நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஈத் மிலனும் இனி வரும் காலமும் !
காணொளி இணைக்கப்பட்டுள்ளது
4

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், அக்டோபர் 16, 2014 | , , , ,

அதிரையில் கடந்த 12ம் தேதி அன்று மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இரண்டாம் ஆண்டு "பெருநாள் சந்திப்பு 2014" என்ற நிகழ்வில் அதிரைக்கு மட்டுமல்ல சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஊர்களுக்கும் பலவிடயங்கள் இருக்கிறது. அருமையான இந்த நிகழ்வின் துவக்கத்தில் ஈத் மிலன் "பெருநாள் சந்திப்பு" அதன் தூய்மையான நோக்கம் என்னவென்று வரவேற்புரையில் அருமையாக எடுத்துரைக்கப்பட்டது அதோடு எப்படி நாம் அதனை மேலும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து தலைமையுரையிலும், சிறப்பு பேச்சாளரின் உரையிலும் சிறப்பாக அறிவுறுத்தப்பட்டது.

அதிரைப்பட்டினம் போன்ற இஸ்லாமியர்கள் நிறைந்த ஊர்களில், எந்தவொரு இஸ்லாமியரும் சகோதர சமயத்தைச் சார்ந்தவர்களை ஓரங்கட்டிப் பார்ப்பதில்லை, தங்களது அன்றாட வாழ்வியலில், வணிகத்தில், வீட்டு வேலைகளில், ஏன் சொந்த காரியங்களில் பிற சமய சகோதரர்களை அரவனைத்துக் கொண்டேதான் இருக்கின்றனர். 

அப்படியிருக்க ! ஏன் அதிரைக்கு இப்படியொரு நிகழ்வு அவசியமா என்று வினா எழுப்புபவர்களும் உண்டு. 

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அனைத்து சமய நல்லிணக்க கூட்டங்கள் ஒன்று கூடல் நிகழ்வுகள் நடந்து கொண்டு இருந்தாலும், அதிரையைப் பொருத்த மட்டில் நமக்கு நாமே நன்னெறி மார்க்கத்தை சொல்லிக் கொண்டு இருந்தோம். ஆனால், காலத்தின் கட்டாயம் இன்றைய ஊடக வளர்ச்சியும், இணைய பயன்பாடும் அனைத்து மக்களாலும் அலசி ஆராயும் ஆர்வம் கூடியிருக்கிறது. அதோடு தான்-தோன்றித்தனமாக கற்பனைகளையும் கதைகளை செய்திகளாகவும் வரலாறாகவும் பதிக்கப்பட்டு அது வேறுவிதமான விவாதத்திற்கும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் என்றல்லாமல் மனித இனத்திற்கு எதிரானதாக உருவகம் கொடுத்து பாஸிச சிந்தனையைத் தூண்டி ஒரு மதம் இன்னொரு மார்க்கத்திற்கு எதிராக சதிகளை செய்து கொண்டு இருக்கிறது.

ஆக ! இனிமேலும் தாமதிக்காமல் நமது தூய எண்ணங்களை பிற சமய சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆக்கப் பணிகளில் அவசியம் ஈடுபட்டே ஆக வேண்டும், புரிந்துணர்வுகள் மேலிட்டால் அங்கே காழ்புணர்ச்சிகள் காணாமல் போய்விடும்.

அதற்கு நமது அன்றாட வாழ்வியல் முறையிலும், அடுத்தவர்களோடு கலந்தாயும்போது மார்க்கம் கற்றுத் தந்த மனித நேயத்தையும், நேர்மையையும் அடுத்தவர்களுக்கு முண்ணுதாரனமாகக் கொண்டு செயல்படுத்திக் காட்ட வேண்டும். நமது செயல்களும் நல்லதை நாடும் எண்ணங்களும் சுற்றியிருக்கும் மக்களோடு கலந்தே இருக்க வேண்டும், அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் மாறாக நம் நற்செயல்கள் அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்தும் படி அமைத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற கலந்துரையாடல்கள் இனியும் தொடரனும், ஒன்று கூடல் விழாவாக இல்லாவிடினும் தான் சார்ந்து இருக்கும் பகுதியில் அல்லது தெருக்களில் அடிக்கடி கலந்து பேசிக் கொண்டால் அவ்வப்போது எழும் ஐயங்களுக்கும், அதோடு தொடர்பில் இருக்கும் சூழல் இருந்து கொண்டே இருக்கும். நல்லதையும் கெட்டதையும் ஆராய்ந்து கொள்ள பேருதவியாக இருக்கும்.

மீண்டும் ! மிகச் சிறப்பாக ஈத் மிலன் "பெருநாள் சந்திப்பு 2014"ஐ ஆக்கபூர்வமாக நடத்தி முடித்த 'அதிரை ஈத் மிலன் கமிட்டி'க்கு துஆவும், வாழ்த்துக்களும்.

அதிரைநிருபர் பதிப்பகம்

அதிரை ஈத் மிலன் 'பெருநாள் சந்திப்பு - 2014'  காணொளி4 Responses So Far:

N. Fath huddeen சொன்னது…

உண்மையே!
மிக்க நன்றி!
ஜசாகல்லாஹ்.

N. Fath huddeen சொன்னது…

நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளில் மீதி பகுதியையும் கொண்டு வந்து தாருங்கள்.

sabeer.abushahruk சொன்னது…

மனிதம் மட்டுமே பிரதானம் என்பதை வலியுறுத்தவும் மார்க்கத்தைப் பற்றி ஊடகங்கள் பரப்பி வரும் அபத்தங்களைக் களையவும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.

ஈத் மிலன் கமிட்டிக்கு வாழ்த்துகளும் துஆவும்

நெறியாளர் - editor@adirainirubar.in சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஈத் மிலன் "பெருநாள் சந்திப்பு" நிகழ்வின் நான்கு பகுதிகள் கொண்ட அனைத்து காணொளிகளும் பதிக்கப்பட்டுள்ளது.

காணொளி பகிர்வு : அதிரை ஈத் மிலன் கமிட்டிக்கு நன்றி

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+