Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆஹா... ஆஹா.. பெருநாள்...! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | October 05, 2014 | , ,



ஆஹா பெருநாள்
அருமையான திருநாள்...
அல்லாஹ் நமக்களித்த
அழகான ஒருநாள்!

ஆர்ப்பரிக்கும் மனத
அசைபோடும் இனிதாய்
அதிரைப் பட்டினத்து
அந்தக்கால பெருநாள்!

அன்றிரவு முழுதும்
அமைதியில்லா உறக்கம்...
அதிகாலை தொழுகை
அதற்கடுத்து குளியல்!

குளியல் என்ற பெயரில்
கும்மாலம் குதூகலம்...
குளத்து மேட்டிலிருந்து
குபீர் பாய்ச்சல் குட்டிக்கரணம்!

புத்தம்புது கைலி
புதிதாய் தைத்த சட்டை
புட்டாமாவு போட்டு
பினாங்கு அத்தர் பூசி...

உச்சமான உடுப்பாக
ஷைத்தானுக்கு தடுப்பாக
ஹெல்மெட்டு போல
வெல்வெட்டில் தொப்பி!

தெருவெங்கும் ஒலிக்கும்
தக்பீரின் முழக்கம்,
ஊரெங்கும் திளைக்கும்
தக்வாவின் சிறப்பும்!

ஊருக்கே உரித்தான ப்ரத்யேக ராகத்தில்
அத்தனைப் பள்ளிகளிலும் சத்தமாய்க் கேட்கும்...
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்...
லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்...
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!

KulluAam WaAnthum BiKhair
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

12 Responses So Far:

sabeer.abushahruk said...

பெருநாள் உற்சாகத்தைக் குரலில் வரவழைத்துச் சந்தம் தப்பிய வரிகளையும் சமாளித்துப் பாடியிருக்கும் தம்பி ஜஃபருல்லாவை நான் மனமாறப் பாராட்டுகிறேன்.

ஆம்... அந்தக் கால பெருநாள் ஞாபகங்கள் மறக்க முடியாத அளவிற்கு சந்தோஷத்தை அள்ளித் தருபவை.

இன்றோ...

நெட்காலிலும்
நீண்ட பெருமூச்சிலும்
ரகசிய கண்ணீரிலும்

மூடிய இமைகளுக்குள்-
முடிவற்ற நினைவுகளிலும்

செல்ஃபோனில் சேகரித்த-
செல்லுலாய்டு முகங்களிலும்

சட்டென முடிந்துபோகிறது
பெருநாள் சந்தோஷங்கள்!!!

அதிரை.மெய்சா said...

ஜோரான பெருநாள்
சூப்பரான தியாகத் திருநாள்
கவிதை வரியிலும் பாடி
கலக்கும் நல்ல பெருநாள்

அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

Unknown said...

சபீர் காக்கா

ஏதோ பாடியிருக்கிறேன்... இது பாராட்டுக்குரியதா என்று எனக்குத் தெரியவில்லை

என்றாலும் கவிதையை நானாக சில பகுதிகளில் மாற்றி பாடியிருப்பது எனக்கே உறுத்தலாய் உள்ளது.

==

நன்றி சகோ. மெய்சா

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Yasir said...

அனைவருக்கும் தியாகத் பெருநாள் வாழ்த்துக்கள்

//தெருவெங்கும் ஒலிக்கும்
தக்பீரின் முழக்கம்,
ஊரெங்கும் திளைக்கும்
தக்வாவின் சிறப்பும்!//

நிறையவே மிஸ் செய்கின்றோம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஏதோ பாடியிருக்கிறேன்...// அல்ல..

எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது !

சிறப்பு என்னவென்றால் உச்சரிப்பு மிகவும் அற்புதம்... குரல் வளம் இறைவனின் அருட்கொடை !

இது வானொலிக் குரல் அல்ல காணொளிக் குரல் !

ZAKIR HUSSAIN said...

இயற்கையை பற்றி சபீர் ஒரு கவிதை எழுதி அந்தக்கவிதையை ட்யூனுக்கு ஒத்துழைக்க வைத்து [ பாடகரும் / கவிஞரும் டிஸ்கசன் செய்து ] வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

பாடகர் தேர்வு ஜாபர் ஹசன் தான்

Unknown said...

//இயற்கையை பற்றி சபீர் ஒரு கவிதை எழுதி அந்தக்கவிதையை ட்யூனுக்கு ஒத்துழைக்க வைத்து [ பாடகரும் / கவிஞரும் டிஸ்கசன் செய்து ] வெளியிட்டால் நன்றாக இருக்கும். //

ரெடி 4,2,3,1 ஸ்டார்ட் கவிகாக்கா

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு