Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 006 0

அதிரைநிருபர் பதிப்பகம் | September 11, 2015 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

version :  6
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ். 

‘‘ஒருவனுக்கு நல்லது செய்ய அல்லாஹ் நாடிவிட்டால் அவனை சோதிப்பான் ’’  என்று நபி(ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள் (புகாரி)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 39 )

‘‘உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தீமைக்காக மரணத்தை எதிர்பார்க்க வேண்டாம். அப்படியே அவசியம் விரும்புவர் இருந்தால், 'இறைவா! உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக! மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும் ’’  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி)அவர்கள்(புகாரி,முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்:40 )

‘‘அல்லாஹ், தன் அடியானுக்கு நல்லதை நாடிவிட்டால், அவனுக்கு உலகத்திலேயே தண்டனையை தீவிரமாக்குவான். அல்லாஹ் தன் அடியானுக்கு தீமை செய்ய நாடிவிட்டால் அவனது குற்றம் காரணமாக அவனை விட்டும் (சோதனையைத்) தடுப்பான், இறுதியில் மறுமை நாளில் அவனுக்கு அதை நிறைவேற்றுவான் ’’  என்று நபி(ஸல்) கூறினார்கள். 

‘‘கூலியில் மகத்தானது, கடும் சோதனையுடன் உள்ளதாகும். நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். ஒருவன் அதில் திருப்தி அடைந்தால், அவனுக்கு (அல்லாஹ்வின்) திருப்தி உண்டு. மேலும் ஒருவன் கோபம் அடைந்தால், அவனுக்கு (அல்லாஹ்வின்) கோபம் உண்டு’’  என்று  நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அவர்கள் (திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 43 )

'மல்யுத்தம் புரிவதால் '''வீரன்' என்பதில்லை. கோபம் ஏற்படும் சமயம் தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே வீரன்'  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹூரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 45)

'நபி(ஸல்) அவர்களுடன் நான் உட்கார்ந்திருந்தேன்.இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்திருந்தது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்திருந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ''ஒரு சொல்லை நான் அறிவேன். அதை அவன் கூறினால், அவனிடம் ஏற்பட்டுள்ள (கோபம்) அவனை விட்டும் போய்விடும். (அதாவது) ''அஊதுபில்லாஹி மினஷ்ஷய்தானிர் ரஜீம்'' (வெறுக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறினால், அவன் அடைந்தது(கோபம்) போய் விடும்'' என்று கூறினார்கள். உடனே நபித்தோழர், கோபப்பட்டவரிடம் சென்று, ''ஷைத்தானை விட்டும் பாதுகாப்பை அல்லாஹ்விடம் நீ தேடவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் '' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: சுலைமான் இப்னு சுரத்(ரலி) அவர்கள்  (புகாரி,முஸ்லிம்).( ரியாளுஸ்ஸாலிஹீன்: 46)

'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்று கேட்டார். 'கோபம் கொள்ளாதே என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். கோபம் கொள்ளாதே' என்றே நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)  அவர்கள் (புகாரி). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 48)

'ஓர் இறைவிசுவாசியான ஆண் மற்றும் பெண்ணிற்கு அவரது உயிர் மற்றும் அவரது குழந்தை, அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும். இறுதியாக அவர் (சோதனை மூலம் மன்னிப்பு ஏற்பட்டதால்) குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார்.'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 49)

"எனக்குப்பின் உரிமை பறித்தலும், நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும்" என நபி(ஸல்) கூறினார்கள். "இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (இது விசயமாக) நீங்கள் இடும் கட்டளை என்ன?" என்று நபி தோழர்கள் கேட்டனர், உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி)அவர்கள்(புகாரி,முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்: 51)

"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

அலாவுதீன் S.

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு