Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 13 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2013 | , , , ,


கண்ணில் நீர் அழுத்தம்

சிலருக்கு சில வண்ணங்களைப் பார்த்தறிய முடியாத நிறப்பார்வைக் குறைவு (Colour Blindness) இருக்கும். இக்குறைபாட்டை பின்வரும் மூன்று சோதனைகள் மூலம் கண்டறியலாம்.

ஹோம்கிரீன் நிறக்கம்பளச் சோதனை (Holm green wool Test)
இஷிகாரா பல வண்ண எண் அட்டை சோதனை
எட்ரிட்ஜ் விளக்குச் சோதனை (எட்ரிட்ஜ் விளக்குச் சோதனை (Edridge lantem Test)

இராணுவம், கடற்படை, வான்படை, காவல் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகளை விரும்புவோர்க்கு நிறப்பார்வை குறைபாடு ஒரு தகுதிக் குறைவாகும்.  
     
க்ளகோமா எனப்படும் கண்நீர் அழுத்த நோய்:      

'க்ளாக்கோமா' என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், 'க்ளாக்கோமா' இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 

நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளாக்கோமா’ ஏற்படுகிறது.  "ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால், குணம் பெறலாம். ஆனால், படிப்படியாகவே இதன் பாதிப்பு ஏற்படுவதால், தங்களுக்கு இந்நோய் இருக்கிறது என்பதே தெரியாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் தான் மருத்துவர்கள் 'க்ளாக் கோமா'வை 'நமக்கே தெரியா மல் நம் கண்ணுக்குள் மறைந்திருந்து தாக்கும் கள்வன்' என்கிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மரபுக் காரணங்களால், ஏற்கெனவே 'க்ளாக்கோமா’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சொந்தங்களுக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் 'க்ளாக்கோமா’ பாதிப்பு ஏற்படலாம். 

தலைவலி, கண்வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்ற கண் பிரச்னைகள், 'க்ளாக்கோமா'வுக்கான அறிகுறிகள். பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 

அடிக்கடி கண் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கண்ணின் உட்பகுதிகளை முழுமை யாக அறியும் சில சிறப்புப் பரிசோதனையின் மூலம், 'க்ளாக்கோமா' பாதிப்பை அறியலாம். நோயின் படிநிலையைப் பொறுத்து சொட்டு மருந்தில் இருந்து அறுவை சிகிச்சை வரை இதற்கான சிகிச்சைகள் விரிகின்றன. எனவே, கண் மருத்துவருடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் பார்வையை பாதுகாக்க முடியும். 

நீரிழிவு விழித்திரை நோய்

பாரதம் நீரிழிவின் தலைநகரமாக உள்ளது. நீரிழிவின் தாக்கத்திற்குள்ளானவர்கள், வருடம் ஒரு முறை கண்டிப்பாக முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வதன்மூலம் நீரிழிவு விழித்திரை நோயினால் பார்வையை இழப்பதைத் தடுக்க முடியும். மேலும் பெற்றோர்களுக்கு அல்லது பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு நீரிழிவு  இருக்குமேயானால், அவர்களது சந்ததியினர் தமது முப்பது வயது முதல்,  வருடம் ஒரு முறையேனும், தமக்கு நீரிழிவு பிரச்னையிருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனைப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நீரிழிவு விழித்திரை நோய் உட்பட நீரிழிவு சார்ந்த உடல் நலப் பிரச்னைகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.

கண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரணமாக இருப்பதைவிட அதிகமாயிருப்பதுடன் , இரத்த குழாய்களில் பாதிப்பையும் ஏற்படுத்தும், இது பரம்பரை வியாதியும் ஆகும். பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பின் நாற்பது வயதுக்கு மேல் சர்க்கரை நோய் பாதிப்பும், கண் பார்வை பாதிப்பும் ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. சர்க்கரை நோய் இரு வகைப்படும்.

சிறுவயதிலேயே ஏற்படுவது
வயாதனவர்களுக்கு வருவது

சிறுவயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் கட்டாயம் தேவை.வயதானவர்களுக்கு வருவது- இவர்களுக்கு இன்சுலின் தேவையில்லை. இதை உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரையின் உதவியால் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்.

அதிக்கப்படியான உடலுறவு, கொழுப்புச்சத்து உள்ளவர்கள், 40 வயது கடந்தவர்கள் , மது அருந்துவோர், ஆகியோருக்கு வர வாய்ப்புள்ளது, குழந்தைகளில் தட்டம்மை மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக்கரிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் அபாயம், குறிப்பாக பார்வை இழப்பு , நரம்புகள் பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு, இருதயம் பாதிப்பு, போன்ற பின்விளைவுகள் எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே ஏற்பட்டுவிடும். எப்பொழுதும் இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு காலையில் சாப்பாட்டிற்கு முன் 120 கிராம்.

காலையில் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப்பிறகு 180 மி.கி இருப்பது இரத்தத்தின் அளவு சீராக இருப்பதை குறிக்கும் , நாம் சாப்பிடும் உணவிற்கேற்ப இரத்தத்தில் சர்கரையின் அளவில் மாற்றம் ஏற்படும் ஒருவரின் இரதத்ததில் சர்க்கரையின் அளவு 300மி.கி வரை எவ்வித அறிகுறியும். இல்லாமல் இருக்கலாம். மனித உடலில் சர்க்கரை என்பது கட்டுப்படுத்தலாமே ஒழிய பூரணமாக குணப்படுத்த முடியாது. சிலர் புகையிலை, சிகரெட் , மதுபானம் இவைகள் உபயோகிக்கும்பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் குறைந்தது 3 மாதத்திற்கு ஒருமுறை கண், சிறுநீரகம், இருதயம், நரம்புகள் இவற்றில் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதித்து கொள்வது நல்லது. 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகள் இவைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த தவறினால் சர்க்கரை மிகவும் அதிகரித்த நிலையில் இரத்த குழாயில் பாதிப்பும் அடைப்பும் ஏற்பட்டும் மரணம் ஏற்படும் சூழல் உருவாகும், எனவே சர்க்கரை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது நமது கண்களின் பார்வையிழப்பை தடுத்திட உதவும். பார்வைக் குறைபாடு ஏற்பட்டால் இவ்வியாதி முற்றிய நிலையில் முழுமையாக குணப்படுத்த முடியாது. கண்ணில் ஏற்படும் ஒளித்திரை மாறுபாடுகளைத் தவிர சர்க்கரை நோயினால் கண்புரை, கண்ணில் நீர் அழுத்தம் அதிகரித்தல் ஆகியவை ஏற்படலாம். இவற்றையும் கண் மருத்துவர் பரிசோதித்து தக்க சிகிச்சை அளித்திடுவார்.

மாறுகண்

நமது கண்களில் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைநார்கள் உள்ளன. இவைகளின் உதவியால் இரு கண்களும் ஒரே சீராக ஒரே கோணத்தில் அசைகின்றன. நமது இரண்டு கண்களும் கீழ் நோக்கியோ, வலது புறமாகவோ, இடது புறமாகவோ, ஒன்று போல் அசைவதால் இரு கண்களின் பார்வையும் ஒன்றுபோல் அமைந்து, 

கண்ணால் பார்க்கப்படும் பொருளின் நீளம், அகலம் , உயரம் ஆகியவை பற்றி விவரமாக தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இரு கண்களின்) பார்வையும் கண்ணாடி அணிந்தோ, அணியாமலோ ஓரே சீராக அமைந்திடல் வேண்டும். அப்போழுதுதான் இரு கண்களிலும் விழக்கூடிய பொருளின் பிம்பம் ஓரே சீராக பார்க்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டு மூளையின் பின்பகுதியில் உள்ள கார்டெக்ஸ் என்ற இடத்தில் பதிவு செய்யப்பட முடியும் இந்தச் செயல் சீராக அமையாவிட்டால் மாறுகண் ஏற்படுகிறது. மாறுகண் உள்ளவர்கள் பார்வை எங்கு விழுகிறது என்பதை சரியாக கூற முடியாது, பார்வை கண்ணுக்கு கண் மாறி இருப்பதால் இதனை மாறுகண் என்று கூறுகிறோம்

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் பதிவில் கண்களில் ஏற்படும் கண்புரை நோய்கள் பற்றியும் அதன் பாதிப்புகள் பற்றியும் தொடர்கின்றன.

தொடரும்
அதிரை மன்சூர்

26 Responses So Far:

Ebrahim Ansari said...

அறிய வேண்டிய விஷயங்கள். அருமையான விபரங்கள் நிரம்பி வழியும் கட்டுரை.

நிறையப் படித்து எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் தம்பி மன்சூர்.

அது சரி மாறு கண் உள்ள பெண்ணைக் கல்யாணம் முடித்தால் ராசி என்கிறார்களே அது பற்றி நீங்கள் படித்த கண் பற்றிய அறிவியலில் எதுவும் சொல்லப் பட்டு இருக்கிறதா? அல்லது மாறு கண்ணாக உள்ள பெண்ணை நல்ல வார்த்தை ஒன்று சொல்லி நம்பவைத்து திருமணம் முடித்து வைப்பதற்காக ஆறுதலாக சொல்லப் படுவதா?

sabeer.abushahruk said...

மன்சூரின் கழுகுப் பார்வையிலிருந்து கண்கள் சம்பந்தமான எந்த விஷயமும் தப்பவில்லை. ஏல்லாவற்றையும் ஆயிரம் கண்கள்கொண்டு விரிவாகப் பார்க்கும் கண்கள் இரண்டும் தொடருக்கு வாழ்த்துகள்.

sabeer.abushahruk said...

மாறுகண் ராசியோ இல்லையோ; ஆனால், ஓரக்கண்தான் உயிர் கொல்லும்.

அந்த
ஓரப்பார்வை
தன் இனம் பார்த்து
பின்
நிலம் பார்க்க
இவ்வித
விஷமப் பார்வைகளில் பல
விஷப்பார்வை ஆகிவிடுவதுண்டு

இவற்றில்
நிசப்பார்வையில் மட்டுமே
கருணை நிலவும்

Ebrahim Ansari said...

ஓரக்கண்ணா! அம்மாடியோவ்.

ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளைத்தாச்சி என்று எங்கிருந்தோ செவிகளில் விழுகின்றது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தரமான ஒளித் தகவல்களுக்கு நன்றி மன்சூராக்கா!

Anonymous said...

கண்களை பற்றி மிக நுணுக்கமான தகவல்களை தந்து இருக்கிறீர்கள். ஒரு கண் வைத்தியர் கூட தன்னிடம் வரும் நோயாளிக்கு இதில் ஆயிரத்தில் ஒன்றைக் கூட சொல்வதில்லை.நீங்கள் சொல்கிறீர்கள் பாராட்டுக்கள்!

''இவன் பார்த்தாலே அவள் கர்ப்பமாகி விடுவாள் ! ''என்று சொல்கிறார்களே! அப்படிபட்ட கண்களும் உண்டுமா? அப்படி இருந்தால் அதைஏன் இவ்வளவு காலம் சொல்லாமல் மறைத்தீர்கள்?

ஒரு வேளை கடைசி' க்லைமாக்ஸ்' காட்சியாக அது வருமோ ?

S.முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்

Yasir said...

கண்ணைப்பற்றி எண்ணிலடங்க தகவல்கள்....சில கண்கள் கொல்லும் சில கண்கள் வெல்லும் ...தொடருங்கள் சகோ.ம(க)ண்சூர் அவர்களே

KALAM SHAICK ABDUL KADER said...

இனிய நண்ப, அஸ்ஸலாமு அலைக்கும். நல்வரவு ஆகுக.

முன்னர் கேட்டிருந்த வினா மீண்டும்:

கண்புரை நோய்க்கான அறுவை சிகிச்சைக்குப் பின்னர் எத்தனை நாட்கள் விடுப்பில் இருக்க வேண்டும்? இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் (2014) விடுப்பில் சென்று அச்சிகிச்சை செய்ய் வேண்டும்; அதனால் இங்கிருந்து விடுமுறை விண்ணப்பத்தில் எனக்கு இத்தனை நாட்கள் விடுப்பு வேண்டும் என்று எழுத வேண்டும்; உனது கருத்தின் அடிப்படையில் யான் விடுப்பு எடுக்க வேண்டும்; உடன் விடை தருக.

குறிப்பு: இன்று எங்கள் துறையிலிருந்து சக ஊழியர் (கணக்கர்) தன் வேலையை விட்டும் நீங்கி (துபையில் புதிய நிறுவந்த்தில் சேர்ந்துவிட்டதால்)ச் சென்றதால், எங்களுக்குள் பணிகளைப் பகிர்ந்து கொள்ளும் விடயமாக ஆலோசிக்கப்பட்ட எங்கள் துறையின் தலைவருடனான கூட்டத்தில், யான் இந்தப் பிரச்சினையை முன் வைத்தேன் “நான் கண் சிகிச்சைக்காக இந்தியா போக வேண்டும்; அதனால் விடுப்பில் ஆள் பற்றாக்குறை (மீண்டும்) ஏற்படும்” என்றேன். அப்பொழுது எங்கள் இயக்குநர் அவர்கள் கேட்ட வினா தான் மேலே நான் கேட்ட வினாவாகும். என்னால் உடன் விடை கொடுக்க முடியவில்லை; இந்தக் கண் சிகிச்சையில் நீ தான் மிகவும் ஆழமாக எழுதுவதால் உன்னிடம் கேட்டேன், இந்தக் கண் சிகிச்சையைப் பற்றி அக்கூட்டத்தில் யான் சொன்னது தவறு என்றும்; அதனால் என் உயர்பதவிக்கான வாய்ப்புகள் கெடும் என்றும் என் மேலாளர் என்னிடம் கோபித்துக் கொண்டார்.

அப்படியானால், உண்மையைச் சொல்லக் கூடாதா?

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…

//அது சரி மாறு கண் உள்ள பெண்ணைக் கல்யாணம் முடித்தால் ராசி என்கிறார்களே //

நெறியாளர் இந்த பின்னுட்டத்தை உடனே நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.அப்படி நீக்கவில்லை என்றால் நாங்கள் குடும்பம் சகிதமாக போராட்டத்தில்குதிப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்

adiraimansoor said...


///அது சரி மாறு கண் உள்ள பெண்ணைக் கல்யாணம் முடித்தால் ராசி என்கிறார்களே அது பற்றி நீங்கள் படித்த கண் பற்றிய அறிவியலில் எதுவும் சொல்லப் பட்டு இருக்கிறதா? அல்லது மாறு கண்ணாக உள்ள பெண்ணை நல்ல வார்த்தை ஒன்று சொல்லி நம்பவைத்து திருமணம் முடித்து வைப்பதற்காக ஆறுதலாக சொல்லப் படுவதா?///

காக்கா
ராசி பலனெல்லாம் நம்ம கலாச்சாரம் கிடையாது நீங்கள் இரண்டாவதாக சொல்லும் கருத்துதான் உண்மையானது ஆனால் ஒன்று ராசி இருக்கிதோ இல்லையோ இப்படி உறுப்புக்களில் குறைபாடு உள்ளவர்களையும் மாற்றுத் திரனாளிகளையும் கரம்பிடித்தால் சமூகத்திலே அந்தஸ்த்தும் இறைவனிடத்திலே மிகப்பெரிய தரஜா கிடைக்கும்

adiraimansoor said...

///மாறுகண் ராசியோ இல்லையோ; ஆனால், ஓரக்கண்தான் உயிர் கொல்லும்.
///

ஜஸாக்கல்லாஹ் கைர் சபீர்

ஓரக்கன்னுக்கு பல இலக்கணம் உன்டு

வயதிற்கு வந்த இளைஞர்களின், இளைஞ்சிகளின் ஓரக்கண் பார்வை பெற்றோருக்கு ஈனம்

காமுகர்களின் ஓரக்கண் பார்வை கர்ப்புக்கு ஈனம்

திருடர்களின் ஓரக்கண் பார்வை பொருளுக்கு ஈனம்

ஜேப்படி திருடனின் ஓரக்கண் பார்வை பர்சுக்கு ஈனம்

adiraimansoor said...

///''இவன் பார்த்தாலே அவள் கர்ப்பமாகி விடுவாள் ! ''என்று சொல்கிறார்களே! அப்படிபட்ட கண்களும் உண்டுமா? ///

பாரூக் காக்கா

பார்வையில் யாரும் கர்ப்பமாவதாக இருந்தால் ஒவ்வொரு பெண்மணியும் ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு தாயாகிவிடுவாள்
ஒவ்வொரு வீடும் ஒரு பள்ளிக்கூடமாக காட்சிதரும்

இதில் இந்தியாவின் ஜனத்தொகை 1000 லட்சம் கோடியை தாண்டி இருக்கும் இந்தியாதான் அதிலும் முந்தி நிற்கும்


இவன் பார்த்தாலே அவள் கர்ப்பமாகி விடுவாள் என்பது
பார்வையின் அழுத்ததை சொல்லும் உவமைச் சொல்

அவன் பார்வையில் அவள் கர்ப்பமாகின்றாலோ இல்லையோ ஆனால் அவளை பார்வயால் கற்பழித்து விடுகின்றான்

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

//அது சரி மாறு கண் உள்ள பெண்ணைக் கல்யாணம் முடித்தால் ராசி என்கிறார்களே //

நெறியாளர் இந்த பின்னுட்டத்தை உடனே நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.அப்படி நீக்கவில்லை என்றால் நாங்கள் குடும்பம் சகிதமாக போராட்டத்தில்குதிப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்

ஹமீதுபாய் என்ன இது திடுபுடுனு ஒரு போராட்டத்தை அறிவித்துவிட்டீர்கள்

adiraimansoor said...

கண்ணான கண்ணின் தகவல்களை இரண்டு கண்கள் கொண்டு உள்வாங்கி வாழ்த்துச் சொல்லும் யாசிர் அவர்களுக்கு நன்றி ஜஸாக்கல்லாஹ் ஹைர்

adiraimansoor said...

கவியன்பா
அடுத்தடுத்து பதிவுகள் உனக்கு உரிய பதிவே அதில் ஏகப்பட்ட விசயங்கள் உனக்காக திரட்டப்பட்டதே அதை படித்து நீயே நாட்களை கணக்கிட்டுக்கொள்

KALAM SHAICK ABDUL KADER said...

குத்துமதிப்பா சொல்லக் கூடாதா எத்தனை நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று. சிலர் 5நாட்கள் என்கின்றனர்; சிலர் ஒரு மாதம் என்கின்றனர். எப்படியோ, இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் - மே யிலே இனி கவிதையே இல்லை என்று பாடிக் கொண்டிருப்பேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

கண் மருத்துவர் ஐயா,

தற்பொழுது சக்கரையின் அளவை தீவிரக் கட்டுப்பாட்டுக்குப் பின்னர் சாதாரண அளவுக்குக் கொண்டு வந்து விட்டப் பின்னர், இந்தப் புரை என்னும் புயல் கரை கடந்து விடும் தானே? ஓர் ஆறுதலுக்காகவோ, மாறுதலுக்காகவோ கேட்டு வைக்கிறேன், ஐயா.

KALAM SHAICK ABDUL KADER said...

கண் மருத்துவர் இரவெல்லாம் கண்விழித்துக் கொண்டு மறுமொழிகள் உடன் இடல் க்ண்டு யான் நன்றிக் கடன் பட்டுள்ளேன், ஐயா.

KALAM SHAICK ABDUL KADER said...

எனக்காகவே ஆதாரங்களைத் திரட்டியதாக அறிந்து மிக்க மகிழ்ச்சியுடன் உளம்நிறைவான நன்றியை உரித்தாக்குகிறேன், ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

ZAKIR HUSSAIN said...

அதிரை மன்சூர்.....உண்மையிலே மனம் திறந்த வாழ்த்துக்கள். உங்கள் ஒவ்வொரு வரியிலும் உங்களின் தீவிர உழைப்பு தெரிகிறது.

Anonymous said...

//பாரூக் காக்காவை பார்த்து வரலாம்.......//

அஸ்ஸலாமுஅலைக்கும்

அது என்னமோ தெரிய வில்லை எனக்கும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமை தம்பி மன்ஸூர் வருவார் என்ற ஒரு உள் உணர்வு ஏற்பட்டு எதிர்பார்த்து காத்துதிருந்தேன். பரவா இல்லை. இன்சா அல்லாஹ் மீண்டும் ஒரு நாள் சந்திப்போம்.

S.முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்

adiraimansoor said...

கவியன்பா

என்னுடைய குத்துக்கு மதிப்பு தெரிந்துமா இப்படி கேட்கின்றீர்

நானாக நாட்களை கணக்கிட்டால் அது தவறாக பொய்விடும் சில டாக்டர்மார்கள்
பணம் கறப்பதிலே குறியாய் இருந்து நாட்களை இழுத்தடிப்பர்கள்

தொரயமாக் மீன்டும் பழைய படி பார்ப்பதற்கு ஒரு மாத காலம் தேவைப்படும்

adiraimansoor said...

கவியன்பா

என்னுடைய குத்துக்கு மதிப்பு தெரிந்துமா இப்படி கேட்கின்றீர்

நானாக நாட்களை கணக்கிட்டால் அது தவறாக பொய்விடும் சில டாக்டர்மார்கள்
பணம் கறப்பதிலே குறியாய் இருந்து நாட்களை இழுத்தடிப்பர்கள்

தொரயமாக் மீன்டும் பழைய படி பார்ப்பதற்கு ஒரு மாத காலம் தேவைப்படும்

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்கல்லாஹ் கைரன். மிக்க நன்றி, நண்பா.

KALAM SHAICK ABDUL KADER said...

//என்னுடைய குத்துக்கு மதிப்பு தெரிந்துமா இப்படி கேட்கின்றீர்//

அறிவேன் நண்பா, அவைகள் வெறும் கரங்களா? இல்லவே இல்லை அவைகள் கருங்கற் கரங்களன்றோ? ஹா ஹா

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு