Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

திரு(தொண்)டர் புராணம் 22

அதிரைநிருபர் பதிப்பகம் | April 02, 2014 | , , ,

ஒரு ஊருல திருடன் இருந்தானாம். அவன் திருடிவிட்டு ஓடும்போது பொதுமக்கள் விரட்டுனாங்களாம். பொதுமக்களும் "திருடன்" "திருடன்" என்று கத்திக் கொண்டே விரட்டியதால் வீடுகளிலிருந்தவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு விரட்ட ஆரம்பித்தார்களாம். ஓடிக்கொண்டே திரும்பிப் பார்த்தால் பெருங்கூட்டமே அவனை விரட்டிக் கொண்டு வருகிறதாம். நின்றால் தக்காளி சட்னிதான்! எல்லோருமே "திருடன்" "திருடன்" என்று கத்திக் கொண்டே விரட்டுவதால் அவனும் அவ்வாறே "திருடன்" "திருடன்" என்று கத்திக் கொண்டே ஓடினானாம், 

முதலில் இருந்தே திருடனை விரட்டிக் கொண்டு வந்தவர்களுக்கு முன்னாடி பலரும் சேர்ந்து கொண்டு விரட்டி வந்ததால் பின்னாடி இருப்பவர்களுக்கு யார் திருடன் என்பதே குழம்பி விட்டதாம்,இந்த சந்தடியில் எல்லோரையும் முன்னாடி ஓடவிட்டு திருடன் நைஸாக நழுவி விட்டானாம்.

நீதி: "திருடன்" "திருடன்" என்று கத்துபவர்கள் எல்லாம் உத்தமர்களல்லர்!

****

பிறரது உடைமையை அவருக்குத் தெரியாமல் கையகப்படுத்தி, தனது உடைமை என்று சொல்வதோடு, உரிமையாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தினால் அது திருட்டு என்பது பொதுவான அளவீடு. உடைமைகளுக்கு மட்டுமின்றி கருத்துகளுக்கும் இது பொருந்தும்.முன்னது பொருள்சார் திருட்டு; பின்னது அறிவுசார் திருட்டு.

இஸ்லாத்தைப் பொருத்தவரை பொருள்சார் திருட்டு தண்டனைக்குரிய குற்றம். ஏனெனில், அவ்வாறு திருடுவதால் உரிமையாளர் நஷ்டப்படுகிறார். குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் உடைமைத் திருட்டுக்கு இஸ்லாம் கடுமையான தண்டனையை பரிந்துரைக்கிறது.

நீதி: பிறரது உடைமைகளை நஷ்டம் உண்டாக்கும் அல்லது அபகரிக்கும் நோக்கில் திருடுவது குற்றம்.

****

நல்ல நோக்கத்தில் எழுதப்படும் ஆக்கங்களுக்குத் தொடர்புடைய ஆக்கங்களிலிருந்து மேற்கோள் காட்டுவது, சம்பந்தப்பட்ட சுட்டிகளைச் சுட்டுவது, தேவையான பகுதிகளை மீள்பதிவிடுவது போன்றவை இணையத்தில் புழங்குபவர்களுக்கு பரிச்சயமான ஒன்று. அவ்வகையில், ஒரு சகோதரர் எழுதிய கட்டுரைக்குத் தொடர்புடைய சில பகுதிகளை, இன்னொரு தளத்திலிருந்து எடுத்தெழுதியதை, திருடி விட்டதாக சிலர் ஒப்பாரி வைக்கின்றனர்.

பிறருக்கு நஷ்டம் ஏற்படுத்தாத வகையிலும், பலருக்குப் பயனுள்ள வகையிலும் எழுதப்பட்ட ஆக்கத்தில் கட்டுரையாளர் எடுத்தாண்ட சில பகுதிகளுக்காக, அந்தத் தொடரை வெளியிட்ட தளத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக திருட்டுப் பட்டம் சுமத்துபவர்களுக்கு தீர்ப்பளிக்க அல்லாஹ் போதுமானவன். 

****

இணையத்தில் பொது பயன்பாட்டுக்கு வைக்கப்பட்ட அறிவுசார் ஆக்கத்தை மேற்கோளிட்டதை திருட்டு என்பதாகச் சொல்பவர்களின் அறியாமையை, யோக்கியதையைப் பார்க்கும்போது முதல் பத்திகளில் சொல்லப்பட்ட திருடன் கதைதான் நினைவுக்கு வருகிறது. ஏனெனில்,

1) மார்க்க பிரச்சாரம் செய்வதற்காகவே அமைப்பு கண்டதாகச் சொல்லி விட்டு (இதற்கு அமைப்பே தேவை இல்லை என்பது வேறு விசயம்) கொல்லைப்புறம் வழியாக தேர்தல் சமயங்களில் மட்டும் அரசியல் செய்வது,

2) பலரும் சேர்ந்து பொது நன்மைக்காக ஏற்படுத்திய பத்திரிக்கையை, கொல்லைப்புற அரசியல் அமைப்புக்குப் பயன்படுத்துவது,

3) பலரும் வசூலித்துக் கட்டிய இறையில்லங்களை கொல்லைப்புற அரசியல் அமைப்புக்கும் தேர்தல் பிரச்சார படியளக்கும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்துவது,

போன்ற திருட்டுத்தனங்களை வாய்ஜாலத்தால் நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் கொல்லைப்புற அரசியல் அமைப்பின் தற்போதைய அதிரை கிளையின் திருத்தொண்டர்களுக்கு,அதன் உள்ளூர் மர்கஸை உருவாக்கப் பாடுபட்டவர்கள் அதிரையைச் சார்ந்த சகோதரர்கள் என்பதை மறுக்க முடியுமா? கொல்லைப்புற அரசியல் அமைப்பின் அடாவடிகளுக்கு ஒத்து ஊதவில்லை என்பதால் அடாவடியாக அமைப்பிலிருந்து நீக்கியதோடு அதிரை தவ்ஹீது மர்கஸ் என்பதை கொல்லைப்புற அரசியல் அமைப்பின் தலைமையகத்தின் பெயரில் பதிவு செய்திருப்பதுதான் உடைமைத் திருட்டு!

****

உரிமையாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தாத, உடைமையாளரின் உரிமையை மறுக்காத கட்டுரையை பதிந்ததை திருடியதாக ஒப்பாரியிட்ட யோக்கியவான்களை,மேற்கண்டவற்றுக்கு விளக்கம் சொல்லாதவரை அதிரை ததிஜ (தமிழ்நாடு திருட்டு ஜமாத்) என்று சொல்லலாமா?

****

பின்குறிப்பு: தவ்ஹீத்கான் என்பது புணைப்பெயர்தான். புணைப்பெயரில் எழுதுவதை மார்க்கம் தடுக்கவில்லை. மேலும், தளநிர்வாகிகளுக்கு புணைப்பெயரில் எழுதுபவர் யாரென்றும் தெரியும். முந்தைய பதிவில் இடஒதுக்கீடு ஆணையம் குறித்த ஏமாற்று வித்தையை தோலுறித்ததால், முகமூடி கிழிந்த வெறியில் பதிவை எழுதியவரையும், பதிவிட்டவர்களையும் திட்டித்தீர்த்த திருத்தொண்டர்களே, "அதிரை ததஜ" என்பது மட்டும் தனிநபரின் பெயரா? பதில் சொல்லுங்கள்

****

தவ்ஹீத்கான்

22 Responses So Far:

sabeer.abushahruk said...

சகோ தவ்ஹீத்கான்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நேர்மையாகவும் நாகரிகமாகவும் நீங்கள் எழுதும் கட்டுரைகள்தான் உங்கள் முகவரி. ஓர் இஸ்லாமியப் பெயர் மட்டுமே ஒரு மனிதனின் அடையாளம் ஆகிவிடாது என்பதை செவிட்டில் அடித்த மாதிரி சொல்கிறது நீங்கள் பூண்டுள்ள புனைப்பெயர். மேலும், அதிரை நிருபர் தளத்தினரிடம் தங்களை இன்னார் என்று வெளிப்படுத்திவிட்டு கோழைகளைச் சாடுவதில் ஓர் ஆண்மை மிளிர்கிறது.

குற்றமில்லா நெஞ்சுக்கு நீதமாகத் தோன்றுபவை குற்றமுள்ள நெஞ்சினர்க்கு குறுகுறுக்கவே செய்யும்.

மடையர்கள் என்று படித்தவர்களைச் சுட்டுபவர்களை என்னவென்பது? எதிர்த்துப் பேசுவது யார் என்றே தெரியாமல் வாதம் செய்யும் சகோதரர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதே சாலச் சிறந்தது.

நீங்கள் கேட்கும் ஒவ்வோர் கேள்விக்கும் பதில் என்ற பெயரில் கிடைக்கப்போகும் வசைபாடல்களுக்குத் தயாரா நீங்கள்?

sabeer.abushahruk said...

இனி இப்படி ஒரு உரையாடலையும் எதிர்பாருங்கள்:

தவ்ஹீத்கான்: ஆன்மிகப் பணியினர்க்கு அரசியல் எதற்கு?

73வது தவ்ஹீத்கான்: என்ன அரசியல் எதற்கு?

தவ்ஹீத்கான்: நகரிகமா பேசமாட்டீங்களா?

73வது தவ்ஹீத்கான்: என்ன நாகரிகமா பேசமாட்டீங்களா?

தவ்ஹீத்கான்: அடங்குங்கப்பா

73வது தவ்ஹீத்கான்: என்ன அடங்குங்கப்பா?

தவ்ஹீத்கான் பஞ்சாயத்தைக் களைத்தார்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரை (த.த.ஜ) கிளையில் மட்டும் இருக்கும் பக்தர்கள் கூட்டம் இயக்க போதையில் எதைச் செய்கிறோம் எவ்வாறு எழுதுகிறோம் என்ற வரம்பின்று பிதற்றுவது... மனக்குழப்பத்தில் தவிக்கிறார்கள் போலும் !

தவ்ஹீத் கான், என்றைக்காவது நீங்களோ அல்லது உங்களைப் போன்றவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியான பதிலை பெற்றிருக்கிறீர்களா ?

ஒன்று உங்களை தனிப்பட்ட முறையில் அல்லது உங்களோடு இருப்பவர்களை அள்ளப்படாத சாக்கடையை கொப்பளித்து தூற்றப்படும் ! காரணம் அவ்வளவு தடுமாற்றம்...

அந்த / அவ்வாறான இயக்க வெறி கொண்டிருப்பதால் அவர்களில் நல்லோர் என்ற அன்பு பாராட்டிக் கொண்டிருந்தவர்களின் மீதும் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள் (அல்லாஹ் பாதுகாக்கனும் அவர்களை).

அரண்டவர்களின் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று ஒரு காட்டு வைத்தால், பேய் இருப்பதை முதலில் கண்ணுக்கு காட்டு என்று அடம் பிடிக்கும் பித்தர்கள் !

தவ்ஹீத் என்ற போர்வையில் தக்லீதுக்குள் புரளும் போலிகள் !

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//மடையர்கள் என்று படித்தவர்களைச் சுட்டுபவர்களை என்னவென்பது? //

சாக்கடையில் இருந்து சந்தன வாடையா வரும். அவர்கள் பயின்றது அப்படி அதானால் அப்படியான வார்த்தைகள் தானே வரும்

Shameed said...

இன்றைக்கு அதிரை tntj வில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தாங்கள் முன்பு செய்த அஜால் குஜால் வேலைகளுக்கு மனிதர்களிடம் இருந்து பாதிப்பு வந்துவிட கூடாது என்பதற்காக தவ்ஹீத் வேடம் போட்டுக்கொண்டு திரிகின்றார்கள் செய்த பாவத்திற்கு மனிதனிடம் இருந்து தப்பிக்கலாம் படைத்த இறைவனிடம் இருந்து தப்ப முடியாது என்பது இந்த போலி தவ்ஹீத் வாதிகளுக்கு விளங்கவில்லை

Shameed said...

திருட்டு என்றால் என்ன என்பதை அழகா சொல்லி இருக்கீங்க தவ்ஹீத்கான் அவங்க பிளாக்கில் அவங்களே கள்ளப்பெயரில் வராங்களே அதை எந்தவகை திருட்டில் சேர்ப்பது என்பதையும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தவ்ஹீத்கான்

Meerashah Rafia said...

இன்னுமா முடியல!!

அவங்க ரீல் அந்துபோய் ரொம்பநாள் ஆச்சு.. லூஸ்ல விடுங்க..ஏற்கனவே கொஞ்சம் அதிகமாக "லூஸ்"லதான் உளறிக்கிட்டு இருக்காங்க..

அதுசரி, இந்த இயக்கங்களை ஒழிக்க ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.. தலைவர் போட்டிக்கு யாரும் தயாரா?

தகுதி :
1) மைக் பிடிக்க தெரிய வேண்டும்..
2) தவறாயினும் வாய் கிழிய பேச தெரிய வேண்டும்..
2) தொண்டன் தலையில் நிஜமான தொப்பி இருக்கக்கூடாது (அவனுக்கு தெரியாமலே இயக்கமாயை தெரியும்வரை செம்ம தொப்பி போடனும்)
3) தான் நிஜமான தொப்பி போடனும்
4) எதிர்ப்பவர்களை எதிர் அணிக்கே அனுப்பும் திராணி இருக்கவேண்டும்..
5) நேரடி அரசியல் கூடாது.. நேரடி அரசியல்வாதிகள் தொடர்பு 5 வருடத்திற்கு ஒரு முறை கூடும்..
6) ஜும்மா பயானில்கூட நாய்களை பற்றி எந்த தாயிகளும் மனம்போன போக்கில் பேசலாம்
7) முஹ்மீன்களா, முஸ்லீம்களா, முஸ்ரிக்ஹலா என்று கூட்டம் கூட்டி கான்பிக்கும்போதுமட்டும் கண்டுக்கொள்ளக்கூடாது..
8) அடுத்தவருக்கு மரியாதை என்பது நமது அகராதியிலேயே இருக்கக்கூடாது..


8வது புள்ளியை மட்டும் இரு முறை படித்து மனனம் செய்து வைத்துக்கொள்ளவும்.. தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லணும்..

Shameed said...

1 தவ்ஹீத்கான் முகத்திரை கிழிந்தது இவர் ஒரு த மு மு க காரர்

2 தவ்ஹீத்கான் இவர் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி

3 தவ்ஹீத்கான் PJP ஏஜெண்ட்

4 தவ்ஹீத்கான் ஒரு RSS காரன்

கூடிய சீக்கிரம் இப்படி எல்லாம் தவ்ஹீத்கானுக்கு பட்டம் கிடைக்கும்

sabeer.abushahruk said...

தம்பி மீராஷா,

பயோடேட்டா கலக்குதே! இவ்வளவு எதார்த்தமாகவும் கச்சிதமாகவும் கணிக்கமுடிகிறதென்றால் நீங்களும் உள்ளேர்ந்து வெளியேறிய ஆள்தானோ எங்களைப்போல?

Meerashah Rafia said...

sabeer.abushahruk சொன்னது..//தம்பி மீராஷா,.....நீங்களும் உள்ளேர்ந்து வெளியேறிய ஆள்தானோ எங்களைப்போல?//

இல்லை காக்கா.. உங்களைமாதிரி ஆட்களெல்லாம் உள்ளிருக்கும்போதே வெளியிலிருந்து உள்ளே நடப்பதை வேடிக்கைப்பார்த்தவன்.. சில பல நேரங்களில் வரைந்த ஓவியனைவிட பார்வையாளனால்தான் பல கோணங்களில் விவரிக்க முடியும்.அப்படியாப்பட்ட பார்வையாளனுக்கு ஓவியர்கள் தொடர்பும் இருக்கத்தானே செய்யும்.. அதுவே நாம் :)...

இயக்க மாயையில் இருப்பவர்கள் "மோனலிசா ஓவியத்தை ரசிக்கும் கூட்டம் போல!".. அதனால்தானோ என்னமோ "நம்ம தலைவரின் பேச்சை எந்த கோணத்தில் பார்த்தாலும் சரியா படுதே" எனக்கூறி ரசிக்கும் பக்கா ரசிகர்களாகவே இருக்கின்றார்கள்.. பாவம்... வேடிக்கையான மனிதர்கள்..

Yasir said...

கமெடியர் கள் இவர்கள் எல்லாம்....தவ்ஹீத் கான்..எவ்வளவுதான் உரக்கிறாப்பல கொடுத்தாலும் ....ம்ஹீம்...வராது....இவருடைய தலைவர்...அவர் பத்திரிக்கையில...அம்மா கேடியை ஆதரிக்கலாம்ண்டு சொல்லி இருக்காராம்.....மார்க்கத்தை பின்பற்ற சொன்னால் முரண்டு பிடித்துக்கொண்டு இயக்க வெறி பிடித்து அலையுதுக....

இப்னு அப்துல் ரஜாக் said...

என் பெர்சனல் ஒப்பீனியன்

இது என்னவோ சரியாகப் படவில்லை எனக்கு.

பீ ஜே அவர்களை நேரடியாக அல்லது மறைமுகமாக சாடுவதும்,த த ஜ வை பழிப்பதும்,தவ்ஹீத் கான் என்ற பெயர் வைத்து எழுதுவதும் மற்றும் அந்தக் கட்டுரைகளின் வாசகங்களும் சரியே அல்ல.

1)பீஜே அவர்கள் என்னதான் இருந்தாலும் ஒரு தாயீ,மனிதன் என்ற முறையில் குறைகள் உள்ள ஒருவர்,அவரை அவரது நிலைப் பாட்டை வைத்து குறை சொல்வது தவறு.அவரது கருத்தை மட்டும் அழகிய முறையில் விமர்சிக்கலாம்.

2)த த ஜ மூலம் எண்ணற்ற பணிகள் நடை பெற்று வருகின்றன.ஏகத்துவம் வளர்கிறது.அதைக் குறை கூறுவதால் நமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்கிறோம்,தர்காவாதிகள் சந்தோஷம் கொள்வர்.

3)தவ்ஹீத் கான் என்ற புனைப் பெயர் தவ்ஹீத் கொள்கையை ப்ழிப்பது போல் உள்ளது.

எனவே,தயவு செய்து அந்தக் கட்டுரையை நீக்குங்கள்.இன்று மல்லுக்கு நாம் நிற்கலாம்,ஆனால் மறுமையில் இதை எழுதியதற்காக அல்லாஹ் நம்மை குற்றம் பிடித்தால் என்ன செய்வீர்கள்.????

இதையே அதிரை தத ஜ கிளையை கேட்கிறேன்.நீங்கள் நாகரீகமான முறையில் - அழகான முறையில் மறுப்பு சொல்லாமல் நா கூசும் வார்த்தைகளைக் கொண்டு பிறரை காயப்படுத்தினீர்கள்,படுத்தியும் வருகிறீர்கள்.இப்போது அதன் எதிர் வினை நடந்து கொண்டு இருக்கிறது.நீங்களும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை மறந்து விட்டீர்களா?

இரு தரப்பாருக்கும் நான் சொல்லிக் கொள்வது,இத்துடன் இதை அல்லாஹ்வுக்காக நிறுத்தி விடுங்கள்.பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்.அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டுமே என அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.கமெண்ட் போடுபவர்களும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புத் தம்பி இப்னு அப்துல் ரஜாக்:

தங்களின் எண்ணவோட்டமே எங்களின் எண்ணங்களாகவும் செயல்களாகும் ! ஜஸாக்கல்லாஹ் ஹைரன்...

தனிமனிதர் என்ற அடிப்படையில் அனைவரும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களல்லர் அந்த தவறை சுட்டினால் திருத்திக் கொள்வதும் திருந்திச் செயல்படுவதும் நல்லதொரு பண்பு, அவ்வாறு திருந்தியவர்களின் எண்ணிக்கை இந்த தவ்ஹீது எழுச்சியால் எராளம் ஏராளம் அதனை எவறும் மறுக்க மாட்டார்கள். மாறாக தனிக் கூடாராம் அந்தக் கூடாரத்தில் ஒருவகை கூட்டத்தை உருவாக்கி அவர்கள் அனைவரும் அதே தவறை தொடர்ந்து செய்தால் அதனை எவ்வாறு சுட்டுவது ?

தூய்மையான பாலில் துளி விஷம் விழுந்தாலும் அதனை பருக எத்தனை பேருக்கு மனத்திடம் வரும் ?

நல்லதைச் செய்வதும், ஏகத்துவ வளர்ச்சிக்கான அரிய பணிகளும், அதனை களங்கப்படுவது அந்த கூடாரத்தில் இருக்கும் ஒருசிலரின் கேடுகெட்ட வார்த்தைகளைக் கொண்டும் எழுத்துக்களைக் கொண்டும் தரம் தாழ்ந்துச் சென்றதால் அதே தொணியில் நாகரீகமாக விமர்சனம் எழுதப்படுகிறது அதோடு இந்தப் பதிவில் முதல் பத்தியில் சுட்டிய காட்டே நிஜத்திலும் நிகழ்த்திக் கொண்டிருப்பார்கள்.

அந்த ஒரு சில பக்தர்களின் செயல்கள் தவறு என்று தெரிந்தும் அதனைக் கண்டிக்காமல் வாய்மூடிக் கொண்டும், மவுனிகளாக அதே (அதிரைக் கிளை) கூடாரத்திலிருக்கும் தவ்ஹீத் சிந்தனைச் சகோதரர்கள் கண்டிக்காததும், மறுத்துப் பேசாதும் இருப்பது வேதனையே !

மீண்டும் பதிகிறேன், அந்த இயக்கத்தில் இருக்கும் தீவிர தொண்டர்கள் / பக்தர்கள் / விசுவாசிகள் இவர்களில் எவரேனும் அவர்களுக்குள்ளேயே எதிர்த்து கேள்வி கேட்டால், அடுத்து தூக்கிய் எரியப்பட்டு எச்சில் இலையாக மாற்றப்படுவார், அந்தரங்க ஆதாரங்கள் அரியனை ஏறும் ! (பாவம் அந்த தொண்டருக்கு / பக்தருக்கு / விசுவாசிக்கு) பெண்ணோ, பொருளோ அவரின் பெயரோடு இணைத்து (பரிசாக) மீண்டு கூடாரம் கும்மாளமிடும் ! பாவம் அந்த பக்தர் / தொண்டர் / விசுவாசி...! கண் விழித்துப் பார்ப்பார் ! :(

பெயர்களைக் கொண்டு இழிவு எண்ணினால், செயல்களைக் கொண்டு இழிவைத் தேடி மடியில் கட்டிக் கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது !?

sabeer.abushahruk said...

சகோ இப்னு அப்துர்ரஜாக்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்தக் கட்டுரையில் கண்ணியத்திற்குரிய சகோ பி ஜே யைப்பற்றி ஓரிடத்திலாவது மரியாதைக்குறைவாகவோ அவர்கள்தம் ஆன்மீக தொண்டைப்பற்றி குறைகூறி ஒரு வார்த்தையோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள், உங்களோடு சேர்ந்து நானும் இப்பதிவைக் கண்டிக்கிறேன்.

ததஜ அதிரை கிளையினரின் அநாகரிக அனுகுமுறையையும் கழிவறைச் சுவரையொத்த மொழியாடல்களையும் மட்டுமே அதிரை நிருபர் விமரிசித்து வருகிறது.

தவ்ஹீத்கான் என்னும் பெயருக்கும் அதிரை ததஜ என்னும் பெயருக்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?


Shameed said...

உண்மைகளை சொன்னதும் மூடர்களின் கோபத்தை பாருங்கள்

Unknown said...

அன்புள்ள சகோதரர் இப்னு அப்துல் ரஜாக் உங்களின் னல்ல யெண்ணங்கள் பாராட்டப்பட வேண்டியது. ஒரு யெழுபத்தி ஐந்து வயதானவரை மாங்காய் மடையன் யெண்டும் இன்னொரு மாறுபட்ட கருத்து உள்ளவரை மாமா வேலை பார்க்கிறாரா யென்டும் ஒரு மூத்த யெழுத்தாளரை திருடர் யெண்டும் கக்கூஸ் பாஷையில் யெழுதுவது தான் சமூக சீர்திருத்தம் பரப்ப வந்த இயக்கத்தின் தொண்டர்கள் தங்களின் தலிவர் இடமிருந்து படித்த பண்பாடா? இட ஒதுக்கீடு தொடர்பான கட்டுரையில் கேட்கப்பட்டு இருந்த சந்தேகங்கலுக்கு பதில் அலிக்க முடியாமல் வடையை யெண்ணச் சொ ன்னால் பொத்தலை யெண்ணி அங்கே இருந்து திருடினார்கள் யென்று யெழுதிவிட்டு கடைசியில சிறை னிரப்பும் போராட்டத்தை சிரிப்புக்கு இடமாக்கிவிட்டு அடித்துப் பிடித்துக் கொண்டு போய் அம்மாவை ஆதரிக்கும் இவர்களை அல்லாஹ் மன்னிப்பானா யெண்டு உங்கள் மனசாட்சிக்கு சொல்லுங்கள். மயிலாடுதுரையில் கூட்டம் போட்டு கூச்சல் போடுகிறார்கள் முஸ்லிம் யென்பதால் ஆதரிக்க வேண்டுமா யென்பது தலைப்பாம். இன்று இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்வா சாவா பிரச்னையில் இந்த தெர்தலை யெதிர்கொள்கிரார்கள். தவ்ஹீத் ஜமாத் யென்று பேரை மட்டும் வைத்து இருந்தால் போதுமா? செயலில் வேண்டாமா? மாமா வேலை பார்த்ததாக யெழுதி இருக்கிறார்களே ததஜ வுக்கு மாமா வேலை பார்ப்பதாக இருந்தால் அங்கு மாமாவை யெதிர்பார்க்கும் மச்சான்மார்கள் இருப்பதாக அர்த்தமா?

Unknown said...

த த ஜ கரைகிரது. https://www.facebook.com/1476453049243469/photos/a.1476454502576657.1073741828.1476453049243469/1488122688076505/?type=1

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புக்குரிய சகோதரர்கள் அபூ இப்ராஹிம் காக்கா,ஷபீர் காக்கா அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ பீஜே அவர்களைப் பற்றி அந்தக் கட்டுரையில் தவறாக சித்தரிக்கப்படவில்லை,நான் தவறுதலாக சுட்டிக் காட்டிவிட்டேன்.மன்னிக்கவும்.

சில சகோதரர்களின் கமெண்டில் அவ்வாறு கண்டதை - கட்டுரையில் என்று குறிப்பிட்டு விட்டேன்.தவறுக்கு வருந்துகிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ அதிரை பாமரன்,சகோ பீஜே அவர்களை விமர்சிக்க வேண்டாம்.மற்றபடி த த ஜ அதிரை பற்றிய உங்கள் கருத்து சரியே.அவர்கள் அவ்வாறு வசை பாடுவது கண்டு நானும் புண்பட்டு போயுள்ளேன்.அவர்களுக்காக துவா செய்வோம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புக்குரிய த த ஜ அதிரை சகோதரர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும்.

மற்றவர்கள் உங்கள் மேல் வசை பாடுவது கூடாது,நீங்கள் மட்டும் வசை பாடலாம் என்ற பொருளில் நீங்கள் மிக கீழான வார்த்தைப் பிரயோகம் செய்வது எப்படி நியாயம்?தவறு என்றாலும் நியாயம் என்றாலும் அது பொது அல்லவா?நம் தலைவர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நேர்மையாக நடக்கும் படிதானே ஏவியுள்ளார்கள்.

Unknown said...

சகோதரர் இப்னு அப்துல் ரஜாக் அவர்கலுக்கு , பி ஜே அவர்கலைப் பற்றி னான் விமர்சிக்கவில்லை. அவரது தொண்டர்கள் பிஜெ போன்ற மார்க்க மேதை இடமிருந்து கற்றுக் கொண்ட பண்பாடு இதுதானா யெண்டுதான் கேட்டிருக்கிறெம். பொதுவாக தொண்டர்கள் தவறாக பேசினால் யெழுதினால் அந்த வினையின் பாவம் அவர்களின் தலைவர்களையே சேரும். அதிரை ததஜ சகோதரர்கள் யெழுதும் பண்பில்லாத யெழுத்துக்கள் மூலம் அவ்ரகள்தான் பிஜெ அவர்களுக்கு இழுக்கைத் தேடுகிறார்கள். மற்றபடி சமுதாயத்தில் பல மறுமலர்ச்சி கருத்துக்களை விதைத்தவர் பிஜெ யென்பதில் யெனக்கு உடன்பாடுதான். மேலும், மற்றொன்று மதிப்புக்குறிய தாஹா சார் அவர்களைப் பற்றியும் கேவலமாக கணித்து யெழுதுகிறார்கள். இறையருட் கவி ய்னெறால் அவருக்கு இறைவனின் அருள் கிடைப்பது ய்னெறுதானே யெடுக்கவேண்டும்? பொதுவாக இறைவனின் அருள் யென்பது யெல்லொரும் வேண்டும் யென்று கேட்பதுதானே. தாஹா சார் அவர்கள் யெழுதும் கவித்திறமை அவர்கள் இறைவனிடம் கை யேந்தி கேட்ட து ஆ மூலமாகவும் இருக்கலாம்.இறைவன் அருள் இருந்தால் விசா விரைவில் வரும் யென்று சொல்வது இல்லையா? குமர் காரியம் னிறைவேறும் யென்று சொல்வது இல்லையா? கால் னூற்றாண்டு ஆசிரியராக பணியாற்றியவர். ஒரு தாயீ. ஐம்பத்து இரண்டு னூல்களை யெழுதி வெளியிட்டவர். " வியப்பூட்டும் வேதம் " யென்கிற தலைப்பில் அவரது னூல் கிடைத்தால் வாங்கிப் படித்துப் ப்பாருங்கள். அறிஞ்ர்கள் னெஞ்சில் அதிரை தாஹா யென்று பல தமிழ் அறிஞ்ர்கள் இவரைப் பற்றி யெழுதிய னூல் தொகுப்பு இவரது சிறப்புகளை சொல்லும். இந்த கற்பூர வாசனை தெரியாத ததஜ தம்பிகள் இவரைப் பற்றி யெடுத்தேன் கவிழ்த்தேன் யென்று யெழுதி பாவசுசுமையை முதுகில் சுமக்கிறார்கள். இப்படி பெரியவர்களை கேவலப்படுத்துவது இக்ராமுல் முஸ்லிமீனா? இவர்களுக்கு னல்ல புத்தி கொடுக்க னானும் உங்களுடன் சேர்ந்து து ஆச் செய்கிறென்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

தம்பி இப்னு அப்துல் ரஜாக்:

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்,

சுட்டலும், அதனைத் தொடர்ந்து திருத்திக் கொள்வதும், திருந்துவதும், அதற்கென படைத்தவனிடன் மன்னிப்பு கோருவதும் நல்லோர் செயல் ! அதனைச் செய்வதில் என்றுமே தாம் தயங்கியதில்லை ! தொடரட்டும் இன்ஷா அல்லாஹ் !

ஒவ்வொருவரின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் ஒருவனே நன்கறிந்தவன் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு