழுக்கை நிச்சயம் சலவை செய்துவிட முடியும், அதை நாம் நியாயமாகப் பயன்படுத்தும் பட்சத்தில்!''

அன்றைய வலைமேய்ச்சலில் சிக்கியதை சூழலுக்கேற்ற சிறிய மாற்றத்துடன் பதிக்கப்பட்டுள்ளது.
அபுஇப்ராஹிம்

11 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

//'வேட்பாளர்களில் யார் தகுதியானவர்?’//

Nobody,NOTA is the best chance.

adiraimansoor said...

//
அக்கப்போரும், அமளி துமளிகளும் நிரம்பிவிட்ட அரசியலில் தர்மத்தை நிலைநாட்டும் கடமை ஒவ்வொரு வாக்காளருக்கும் இருக்கிறது. 'இவ்வளவு அழுக்கை அகற்ற ஒரு துளி போதும்’ என சலவை விளம்பரங்களில் வருமே... அதே போல் நம் விரலில் வைக்கப்படும் ஒரு துளி மையால், சமூக அழுக்கை நிச்சயம் சலவை செய்துவிட முடியும், அதை நாம் நியாயமாகப் பயன்படுத்தும் பட்சத்தில்!''////
மிக தெளிவான வார்த்தை இதை ஒவ்வொருவரும் இதை கடைபிடித்தாலே தேர்தலும் அரசியலும் புனிதம் பெற்றுவிடும்

adiraimansoor said...

மச்சான் நீங்கள் சொல்வது போன்று நோட்டொவுக்கு போட்டால் அது ஜெயலலிதாவுக்கு போடுகின்ற மாதிரிதான் அவளை ஓட ஒட விரட்ட வேண்டுமென்றால் அவளின் எதிரிக்குத்தான் போடவேண்டும்
பிஜே செருப்படி கொடுத்துவிட்டார்
தற்போ பிஜே யும் 14 ஆம் தேதி எடுக்கும் முடிவில் பெறும்பாலும் திமுகவுக்கு ஆதரவு அளிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது அப்படி ஆதரவு அளித்தால் முஸ்லீம் இயக்கங்கள் எல்லாம் ஓரளவு ஓரணியில்
தற்போது உள்ள நிலவரத்துக்கு விஷப்பாம்பை அடிக்க இந்த ஆப்ஷனை தவிற வேறு இல்லை
திமுக மீது ஓரளவு நம்பிக்கை இருக்கின்றது
நரபலி மோடிக்கு ஆதரவு கொடுக்க மாட்டார் என்று
வேறு ஆப்ஷனே இல்லை

sheikdawoodmohamedfarook said...

2004வாக்கில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் வாக்களித்தேன்.அடுத்து வந்தநாடாளுமன்ற சட்டமன்றபஞ்சாயத்துதேர்தல்களில்வாக்காளர்பட்டியலில் என்பெயர்இல்லை.தொகுதிபஞ்சாயத்து கவுன்சிலரை தொடர்பு கொண்டபோது உங்களை பற்றியமுழுவிபரங்களையும்கொடுங்கள்நான்பட்டுக்கோட்டைR.D.O. ஆபிஸுக்குபோய்எல்லாம் முடித்து தருகிறேன் என்றார்.போனவர் போனவர்தான்.இது இப்படி இருக்ககடந்த19.08.2008 அன்றுகாதர் மொஹிதீன்பெண்கள்மேல்நிலைபள்ளியில்வாக்காளர்பட்டியலில்விடுபட்டுப்போன என்பெயரைசேர்க்க முறையான formsஎல்லாம் கொடுத்தேன்.ஆனால் அடுத்துஅடுத்துவந்த பலதேர்தல்வாக்காளர்பட்டியலில்என்னைக்காணோம் கொன்றுபுதைத்துவிட்டார்கள்.[இன்னாளிலாஹி][இந்நாளிலும்நான்இல்லாகிப்போனேன்]அப்பொழுதும் நரேஷ்குப்தா தான் தலைமைதேர்தல் அதிகாரியாய் இருந்தார்.[தொடரும்]

இப்னு அப்துல் ரஜாக் said...

//பிஜே செருப்படி கொடுத்துவிட்டார் //
சரியாக சொன்னீர்கள் மச்சான்.
பீ ஜேவின் இந்த அறிவிப்பு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் பால் வார்க்கும் செய்தி.என்னைப் பொருத்து,காங்கிரசுக்கு அவர் கை காட்டலாம்.எம் ஆசிரியர் பீ ஜே அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.

sheikdawoodmohamedfarook said...

தலைமை தேர்தல் அதிகாரிகள் மக்களின் கடமை பற்றி T.V.யில் முகத்தை காட்டிபேசி விட்டால் மட்டும் போதாது.தன் கீழ பணியாற்றும் பணியாளர்கள் தங்கள் கடமையையே ஒழுங்காகசெய்யவும் போதனை செய்ய வேண்டும்.2004 ஆண்டுவாக்கில் வாக்களித்த நான் இன்றுவரைமூச்சைவிடாமல் மூச்சுவிட்டுகொண்டிருந்தும் என்னை வாக்களார் பட்டியலில் வெட்டிவிட்டார்கள்.இருந்தும் சென்ற மாதம் விடுபட்டுபோனவர்களை சேர்க்கும் பணி தொடர்ந்தது.தேவையான formகளோடுஅவர்கள் குறிப்பிட்ட இடத்திற்க்கு சென்றேன். அங்கே என் தொகுதி வார்டுக்கான லிஸ்ட் இல்லை.உங்கள் வார்டுகவ்ன்சிலரிடம் சொல்லுங்கள் என்றார்கள்.அவருக்கு டெலிபோன் போட்டுசொன்னதும் ''நான் வெளியூரில் இருக்கிறேன். நீங்கள் பட்டுக்கோட்டை R.D.O.ஆபிசுக்கு போய் காரியத்தை முடித்துக்கொள்ளுங்கள் என்றார்.யோசனை பண்ணிபார்தேன்ஊரிலேயே போக்குவரத்துசெலவு ரூபாய் நூறாகிவிட்டது பட்டுக்கோட்டைபோகவர ரூபாய்500 ஆகும .ஏதோ ஒருசுயநல நாயே நமக்கு எஜமானன்ஆக்க காசையும் செலவு பண்ணி நாயாகவும் அலைய வேண்டுமென்று எல்லாவற்றையும்தூக்கிவீசிவிட்டுகால்மேல்கால்போட்டு''ஏன்டா இந்த நாய்பயல் ஊருக்கு வந்தோம்!'' என்று மண்டையில் அடித். து.கொண்டிரிக்கிறேன். என்னை பொறுத்தவரையில் நம்கையில் ஜனநாயகதாய் கொடுக்கும்ஓட்டு சீட்டு டாயலேட்டில் துடைதுப்போடும் tissueவிடரெம்ப கீழானதே.நமக்கு யெனநாமே ஒரு எஜமானனை தேர்ந்து எடுத்துக்கொள்ளும் அடிமைபுத்தியே உலகுக்கு வெளிச்சம் போட்டுகட்டும்தினமே தேர்தல் தினம்.

Ebrahim Ansari said...

பிஜே அவர்களின் முடிவை வரவேற்று பலதரப்பிலும் பாராட்டுதல்கள்.

அடுத்து யாருக்கு ஆதரவு என்பதை வெற்றி பெரும் கட்சிக்கு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றே எதிர்பார்க்கிரார்கள்.

Unknown said...

பணம் என்னும் அழுக்குப்பிடித்த வாக்காளனின் அழுக்கைப்போக்கும் ஏரியல் பொவ்டர் தான் இந்த்தப்பதிவு.

அபு ஆசிப்.

sheikdawoodmohamedfarook said...

பி.ஜே.விலகிய பின்னணி தெரியுமுன்னே நாமாகவே ஒரு யூகம் செய்வது சரியா? பொறுத்துஇருந்து பார்க்கலாமே!

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

'பொன்' ஆன வாக்கு


: http://www.satyamargam.com/articles/common/2320-we-dont-sell-our-vote.html

Ebrahim Ansari said...

அவசரப் பட்டு ததஜ ஆதரவு வாபஸ் விஷயத்தில் கருத்திட வேண்டாம். நாளை வரை பொறுத்திடுங்கள்.

இந்த ஆதரவு வாபஸ் விஷயத்தில் ஒரு பெரிய சதி இருப்பதாக ஒரு கருத்துக் கசிவு ஏற்பட்டு இருக்கிறது.

அது உண்மையாக இருக்குமானால் நமது மகிழ்ச்சிகளுக்கு அர்த்தம் இல்லை.

அரசியல் சதுரங்கத்தில் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்துவதாக அந்த சதி அமையலாம். அவ்வாறு அமையாதிருக்க து ஆச செய்வோமாக! . அல்லாஹ் பாதுகாப்பானாக!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு