Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

துபாயில் சம்சுல் இஸ்லாம் சங்கம் முஹல்லா குடும்பங்களின் சந்திப்பு (08-NOV-2013) 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 11, 2013 | , ,

கடந்த வெள்ளிக்கிழமை (08-11-2013) துபாயில் நடந்த SIS குடும்ப சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும்  முற்றிலும் புதிய, உற்சாகமான அனுபவம் ஏற்பட்டதாகவும், இதுபோன்ற சந்திப்புகள் மூலம் குழந்தைகள் மற்றும்  மஹல்லாவாசிகளிடையே பரஸ்பர புரிந்துணர் புதுப்பிக்கப்பட்டதாகவும் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.  குறிப்பாக வெளிநாட்டு வாழ்க்கையில் கணவர்மார்களின் பணி அழுத்தம் காரணமாக குடும்பத்தினரும் இத்தகைய  மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்துகொள்ள வாய்ப்பு அரிதாகக் கிடைக்கும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும்  இந்நிகழ்வு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததைக் காணமுடிந்தது.


நிகழ்ச்சி ஏற்பாடு முதல் பரிசளிப்புக்குப் பிறகு ஏக்கத்துடன் கலைந்து சென்றது வரையிலான நிகழ்வுகளை அதிரை  இணையதள வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகிறேன்.

1) கடந்த ஹஜ் பெருநாளன்று கோர்ஃபக்கான் கடற்கரையில் ச.இ.ச மஹல்லாவாசிகள் குடும்ப பெருநாள் சந்திப்பு  நடந்தது. போதிய முன்னேற்பாடுகளின்றி நடத்தப்பட்டதால் பெரும்பாலோருக்குக் கலந்துகொள்ளும் வாய்ப்பு  கிடைக்கவில்லை. ஆகவே, அத்தகைய சந்திப்பை மீண்டும் ஏற்படுத்துவதுதென முடிவு செய்யப்பட்டது.

2) இதற்கான திட்டமிடலை சகோ.ஏர்லிங் தமீம் அவர்களின் தலைமையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி துபாய்  மம்சார் கடற்கரையில் மஹல்லாவாசிகளின் அமர்வில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

3) நவம்பர் 8,2013 வெள்ளிக்கிழமை முஷ்ரிஃப் பார்க்கில் நடக்கும் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சிக்கான உணவுக்கான  ஏற்பாடுகளை சகோ.அப்துல் ஹக் (ETA) மற்றும் நூர் முஹம்மது ஆகியோர் பொறுப்பேற்றனர்.


4) குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளுக்கு சகோ.சாகுல் (தலைவர், அபுதாபி-அய்மான்) (பரிசு பேக்கிங்)  மற்றும் N.ஜமாலுதீன் (போட்டிகள் ஒருங்கிணைப்பு) பொறுப்பேற்றுக் கொண்டனர். 

5) சகோ.ஏர்லிங் தமீம் மற்றும் ஷஃபீக் ஆகியோர் அமீரகத்திலுள்ள SIS மஹல்லா குடும்பத்தினரைத் தொடர்பு  கொண்டு முன்பதிவு மற்றும் பிறஏற்பாடுகளைச் செய்வதற்கான பொறுப்பேற்றுக் கொண்டனர்.


6) காலை 9 மணிமுதல் பார்க்கில் வரத்தொடங்கிய ச.இ.ச மஹல்லாவாசிகளை தொழுவதற்கான பள்ளி மற்றும்  ஒளு செய்யுமிடம், கழிப்பறை வசதியுள்ள மரநிழலுடன் பசுமையான புள்வெளியில் ஒதுக்குப்புறமான இடத்தை  தேர்வு செய்து ஓரிடத்தில் குழுமினர்.

7) மதிய உணவாக ஆம்பூர் கறிபிரியாணி, வெங்காய ராய்தா, பாயசம் ஏற்பாடு செய்யப்பட்டு ஜும் ஆ தொழுகை  முடிந்த பிறகு பரிமாறப்பட்டது.


8) குழந்தைகளுக்கான சாக்லெட் பொறுக்குதல் (கேன்டீஸ் கலெக்சன்) போட்டியுடன் விளையாட்டுப் போட்டிகள்  உற்சாகமாகத் தொடங்கின. 3+ வயதுள்ள குழந்தைகள் இப்போட்டியில் கையில் கோப்பையுடன் போட்டிக்குத் தயாராக இருந்தது பார்வையாளர்களை மட்டுமின்றி பார்க்கிற்கு வந்திருந்தவர்களின் கவனத்தையும் கவர்ந்தது.  இப்போட்டியில் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட் மண்ணில் விழுந்து வீணாகாதபடி தரமான பேக்கிங்  செய்யப்பட்ட சாக்லெட் பயன்படுத்தப்பட்டது.மேலும் இதன்மூலம் சுத்தம் குறித்த விழிப்புணர்வும் குழந்தைகளிடம்  ஏற்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். 

9) அடுத்ததாக பேக்-பால் ரேஸ் (BACK BALL RACE) என்ற புதுமையான போட்டி நகைச்சுவையாகவும் பார்ப்போர்  வியக்கும்படியாகவும் இருந்தது.இப்போட்டியில் ஒரு பந்தை இருவர் முதுகில் தாங்கிப் பிடித்தபடி முன்னேறி ஓட  வேண்டும். பந்து கீழே விழுந்தால் போட்டியில் தோற்க நேரிடும்.ஒருவர் வேகமாக ஓடினாலும் பந்து கீழே விழும்.  ஆனாலும் பரஸ்பர ஒத்துழைப்புடன்,கூட்டாக பந்தை முதுகில் தாங்கியபடி ஓடியது முற்றிலும் வித்தியாசமான  பந்தயம்!

10) சாக்கு ஓட்டப்பந்தயத்திற்கான சாக்குகளைத் தேடியபோதுதான் வளைகுடாவில் அரிசி சாக்குகள் 20 கிலோ  கொள்ளளவு கொண்டவை என்பது தெரிய வந்தது. எனினும் தேடிப்பிடித்து மைதா சாக்குகளைத் திரட்டி நான்கு  கட்டங்களாகப் போட்டிகளை நடத்தி முடித்தோம்.பார்வையாளர்களாக இருந்த வெளிநாடு மற்றும் அரபியர்களுக்கு  இந்தப்போட்டி முற்றிலும் வித்தியாசமானதாக இருந்ததை அரபுகுழந்தைகளும் இப்போட்டியை கைதட்டி ரசித்தபடி  உற்சாகப் படுத்தியதிலிருந்து அறிய முடிந்தது.


11) ஆண்களுக்கான ஓட்டப்போட்டியில் 40 வயதுக்குட்பட்டவர்கள் & 40 வயதைத் தாண்டியவர்கள் என்று இரு பிரிவாக நடத்தப்பட்டது. பார்வையாளர்களிலும் சிலர் கலந்து கொண்டனர்.

12) வாயில் ஸ்பூஸ்னைப் பிடித்தபடி அதிலுள்ள எலுமிச்சை பழம் கீழேவிழாமல் ஓடும் போட்டியும் பார்க்க குதூகலமாக இருந்தது. எலுமிச்சை பழத்தை வைத்து இப்படியும் ஒரு போட்டியா? என்று பார்வையாளர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்! ;)

13) அஸர் தொழுகை முடிந்து சிறார் சிறுமிகளுக்கான பிஸ்கட் கவ்வுதல் போட்டி ஆரவாரமாகத் தொடங்கியது.  நூலில் பிஸ்கெட்டைக் கட்டித் தொங்க விட்டு குதித்து குதித்து வாயால் கவ்வும் போட்டி, பெற்றோர்கள் மட்டுமின்றி  பார்வையாளர்களுக்கும்கூட த்ரில்லிங்கை ஏற்படுத்தியது. சாதாரண நாட்களில் பிஸ்கெட் கொடுத்தால் திண்ணாத  குழந்தைகளும், போட்டிக்காக பிஸ்கெட்டைக் கவ்வுவதற்குக் குதித்தது சுவாரஸ்யமான அனுபவம்.


14) குழந்தைகளும்,ஆண்களும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு கலக்கியதால்,தாய்மார்களுக்கும் போட்டி  ஆர்வம் தொற்றியது.இல்லத்தரசிகளும்,இளம் பெண்களும் கலந்து கொள்ளும் வகையில் ஊசியில் நூல் கோர்ப்பது  மற்றும் கைபையிலிருந்து போனை எடுத்து அறிவிக்கப்படும் நம்பருக்கு மிஸ்டு கால் (Missed Call) கொடுப்பது  ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

15) பல்வேறு போட்டிகள் நடந்தாலும் கலந்து கொள்ள விருப்பமின்றி இருந்தவர்களுக்காகவே கூடையில் பந்து  வீசும் போட்டி நடத்தப்பட்டது. மூன்று வயது முதல் 65+வயதுடையோரும் கலந்து கொள்ளலாம் என்பதால் பேரர்களும்,வாப்பாமார்களும் தாத்தாக்களும் குறி தவறாமல் கூடையில் பந்து வீசுவதற்குப் போட்டி போட்டது  முழுக்க முழுக்க உற்சாகமான குடும்ப நிகழ்ச்சி என்பதை பறைசாட்டியது.

16)அனைத்து போட்டிகளுக்கும் ஒன்று-இரண்டு-மூன்று ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.முதலிரு இடங்களுக்கான  பரிசுகள் பொருட்களாகவும், மூன்றாம் பரிசாக துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலுக்கான குடும்ப அனுமதி (VIP PASS)   சகோ.F.இப்ராஹிம் வழங்கினார். 

17) சகோ.முஹம்மது ஹுசைன் ஆலிம் (உரிமையாளர்:திரியெம் டைப்பிங் சென்டர்) நான்கு அழகிய டின்னர் செட்  சிறப்புப் பரிசாக வழங்கினார். சகோ.ஜாஃபர் மரைக்கான் மற்றும் சிலரும் சிறப்புப் பரிசுகளை வழங்கினர்.

18) நிகழ்வில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்ட குடும்ப  சீட்டில் பெயர் எழுதிபோட்டு குலுக்கி எடுப்பது.முதல் பரிசாக அரை பவுன் 24காரட் தஙகக்காசு, இரண்டாம் பரிசாக  கால் பவுன் தங்கக்காசு+டின்னர்செட் & மூன்றாம் பரிசாக கால்பவுன் தங்கக்காசு ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.  தங்கக்காசுகள் அனைத்தையும் அதிரை பெஸ்டிவல் நிறுவன உரிமையாளர் சகோ.ஏர்லிங் தமீம் வழங்கினார்.  போட்டிகளை ஒருங்கிணைத்த விளையாட்டுக் குழுவுக்கும் சிறப்பு பரிசுகள் வழஙப்பட்டன. எனக்குக் கிடைத்தது  டின்னர் செட்!

19) பரிசளிப்பு முடிந்தும் மஃரிப் தொழுகைக்குப் பிறகும் குழந்தைகள் போட்டிகளுக்குத் தயாராக இருந்ததோடு,  தாங்களாகவே மைக்கில் (என் கையிலிருக்கும் மெகாஃபோன்!) தெரிந்த குர்ஆன் ஆயத்துகளை ராகமிட்டு ஓதி  குரல்வளத்தைக் காட்டினர். இவர்களுடன் பார்வையாளர்களாக வந்திருந்த அரபுக் குழந்தைகளும் போட்டியிட்டு  கிராஅத் ஓதி சிறுசிறு பரிசுகளை வென்றனர்.

20) வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தும் சில குடும்பத்தினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில்  விளையாட்டுப் போட்டிகள் நடந்ததால் ஒருசில குடும்பத்தினர் கலந்து கொள்ள முடியவில்லை. 

மொத்தத்தில் வெளிநாட்டில் வசிக்கும் அதிரையர்களின் குடும்பத்தினரில் ச.இ.ச மஹல்லாவாசிகளின் குடும்ப  சந்திப்பு அமீரகம் மட்டுமின்றி, அரபு வளைகுடா நாடுகளிலேயே புதுமையானதும் உற்சாகமானதும் என்றால் மிகையில்லை. 

அதிரைக்காரன்
N.ஜமாலுதீன்

7 Responses So Far:

Shameed said...

ஐஸ் கிரீம் சாப்பிடும் பையன் போட்டோ யாருப்பா எடுத்தது சூப்பரா இருக்கு

அதிரைக்காரன் said...

நிகழ்சியின் அனைத்து போட்டோக்களையும் சகோ.Fஇப்றாஹிம், ஹமீது சுல்தான் மற்றும் காமில் குழுவினர் படம் பிடித்தனர். குறிப்பிட்ட படத்தைப் பிடித்தது F.இப்ராஹிம். (முன்பு நீங்கள் எடுத்த மரங்களினூடே சூரிய வெளிச்சம் விழும் புகைப்படத்தை ஃப்ரொஃப்ஸனல் போட்டோகிராஃபர் ஒருவர் பாராட்டினார் என்று சொன்னேனே. அவர்தான் இவர்:)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

SIS சங்க துபாய் குடும்ப சந்திப்பின் கந்தூரி நிகழ்வு பார்க்க படிக்க ரொம்ப நல்லா இருக்கு!

ஊர்லெ சமாதி கட்டிடத்துக்கு பெயின்டு சாந்து அடிப்பதற்காக அங்கும் முஹர்ரம், சபரில் விழா எடுக்கிறாங்களாம். அந்த மெகா போனை ஊருக்கு கொண்டு வாங்க. சமாதியெ வச்சு விழாவெல்லாம் ஆகாதுன்டு மெகா போன்! மூலம் வீடுவீடா பிரச்சாரம் பண்ணனும்!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
இது விளையாட்டல்ல ! நல்லதொருவினை! இனி அனைத்து முஹல்லாவிலும் நடக்கனும்.எல்லா முஹல்லாவையும் அழைத்து அனைத்து நடக்கனும்.

அதிரைக்காரன் said...

மன்னிக்கவும் . ஐஸ்கிரீம் சாப்பிடும் பையனை ஃபோட்டோ எடுத்தவர் காமில். ( ஆஸ்பத்திரி தெரு)

Anonymous said...

மிகவும் அற்புதமான ஒரு நிகழ்ச்சி, பாராட்டிற்குறிய. ஏற்பாடுகள் நம்முடைய சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பெயரால் நடத்தப்படும் இப்படிப்பட்ட நிகழ்ச்சி முதல் முதலாக நடத்தப்படுவதாக கருதுகின்றேன் மிக்க சந்தோசமசந்தோசம். தொடர்ந்து இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை வருடத்திற்கு இரண்டு முறையோ அல்லது ஒருமுறையோ நடத்தினால் மக்களிடையே பரஸ்பரம் ஒற்றுமையும் அன்பும் மலர்வதோடு சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பழைய அவப்பேருகள் நீங்கி உங்களைப் போன்ற இளைஞர்களிடம் சம்சுல் இஸ்லாம் சஙத்தி பொரூப்புகள் வந்த்தால்தான் சம்சுல் இஸ்லாம் சங்கம் பற்றி இன்றுவரை தொடரும் அவப்பெயருகள் நீங்கும்
சமீபத்தில் அதிரை சம்சுல் இஸ்லாம் சஙகத்திற்கு நிர்வாகிகள் தேர்வு எனறு இரு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டது முறியடிக்கப்பட்டன. இளைஞர் சமுதாயத்தை ஏமாற்றிய காலம் மலை ஏறிவிட்டன என்பதை நஅத்தப்பட்ட நாடகங்கள் மூலம் எல்லோரும் தெளிவு பெறலாம் இனியாவாது சம்சுல் இஸ்லாம் சங்கம் நல்ல யாருக்கும் விலைபோகாத நிர்வாகிகள் கையில் மாற்றம் பெறவேண்டும்,இதற்கான அறிகுறிதான் துபாய் சம்சுல் இஸ்லாம் சங்க கிலையின் சமீப காலத்தின் நிகவுகள

பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள் சொந்த விருப்பு வெருப்புகளை தூக்கி எறிந்துவிட்டு வருபவரே நீதிமான்கள் என்று போற்றப்படுவதோடு அல்லாமல் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும்் நல்ல உயர்வான
அந்தஸ்த்து கிடைக்கும்

அதிரைமன்சூர்

Ahamed irshad said...

இப்படித்தான் இருக்கனும்.. ஊர்க்காரர்கள் குடும்பத்தோடு ஒன்றுகூடி வரும் மகிழ்ச்சிக்கு இணையேது.... பார்க்கவே அழகாக இருக்கிறது....மாஷா அல்லாஹ்......

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு