Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 90 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 10, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

நிச்சயமாக அல்லாஹ் மூன்று காரியங்களை உங்களிடம் விரும்புகிறான். மூன்று காரியங்களை உங்களிடம் வெறுக்கிறான். அவனை நீங்கள் வணங்குவதையும், எதையும் அவனுக்கு நீங்கள் இணை வைக்காமல் இருப்பதையும், அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் சேர்ந்து பற்றிக் கொண்டு, நீங்கள் பிரிந்து விடாமல் இருப்பதையும் உங்களிடம் விரும்புகிறான். இவரால் கூறப்பட்டது, இவர் கூறினார் என்பதையும், அதிகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் உங்களிடம் வெறுக்கிறான்என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1781 )

ஒருவர் தன் சகோதரரை ஆயுதம் மூலம் (மிரட்டிக்) காட்ட வேண்டாம். ஏன் எனில், ஷைத்தான் அவரின் கையை விட்டு நழுவி (வெட்டி) விடக் கூடும். இதனால் நரகின் படுகுழியில் அவர் விழ நேரிடும் என்பதை அவர் அறிய மாட்டார்என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1783 )

நபி(ஸல்) அவர்கள் நறுமணப் பொருட்களை பெற்றுக் கொள்ள மறுக்கமாட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் (புகாரி) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1787 )

ஒரு மனிதர், இன்னொரு மனிதரை புகழ்வதையும், புகழ்வதில் அவர் வரம்பு மீறுவதையும் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “(அவரை) நீங்கள் அழித்து விட்டீர்கள் அல்லது அந்த மனிதரின் முதுகை ஒடித்து விட்டீர்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1788 )

நபி(ஸல்) அவர்கள் முன் ஒரு மனிதர் பற்றி கூறப்பட்டது. அப்போது அவரை ஒருவர் புகழ்ந்து கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் உமக்கு கேடு உண்டாகட்டும்! உம் நண்பரின் கழுத்தை ஒடித்து விட்டீரே! என்று பலமுறை கூறிவிட்டு ஒருவர் ஒருவரைப் புகழத்தான் வேண்டும் என்றிருந்தால், “இவ்வாறு, இவ்வாறு அவரை நான் கருதுகிறேன்என்று கூறட்டும். அவர் அவ்விதம் இருப்பதாகக் கருதினால், அவரை அல்லாஹ் கேள்வி கேட்பான். அல்லாஹ்விடம் எவரையும் தூய்மைப்படுத்திப் பேச வேண்டிய அவசியம் இல்லலை. (அவர் பற்றி அல்லாஹ் அறிவான்) என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்கர் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1789 )

ஒரு மனிதர், உஸ்மான் (ரலி) அவர்களைப் புகழ ஆரம்பித்தார். அப்போது மிக்தாத்(ரலி) அவர்கள் முழங்காலிட்டு அமர்ந்து, பொடிக்கற்களை (எடுத்து) அவரின் முகத்தில் வீசிட ஆரம்பித்தார்கள். என்ன காரியம் செய்கிறாய், என்று உஸ்மான்(ரலி) கேட்டார்கள். அப்போது மிக்தாத் (ரலி) அவர்கள் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களின் முகங்களில் மண்ணை வீசுங்கள்என்று நபி(ஸல்) கூறினார்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹம்மாம் இப்னு ஹாரிஸ் அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1790 )

ஒரு ஊரில் பிளேக் நோய் உள்ளது பற்றி நீங்கள் கேள்விபட்டால் அதில் நுழையாதீர்கள். நீங்கள் அந்த ஊரில் இருக்கும்போது அது ஏற்பட்டால் அங்கிருந்து வெளியேறாதீர்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1792)

''அழிவைத் தரும் ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!'' என்று நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! அவை என்ன? என்று மக்கள் கேட்டனர். ''அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், சூன்யம் செய்தல், அல்லாஹ் தடை செய்துள்ள ஓர் உயிரை நியாயமின்றி கொலை செய்தல், வட்டியை உண்ணுதல், அனாதையின் சொத்தை உண்ணுதல், போரில் புறமுதுகிட்டு ஓடுதல், மூஃமினான பத்தினிப் பெண்களை அவதூறு கூறுதல் (ஆகியவைகளாகும்)''என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1793 )

''தன் தந்தை இல்லை என்பதை அறிந்தே ஒருவர், தன் தந்தை அல்லாதவரை தந்தை என வாதாடினால், சொர்க்கம் அவருக்குத் தடையாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்து இப்னு அபீவகாஸ் (ரலி)
அவர்கள் (புகாரி,முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1802 )

''தந்தையை வெறுக்காதீர்கள். தன் தந்தையை ஒருவர் வெறுத்தால் அவரின் செயல் இறை மறுப்பு (குஃப்ரு) செயல் ஆகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1803)

''நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்வான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அல்லாஹ் தடுத்துள்ள ஒன்றை மனிதன் செய்யும்போது ஏற்படுகிறது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1806 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

"திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்"

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

3 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் காக்கா...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன், அருமருந்தில் அழகிய முன்மாதிரிகள் மின்னுகின்றன...

இப்னு அப்துல் ரஜாக் said...

குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும்

sabeer.abushahruk said...

பின்பற்றினால் பேரின்பம் தரும் நபிவழிசொல்லும் பொன்மொழிகள்.

ஜஸாக்கல்லாஹு ஹைரா!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு