Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 67 3

அதிரைநிருபர் பதிப்பகம் | May 02, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

ஜகாத்தின் கட்டாயம்

''தங்கம் வெள்ளி ஒருவரிடம் இருந்து, அதற்குரிய (ஜகாத்) கடமையை நிறைவேற்றப்படாமல் இருந்து, மறுமை நாள் ஏற்பட்டு விட்டால், அவருக்கு   நரககட்டிகளாக மாறி அவை உருக்கப்படும். நரக நெருப்பில் அதை சூடேற்றி, அதைக் கொண்டு அவனது விலா, அவனது நெற்றி, அவனது முதுகு ஆகியவற்றில் சூடு போடப்படும். சூடு தணிந்து விட்டால், மீண்டும் அது சூடுபடுத்தப்படும். அந்நாளின் அளவு, (உலகின்) ஐம்பதாயிரம் ஆண்டுகளாக இருக்கும். இறுதியாக அடியார்களிடையே தீர்ப்புக்கூறப்படும். சொர்க்கத்திற்கோ, நரகிற்கோ என அவர் தன் வழியே செல்வார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1214)

ரமளானில் நோன்பு கடமை, மேலும் நோன்பின் சிறப்பு

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் : 2:183)

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - - ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (அல்குர்ஆன் : 2:184)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (அல்குர்ஆன் : 2:185)

''மனிதனின் அனைத்து செயல்களும் அவனுக்குரியதே. ஆனால் நோன்பைத் தவிர. இது எனக்குரியதாகும். இதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் நோன்பு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு வைத்தால், அந்நாளில் அவர் தீயதைப் பேச வேண்டாம். மேலும் கூச்சல் போட வேண்டாம். ஒருவர் நோன்பு வைத்தவரைத் திட்டினால் அல்லது சண்டை போட்டால், ''நான் நோன்பாளி'' என்று அவர் கூறட்டும். முஹம்மதின் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, நோன்பாளியின் வாயின் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு வகை சந்தோசம் உண்டு. 1) நோன்பு திறக்கும் போது சந்தோசமடைகிறான். 2) அல்லாஹ்வை சந்திக்கும்போது நோன்பின் மூலம் கிடைக்கும் நன்மைகளால் மகிழ்ச்சியடைகிறான்   என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1215 )

''அல்லாஹ்வின் வழியில் இரண்டு ஜோடி (உணவு – உடை) செலவு செய்தால் அவரை சொர்க்கத்தின் வாசலிலிருந்து ''அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும்'' என்று அழைக்கப்படுவார். தொழுகையாளியாக அவர் இருந்தால் தொழுகைக்குரிய வாசலிலிருந்து அவர் அழைக்கப்படுவார். உயிரை தியாகம் செய்தவராக இருந்தால் ஜிஹாதின் வாசல் பக்கம் அழைக்கப்படுவார். நோன்பாளியாக அவர் இருந்தால், ''ரய்யான்'' எனும் வாசலிலிருந்து அழைக்கப்படுவார். தர்மம் வழங்குபவராக இருந்தால் ''தர்மம்''  வாசலிலிருந்து அழைக்கப்படுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1216)

''சொர்க்கத்தில் ஒரு வாசல் உண்டு. அதற்கு ''ரய்யான்'' என்று கூறப்படும். அதில் மறுமை நாளில் நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்கள் அல்லாத எவரும் அதில் நுழையமாட்டார்கள். ''நோன்பாளிகள் எங்கே?'' என்று கேட்கப்படும். அவர்கள் எழுந்து நிற்பார்கள். அவர்களைத் தவிர மற்ற எவரும் நுழைய மாட்டார்கள். அவர்கள் உள்ளே சென்றதும், அந்த வாசல் அடைக்கப்படும். அதில் எவரும் நுழைய முடியாது   என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஹ்து (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1217)

''அல்லாஹ்வின் வழியில் ஒருவர் ஒரு நாள் நோன்பு வைத்தால், அந்த நாளிற்கு பகரமாக அவரின் முகத்தை நரகத்தை விட்டும் எழுபது ஆண்டுகள் அல்லாஹ் தூரமாக்குகிறான்   என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1218)

''இறை நம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் ரமளானில் ஒருவர் நோன்பு வைத்தால், அவருக்கு முன் சென்ற (சிறு பாவங்கள்) மன்னிக்கப்படும்   என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1219)

''ரமளான் மாதம் வந்துவிட்டால், சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும். நரகத்தின் வாசல்கள் மூடப்படும். ஷைத்தான்கள் விலங்கு போடப்படுவர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1220)

''பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு அது மறைக்கப்பட்டால், ஷஃ பானை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1221)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
 இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

3 Responses So Far:

sabeer.abushahruk said...

ரமளான் மாதம் நெருங்கி வரும் வேளையில் நிறைவான நினைவூட்டல்களுக்கு நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நினைவூட்டல் மட்டுமல்ல மனதில் நிலைத்திருக்கும்படியான பகிர்வு !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு