Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தேடல்! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | October 06, 2015 | , ,

நான்
என்னைத்
தேடிக்கொண்டிருந்தேன்

தேடலே நோக்கமென்றறிந்ததும்
இருட்டு தன்னை
இரட்டிப்பாக்கிக் கொண்டது

இரண்டாயிரங் கோடி
இமைகள்
இரு விழிகளை மூடின

கைக்கெட்டும் தூரம்கூட
கண்ணுக்கெட்டவில்லை

வர்ணமோ வடிவமோ
வகையறியா வண்ணம்
கெட்டியாகிவிட்ட இருட்டில்
எத்தனை பிரயத்தனம்  செய்தும்
என்னைக்
கண்டெடுக்க முடியாமலேயே போய்விடுகிறது

எனினும்

மனிதன் திருத்த முயன்று
கலைத்துப் போட்டிராத
இயற்கையின்
இயல்பை ரசிக்கக் கிடைக்கும்போதும்

மழை பெய்யும்போதும்
மண் நனையும்போதும்

ஈன்றவள் வாயால்
ஆண்டவன் அருளை
எனக்காகக் கேட்கும்போதும்

வலக்கரத்தில் வாய்த்தவள்
விழிகள் ஒளிரும்போதும்

பதக்கம் வாங்கும்
மகளைக் காணும்போதும்

சுயத்தின் பிம்பமென
மகன் வாய்த்தபோதும்

பால்ய சிநேகிதர்களுடனான
உரையாடல்களின்போதும்

பிறந்த மண்ணிலிருந்து
இறந்தவர் தாக்கல் வரும்போதும்

படைப்பின் அர்த்தம் உணர்ந்து
படைத்தவனை வணங்கும்போதும்

போன்ற
தருணங்களைத் தவிர!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

25 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

ஆரம்பமுதல்முடிவுவரைகவிதைகள் தத்துவமுத்துக்கள்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.இந்த தேடலில் இன்று என்னை நிறுத்தி கண்டு கொண்டேன்!' டல்'லாகி போகும் வாழ்வில் தேடல் வெளிச்சம் ஒரு பரவசத்தை நம்முன் அளிக்கிறது!

crown said...

தேடலே நோக்கமென்றறிந்ததும்
இருட்டு தன்னை
இரட்டிப்பாக்கிக் கொண்டது
------------------------------------------------------
சோம்பல் தேடலின் எதிரி அது தன்முகத்தில் தானே கரியை பூசி காணாமல் தம்மை ஒளித்துகொள்வதை இருள் மேலும் இருளை பூசும் உருவகம் அசத்தல்.

crown said...

வர்ணமோ வடிவமோ
வகையறியா வண்ணம்
கெட்டியாகிவிட்ட இருட்டில்
எத்தனை பிரயத்தனம் செய்தும்
என்னைக்
கண்டெடுக்க முடியாமலேயே போய்விடுகிறது
----------------------------------------------------------------------------
தனித்துவம் கான தேடும் தேடலில் தேகமும் வேகம் இழக்கும் சில தருனம் வரும் ! நம்பிக்கை வெளிச்சம் கொண்டு மனதில் செலுத்திவிட்டால் அந்த சோக தேகம் வேகம் எடுக்கும்,மனதில் விவேகம் பிறக்கும்,சில சந்தர்ப்ப விலங்கை நாம் உடைக்க நம்மின் சுற்றமும் கோடாரி கொண்டு வராவிட்டால் நாம் நம்மையே இழந்து நிற்க்கும் அவளம் நேரத்தானே செய்யும்???

crown said...

எனினும்( நம்பிக்கை வெளிச்சம் கொண்டு மனதில் செலுத்திவிட்டால் .......

மனிதன் திருத்த முயன்று
கலைத்துப் போட்டிராத
இயற்கையின்
இயல்பை ரசிக்கக் கிடைக்கும்போதும்

மழை பெய்யும்போதும்
மண் நனையும்போதும்

ஈன்றவள் வாயால்
ஆண்டவன் அருளை
எனக்காகக் கேட்கும்போதும்

வலக்கரத்தில் வாய்த்தவள்
விழிகள் ஒளிரும்போதும்

பதக்கம் வாங்கும்
மகளைக் காணும்போதும்

சுயத்தின் பிம்பமென
மகன் வாய்த்தபோதும்

பால்ய சிநேகிதர்களுடனான
உரையாடல்களின்போதும்

பிறந்த மண்ணிலிருந்து
இறந்தவர் தாக்கல் வரும்போதும்

படைப்பின் அர்த்தம் உணர்ந்து
படைத்தவனை வணங்கும்போதும்-------------

crown said...

கவிஞரின் தேடல் எல்லாம் விடியல் தரக்கூடியதாகவும்,ஆர்வம் கொள்ளக்கூடிய வழிமுறையிலும் என்றும் வாய்க்கும் .இன்றும் தேடினேன் வாய்த்தது,இந்த தேடல் இன்னும் நீளமாய் தொடர அதன் மூலம் நம் சமூகத்தின் மீது சமிஞ்கையாக ஒலித்து கொண்டிருந்தால் கேளாசெவியும் ஒருனாள் கேட்டு தேடலை தொடங்க முடியும், வாழ்த்துக்கள்,வாழ்வியலின் தேடலில் கிடைத்த இந்த ஞானப்பெட்டகம் அடிக்கடி புதையாலாய் வெளிப்படட்டும் உங்களின் கவிதை ஆயுதத்தினால்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாருக் மாமா,

அறிவும் அனுபவமும் ஒருங்கே வாய்ப்பது அரிது. நீங்கள் பாராட்டும்போது உங்களில் காண்கிறேன்.

நன்றி

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா

அதிரை.மெய்சா said...

தேடத் தேட
தேன்துளி வரிகள்
உன் கவிதையில்

எத்தனையோ தேடல்கள்
இவ்வுலக வாழ்வில்
அத்தனை தேடலும்
அரைநொடியில் கிடைத்தாலும்
ஆசைகளை
அடக்கிக் கொள்ளாத
மனிதர்கள் வாழும்
பூமியிது

அத்தனையும் உன்கவிக்குள்
தேடத் தேட கிடைத்தன

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் க்ரவ்ன்,

அந்தத் தழுவலுக்குப் பிறகு நழுவிய உங்களைக் காண மகிழ்ச்சி.

இது ஒரு சின்ன அக்னாலட்ஜ்மெண்ட். தங்கள் கருத்து நிறைய உரையாடத் தூண்டுவதால் நேரம் ஒதுக்கி மீண்டும் வருவேன், இன்ஷா அல்லாஹ்.

sabeer.abushahruk said...

//இந்த தேடலில் இன்று என்னை நிறுத்தி கண்டு கொண்டேன்!' //

தேடல் இல்லாத பொழுதுகள் எந்திரத்தனமானவை. உணர்வுகளை உப்புச்சப்பில்லாமல் செய்துவிடும். விடிதலும் வாழ்தலும் வீழ்தலும் முடிதலும் எந்திரத்தனமாக மாறிவிடும் அபாயம் உருவாகிவிடும்.

தேடலே வாழ்விற்கான பிராண வாயு. நம்மை எடுத்துத் நம்மிலிருந்து பிரித்துத் தனியே வைத்து நாம் விலகி நின்று நம்மை நாமே ஆராய்ந்தோமேயானால் தேடல் வெளிச்சம் வழிகாட்டும்.

அதுபோது, உங்களுக்கு நீங்கள் கிடைப்பீர்கள்.

இதைத்தான் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்

Unknown said...

சலாம் சபீர் காக்கா ,

''எனினும் '' என்ற தலைப்பின்கீழ் (மட்டும் ) ''படைப்பின் அர்த்தம் உணர்ந்து
படைத்தவனை வணங்கும்போதும்'' என்று நீங்கள் சொன்னது சரியல்ல .
உங்கள் கவிதையின் முன் தேடல் பகுதி கேள்விற்கு பதிலும் அதே தான் .

என் புரிதல் தவறா ? விளக்குங்கள் கவிஞரே

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம்.

தம்பி அப்துர்ரஹ்மான்,

ஊன்றி வாசித்திருக்கிறீர்கள், நன்றி.

இருப்பினும், "யதார்த்த உலகின் சந்தர்ப்பவாத நிகழ்வுகள் என்கிற அடர் இருட்டில் தொலைந்து போய்விடும் நான், பட்டியலிட்டுள்ளவை போன்ற தருணங்களில் மட்டுமே எனக்குக் கிடைக்கிறேன்" என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன்.

வாசகருக்கு வேலை வைக்கவே பூடகமாக சொல்வர் கவிதையில்.

புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

sabeer.abushahruk said...

அன்பு மெய்சா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//அத்தனை தேடலும்
அரைநொடியில் கிடைத்தாலும்
ஆசைகளை
அடக்கிக் கொள்ளாத
மனிதர்கள் வாழும்
பூமியிது//

சுயம் செழிக்க தேடும் யாருக்கும் கிடைத்ததில் திருப்தி ஏற்பட்டுவிடாதுதான். எனவேதான், எதைத் தேடுகிறோம் என்பதில் தெளிவில்லாவிட்டால் என் நண்பன் இக்பால் சொன்னதுபோல்தான் (நபிமணியும் நகைச்சுவையும் ஆசிரியர்) நிற்க நேரிடும்:

தேடல்:

என்னை விற்று
எதையோ பெற்று
பின்னர்
அடைந்ததை அனுபவிக்க
என்னைப்போய்
எங்கே தேடுவேன்?

KALAM SHAICK ABDUL KADER said...

தேடி யுணர்ந்தேன் இன்று
தேடல்கள் இப்படித்தான் நம்முன்னே
நிற்கும் விடியலாய் என்று

KALAM SHAICK ABDUL KADER said...

உதடுகள் கூறும் பிரார்த்தனை உன்னில்
.......உருகிடும் உணர்வுகள் ஓசைக்
கதவுகள் திறக்கும் திறவுகோல் அவனின்
.......கருணையால் பிறந்திடும் வார்த்தைப்
பதவுரை என்னும் பொழுதினில் உனக்கே
......படைத்தவன் வேண்டுதல் தேவை
நிதமுமுன் தேடல் தேவையைக் கேட்க
.....நிலைத்தவன் அவனென உணர்வாய்.

Ebrahim Ansari said...

தேடலின் தேவை அறியாமல்
தேடலில் தொலைப்பாய் உன்னை..!

தேடி தேடி கிடைத்த பொருளும்
தேவை இல்லாமல் போகும் ஒரு நாள்..!

திக்கு முக்காடி திரியும் பொழுதில்
தெளிவு பிறக்கும்,
தேடலே வாழ்வின் சாபம் என்று.!

- என்றோ படித்த கவிதை . எழுதிவைத்திருந்தேன் எனது ஏட்டில் .

Ebrahim Ansari said...

இல்லாதவனுக்கு வயிறு
நிறைந்தவனுக்கு மூளை
கனத்தவனுக்கு ஆன்மா
தேடும் இடம்
மனிதனுக்கு மனிதன் மாறுபடும்

- கூடலில் வந்த கவிதையின் சில வரிகள்

எதுவும் நிற்காது உங்களின் இந்தக் கவிதையின் முன் .

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா ரேஞ்சுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது.

sabeer.abushahruk said...

//தேடல்கள் இப்படித்தான் நம்முன்னே
நிற்கும் விடியலாய் என்று//

அன்பிற்குரிய கவியன்பன்,

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த தேடல் தாகம் தங்களைப்போன்ற கவிஞர்களுக்கு கூடுதலாகவே இருக்கிறது.
கருவை வைத்துக்கொண்டு காரியங்களைத் தேடி எழுதும் தங்களின் முனைப்பே தனித்துவம்.

நன்றி

Yasir said...


தேடல் கருத்துசெறிவுமிக்க க(டல்)விதை, ஒரு சில கவிதைகள் உள்ளத்தை கொள்ளையடித்து
மனதுடன் ஒன்றிவிடும்…அந்த ரகம் இக்கவிதை..வாழ்த்துக்களுடன் துவாவும் காக்கா

sabeer.abushahruk said...

//தேடலே வாழ்வின் சாபம் என்று.!//

பேரன்பிற்குரிய காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நிலையற்றதைத் தேடினால் தேடல் வாழ்வின் சாபம்தான். நிலையானவற்றைத் தேடினால் அதுவே வாழ்வதற்கான உத்வேகம் தரும்.

தேடலின் பல பரிமாணங்களைக் கண்ட தங்களிடம் கற்க வேண்டிய இடத்தில் இருக்கும் நான் என்ன சொல்ல!

நன்றி

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

sabeer.abushahruk said...

அன்பு யாசிர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எனக்குத் தெரியும் இந்தத் தேடல் உங்களுக்குப் பிடிக்கும் என்று! ஒத்த ரசனையின் சாயலைப் பல முறை உங்களிடம் கண்டதால், பட்டியலில் உள்ள தருணங்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்று யூகித்தேன்.

நன்றியும் துஆவும்.

Iqbal M. Salih said...

நிறையபேர்
வாழ்வதாக நினைத்துக்கொண்டு
தங்களையும் பிறரையும்
ஏமாற்றிக்கொள்கின்றனர்!

வாழத்துவங்குவதற்காக நிஜத்தை
வாழ்க்கையில் 'தேடுபவனே'
உண்மையில் வாழ்பவனாவான்!

(மார்ச் 17, 1983 என் டைரிக்குறிப்பிலிருந்து)

Ebrahim Ansari said...

தம்பி சபீர்! அலைக்குமுஸ் சலாம்.

தேடல் சிலருக்கு சாபமாகவும் சிலருக்கு வரமாகவும் ஆகலாம். தேடலின் விளைவு அன்னிலையில்/ அந்த முடிவில் கொண்டு போய் விடும்.

நான் காட்டிய கவிதை என் கருத்தல்ல. யாரோ? சொன்னது.

sabeer.abushahruk said...

இக்பால்,

அஸ்ஸலாமு அலைக்கும்

தேடலின்போதான கவனச்சிதறல்கள் பலரின் வாழ்க்கையில் தேடுதலைச் சிரமமாக்கிவிடுகின்றன.

கவனச்சிதறல்களை ஏற்படுத்துபவர்கள் உபயோகிக்கும் கடமை, பொறுப்பு, உரிமை போன்ற அஸ்திரங்கள் வலுவானவை ஆகையால் தேடல் தொய்வடைந்து ஏமாற்றத்தில் முடிகிறது.

உன் 83ஆம் ஆண்டு டயரிக்குறிப்பில் உள்ள

"வாழத்துவங்குவதற்காக நிஜத்தை
வாழ்க்கையில் 'தேடுபவனே'
உண்மையில் வாழ்பவனாவான்!"

என்னும் தீர்மானம் மிகவும் ஆக்கபூர்வமானது.

Unknown said...

.Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahruk,

Nice lines of poem on searching and identifying the self.

I identify my self at the time of praying in front of The God Almighty. And I wish to have the sustained self consciousness in every moment in my life.

Jazakkallah khair,

B. Ahamed Ameen from Dubai.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு