நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடற்கரைத் தெரு கந்தூரி - ADTயின் கோரிக்கை ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், நவம்பர் 11, 2013 | , , , ,

அன்புச் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த 3.11.2013 அன்று மாலை கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகிகளை அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் சந்தித்து, அடுத்த மாதம் நடைபெறுவதாக இருக்கும் கடற்கரைத் தெரு கந்தூரியைப் பற்றி கலந்துரையாடல் நடத்தினர். முன்னதாக நேரம் கேட்டு இவ்வமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

அமர்வில் கலந்து கொண்டவர்கள்:
கடற்கரைத் தெரு ஜமா அத் சார்பாக
1. பொறியாளர் அஹ்மது அலீ (தலைவர்)
2. சகோ. அஹ்மது ஹாஜா (து. தலைவர்)
3. சகோ. ஜேஜே சாவன்னா (செயலாளர்)

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக:
சகோ. அஹ்மது (அமீர்)
நான் (ஜமீல் - செயலாளர்)
சகோ. குலாம் (யூ.கே)
சகோ. ஜஹாங்கீர்

சுருக்கம்:

இணைப்பில் காணும் வேண்டுகோள் மனுவின் சுருக்கம் எடுத்துக் கூறப்பட்டது. கடற்கரைத் தெருவின் கடந்தகாலக் கந்தூரிகளின்போது நடைபெற்ற கலவரங்கள், பெண்கள் பகுதியில் ஆண்கள் புகுந்தது, கண்டித்தது, அதனால் ஏற்பட்ட வாக்குவாதம், அடி-தடி ஆகியவைகளைப் பற்றி ஜமா அத் செயலாளர் விவரித்தார்.

ஒருமுறை நடந்த கலவரத்தில் தாமும் பாதிக்கப்பட்டதாக ஜஹாங்கீர் தெரிவித்தார்.

"கந்தூரி என்று இருப்பதால்தானே இதுபோன்ற கலவரங்கள் ஏற்படுகின்றன. அது இல்லாவிட்டால் கலவரங்களும் இருக்காதே!" என்ற ஆற்றாமையை குலாம் வெளிப்படுத்தினார்.

"கந்தூரி இருப்பதால்தான் வருடத்துக்கு ஒருமுறையாவது தர்ஹாவுக்குப் பெயிண்ட் அடிக்கிறார்கள். இல்லாவிட்டால் அதுவும் நடக்காது. புராதனச் சின்னம் பாதுகாக்கப்பட வேண்டும்" ஜமாஅத் தலைவர் கருத்துத் தெரிவித்தார்.

"நமக்குள் மாற்றம் வரவேண்டும். மாறாமலே இருக்க முடிவு செய்திருந்தால் நம் கண்முன்னே பெரிய தைக்கால் இடிக்கப்பட்டு, பள்ளிவாசல் ஆகியிருக்காது" என்ற தகவலை குலாம் பதிவு செய்தார்.

கபுரு வழிபாட்டுக்கு வெளிப்படையான எதிர்ப்பைத் தெரிவிப்பவர் என்று அறியப்பட்ட ஜமாஅத்தின் துணைத் தலைவர், அமர்வின் கருவைத் தவிர்த்து, அரசியல்-அமைப்புகள் குறித்துப் பேச்சைத் திருப்பினார்.

"நாங்கள் வந்திருப்பது அரசியல்-அமைப்புகள் பேசுவதற்கல்ல" என்று நான் குறுக்கிட்டு மறுத்துரைத்தேன்.

அமர்வின் பேசுபொருளைத் தவிர்த்த ஜமாஅத் துணைத் தலைவரின் போக்கு, தமக்குப் பெருத்த ஏமாற்றம் அளித்ததாக அமீர் பிற்பாடு வேதனைப்பட்டார்.

கந்தூரிக்கு தெரு வசூல் கொடுக்கக்கூடாது என்று தடை போட்டிருப்பதாக ஜமாஅத் செயலாளர் தெரிவித்ததோடு தர்ஹா ட்ரஸ்ட்டிகளைச் சந்திக்கவேண்டும் என்று நான் வைத்த கோரிக்கைக்கு ஆட்களையும் சில ஆலோசனைகளையும் சொன்னார்.

கந்தூரிக்கு எதிராகச் செயல்பட ஜமாஅத் முன்வர வேண்டும் என்ற குலாமின் கோரிக்கையை, "அது பெரும் பிரச்சினையில் முடியும்" என்று ஜமா அத் செயலாளர் ஆட்சேபித்தார்.

"எங்களுடைய கடமை, தீமைகளை எடுத்துச் சொல்வது; இறைவனின் விசாரணைக்கு பதில் வைத்துக்கொள்வது" என நான் சொன்னதோடு அமர்வு நிறைவுற்றது.
***

“...இன்னும் நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும் வரம்பு மீறுவதிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்” (அல்குர் ஆன் 5:2). 

எனும் இறைவனின் வாக்குக்கு இணங்க, பாவமான கந்தூரிக்கென கஷ்டப்பட்டு ஈட்டும் ஹலாலாக சம்பாத்தியத்தில் பங்கு ஒதுக்குவதும் அதில் பங்குபெறுவதும் பாவம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,
ஜமீல், செயலாளர் - அதிரை தாருத் தவ்ஹீத்19 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

தெரு ஜமாத்தார்கள் பூஜை, சமாதி, பற்றி இஸ்லாம் சொல்வதை முழுமையாக விளங்கிட அல்லாஹ் நாடிடுவானாக!

இது சம்பந்தமாக செய்யும் ADT யின் முயற்சி அல்லது வேறு எதன் மூலமாவது நிரந்தர தடை அமையவும் அல்லாஹ் நாடிடுவானாக!

Yasir சொன்னது…

கந்தூரி பாவம், ஹராம் என்று தெரிந்தவர்களுக்குமீண்டும் எத்தி வைக்கப்பட்டுள்ளது அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர்கள் அவன் வேதனைக்கும் அஞ்சிக்கொள்ளட்டும்....பெயிண்ட் அடிப்பவதற்க்காவது கந்தூரியை நடத்திக்கொள்ளட்டும் என்பது தவறான வாதம்....பெயிண்ட் அடிக்காமல் பூச்சு பூசாமல் அந்த “தர்ஹா” இடிந்து விழுந்தாலும் சந்தோஷமே...இந்த மாதிரி “ஷிர்க்” சின்னங்கள் இருப்பதைவிட அழிவதே மேல்....அல்லாஹ் நாம் யாவரையும் இப்பாவங்களில் இருந்து காப்பானாக

Meerashah Rafia சொன்னது…

இந்த ஷிர்கை,
மனதால் வெறுத்து ஒதுக்கியாச்சு..
நாவாலும் எடுத்து சொல்லியாச்சு..
இனி கரத்தால் கைகோர்க்காதவரை காரியம் நடக்காதுபோல் தென்படுகின்றது.. அல்லாஹ்வின் உதவியுடன்..

نتائج الاعداية بسوريا சொன்னது…

கதவை தட்டிக்கொண்டே இருப்போம்

இன்ஷா அல்லாஹ் நாளையோ, நாளை மறுநாளோ, அதற்க்கு அடுத்தநாளோ,
அடுத்த மாதமோ , அடுத்த வருஷமோ, அல்லது நம் சந்ததிகளுக்கு பிறகோ, என்றோ ஒரு நாள், இவ்வழைப்புப்பணியின் பலன் கிடைக்காமல் போகாது.

இந்த ஏகத்துவ கொள்கைக்கு கண்டிப்பாக தொடர் அழைப்புப்பணியின் மூலம் , இஸ்லாத்தை தவறாக புரிந்து வைத்திருக்கும் நம் சமுதாய சகோதரர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் என்னும் நேர்வழியைக்கொடுக்க இறைவனை இறைஞ்சுவோம்.

எத்தனையோ கொடியவர்களுக்கு நேர் வழி கிடைத்த சம்பவங்கள் இஸ்லாத்தில் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றது. இவர்கள் எம்மாத்திரம் .
இவர்களும் நேர்வழி பெறுவார்கள் ஒரு நாள் இன்ஷா அல்லாஹ்.

அபு ஆசிப்.

sabeer.abushahruk சொன்னது…

நன்மையான முன்னெடுப்பு. கலந்துரையாட ஒத்துக் கொண்டதே ஒரு முன்னேற்றம்தான்.

ஏடிட்டிக்கு வாழ்த்துகள்

ZAKIR HUSSAIN சொன்னது…

அதிராம்பட்டினத்துக்கு விடிவுகாலம் வந்திருக்கிறது. அனாச்சாரங்கள் ஒழிந்து அமல்கள் சிறக்கப்போகிறது. இன்றைக்கு நம் சொல் எடுபடாமல் போகலாம்....நிச்சயம் ஒரு நாள் இஸ்லாமிய மார்க்கம் மீது ஈடுபாடு வரும்.

நம்பிக்கைதானே வாழ்க்கை!!

Ebrahim Ansari சொன்னது…

காலம் காலமாக அந்தத் தெருவின் மண் துகள்களில் கூட ஊடுருவிப் போய் இருக்கிற ஒரு வழக்கத்தை தவறு என்று சுட்டிக் காட்டி அதற்காக அந்த த் தெருவின் நிர்வாகத்தை ஒரு அமர்வுக்கு வரச் செய்து கலந்து பேசி இருப்பதே ஒரு பெரிய முன்னேற்றமாக எனக்குத் தோன்றுகிறது.

கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும்.

உணமைகளை மக்கள் உணரும்வரை முயன்றுகொண்டே இருக்க வேண்டும். மக்களே ஒன்று கூடி இனி இந்த நிகழ்வு இந்தத் தெருவில் நடைபெற வேண்டாமென்று நிர்வாகத்தை தானாகவே முன்வந்து கேட்கிற அளவில் இந்த பிரச்சாரப் பணிகள் தீவிரப் படுத்தப் பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

adiraimansoor சொன்னது…

இஸ்லாத்தின் அஸ்த்திவாரத்தையே தகர்த்தெரியக் கூடிய இந்த இழிவான செயலை நிப்பாட்ட சொல்லி எடுக்கும் முயற்ச்சியை அல்லாஹ் கபூல் செய்வானக ஆமீன்

மேலும். இஸ்லாத்தின் அஸ்த்திவாரத்தை தகர்த்தெரியும் தர்கா எப்படி புராதன சின்னமாகும் இந்த அடிபடையில் அறிவுகூட தெரியாதவர்கள் எப்படி ஒரு பள்ளிவாசலின் ஜமாத் தலைவராக இருக்கமுடியும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கவலை ஆனால் கடற்கறைத்தெரு. ஜமாத் தலைவருக்கோ இஸ்லாத்தின் அவமானச் சின்னத்திற்கு பெயிண்ட் அடிக்கும் கவலை இவரின் ஈமானின் நிலை மிகவும் கவலைபடக்குடியதாக உள்ளது.

யாஅல்லாஹ் கடற்கரை தெரு ஜமாத் தலைவரின் ஈமானை பலப்படுத்துவயாக

அதிரைக்காரன் சொன்னது…

கந்தூரி நடக்கும் இரு மஹல்லாக்களில் முதலில் ஒருவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி, ஆண்டாண்டுகளாக அறியாமல் நிகழ்த்தப்பட்ட அனாச்சாரங்களை முடிவுக்குக் கொண்டுவர முன்வந்தால், இன்ஷா அல்லாஹ் மற்றொரு. மஹல்லாவிலும் அதனைமுன்மாதிரியாகக் கொண்டு நிறுத்தப்படும்.

கந்தூரி அனாச்சாரங்களை நிறுத்துவதால் அவ்லியா என்று நம்பப்படும் கண்னியத்துரிய ஆன்றொர்களின் கோபம் கமிட்டியார்கள்மீது ஏற்படப்போவதில்லை. மாறாக, எந்த நோக்கத்திற்காகப் பாடுபட்டு அவ்லியா என்று போற்றப்பட்டார்களோ அதையே கமிட்டியார்களும் செய்வதால் அல்லாஹ்வின் அருளுக்ஜுரியவர்களாவர் இன்ஷா அல்லாஹ்.

அறியாமையிலும், பிடிவாதத்தாலும், பிறர் பாராட்டுக்காகவும் இத்தகைய விழாக்களை நடத்துபவர்களிடம் நளினமாக, மனம் தளராமல் தொடர்ந்து மார்க்கத்தை எத்திவைக்கும் அணுகுமுறையே நீண்டகால பயனளிக்கும். ஜமீல் காக்கா மற்றும் அஹமது காக்கா போன்ற அழைப்பாளர்களிடம் அது நிரம்பவே உண்டு. ஏனைய அழைப்பாளர்களும் இதே அணுகுமுறையைச் செய்தால் இன்ஷா அல்லாஹ் மனமாற்றம் நிச்சயம்.

அல்லாஹ்வின் அருள்நாடிய செயல்பாடுகளுக்கு ஈருலகிலும் நிச்சயம் பலனுண்டு.

Shameed சொன்னது…

//"கந்தூரி இருப்பதால்தான் வருடத்துக்கு ஒருமுறையாவது தர்ஹாவுக்குப் பெயிண்ட் அடிக்கிறார்கள். இல்லாவிட்டால் அதுவும் நடக்காது. புராதனச் சின்னம் பாதுகாக்கப்பட வேண்டும்" ஜமாஅத் தலைவர் கருத்துத் தெரிவித்தார்.//

பெரும்பாலான தலைவர்கள் இப்படித்தான் குண்டக்க மண்டக்க பேசுறாங்க!!

A.Ahamed Thaha சொன்னது…

இறைவனுக்கு இணை வைக்கக்கூடிய இது போன்ற விழாக்கள் மற்றும் அதற்கான இடங்களை ஏகத்துவம் பேசும் அனைத்து இயக்கங்களும் ஒன்றினைந்து ஒருமித்து எதிர்க்க வேண்டும்.

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

காலம் காலமாக அந்தத் தெருவின் மண் துகள்களில் கூட ஊடுருவிப் போய் இருக்கிற ஒரு வழக்கத்தை தவறு என்று சுட்டிக் காட்டி அதற்காக அந்த த் தெருவின் நிர்வாகத்தை ஒரு அமர்வுக்கு வரச் செய்து கலந்து பேசி இருப்பதே ஒரு பெரிய முன்னேற்றமாக எனக்குத் தோன்றுகிறது.

கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும்.

உணமைகளை மக்கள் உணரும்வரை முயன்றுகொண்டே இருக்க வேண்டும். ""மக்க(ல்)ளே"""! ஒன்று கூடி இனி இந்த நிகழ்வு இந்தத் தெருவில் நடைபெற வேண்டாமென்று நிர்வாகத்தை தானாகவே முன்வந்து கேட்கிற அளவில் இந்த பிரச்சாரப் பணிகள் தீவிரப் படுத்தப் பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
- நன்றி:அறிஞர் இபுறாகிம் அன்சாரி காக்கா.
------------------------------------

adiraimansoor சொன்னது…

அதிரைக்காரன் சரியாக சொன்னார்

அறியாமையிலும், பிடிவாதத்தாலும், பிறர் பாராட்டுக்காகவும் இத்தகைய விழாக்களை நடத்துபவர்களிடம் நளினமாக, மனம் தளராமல் தொடர்ந்து மார்க்கத்தை எத்திவைக்கும் அணுகுமுறையே நீண்டகால பயனளிக்கும். ஜமீல் காக்கா மற்றும் அஹமது காக்கா போன்ற அழைப்பாளர்களிடம் அது நிரம்பவே உண்டு. ஏனைய அழைப்பாளர்களும் இதே அணுகுமுறையைச் செய்தால் இன்ஷா அல்லாஹ் மனமாற்றம் நிச்சயம்.

இது மிகவும் பொறுத்தமான பின்னூட்டம்

Ebrahim Ansari சொன்னது…

//அனைத்து இயக்கங்களும் ஒன்றினைந்து ஒருமித்து எதிர்க்க வேண்டும்.//

நல்ல எண்ணம் . ஆனால் ஒருவரை ஒருவர் குறைந்தபட்சம் தாக்கிப் போஸ்டர் ஒட்டிக கொள்ளாமல் இருந்தாலே பெரிய விஷயம்.

இப்போது வாக்குவாதங்கள் - அடிதடி ,கொலை வரை போய்க்கொண்டு இருப்பது கவலை தரும் விஷயம். ஒற்றுமை இருந்தால் எவ்வளவோ காரியங்களை இந்த சமுதாயம் சாதிக்க முடியும்.

அதிரைநிருபர் - வாசகர் கருத்து [மின்னஞ்சல் வழி]. சொன்னது…

இந்த காலத்தில் பள்ளிவாசல் முத்தவல்லிகளாகவும், ஜமாத்து தளைவர்களாகவும் பொறுப்பேற்ப்பவர்கள் செல்வந்தர்களாகத்தானே பொறுப்பேற்கின்றனர் உண்மையான சத்திய மார்க்கத்தை அறிந்தவர்களா பொறுப்பேற்கின்றனர்

இந்த நிலை மாற்றப்படாதவரை ஜமாத்து தலைவர்வர்களால் அரங்கேற்றப்படும் அவலங்கள் அதிகமாகத்தான் இருக்கும் அந்த அவலங்களை தெளிவுபடுத்த ADT எடுத்திருக்கும் தொடர் முயற்சி நிச்சயம் ஒரு நாள் ஜமாத்து தலைவர்களை சென்றடையும்.

அந்த நாட்கள் வெகு தூரத்தில் இல்லை மிக அருகாமையிலேயே உள்ளது. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள் இப்பொழுது ADT அடிமேல் அடிவைத்துக் கொண்டிருக்க்கின்றது நிச்சயம் இன்ஷா அல்லாஹ் அம்மி நகரும்

அம்மியை நகற்ற அடிமேல் அடிவைப்போருக்கு. அல்லாஹ் நல்ல மனவலிமையையும் உடல் ஆரோக்கியத்தையும் வளமான் வாழ்வையும் அமைத்து கொடுப்பானாக ஆமீன்

அதிரை மன்சூர்

அஹமத் தௌஃபிக் சொன்னது…

தர்ஹா என்பதே இணைவைப்பின் மறுமொழி என்று கூட சொல்லலாம், அந்த இணைவைப்பின் விபரீதத்தை புரிந்தும் புரியாதவர்களாக, ஆணவமும் தற்பெருமைக்காகவும் கந்தூரியை ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அந்த கந்தூரி ஆதரவாளர்கள், அல்லாஹ் அவர்களுக்கு நேர் வழியை கொடுப்பானாக!

நமதூரின் ஜமா'அத்துல் உலமா சபை என்ன செய்துகொண்டிருக்கிறது? அவர்களின் நிலைப்பாடு தான் என்ன? ஏழு வருடம் மார்க்கம் கற்ற ஆலிம்கள் என்று தங்களை மார்தட்டிக்கொள்ளும் சிலர் இதை தடுக்க முன் வராததன் காரணம் என்ன? அவர்கள் தர்ஹா வழிபாட்டை ஆதரிக்கிறார்களா இல்லை வேடிக்கை பார்க்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா? நன்மையை ஏவி தீமையை தடுப்பதுதானே ஜமா'அத்துல் உலமா சபையின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்! அல்லது இதைவிட முக்கியமான வேறு எந்த பணி தான் உண்டு? ஊரில் உள்ள அனைத்து பள்ளிகளும் தங்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று கூறும் அவர்கள் அல்லாஹ்வை இணைவைக்கும் இந்த தர்ஹா வழிபாட்டை மிக தீர்க்கமாக குத்பா மேடைகளிலும் இன்னபிற வழிகளிலும் விமர்சிக்கவும் வேண்டும் தடுக்கவும் வேண்டும்..ஏன் அதை செய்ய முன்வர தயங்குகிறார்கள்? மாறாக கடந்த காலங்களில் ஜும்ஆ குத்பாக்களில் இதை பற்றி மிக தைரியமாக எதிர்த்து குரல் கொடுத்த சில ஆலிம்களுக்கும் மறைமுகமாக கட்டுப்பாடு விதித்தது இந்த சபை,

ஒரு முஸ்லிம் ஷிர்க் வைத்துவிட்டு இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கோராமல் மரணித்துவிட்டால் அவர் என்னதான் நற்காரியங்கள் செய்தாலும் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் அவை அனைத்தும் அழிந்துவிடும், பிறகு நிரந்தர நரகத்தில் விட்டுச்செல்லும். அல்லாஹ் நம்மனைவரியும் அந்த கொடிய பாவத்தில் இருந்து காப்பாற்றுவானாக!

ADT எடுக்கும் இந்த நல்ல முயற்சியில் அனைவரும் பங்களிக்க வேண்டும்.

A.Ahamed Thaha சொன்னது…

Bror - Ibrahim ansari said:

//நல்ல எண்ணம் . ஆனால் ஒருவரை ஒருவர் குறைந்தபட்சம் தாக்கிப் போஸ்டர் ஒட்டிக கொள்ளாமல் இருந்தாலே பெரிய விஷயம்.

இப்போது வாக்குவாதங்கள் - அடிதடி ,கொலை வரை போய்க்கொண்டு இருப்பது கவலை தரும் விஷயம். ஒற்றுமை இருந்தால் எவ்வளவோ காரியங்களை இந்த சமுதாயம் சாதிக்க முடியும்.//

ஏகத்துவம் பேசும் சகோதரர்கள் ஏகப்பட்ட பிரிவாகப் பிரிந்ததினால் ஏகத்துவத்தின் எதிரிகளை எதிர்க்கக்கூட இன்று நாதியற்றுக்கிடக்கின்றது நம் சமுதாயத்தில்.

ஏகத்துவம், நபி வழி என்று பேசும் நாம் ஒருகணம் இன்று சிந்தித்து சுயபரிசோதனை செய்துகொள்ளும் நிலையில் இருக்கின்றோம்.

சமுதாய இயக்கத் தலைவர்கள் பேசுகின்றார்கள் மார்க்கம் நன்றாக, தவ்ஹீது, நபிவழி, ஒற்றுமை என்று. ஆனால் மொத்தத்தில் செயலில் அதற்கான மாற்றம் வெகு சொற்பமே.

எனவே பல்வேறு இயக்கங்ளில் இருக்கும் நம் சகோதரர்கள் கண்டிப்பாக இதனை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

எனவே இயக்கம் அமைப்பு கட்சி என்று பாராமல்

//ADT எடுக்கும் இந்த நல்ல முயற்சியில் அனைவரும் பங்களிக்க வேண்டும்.//

ஜமீல் சொன்னது…

அன்புச் சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். அவை உணரப்பட்டால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் சிந்தனை மாற்றங்கள் ஏற்படும். இதுவே நமது நோக்கமாக இருக்க வேண்டும். கருத்துகள் எழுதும்போது இதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

எவரிடத்தும் நமக்குக் காழ்ப்பில்லை; மாறாக, அனைவருக்கும் நேர்வழி எனும் அல்லாஹ்வின் பேரருள் கிட்ட வேண்டும். அவர்களின் மறுமை வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்துவது நம் கடமையாகும்.

பதிவுக்கும் நல்ல கருத்துகளுக்கும் நன்றி!

adirai post சொன்னது…

அதிரை இளைஞர் மீது (கந்தூரியை முன்னிட்டு) பயங்கர தாக்குதல்!?
http://adiraipost.blogspot.in/2013/11/blog-post_13.html

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு