Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை முன்னிட்டு - சமாதானக் கூட்டம் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | April 30, 2014 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று 30.4.2014இல் தொடங்கும் காட்டுப்பள்ளி தர்கா கந்தூரியைத் தடை செய்ய வேண்டி, மாவட்ட ஆட்சியருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் மனு ஒன்றை அனுப்பியது (இணைப்பு1).



அதைத் தொடர்ந்து நேற்று (29-04-2014) மாலை 4 மணி அளவில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் 'சமாதானக் கூட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டு, கந்தூரிக் கமிட்டியினரும் கந்தூரியை எதிர்க்கும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினரும் அழைக்கப்பட்டிருந்தோம்.

கலந்து கொண்டவர்கள்:

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக
1. எம்.பி. அஹ்மத் (அமீர்)
2. ஜமீல் எம் ஸாலிஹ் (செயலர்)
3. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
4. கமாலுத்தீன் (இஸ்லாமியப் பயிற்சி மையப் பொறுப்பாளர்)
5. அஹ்மது ஹாஜா
6. மாஜுதீன்

கந்தூரிக் கமிட்டி சார்பாக
1. எம்.எம்.எஸ் ஷேக் [அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு கமிட்டித் தலைவர்]
2. சுல்தால் அப்துல் காதர் (36)
3. மஸ்தான் கனி
4. பத்ருஸ் ஸமான் ( மதார் சா)
5. அப்துல் வாஹித் (கித்தில்)





தொடக்கமாக, கோட்டாட்சியரின் முன்னுரையை அடுத்து எங்களிடம் கருத்துகள் கேட்டபோது, தாருத் தவ்ஹீத் தொடங்கப்பட்ட 1982லிருந்து 32 ஆண்டுகால தாருத் தவ்ஹீதின் பிரச்சாரங்களில் இதுவரைக்கும் எந்தவொரு சிறு அசம்பாவிதமும் நடந்ததில்லை என்பதையும் சட்டம்-ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இதுவரை நாங்கள் நடந்துகொண்டதில்லை என்பதையும் தகவலாகப்  பதிவு செய்துகொண்டு, "எங்களுடைய கருத்துகளைக் கேட்டுப் பதிவு செய்து அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்று நகரக் காவல்துறை ஆய்வாளர் எங்களை அழைத்தார். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது; அதற்குத் தடை வேண்டும் என்ற எங்களுடைய உறுதியான கருத்துகளை ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவிட்டோம்" என்றும் சுட்டிக் காட்டினேன். "லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் உங்களுக்கே தெரிந்திருக்கும். வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று அதற்குப் பொருள். கந்தூரியை வழிபாடு என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். கந்தூரிக் கமிட்டியினரும் வழிபாடு என்றே குறிப்பிடுகின்றனர்.  இரண்டு பேருக்கு வழிபாடுகள் என்பது இஸ்லாத்தில் கிடையாது. உள்ளூரிலும் வெளியூரிலும் வசூல் செய்து, ஒருவருடைய இறந்த தினத்தை மேள தாளங்களோடு மகிழ்ச்சியோடு கொண்டாடுவது என்பது கந்தூரிக் கமிட்டியாரின் வழக்கமாக இருக்கிறது. இது எவ்வளவு மோசமான செயல்?

சட்டம்-ஒழுங்கைப் பற்றி மட்டும் உங்களுக்குப் பிரச்சினை. எங்களுடைய பிரச்சினை என்னவென்றால், கந்தூரி என்பது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்பதை நிறுவச் சொல்லுங்கள்; நாங்களும் சேர்ந்து செய்கிறோம். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை நாங்கள் நிறுவுகிறோம்; நிறுத்திவிடச் சொல்லுங்கள்" என்று தீர்வு சொன்னேன்.

நாகூரிலும் அஜ்மீரிலும் முத்துப்பேட்டையிலும் போய் நிறுத்திவிட்டு வரும்படி அதிமேதாவித்தனமான பதிலை மதார் சா வைத்தார்.

"நாகூர் கந்தூரியைப் பற்றி நாகப்பட்டின ஆர்டிஒ ஆஃபிசிலும் முத்துப்பேட்ட கந்தூரியைப் பற்றி திருவாரூர் ஆர்டிஓ ஆஃபீஸிலும் பேச்சுவார்த்தை நடக்கும். பட்டுக்கோட்டை ஆர்டிஓ ஆஃபீஸில் நாம் உட்கார்ந்திருப்பது அதிராம்பட்டினத்துக் கந்தூரியைப் பற்றிப் பேசுவதற்காக" என்று விளக்கினேன்.

கந்தூரியை நிறுத்துவதற்குத் தமக்கு அதிகாரம் இல்லை என்று கோட்டாட்சியர் கூறிவிட்டு, கந்தூரியை அமைதியாக நடத்துவதற்கு உங்களுடைய கண்டிஷன் என்ன? என்று கேட்டார். அதற்கு, "கந்தூரியே கூடாது என்பதுதான் அவர்களுடைய கண்டிஷன்" என்று காவல்துறை ஆய்வாளர் பதிலளித்தார். நாங்கள் ஆமோதித்தோம்.

எம்.எம்.எஸ் ஷேக் அவர்கள் [அதிரை அனைத்து முஹல்லா கமிட்டி தலைவர்], கந்தூரிகள் ஆல் ஓவர் இந்தியாவில் நடப்பதாகக் குறுக்கிட்டார்.

அதுவரை பொறுமையாக இருந்த அமீர் அவர்கள் தம்மை ஆங்கிலத்தில் கோட்டாட்சியரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, "இந்தியா முழுக்கவும் நடந்தாலும் கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு முரணானது" என்பதை ஆங்கிலத்தில் எடுத்துக் கூறினார். கந்தூரி எதிர்ப்பாளர்களின் வீட்டுக்கு எதிரே வேண்டுமென்றே பாட்டும் கூத்தும் நெடிய நேரம் நடத்துவது வழக்கமாயிருக்கிறது என்ற அமீரின் குற்றச்சாட்டுக்கு, "பெண்கள் கூட்டம் நின்றால், கூத்து நடக்கத்தான் செய்யும்" என்று மஸ்தான் கனி கூறியதும் ஹாஜாவுக்குப் பற்றிக் கொண்டது. மறைந்த சகோ. அபுல்ஹஸன் அவர்களின் வீட்டுக்கு எதிரே நடந்த நீண்ட நேரக் கூத்தும் அதற்கு எதிர்வினையாக மிளகாய்த் தண்ணீர் அபிஷேகமும் நடத்தப்பட்டதை எடுத்துச் சொல்லி, யார் வீட்டுப் பெண்கள்? முஸ்லிம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்கு எதிரே கூத்துப் போடுவதுதான் வழிபாடா? அப்படி நடந்தால் கலவரம் ஏற்படாதா? எனப் பொங்கிவிட்டார். கோட்டாட்சியர் அமைதிப்படுத்த முயன்றபோது, தான் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே மேலத்தெரு கந்தூரி ஊர்வலத்தில் கொலைவெறியுடன் தாக்கப்பட்டதையும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் பாதிக்கப்பட்டு இன்றுவரை ச்சார்ஜ் ஷீட் போடப்படாமல் காவல்துறை இழுத்தடிப்பதையும் தான் ஹஜ்ஜுக்குப் போவது தாமதப்படுவதையும் எடுத்துரைத்தார்.

மேலத்தெருவில் கந்தூரிக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதாக நிஜாமுத்தீன் கூறியபோது எம்.எம்.எஸ் ஷேக், மேலத்தெரு கமிட்டிதானே கந்தூரி நடத்துகிறது? மேலத்தெருவில் எதிர்ப்பு எப்படி வரும்? எனக் கேட்டார். அதற்கு, "நாளைக்கு மேலத்தெரு ஜமா அத் கூட்டத்தைக் கூட்டுவோம். அப்போது தெரியும் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதென்று" என்று நிஜாமுத்தீன் புள்ளி வைத்தார். கந்தூரி முடிந்து கூட்டுவோம் என்று எம்.எம்.எஸ் ஷேக் பதிலளித்தார். நிஜாமுத்தீன் விடாமல், "நாளைய கந்தூரிக்கு எதிர்ப்பு எவ்வளவு எனத் தெரிந்துகொள்வதற்குக் கந்தூரி முடிந்தபின் கூடி என்ன பிரயோஜனம்?" என்று எதிர் கேள்வி கேட்டபோது பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத பேச்சுகள் குறுக்கிட்டன.

அல் பாக்கிதத்துஸ்ஸாலிஹாத் பள்ளி அருகில் பதட்டம் இருப்பதை நிஜாமுத்தீன் பதிவு செய்தபோது, மதார் சா "அவர்களில்தான் யாராவது சிலர் பிரச்சனை உண்டாக்குவார்கள்" எனப் பழியை எங்கள் மீது சுமத்தப் பார்த்தார். அதற்கு, "L&O பிரச்சனை வரக்கூடாது என்பதால்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளோம். L&O problem உண்டு பண்ணிதான் தீர்வு என நாங்கள் நம்பினால் அதையும் நாங்கள் செய்வோம்.  இரண்டாம் தர வேலை செய்ய மாட்டோம். நீங்கள் அதை விரும்பினால் அமைதிப் பேச்சு வார்த்தை மெத்தேடை மாற்றிக்கொள்வோம். எப்படி வசதி?" என நிஜாமுத்தீன் எதிர்க் கேள்வி வைத்தார்.

"மழையில்லாமல் செடிகளெல்லாம் கருகிக் கிடக்கின்றன. எங்கள் வீட்டுக்கு அருகில் வைத்துதான் வெடி விடுகிறார்கள். தீ விபத்து நடப்பதற்கு முன்னெப்போதையும்விட இந்த வறட்சி காலத்தில் வாய்ப்புகள் அதிகம்" என்பதை மாஜுதீன் பதிவு செய்தார்.

இறுதியாக சமாதானக் கூட்ட நடவடிக்கைகள் ப்ரிண்ட் செய்து வந்தது.

அதிலிருந்த 'மேலத்தெரு ஜமாஅத்தினரும்' என்பதை நிஜாமுத்தீன் எதிர்த்ததில் அது முழுதும் நீக்கப்பட்டது. காட்டுப்பள்ளிவாசல் என்பது காட்டுப்பள்ளி தர்கா என்று திருத்தப்பட்டது. கடைத்தெரு சாலையின் வடக்குப் பக்கம் முழுமையாகக் கந்தூரி ஊர்வலம் போகாது என்று கந்தூரிக் கமிட்டியினரால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட உறுதியை எழுத்தில் (ஆறாவது ப்பாயிண்ட்டாக) இணைக்க வலியுறுத்தினோம் (இணைப்பு).


SEC-ADT
மின்வாரியத்துக்கு அதிரை தாருத் தவ்ஹீதின் கடித நகல்

22 Responses So Far:

Anonymous said...

கந்தூரி தடை செய்ய வேண்டியது அவசியம்,ஆக்கபூர்வமான காரியங்களில் ஜமாஅத் செயல் படாமல் அனாச்சாரங்களுக்கு துணைபோவது வெட்ககேடு,இணைவைத்தல் மட்டுமின்றி நவீன விபச்சாரத்தின் நுழைவுவாயிலாக கந்தூரி நடத்தபடுகிறது.முதலில் ஜமாஅத் நிர்வாகத்தில் சீர் செய்ய வேண்டும்,கந்தூரி நடத்துவதுடன் இரண்டாம் தர காட்சியாக பாட்டு கச்சேரி நடத்தி தவறான நடத்தைக்கு வழிவகுக்கும் இதன் நிர்வாகிகளை புறந்தள்ள வேண்டியது அவசியம்.

இம்ரான் கரீம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரை தாருத் தவ்ஹித் மற்றும் அதன் நிர்வாகிகள் செய்துவரும் தொடர் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய துஆச் செய்கிறோம் !

தொடர்ந்து அசைத்துக் கொண்டே இருக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் !

இதுநாள் வரை கந்தூரி போதையர்கள் அடாவடியாக அதிரையின் பிரதான தொருக்களில் ஊர்வலம் என்ற பெயரில் ஆடிய கொட்டம் இந்த வருடம் கோட்டாட்சியர் துரித நடவடிக்கையால் அந்த தெருக்களில் செல்ல தடை !

இது முதல் படி, தொடரும் இவ்வகை அடிகள் !

சகோதரர்களின் முயற்சி வெற்றியே !

மேலத்தெரு சகோதரர்களுக்கு மனமார்ந்த பாரட்டுகள், தொடர்ந்து நீங்கள் எதிர்த்து வந்தாலும், அந்த கூட்டத்தில் நீங்கள் துணிவுடன் வைத்த சவாலை ஏற்று அந்த ஜமாத்து சகோதரர்கள் கந்த்தூரி நிலைபாட்டை அவசியம் அறிவிக்க வேண்டும் !

எவ்வளவோ நல்ல விஷயங்களில் முன்னேற்றம், முன்னோடிகளாக திகழும் மேலத்தெரு ஜமாத் இந்த விஷயத்தில் தீவிரமாக தடை செய்ய முன்வாருங்கள் !

இப்னு அப்துல் ரஜாக் said...

தாருத் தவ்ஹீத் வழி காட்டுகிறது.மற்ற அமைப்புக்கள்,ஊர்கள் இதையே செய்யலாம்.பிரச்சாரம் மூலமும்,இப்படி அரசு அதிகாரிகள் மூலமும் கொண்டு சென்று ஷிர்க் கட்டிடத்தை அரசு உதவியுடன் அகற்றிட உறுதி மொழி ஏற்றுக் கொள்வோம்.

அறிஞர். அ said...

நல்ல முயற்சி. தேர்தல் நேரத்தில் அரசு வீடியோ எடுப்பது போன்று, ஊர்வலத்தை அரசே வீடியோ எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கலாம்.

எந்த மொழியில் பேசினார்கள் என்பதை எல்லாம் பகிர்வது பொருத்தமில்லாதது. கோட்டாட்சியருக்கு ஆங்கிலம் தெரியுமா?

அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஏன் உருப்படாமல் போய்விட்டது என்பது இப்பொழுதுதான் எனக்கு புரிகிறது.

sheikdawoodmohamedfarook said...

//ஒரு RSS தர்காவை இடித்தால் சம்மதமே// சகோதரர் இப்னு அப்துல்ரசாக் சொன்னது.இது எலியை விரட்ட வீட்டைகொள்ளி வைத்த கதையாக முடியும்.இந்தப்பணிக்கு RSS அழைத்தால் பக்கத்தில் ஜூம்மா பள்ளிமட்டுமல்ல இந்தியாவிலுள்ள எல்லா பள்ளிகளும் ராமர்கோவிலாக மாறும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

மத்தியில் எந்த அரசு அமைந்தாலும்,இந்தியாவெங்கும் உள்ள தர்காக்களை அரசே இடித்து,தரை மட்டமாகி,அங்கு பள்ளிக் கூடங்கள் மருத்துவ மனைகள் அமைக்க வேண்டும்.ஷிர்க்கை ஒழிக்க யாருடனும் கூட்டு சேரலாம்,அந்த ஷிர்க் ஒழிந்தால் போதும்.

sheikdawoodmohamedfarook said...

தர்காவணக்கம்-ஹந்தூரி பல நூற்றாண்டுகளாக இந்திய முஸ்லிம்களின் மனதில்பசுமரத்து ஆணிபோல்பதிந்தமூட நம்பிக்கைகளில் ஒன்று.பிறந்தபிள்ளைகளுக்கு கொலக்கட்டைசுட்டுஹாஜாஒலிதர்காவில் தலைமுடிஇறக்கிநேத்திகடன் நிறைவேற்றும்பழக்கமும் இருந்தது.இப்போது இல்லை. புறையோடோடிப்போன இந்த மூடப்பழக்கங்களை போராடிப்போராடியே பூக்காமல்காய்க்காமல்வேரோடுஒழிக்க வேண்டுமேதவிர' சூ! மந்திரக்காளி!காணாமல்போ!'' என்றால் போகாது! கட்டுண்டோம்!பொறுத்திருப்போம்! காலம்மாறும்.குறிப்பு;இது என்கருத்தேதவிர Advise /adviceஅல்ல!.

sheikdawoodmohamedfarook said...

நாமே அறிந்தோஅறியாமலோ ஏற்றுக்கொண்டஇந்தப்பழக்கங்களை ஒழிக்க நாமே முயற்சி செய்து வெற்றிபெறவேண்டும்.மாற்றார் உதவியேநாடினால் ஒநாயை ஆட்டுமந்தைக்கு காவல் போட்ட கதையாக முடியும்.

sabeer.abushahruk said...

அனாச்சாரங்களுக்கு எதிரான தாருத் தவ்ஹீதின் அயராத் தொடர் முயற்சிகள் வெற்றிபெற அல்லாஹ் அருள்புரிவானாக, ஆமீன்!

எனக்கென்னவோ, இந்த ஹந்தூரி பார்ட்டிகள் அவ்லியாக்களின்மீதான பக்திப் பரவசத்தில் ஹந்தூரி எடுப்பதாகத் தோன்றவில்லை. அப்படிப்பட்ட பக்தியில்தான் செய்கிறார்கள் என்றால் மனசாட்சியுள்ள முஸ்லிமுக்கு இறைவனுக்காகத் தொழ நிற்குகையில் நெருடாதா?

வீம்பு, வீம்புக்காகவே ஷிர்க்கில் இறங்குகிறார்கள் என்று தோன்றுகிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இந்த திருவிழாத் தேர் அதிரையின் பிராதான தெருக்கள் பக்கம் வராமல் செய்த முயற்சிக்கு நற்கூலியை தருவானாக!

எதிர்காலத்தில் எந்தத் தெருபக்கமும் இந்த திருவிழா ஊர்வலம் இல்லாமல் இருக்கட்டும். இன்சா அல்லாஹ்!

Aboobakkar, Can. said...

தர்கா,கப்ருவணக்கம் மற்றும் கந்தூரி விசயங்களில் வழி கெடும் மக்கள் தங்களை கெட்டு போகிறேன் பந்தயம் என்ன ? என்று கேட்பவர்களை என்ன செய்யமுடியும்? சொல்லியும் திருந்தாத மக்களை நினைத்து கண்ணீர்வடிப்பதை தவிர வேறுவழியில்லை.....

முன்பு சிறியவயதில் பள்ளிபருவத்தில் ஒருமுறை கடல்கரை தெரு கந்தூரிக்கு அறியாமல் சென்ற ஞாபகம் அப்போது ஒரு மேடையில் எலந்தபழம் .....எலந்தபழம் ........செக்கே செவந்த பலம் ...தேனாட்டம் இனிக்கும் பழம் ...எத்தனையோ பேரு கிட்டே எலந்தபழம் பார்திருக்கே அதுலே இம்மா பழம் பார்த்தியா ? என்று ஒரு பெண் பாட...பிறகு ஒருநிமிடம் மேடை லைட் அமர்ந்து மறுபடி லைட் போட்டதும் ஒரு ஆண் அதே பாட்டை வாழைப்பழம் வாழைப்பழம் என்று அந்த மேற்கண்ட பாட்டை மாற்றி படிக்கின்றான் பாடல் மாறும் போது வார்த்தைகள் கொச்சை படுத்தபடுகின்றன ...இதுதான் நமதூர் கந்தூரிகளின் அவலட்சணம் இதை ஆண்களும் பெண்களும் பார்த்து ரசிக்கின்றனர் .

sheikdawoodmohamedfarook said...

/மாம்பழமாம் மாம்பழம் மல்கோவ மாம்பழம் சேலத்து மாம்பழம்நந்தானையா// பாட்டும்காத்தோடுகாத்தாகவந்து காதுலே உளுந்துச்சுங்கோ!

Yasir said...

அனாச்சாரங்களுக்கு எதிரான தாருத் தவ்ஹீதின் அயராத் தொடர் முயற்சிகள் வெற்றிபெற அல்லாஹ் அருள்புரிவானாக, ஆமீன்!

அசிங்கள் அரங்கெறும் இந்த கந்தூரி விழாக்கள் தடை செய்யப்பட வேண்டும்....

Yasir said...

** அசிங்கங்கள்

வளர்பிறை said...

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும், இஸ்லாத்திற்கு ஒரு துளியும் சம்மந்தமில்லாத இது போன்ற கந்தூரி (அநாச்சார) விழாவினை ஆதரிக்கும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் தலைவரை உடனே மாற்றுங்கள்.

ஊரின் சில பகுதிகளில் கருமாரி (கந்தூரி) ஊர்வலம் வர தடை வாங்கிய அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பை மனதார பாரட்டுகிறேன். மேலும் ஊரின் அனைத்துப்பகுதிகளுக்கும் இவ்வூர்வலம் வருவதற்கு தடை வாங்க இனிவரும் காலங்களில் முயற்சி செய்ய வேண்டுமாய் கோரிக்கை வைக்கிறேன் (அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான்)

ZAKIR HUSSAIN said...

இவ்வளவு சொற்பொழிவுகள், இவ்வளவு புத்தகங்கள் , இவ்வளவு இஸ்லாமிய அறிஞர்கள் இருந்தும் இந்த அனாச்சாரங்கள் ஒழிக்கப்படவில்லையே?.

கந்தூரியை ஆதரித்து சொல்பவர்கள்...மற்றவிசயங்களை ஏன் நீங்கள் கண்டு கொள்வதில்லை என்பது...[ மற்றவிசயங்கள் கண்டு கொள்ளப்படவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும் ? ]

ஒரு குற்றத்தை செய்ய இன்னொரு குற்றத்தை உடந்தைக்கு இழுப்பதா?




Unknown said...

இவ்வளவு விழிப்புணர்வு மிக்க காலகட்டத்தில் ஒரு 'கந்தூரியை' ஒழித்த கட்ட இயலாதவர்களாக 'அதிரைவாசிகள்' இருக்கிறார்கள் என்பதை மேற்க்கண்ட சம்பவங்கள் தெளிவாக காட்டுகின்றது என்பதே வருத்தத்திற்குறிய உண்மை.

இவ்வளவு இஸ்லாமிய விழிப்புணர்வு உள்ள காலத்தில் 'அதிரிவாசிகள்' தர்காவாசிகளிடம் இந்த பாடு பட வேண்டியிருந்தால் - சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்ன்னிளிருந்து அடி வாங்கி மிதி வாங்கி வெட்டு வாங்கி போராடிய பீஜே மற்றும் தௌஹீத் வாதிகள் என்ன பாடு பட்டிருப்பார்கள் என்ற எண்ணத்தையும் தவிர்க்க முடியவில்லை.

இந்த 'கந்தூரி' 'தர்கா' போன்ற மடமைகள் - "அதிரை அனைத்து முஹல்லா கமிட்டி தலைவர்" போன்ற ஆண்களால் நடத்தப்பட்டாலும், இது போன்ற 'மடமைகளுக்கு' பின்புலமாக செயல்படுவது பெரும்பாலும் அத்தகையோரின் 'வீட்டில் உள்ள பெண்களாகவே' இருக்கும்.

எனவே, அதிரை ஜமாஅத்காரர்கள் மட்டுமல்ல வேறெந்த ஜமாத்தினரும் இது போன்ற தீமைகளை ஒழிக்க விரும்பினால் பெண்களிடமும் இஸ்லாம் குறித்த வாய்மையான விழிப்புணர்வை கொண்டுவர முயற்சித்தால் தான் உண்டு.

உதாரணமாக பல்வேறு கிருத்துவ பிரிவினர் கிருத்துவ மத பிரச்சாரத்தை இப்போது 'வீட்டு பெண்கள்', 'மகளீர் சுய உதவி குழுக்கள்' ஆகியவை மூலமாக கடந்த இருபது ஆண்டுகள் செய்ததன் விளைவாக 'தெலுங்கு பேசும் நாயுடுக்கள்' பெருமளவில் 'கிருத்துவர்களாக' மாறியுள்ளதை காணலாம்.

எனவே முஸ்லீம்களும் இதே பாணியில் ஆண்கள் மத்தியிலும் சாரி பெண்கள் மத்தியிலும் சரி - தீமைகளை ஒழிக்கவும், இஸ்லாத்தை புரிய வைக்கவும், முஸ்லீமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து செல்லவும் முயற்சிக்கலாம்.

'தப்லீக்' வாதிகள் கூட இதே காரணத்தால் தான் 'பெண்கள் ஜமாஅத்' முயற்சிகளை தொடங்கியுள்ளனர்.

எனவே அதிரைவாசி 'தௌஹீத்' சகோதர்கள் 'இயக்கங்களை தாண்டி' ஒன்றிணைந்து செயல்பட்டால் அடுத்த ஆண்டு இந்த காட்டு பள்ளி தர்காவை கல்வி பள்ளியாக மாறுமளவிற்கு - அல்லாஹ் நாடினால் அதிரையில் மாற்றங்கள் வரும்.

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்

தற்காவில் நடக்கும் அனாச்சாரங்களையும் கருமாரி ஊர்வலத்தை தடை செய்ய எடுக்கும் முயற்ச்சியில் இறைவன் உதவி கொண்டு ஒருபாராங்கல் நகர்ந்துள்ளது

இந்த பாரங்கல்லை நகர்த்த முயற்ச்சித்த இல்லை இல்லை அரும்பாடுபட்ட ADT நிர்வாகத்தினருக்கும் ADTஅங்கத்தினருக்கும் இறைவன் ஆகிரத்தில் பெரும் அந்தஸ்த்தை நிச்சயம் வழங்குவான்

ஏனெனில் இறைவனுக்கு பிடித்த செயளில் இது ரொம்ப முக்கியமான செயள்
இதுவரை எத்தனயோ முயற்சிகள் செய்து அல்லாஹ்வுத்தஆலா ADT முயற்ச்சியை கொண்டு வெற்றிப்பாதையை திறந்து இருக்கின்றான்
இன்ஷா அல்லாஹ் இதை வரும் காலங்களில் வேறோடு பிடிங்கி எறியக்கூடிய சக்தியை ADTக்கு வழங்குவானாக ஆமீன்

அடுத்த அடுத்த கந்தூரிகள் வரும்போது ஒரு முனை தாக்குதல் இல்லாமல் பலமுனை தாக்குதல் இருந்தால் நிச்சயம் கந்தூரியை வேரோடு பிடிங்கி எறியலாம்

பல முனை தாக்குதல் என்றால் ADT, தமுமுக எஸ்டிபிஐ, டிஎன்டிஜே ஆக நான்கு முனைதாக்குதல் நான்கு தரப்பிலும் ADT செய்ததுபோல் செய்தால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் அடியோடு நிறுத்த முடியும்

adiraimansoor said...

ரஹ்மானியா மதராசவில் இருக்கும் முஸ்லியாரை விரட்டினால் எல்லாம் சரியாகிவிடும்
இந்த அனாச்சாரத்தை நிறுத்த முடியாத மதரஸா ஊரில் இருந்து என்ன பயன்
அணைத்து முஹல்லா கமிட்டியெல்லாம் எதற்கு

Adirai khalid said...

This is ridiculous act that adirai tea party leader supporting sirk. Most of our home town alim ignorant due to obeying madhab masalas .They should go back to understand what Quran & authentic hadhis teach us to followed .May Allah save us from hel fire. I humble request all pls keep you & your family away from these kind of anti social elements & tea party committee

sheikdawoodmohamedfarook said...

கடல்கரைதெருவில்அடங்கப்பட்டிருக்கும் ஹாஜாசெய்கு அலாதீன்அவர்கள்தர்காவுக்குதஞ்சையை ஆண்டசரபோஜிமன்னர் மானியமாககொடுத்த பலகோடிபெருமானசொத்துக்களைஎல்லாம் யார் சுவாஹா செய்தார்கள் என்பதைகண்டுபிடித்து அதையெல்லாம் மீட்டாலே நம் ஊரில் ஒரு பல்கலை கழகம் கட்டலாம்.அதைசெய்ய இயக்கங்கள் முன் வரவில்லையே! பாவம் லபைமார்கள்! அந்த சொத்துக்களில் எதையும் அனுபவிக்காமல்கையேந்தியே வயறுவளர்த்தார்கள்.பணக்காரசீமான்களிடம்அடிபட்டேஅடிபட்டேசெத்தார்கள்.மௌதாப்போனலபைமார்களைஅடக்கம்செய்ய தூக்கிபோக சந்தூக்கு கொடுக்கமறுத்தார்கள்.அடாவடிதனம்தலைவிரித்தாடியது.லைபைமார்களும் இஸ்லாமியர்களாய் இருந்தும்அவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக இன்றும்ஒதுக்கப்பட்டிரிக்கிறார்கள்.இஸ்லாத்தில்ஜாதிஇல்லை பேதமில்லை'ஒருபணக்காரனும்ஏழையும்பள்ளியில்தோலோடுதோல்உரசிசமமாக நின்று தொழும் நிலை இஸ்லாத்தில்மட்டுமே உண்டுஎன்று சொல்பவர்கள் ஒரு லபையிடமோ ஒரு ஏழையிடமோ சம்பந்தம் கலப்பார்களா? ஒரு மரைகாயர் மரைககாயர்அல்லாத ஒருவரிடம் சம்பந்தம் கலந்தாலே பூரண இஸ்லாத்தின் ஜோதி உலகெங்கும் ஒளி வீசும்.கந்தூரி கூடு எடுப்பதைதடுப்பது மட்டும் இஸ்லாமியபணியல்ல. wakuf சொத்துக்களை வாயில் போட்டுக்கொண்டவர்களையும் சந்திக்குகொண்டு வரவேண்டும்.இவையெல்லாம் ஒழியாதவரை ஆயிரம்மோடிகளை சந்திக்கும்நிலைவரும்.மாறுவோம்! மாற்றுவோம்.செய்வோம்!சொல்லுவோம்.இதுயாரையும் வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கோடு எழுதப்பட்டதல்ல!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு