நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் [காணொளி ஆவணப் படம்] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், அக்டோபர் 20, 2014 | , , , ,


அன்றையச் சூழலில் ஆராவாரமாக அதிரை இணைய வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு இளம் படை, பெய்து கொண்டிருந்த தொடர் மழையின் தாக்கத்தையும், அதன் சூழலையும் அலசி ஆராயப் புறப்பட்டது. கொட்டும் மழையை அள்ளிக் கொண்டு வரலாம் என்று சென்றவர்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடையான மழையை அளவுகோல் வைத்து அளந்து சொல்லும் ஓர் ஆராய்ச்சி மையம் ஒன்று கண்ணில் பட்டது.

அங்கே ! ஓர் பெண்மணி அலுவலகப் பொறுப்பாளர் திருமதி சின்னத்தாய் Msc., B.Ed. இவர், முன்னாள் பள்ளி ஆசிரியை, அதிரை வானிலை கண்கானிப்பு மையத்தின் அலுவலக பொறுப்பாளராக தன்னடக்கத்துடன் எங்களை வரவேற்று, அவர்களுக்கே உரிய ஆசிரியர் பணியின் அற்புதத்தால் அங்கே பயிலும் மாணாக்களாக சென்ற எங்களுக்கு விளக்கிய விதம் அருமை.

வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டு மழை வருமா? வந்தால் பள்ளிக்கூடங்கள் விடுமுறை விடுமா? என்ற காத்திருக்கும் மாணவர்களைப் போல் நாமும் அங்கிருந்த அனைத்து ஆராய்ச்சி பயண்பாட்டுச் சாதனங்களை பார்த்ததும் கேள்விகள் கேட்டோம், ஆச்சர்யப்பட்டோம் இதுநாள் வரை அதிரையில் இப்படியான மையம் இருப்பதை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் ? 

இந்த ஆராய்ச்சி மையத்தின் தொடர் பங்களிப்பாக, ஆகாய மார்க்கத்திர்க்கும், தரை வழி மற்றும் கடல் வழித் தடங்களுக்கும் எந்த அளவு பயன்படுகிறது என்பதனை திருமதி சின்னத்தாய் அவர்கள் தெளிவான பாடம் எடுத்தார்கள்.


அதிரைநிருபர் பதிப்பகம்
நன்றி : அதிரைபிபிசி [வலைத்தளம்]

2 Responses So Far:

N.A.Shahul Hameed சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்!
1980 களில் நடந்த ஒரு நிகழ்வு. அந்த நாட்களில் மழைக் காலம் என்றால் ஆசிரியர் மாணவர் அனைவருக்கும் கொண்டாட்டம் தான். ஏன் என்றால் மழை வந்தால் கல்லூரிக்கு No Lecture Classes போட்டு விடுவார்கள்.
அன்றைய தினம் மதிப்பிற்குரிய பாட்சா சார் முதல்வர் பொறுப்பில் இருந்தார்.

அன்று காலையில் வானம் மேகக் கூட்டமாக இருந்தது. பாட்சா சார் முதல்வர் பொறுப்பில் வந்ததும் எல்லோருடைய நன் மதிப்பை பெறவேண்டும் என்னும் ஆர்வம்.
உடனே இன்று, மழை பெய்வதால் ஒரு நாள் மட்டும் கல்லுரி வகுப்புக்கள் நடைபெறாது என்று ஒரு சுற்றறிக்கை தயார் செய்து எல்லோருடைய பார்வைக்கும் விட்டு விட்டார்.
மாணவர்கள் பேராசிரியரை வாழ்த்திவிட்டு சென்று விட்டனர்.
ஒரு 11 மணி இருக்கும். கல்லூரித் தாளாளர் ஜனாப்.S.M.S.ஷேக் ஜலாலுதீன் அவர்களிடம் இருந்து ஓர் தொலைபேசி அழைப்பு முதல்வர் பொறுப்புக்கு வந்தது. பாட்சா சார் எடுத்தார்.
தாளாளர் அவர்கள், "என்ன வகுப்புக்கள் எல்லாம் நன்றாக நடக்கிறதா?" என்று கேட்டார்.
பாட்சா சார், "இன்று மழை பெய்வது போல் இருந்ததால், No Lecture Classes, போட்டுவிட்டேன்" என்று கூறினார்.
உடனே தாளாளர் அவர்கள் "அப்படியா, இங்கு ஒன்னும் மழையைக் காணோமே?" என்று கூறிவிட்டு, "கல்லூரிக்கு மேலே கூரை ஏதும் இல்லையோ?" எனக் கூறிவிட்டு உடனே தொலைபேசியை நிறுத்திவிட்டார்.
N.A.Shahul Hameed

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு