Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

காது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2013 | ,

இறைவனின் அருட்கொடையாக மனிதகுலம் அனைத்திற்கும் வழங்கப்பட்ட அருள்மறைத் திருக்குர்ஆனிலிருந்து இறை வசனங்களை ஓதக் கேட்டாலும் அதன் பொருள் அறியாவிட்டாலும் அப்படியே நம் மனதை ஈர்க்கும். அன்றாடம் தொழுகையில் ஓதப்படும் இறைவசனங்களை முழுவதுமாக அர்த்தங்கள் பொதிந்த அவ்வசனங்களை கேட்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொருவராலும் அப்பட்டமாக உணரப்படும்.

இந்த வாரம் அல்குர்ஆனில் இரண்டாவது அத்தியாயத்திலிருந்து 286ம் வசனம் ஓதுப்படும் அழகிய உச்சரிப்பையும் அதன் அர்த்தம் அறிந்து உருகி கண்ணீர் சிந்தி ஓதுவதையும் காது கொடுத்து கேட்போம் இன்ஷா அல்லாஹ் !

ஸூரத்துள் பகரா

வசனம் 286

[2:286.] அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”


அதிரைநிருபர் பதிப்பகம்

6 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆமீன்.

எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக!

Unknown said...

தேன் வந்து பாயுது காதினிலே !

இறை அச்சத்தையும் சேர்க்கின்றது பாரினிலே


அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தேன் வந்து பாயுது காதினிலே !
இறை அச்சத்தையும் சேர்க்கின்றது பாரினிலே !//

அபூஆசிஃப் காக்கா:

அதனையே கொஞ்சம் மாற்றி...

தேன் வந்து பாயுது காதினிலே
இறையச்சம் பதியுது உள்ளத்திலே !

சிறை கொண்ட மனதினிலே
சிந்திக்க தூண்டுவது இறைவசனமே !

இறைவசனங்களின் அர்த்தங்கள் !
கண்ணீருக்கும் மொழி கொடுக்கிறது !

Adirai pasanga😎 said...
This comment has been removed by the author.
Adirai pasanga😎 said...

எந்த வலியும் தமக்கு வந்தால்தான் தெரியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது உலகில் ஒரு சமுதாயத்திற்கு மனதாலும் உடலாலும் இழைக்கப்படும் அ நீதியை ஏனையோர் அறிவதில்லை.

//எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”//

sabeer.abushahruk said...

அர்த்தம் விளங்கி அல்குர் ஆனைக் கேட்கும்போதே சொல்லவொண்னா ஓர் ஆறுதல் நெஞ்சில் வியாபிக்கிறது, அச்சத்தையும் தாண்டி.

ஜஸாகல்லாஹ் க்ஹைர்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு