Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒற்றுமையே பலம் ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | April 16, 2014 | , , , ,


இந்த தேர்தலை முன்னிறுத்தி எழுதப்படும் கட்டுரை இது. நமக்கு தெரிந்து கனிசமான முஸ்லீம்களின் ஓட்டுகள் ஒரே கட்சிக்கே விழுந்தது எல்லோரும் அறிந்ததே அந்த அரசியல் தலைவர் நமது ஓட்டு வங்கியிலிருந்து ஓட்டை மட்டும் பொறுக்கிக் கொண்டு அந்த தலைவர் இஸ்லாமிய மக்களுக்கு இதயத்தில் மட்டும் இடம் வைத்து கறக்க வேண்டிய ஓட்டுக்களை அழகாக கறந்தார் இன்னும் கறந்து கொண்டுதான் இருக்கின்றார் இந்த தேர்தலில் அவருடைய அறுவடை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. இத்தனை வருடமாக நமது ஓட்டுகளை பெற்று சுகபோக வாழ்க்கையை அனுபவித்தார் தன் குடும்பத்தையே அனுபவிக்க வைத்தார் இதற்கு நன்றி கடனாக இஸ்லாமியருக்கு ஸ்பெஷலாக தானாக ஏதாவது செய்திருப்பாரா என்றால் அதுதான் இல்லை.

ஹிந்தியிலே ஒரு வார்த்தை சொல்லுவார்கள் “ஜியோ ஜீனேதோ” நீ வாழு எங்களை வாழவிடு என்ற சித்தாந்தத்தில் காலத்தை சுகபோகமாக காலத்தை தள்ளினார்கள் இன்னும் தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். அம்மாவை பற்றி சொல்லவே தெவையில்லை அய்யாவுக்கு இல்லாத அக்கரை அம்மாவுக்கு வந்துவிடுமா என்ன ஆக நமக்காக யாரும் எதுவும் நம் சமுதாயத்திற்கு செய்யவில்லை.

நமக்கு 3.5% இட ஒதிக்கீடு கிடைத்தது  அவர்களாக கொடுத்தது கிடையாது நம்முடைய உரிமையில் ஒரு பங்கை மட்டும்  நாம் போராடி பெற்றுள்ளோம்.

புரட்சி தலைவி என்னடானா பதவியில் வந்து  மூன்று வருடமாக சும்மா இருந்துவிட்டு தேர்தல் நேரம் வந்ததும் முஸ்லீம்களுக்கு இட ஒதிக்கீட்டிற்கு ஏதோ வாரியம் அமைத்து இருக்கிறார் என்று நம்ப சொல்றாங்க. இத்தனை வருடாமா இல்லாத அக்கரை இப்போழுது என்ன வந்து விட்டது இதெல்லாம் வெறும் கண்துடைப்பு சரியாக சொல்லப் போனால் பித்தலாட்டம்.

இத ஒரு புறமிருக்கட்டும் இந்தியாவில் வாழும் 2% பிராமணர்களின் ஆதிக்க அதிகாரம் பற்றியும் பிராமணர்களின் பிரவேசித்திருக்கும் கணகெடுப்பை இந்த நேர்த்தில் எழுதியாக வேண்டும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் போதே இப்படி என்றால் நரபலி கொடூரனனாட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை கீழெ உள்ள புள்ளிவிபரத்தை பார்த்துவிட்டு முடிவு செய்து கொள்ளுங்கள்

ஜெயலலிதா ஒரு பிராமணர்  அதாவது அவர் சார்ந்திருக்கும் உயர்சாதி என்பதையும் சிந்தையில் ஏற்றுங்கள்.
  • இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் பிராமணர்களின் பிரவேசம் 
  • ஆளுனர்கள் 30 பேர் அதில் 13 பேர் பிராமணர்கள்.
  • உச்ச மன்ற நீதிபதிகள் 16 பேர் அதில் 9 பேர் பிராமணர்கள்
  • உயர் நீதிமன்ற  நீதிபதிகள் 330 பேர் அதில் 166 பேர் பிராமணர்கள்.
  • வெளி நாட்டு தூதர்கள் 140 பேர் அதில் 58 பேர் பிராமணர்கள்
  • பல்கலைகழக துணை வேந்தர்கள் 98 பேர் அதில் 50 பேர் பிராமணர்கள்
  • மாவட்ட நீதிபதிகள் 438 பேர் அதில் 250 பேர் பிராமணர்கள்
  • கலெக்டர் ஐ ஏ எஸ் அதிகாரிகள்  3300 பேர் அதில் பிராமணர்கள் 2376.
  • பாரளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர் அதில் 190 பேர் பிராமணர்கள்.
  • ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர் அதில் 89 பேர் பிராமணர்கள்

இப்படியாக பிராமணர்களின் ஆதிக்கம் எல்லாவற்றிலும் இருந்தால் யாருக்கு நீதி கிடைக்கும் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?

நாம் நமது உரிமைகளை போராடி பெற வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை நமது உரிமைகளுக்கும் உடமைகளுக்கும் போராட நமக்கு இஸ்லாம் அதை அனுமதி அளிக்கின்றது  மக்கா மஸ்ஜித் இமாம் சொன்னது போன்று அடுத்தவர்களின் இடஒதிக்கீட்டை நாம் பிடிங்கி எடுப்பதாக அவர் சித்தரித்ததில் கண்டிப்பாக உள்நோக்கம் இல்லாமல் இஸ்லாத்தை வைத்து ஆதாயம் தேடுபவர்களை அல்லாஹ் சும்மா விடமாட்டான். ஒரு இயக்கம் நடத்திய போராட்டத்தை தவறாக சித்தரித்தார். நாம் அடுத்தவர்களின் உரிமையை பிடுங்குவதாக குற்றம் சாட்டினார். அது தவறு நம்முடைய உரிமையை பெறத்தான் ஒவ்வொரு இயக்கமும் போராடுகின்றது என்பது அவருடைய மண்டைக்கு எட்டவில்லை ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகள் இரண்டும்  ஒரே தாயின் பிள்ளைகள் ஒரு பிள்ளை பசியின் தாக்கத்தால் அடிக்கடி அழுதே பால் குடிக்கின்றது இன்னொரு குழந்தையோ எந்த ஆராவாரம் இன்றி தேவையின்போது பால் அருந்துகின்றது இப்பொழுது அடிக்கடி அழுது அடம்பிடித்து பால் அருந்தும்  குழந்தை அடுத்த குழந்தையின் பாலை அபகரிப்பதாக என்னம் கொள்வது போல் உள்ளது மேற்கண்ட கருத்து இன்னும் சொல்லபோனால் நம் உரிமையை பிராமணர்கள் அபகரித்திருக்கின்றார்கள் என்பதை மேலே உள்ள புள்ளி விபரம் தெள்ள தெளிவாக காட்டுகின்றது அதை மீட்டெடுக்க போராடி பெறுவதில் தவறு காணக்கூடாது.

இருந்த போதிலும் இப்பொழுது நாம்  மிக மோசமான  அபாயகரமான சூழலில் இருக்கின்றோம் எதை முன்பு செய்வது எதை பின்பு செய்வது என்பதை நியாயப்படி சிந்தித்து செயளாற்ற கடமை பட்டுள்ளோம். நாம் காலா காலமாக இடஒதிக்கீட்டிற்காக போராடி வருகின்றோம் அதை நிறுத்தச் சொல்லவில்லை அழுதால்தான் பால் கிடக்கும் என்பது நமது தலை எழுத்தாகி விட்டது. ஆனால், நாம் தற்போது அழுது பெறும் நிலமையில் இல்லை. இது ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் பலத்தை காட்டும் நேரம் ஒவ்வோரு இயக்கமும் தனது தனித்துவத்தை காட்டும் நேரமல்ல.
                
இதில் நாம் நமது விருப்பு வெறுப்புகளை ஓரங்கட்டி விட்டு ஒன்று பட்டு ஓரணியில் திரண்டு நமது முழு பலத்தையும் இதில் காட்டி இருந்தால் எந்த தெரு பொறுக்கி நாய்களும் நம்மை சீண்ட முடியாது. எந்த மீடியாக்களும் நமக்கு எதிராக காய் நகர்த்த முடியாது இதையெல்லாம் சிந்திக்காமல் ஒவ்வொரு தலைவர்களுக்குள்ள ஈகோ பிரச்சனைகளையும் சொந்த அபிப்ராயங்களையும் அரசியலாக்கி இஸ்லாமிய சமுதாயத்தை கூறு போட்டதை மறுக்க முடியாது பொறுக்க முடியாது.  ஆளுக்கொரு கொடியும் ஆளுக்கொரு மேடை பிடித்ததிலிருந்து நமது ஒற்றுமையின் பலத்தின் அளவுகோளை எதிராளிகளுக்கு நன்றாக விளக்கி விட்டார்கள். 

நம் சமுதாய மக்கள் மானத்தோடும் கவுரவத்தோடும் வாழ்ந்து வந்தோம் ஒரு சில இயக்கங்களின் தலைவர்களின் தவறான முடிவுகளினால் நம் சமுதாயம் ஒற்றுமை இழந்து இருக்கின்றது. இதில் எதிர்மறையாக யாரும் யோசித்தால் கண்டிப்பாக உங்கள் கருத்தை அழகிய முறையில் இங்கு பதியலாம் அல்லது எனக்கு எடுத்து சொல்லாம். 

என்னுடைய ஆதங்கம் மட்டுமல்ல உங்களுடைய ஆதங்கமும் அப்படித்தான் இருக்கும் என்பதில் எனக்கு கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. காலா காலமாக நம்மை அழிக்க துடிக்கும் ஒரு சக்தி இப்பொழுது பதவி ஏற துடிக்கின்றது அவர்களுக்கு நாம் இந்த தேர்தலில் பதிலடி கொடுத்து அவர்களை வீழ்த்த வேண்டுமே தவிற அவர்களை முன்னேரவிடவோ வளரவிடவோ நாம் காரணமாக இருப்பது முட்டாள்தனம் என்பது எல்லொரும் உணர்ந்த ஒன்று. இருந்தாலும் ஆதரவு கொடுத்தவர்கள் ஏன் கொடுத்தோம் என்ற சிறு நெருடல் இருக்கத்தான் செய்தது. இது பற்றி எத்தனையோ மீடியாக்களிலும் இணைய தளங்களிலும் கண்டனக் குரலை பதிந்தார்கள். சம்பந்தப்பட்டவர்கள் காலம் தாழ்த்தி சிந்தித்து தனது ஆதரவை வாபஸ் வாங்கியது மிகவும் வரவேற்க தக்கது.

வாழ்வா சாவா என்ற கால கட்டத்தை நாம் எதிர் நோக்கி இருப்பதால் நம் உரிமைகளுக்கு போராடுவதை  சற்றே நிதானப்படுத்தி வைத்துவிட்டு நம் உயிருக்கும் உடமைகளுக்கு பங்கம்  வந்து விடாமல் முதலில் நம்  உயிரையும் உடமைகளையும் பாதுகாப்பதுதான் சால சிறந்தது.

உரிமையை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வையும் இழக்கலாமா ? என்ற குஜராத் முஸ்லீம்களை போன்று நாமும் ஆகிவிடாமல் உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை நினைவாக்குவோம்.

யுத்தங்களில் ரத்தங்கள் சிந்தினாலும் பாதை மாறலாமா? ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வெந்தாலும் நம் இனம் சாக வழி வகுக்கலாமா?

என்பதை மனதில் வைத்து நம்முடைய செயல்பாடுகளை வகுத்துக் கொண்டால் சரி இது ஒரு போராட்டமான தருனம் இப்பொழுது நாம் இட ஒதிக்கீட்டை பற்றி யோசிக்க அவசியமில்லை என்று சொல்ல வரவில்லை அவகாசமில்லை என்று சொல்லுகின்றேன்.

இட ஒதிக்கீட்டை மனதில் வைத்துக் கொண்டு நம்மை கொள்ள நினைக்கும் கொளையாளிகளுக்கு பட்டு கம்பலமும் பஞ்சு மெத்தையும் கொடுத்து வரவேற்கும் பினாமி ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளித்தது தவறானது என்று இப்பொழுது செறுப்படி கொடுத்து ஆதரவை வாபஸ் பெற்றது மிக சந்தோசம் அளிக்கின்றது.

நம் உடமைகளுக்கு வேட்டுவைக்க துடிப்பவர்களுக்கு நமது முழு உழைப்பும் நாம் போட்ட பொன்னான ஒட்டுக்களும் நமக்கே வினையாக வந்து விடக்கூடாது என்ற தொலை நோக்கு பார்வையுடன் இந்த பிரச்சனையை அணுகச் சொன்னோம்.

இந்த சிக்கலான சூழலை நாம் உதாசீனம் படுத்திவிட முடியாது. நம் பலத்தைவிட எதிரிகளின் பலத்தை நாம் கண்டிப்பாக கணக்கிட்டே ஆகவேண்டும். பிஜேபியின் தேர்தல் அறிக்கை மூலம் இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரை  துடைக்கவும் நம் தாய் நாட்டை இரத்த கலமாக ஆக்கவும்   நினைக்கும் தீய சக்தியின் தேர்தல் அறிக்கையை பற்றி அம்மா திருவாய் மலரவே இல்லை என்பதிலிருந்தும் மெளனம் சம்மத்திற்கு அறிகுறி என்பது யாரும் யாருக்கும் சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியமே இல்லை.

மு.க.ஸ்டாலினாவது ஏதோ பாசிஸ கொள்கையுடைய பிஜேபிக்கு நாங்கள் எங்கள் ஆதரவை  தரமாட்டோம் என்று பல இடங்களில் பேசி வருகின்றார். இதில் என்னவோ எனக்கு நம்பிக்கை இல்லை காரணம் குடிகாரர்கள்  குடித்து விட்டு உளருவார்கள் அரசியல் வாதிகளோ குடிக்காமல் உளறுவார்கள் அரசியல் வாதிகளின்  பேச்சில் நிதானமிருக்காது அறிவிப்புகளையும் வாக்குறுதிகளையும் அள்ளிவிடுவார்கள் என்ன காசா பணமா  குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு அரசியல் வாதிகளின் பேச்சு ஓட்டு கிடைச்சா போச்சு இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வாய்கிழிய பேசியவர்களின் இன்றைய நிலமை என்ன என்பதை சற்று சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

அவர்கள் எதிர்பார்த்தபடி பிஜேபி சிம்மாசனம் ஏறிவிட்டால் எந்த இட ஒதிக்கீட்டிற்காக போராடினோமோ  அது சிம்ம சொப்பனமாக ஆகிவிடும். அது மட்டுமல்லாது ஏற்கனவே கொடுக்கப்பட்ட 3.5% இட ஒதிக்கீடு நம்மிடமிருந்து பறிக்கப்படும் காட்சிகள் அரங்கேறும் கலவரங்கள் வெடிக்கும் இதைத்தானே அந்த தெரு நாய்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த நேரத்தில் ஒவ்வொருத்தருக்கும் இவர்களிடமிருந்து  நம் உயிரையும் உடைமைகளை பாதுகாக்கவே நேரமிருக்காது. சமீபத்தில் பக்கத்து நாடான பர்மாவில் புத்த பிச்சுகள் நடத்திய காண்டு மிராண்டித் தனத்தையும் முஸ்லீம்களின் அவல நிலையை நாம் பார்த்து கண்ணீர் வடித்தமே இவர்களிடம் அரசாட்சி சென்றால் அந்த நிலமை நமக்கு வராது என்று என்ன நிச்சயம். அல்லாஹ் நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக! இவர்களின் உண்மையான முகத்தையும்  குஜராத்தில் அவர்கள் நடத்திய  இன படுகொலைகளையும் கொடுமைகளையும் அங்கு  வாழும் நம் சமுதாய மக்கள் அனுபவித்து இருக்கிறது.

அந்த கொடூரமான காட்சிகளை ஏராளமான காணொளிக் காட்சிகளாக பார்த்திருக்கிறோம். அதனை அனைவருக்கும் பகிர்ந்தும் இருந்திருக்கிறோம். நம் இதயங்கள் துடித்தன உள்ளங்கள் உருகின கண்ணீர் விட்டு கதறினோம் அவைகள் எல்லாம் எங்கே மறைந்தது அந்த காட்சிகள் நம் மனதைவிட்டு எடுபட்டுவிட்டதா ?

இப்பொழுது அத்தனை இஸ்லாமியர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த காரண கர்த்தாவை பச்சை(!!?) கம்பலம் விரித்து வரவேற்கும் அளவிற்கு ஊடக விபச்சாரத் தொழில் செய்யும் மீடியாக்கள் அரங்கேற்றி இருக்கும் கதா கலாச்சோபம் நமது புலனுக்கு எட்டவில்லையா? மீடியாக்கள் அனைத்தும் மதவெறி பிடித்த நாய்களின் கையில் இருப்பதால் தகரத்துக்கு தங்க முலாம் பூசி வல்லவர் நல்லவர் குஜராத்தை சொற்க பூமியாக மாற்றியவர் என்று புலுகு மூட்டைகளை அவித்து விட்டு  இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த மக்களையும் முட்டாள்ளாக்கி விட்டு மோடி வித்தை செய்யும் நரபலி மோடியை இந்தியா முழுதும் வலம் வர வைத்து இந்தியாவின் பிரதமராக்க துடிக்கின்றனர்.

இந்த வெறியர்கள் தமிழகத்திலும் தடம் பதிக்க பல வருடங்களாக எடுத்த முயற்சிக்கு  தமிழகத்தின் அரசியலில் வாய் கிழிய பேசிய சில திராவிட கட்சிகள் பிஜேபி போடும் சில எழும்பு துண்டுகளுக்காக வாலை ஆட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கி தன்னை  அந்த வெறிபிடித்த கூட்டத்துடன்  கூட்டணி வைத்துக் கொண்டு  இவர்களின்  உண்மையான நிறத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள்  முன்னால் வாய்கிழைய பேசியவர்களே பிஜேபி போடும்  எலும்புத் துண்டுக்கு அலைகின்றார்கள் என்றால் அதைபற்றியே வாயே திறக்காத அம்மா பச்சோந்திதான் என்பது புரியவில்லையா?
  
யாரைத்தான் நம்புவதோ இந்த பேதை நெஞ்சம் என்று புலம்பும் நிலயை இஸ்லாமிய அணைத்து இயக்கங்களும் கட்சிகளும் உருவாக்கி விட்டார்கள்.

இந்த முறை ஐந்து முனை போட்டியை இந்தியா எதிர் நோக்கியுள்ளது

இந்த தேர்தலை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாமிய இயக்க தலைவர்கள் கலந்தாலேசிக்க தவறிவிட்டார்கள் 

யாருக்காக யார் அடித்துக் கொள்வது என்ற விவஸ்தையில்லாமல் தவறான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.. பறிமாறிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் நமக்குள் தயவு செய்து இப்படிபட்ட தவறான கருத்து பரிமாற்றத்தை நிறுத்துங்கள். இப்படி பட்ட அகம்பாவமும் தற்பெருமை பிடித்த தலைவர்களினால், அவர்களை பின் தொடரும் இளைஞர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டையிட்டு கொள்கின்றனர். இது எல்லா ஊர்களிலும் நடக்கின்றது எல்லா சமுதாய இயக்கங்களிலும் நடக்கின்றது இந்த இயக்கங்களில்  இருப்பது யார்?  ஒரே வயிற்றில் பிறந்த சகோதரர்கள், ஒன்றாக வளர்ந்த நெருங்கிய நண்பர்கள், மாமா, மச்சான்மார்கள், பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள், இயக்கங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகளை பயிறிட்டு   அதற்கு பலியாகிய நம் சமுதாயத்தை  நினைக்கும்போது மனம் கனக்கின்றது.

அரசியலில் ஆதாயம் தேடும் ஒரு கும்பலுக்காக நாம் ஏன் நமக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி பினங்கி கொள்ள வேண்டும் நாமே நம்மை ஏன் அழித்து கொள்ள வேண்டும் நமக்குள் நாம் அடித்துக் கொண்டு எதிரிகளின் சதியில் நாம் ஏன் விழ வேண்டும்.

நாம் அணைவரும் குரோத போக்கையும் நமக்குள் இருக்கும் காழ்புணர்ச்சிகளை கலைந்துவிட்டு நீதமாகவும் நேர்மையாகவும் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.


யா அல்லாஹ் நம் சமுதாய மக்களை இந்த சைத்தானிய்யதை விட்டும் காப்பற்றுவாயாக ! யா அல்லாஹ்  குஜராத்தில் நடந்தது போன்று, பர்மாவில் நடந்தது போன்று கலவரங்களை ஏற்படுத்தி கண்ட கண்ட நாய்களிடம் அடிபட்டு மிதிபட்டு எங்களுக்கு மவுத்தை ஏற்படுத்திவிடாதே ! லாஇலாக இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற கலிமா சொன்ன இஸ்லாமிய சமூகத்தவர் அனைவர்களுக்கும் இயற்கையான மவுத்தை அந்த கலிமாவுடன் நசீபாக்குவாயாக !

யா அல்லாஹ் எங்களை இந்த சதிகார கூட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பாயாக! யா அல்லாஹ் இந்த சதிகார கும்பலின் சதியை முறியடித்துவிடுயாக! யா அல்லாஹ் இந்தியாவில் நல்லாட்சியை ஏற்படுத்துவாயாக! யா அல்லாஹ் இந்த சதிகார கும்பலைக் கொண்டு எங்களை சோதித்து விடாதே. எங்களுக்கு பாதுகாப்பான அரசாட்சியை ஏற்படுத்திக் கொடு யா அல்லாஹ் அமீன் அமீன் யாரப்பல் அலமீன் 

நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம்  மனம் உருகி கையேந்துவோம் எப்பொழுதுமே நமக்கு உதவும்  ஆயுதம் பிரார்த்தனைகளே. இந்த உதவி அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உதவி மனிதர்களிடமிருந்து கிடைக்கும் உதவியல்ல.

இதை ஏன் எதிர்மறையாக யோசனை செய்து எழுதுகின்றேன் என்றால் எதிரிகளை நாம் ஏளிமையாக கணக்கிடக்கூடாது வருமுன் காப்பதுதான் புத்திசாலித்தனம்.

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை என்ற வார்தைக்கு மதிப்பளித்து மனம் உருகி கேளுங்கள் நிச்சமயமாக நமக்கு நல்ல பாதகமில்லாத அரசாட்சியை ஏற்படுத்துவான்.

அதிரை மன்சூர்

11 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மன்சூராக்காவின் அரச பார்வை மிளிர்கிறது இ. அ. காக்காவைப்போல!

நாடியவருக்கே ஆட்சியை கொடுக்கும் நாயன் நமக்கும் உகந்த நல்லாட்சியாளனை தருவானாக!

adiraimansoor said...

///வாய்கிழிய பேசியவர்களின் இன்றைய நிலமை என்ன என்பதை சற்று சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.///

மேற்கண்ட வார்த்தை இடம் மாறி தவறுதலாக வந்துவிட்ட

இது பிஜேபியில் கூட்டு சேர்ந்த திராவிட இயக்கத்தவர்களை சாடியது

சகோதர இயக்கத்தவர்கள் யாரும் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம் என்பதை மிக கனிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்

குறையை உரியவர்களிடம் சொல்
நிரையை பிறரிடம் சொல்
இதுதான் நமது (இஸ்லாமியர்களின்) பன்பாடு

Unknown said...

நண்பர் மன்சூர் அவ்ர்களுக்கு பாராட்டுக்கள். இன்றைக்குத் தேவையான சிந்தனைகள். சென்னையில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கூடும் கூட்டத்தின் அளவைப் பார்த்து ஆதரவு அரசியல் முடிவு செய்யபடுகிறதாமெ! உண்மையா? சென்னையில் இருப்போர் சொல்லுங்கள். இப்போது ஒரு முக்கியமான முஸ்லிம் இயக்கம் தனது ஆதரவை அதாவது முக்கால் கிணறை திமுகவுக்கு அளித்து இருக்கிரது. முக்கால் கிண்று தாண்டினாலும் கிண்ற்றில்தான் விழவெண்டும். ஹைதர் அலி யென்ன பாவம் செய்தாரோ தெரியவில்லை. அவருக்கு ஆதரவு இல்லையாம். வெடிக்கை வினொதம். இப்படி இருந்தால் எப்படி இணையும் சமுதாயம். ?

Unknown said...

ஹைதர் அலி செய்த குற்றம் யென்ன? தொண்டியில் ஐந்தாம் வகுபுப் படிக்கும்போது அண்ணனின் ஐஸ்கிரீமை அபகரித்து சாப்பிட்டது குற்றமா? ஒரே ஊர்க்காரகள் இப்ப்டி அவர் மட்டும் தோற்க வேண்டுமென்று னிலை யெடுப்பது பொதுமக்களுக்கெ வெட்கமாக இருக்கிறது. இந்த ஆதரவை திமுக , ததஜவின் முகத்தில் தூக்கி யெறிய வேண்டும். ஜெயீக்க்கப் பொகும் குதிரை மேல் பணம் கட்டுவது ஒரு சூதாட்டம். ததஜ அதைத்தான் செய்து இருக்கிறது.

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர் அவர்களே!

உங்களின் கண் பார்வையில் அரசியலும் தப்பவில்லை என்று நிருபித்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். வெறும் பாராட்டால். மிகுந்த பாராட்டுக்கள்.

எங்களுக்கு ஒய்வு கொடுங்கள்.

Yasir said...

இன்றைய இக்கட்டனான அரசியல் நிலைமையில் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டைப் பற்றி அழகாவும் ஆழமாகவும் கூறி இருக்கின்றீர்கள்....அல்லாஹ் போதுமானவன்

ஜலீல் நெய்னா said...

தேவையான நேரத்தில், அவசியம் உணர்ந்து, சிந்திக்க வைத்த வரிகள்

Shameed said...

மன்சூர் காக்காவின் தொலைநோக்கு "பார்வை" சிந்திக்கவேண்டிய ஒன்று

sabeer.abushahruk said...

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…
ஆமீன்
ஆமீன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு