Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 65 5

அதிரைநிருபர் பதிப்பகம் | April 18, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

இரவில் நின்று வணங்குவதின் சிறப்பு

''நபி(ஸல்) அவர்கள் ரமளானிலும், அது அல்லாத காலங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத் தொழுவார்கள். அதன் அழகு, அதன் நீளம் பற்றி நீர் கேட்க வேண்டாம்! பின்பு நான்கு ரக்அத் தொழுவார்கள். அவற்றின் அழகு, நீளம் பற்றி கேட்க வேண்டாம்! பின்பு மூன்று ரக்அத் தொழுவார்கள். அப்போது நான், ''இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழும் முன் நீங்கள் தூங்குவீர்களா?'' என்று கேட்டேன். ''ஆயிஷாவே! என் கண்கள் தான் தூங்குகின்றன. என் இதயம் தூங்குவதில்லை'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1172)

''இரவில் ஒரு நேரம் உண்டு. இம்மை, மறுமை  காரியங்களில் எந்த நல்லதையும் அல்லாஹ்விடம் ஒரு முஸ்லிம் கேட்டு, அந்த நேரத்துக்கு ஏற்ப அது இருந்தால், அதை அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை. இந்த நேரம் ஒவ்வொரு இரவிலும் உள்ளது'' என்று நபி(ஸல்) கூறக்  கேட்டேன். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1178)

''நபி (ஸல்) அவர்கள் இரவில் வணங்கினால் இலகுவான அளவில் இரண்டு ரக்அத் மூலம் தன் தொழுகையை ஆரம்பிப்பார்கள்.(அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1180)

''நபி(ஸல்) அவர்கள் உடல்வலி அல்லது வேறு காரணமாக இரவுத் தொழுகை அவர்களுக்குத் தவறிவிட்டால், பகலில் பனிரெண்டு ரக்அத் தொழுவார்கள்.  (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1181)

''இரவில் எழுந்து, தானும் தொழுது, தன் மனைவிiயை விழிக்கச் செய்கிறார். அவள் மறுத்தால் அவளின் முகத்தில் தண்ணீரை தெளிக்கிறார். இவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! மேலும் ஒரு பெண் இரவில் எழுந்து தானும் தொழுது, தனது கணவனையும் எழுப்புகிறாள். அவன் மறுத்தால் அவனின் முகத்திலும் தண்ணீரை தெளிப்பாள். இவளுக்கும் அருள் புரிவானாக'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1183 )

''ஒருவர் தொழுகையில் சிறு தூக்கம் தூங்கினால், அவர் தன்னை விட்டும் தூக்கம் நீங்கும் வரை தூங்கட்டும்! உங்களில் ஒருவர் தூங்கிய நிலையில் தொழுதால், அவர் அல்லாஹ்விடம் தவறாக மன்னிப்புத் தேடக் கூடும். மேலும் தன்னையே திட்டிக் கொள்ளவும் கூடும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1185)

ரமளான் இரவில் வணங்குவது

''இறை நம்பிக்கையுடனும்,நன்மையை நாடியும் ரமளானில் ஒருவர் வணங்கினால், அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்)         (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1187)

''நபி (ஸல்) அவர்கள் ரமளானில் நின்று வணங்கிட தன் தோழர்களுக்கு உறுதியாகக் கட்டளையிடாமல் ஆர்வமூட்டினார்கள். அப்போது அவர்கள், ''இறைநம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் ரமளானில் நின்று வணங்கினால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1188)

லைலத்துல் கத்ரில் நின்று வணங்குதலின் சிறப்பு!
இதன் இரவுகளை விரும்புவதின் விளக்கம்

அல்லாஹ் கூறுகிறான் :

மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படி தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும் ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடன் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97 :1 – 5)

 ''இறைநம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் ஒருவர் லைலத்துல் கத்ரில் வணங்கினால், அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1189)

''நபி(ஸல்) அவர்கள் ரமளானில் கடைசி பத்து நாட்கள் இஹ்திகாஃப் இருப்பார்கள். ''ரமளானில் கடைசி பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள'; என்று கூறுவார்கள்.
(அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1191 )

''ரமளானில் கடைசி பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)    (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1192)

''இறைத்தூதர் அவர்களே! லைலத்துல் கத்ர், எந்த இரவு என்பதை நான் அறிந்து கொண்டால், அதில் நான் கூற வேண்டியது என்ன?' என்று கேட்டேன். ''அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன், துஹிப்புல் அஃப்வ, ஃபஹ்ஃபு அன்னீ''  என்று நீ கூறுவாயாக என்று நபி(ஸல்) கூறினார்கள். 

துஆவின் பொருள்: இறைவா! நீயே மன்னிப்பவன். நீ மன்னிப்பதையே விரும்புகிறாய். எனவே என்னை நீ மன்னிப்பாயாக!
(அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1195 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

5 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

ஷிஃபா வ ரஹ்மா (மருந்தாகவும்,அருளாகவும்)இருப்பதை எங்களுக்கு எத்தி வைக்கும் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா !

அருமருந்து ! கண்ணில் படும்போதெல்லாம் நினைவுக்குள் நிலைத்து விடுகிறது...

சிறிது சிறிதாக ஊட்டப்படும் உணவு உடலுக்கும், சிறுக சிறுக பகிரும் இந்த பதிவு உள்ளத்திற்கும் ஆரோக்கியமே !

sabeer.abushahruk said...

ஆம்
அமைதியற்ற நேரங்களில் இந்த அருமருந்து உண்டு அமைதியடைந்திருக்கிறேன்.

நன்ற் அலாவுதீன்.

Shameed said...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் அலாவுதீன் காக்கா

Ebrahim Ansari said...

அன்பின் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு, ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு