Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படித்தால் மட்டும் போதுமா !? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 21, 2015 | ,

படித்தால் மட்டும் போதுமா..??? இக்கேள்விக்கு கல்விபயிலும் மாணாக்கர்களாகிய நீங்களே பதிலுரைக்க வேண்டும். ஆனாலும் அறியாதவர்களுக்கு அறியத்தரும் நோக்கத்தில் இப்பதிவை தாங்களுக்கென பதிகிறேன்.

கல்வி அறிவு பெற்றிருப்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமானதாகும். கல்வியறிவு பெற்றிருப்பது எவ்வளவு அவசியமோ அதுபோல பொது அறிவையும் [General Knowledge] வளர்த்துக் கொள்வது மிகமிக  அவசியமானதாக இருக்கிறது.. பொது அறிவில் பின்தங்கி கல்வியறிவு மட்டும் பெற்றிருப்பது வாழ்க்கையில் மேலும் சாதிக்க சிரமமாகவே இருக்கும். பொது அறிவில்தான் கடந்தகால,நிகழ்கால மற்றும் உலக நிலைமைகளை நன்கு அறியமுடிகிறது. அப்படி அனைத்தும் அறிந்து வைத்திருந்தால்தான் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தாம் கற்ற கல்வியை பயன்படுத்தக் கொள்ளமுடியும்.

கல்வியறிவு எந்ததொரு வேலைக்கும் தகுதிக்கும் உள்ளே நுழைய பெறப்படும் அனுமதிச் சீட்டைப் போன்றதாகும். பொது அறிவானது கல்வியறிவை கூடவே தாங்கி வரும் தூணாக இருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் கல்வியறிவு பட்டைதீட்டாத  வைரத்தைப் போன்றது. பொது அறிவு என்பது அந்த வைரத்தை பட்டைதீட்டி அழகுபடுத்தி மதிப்பை ஏற்ப்படுத்துவதை போன்றதாகும். உதாரணமாகச் சொன்னால் ஒரு வேலைக்கான தேர்வுக்குச் சென்றால் அங்கு முதலில் தமது கல்வித்தகுதிகளையும் சான்றிதழ்களைச் சரிபார்த்தபிறகு பொது அறிவு சம்பந்தமான கேள்விகள்தான் கேட்கப்படுகிறது. அப்போது அது சம்பந்தமான கேள்விக்கு யார் சரியான விடையளிக்கிறார்களோ அவர்களே இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அப்படியானால் அங்கு கல்வியறிவைத் தாண்டி பொது அறிவே முன்னிலை பெறுகிறது.

அது மட்டுமல்ல பொது அறிவு பற்றி அறிந்து வைத்திருப்பது நமக்கு பலவகையிலும் பயனுள்ளதாக இருக்கிறது. அரசியல்,ஆன்மீகம்,மருத்துவம் என அனைத்திலும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுதல் சிறந்ததாகும். .மற்றும் உலக நடப்புக்கள் நாட்டு நடப்புக்கள் மக்களின் தேவைகள், பிரச்சனைகள் இன்னும் பல நிகழ்வுகளை பொது அறிவின் மூலமாகத்தான் அறியமுடிகிறது. இன்னும் சொல்லப்போனால் போதிய விழிப்புணர்வையும் பொது அறிவின் மூலமாகத்தான் பெறமுடிகிறது

பொது அறிவின் உள்ளே நுழைந்தால் நம் வாழ்க்கைக்கு அவசியமான பலவகை செய்திகள் புலப்படும்.அதிலிருந்து அறியாதவைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.முன்னேற்றப் பாதைக்கு வழி காண முடியும். இப்படி பொது அறிவின் பலன்கள் நிறைய உள்ளன. எத்தனையோ உயர்கல்வி கற்று பட்டம் பெற்று வெளியில் வந்த மாணாக்கள் போதிய பொது அறிவு இல்லாமல் எந்தத் துறையை தேர்ந்தெடுப்பதென முடிவெடுக்கத் தெரியாமல் முழிபிதுங்கி நிற்கிறார்கள்.

நமது முன்னோர்கள் பலரும், பல சரித்திரத்திரங்களில் இடம் பெற்ற அரசியல்வாதிகள், அறிஞர்கள்,மேதாதைகள்,விஞ்ஞானிகள், யாவரும் பொது அறிவையே அதிகம் பெற்று இருந்தார்கள். எனவே இன்னும் உலகமக்களால் புகழாரம் சூட்டி பேசப்படுகிறார்கள்.

கல்வியறிவில் பின்தங்கி 8ம் வகுப்பைக் கூட சரியாக எட்டிப் பார்க்காத எத்தனையோ பேர் 7, 8 பாஷைகள் பேசக் கற்றுக் கொண்டு பெரிய முதலாளிகளாகவும், திறமையான தொழிலதிபர்களாகவும் கைதேர்ந்த பணியாளர்களாக திகழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் பொது அறிவைக் கொண்டுதான் புகழ் பெற முடிந்தது. ஆகவே கல்வி அறிவுடன் பொது அறிவை பெற்றிருப்பது  கற்ற கல்விக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லையென்றே சொல்லலாம்.

இன்றையகால மாணாக்கள் நன்கு கல்வியறிவில் முன்னேறி வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதுபோல பொது அறிவை வளர்த்துக் கொள்வதிலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆகவே சமுதாயச் சிந்தனைகள், உலக நிகழ்வுகள், வரலாற்றுப் பாடங்கள் சமூக வலைதளங்களில் அனாச்சாரங்களை தவிர்த்து தேவையானவைகளில் கவனம் செலுத்துதல் இப்படி மாறுபட்ட சிந்தனைகள் வர வேண்டும். அப்போதுதான் பொது அறிவை பெற வாய்ப்பாக இருக்கும். பொது அறிவுக்கான போட்டியில், பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவசியம் தவறாது பங்கேற்க வேண்டும். இதன் மூலம் அறியாத விசயங்களை அறிந்து கொள்ளவும் அறிந்த விசயங்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கிறது.

எனவே  கல்வியறிவு எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல  ஒருமாணவன் பொது அறிவையும் பெற்றிருப்பானேயானால் அவனது வருங்காலம் மிகப் பிரகாசமாக ஜொலிக்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.ஆகவே மாணவ மாணவியர்கள்  கல்வி கற்கும்போதே பொது அறிவையும் வளர்த்துக் கொள்வதில் நாட்டம்  கொள்ள வேண்டும் என்பதே எனது அறிவுரையாக இருக்கிறது.

அதிரை மெய்சா

6 Responses So Far:

Ebrahim Ansari said...

அவசியமான விழிப்புணர்வு.

இன்றைய மாணவர்கள் பொதுவாக பொது அறிவில் தளர்ந்தே போயிருக்கிறார்கள்.

கால் நூற்றாண்டு என்றால் எத்தனை ஆண்டுகள் என்பதைத் தெரியாமல் ஒரு வகுப்பே -( பிளஸ் டூ ) படித்தவர்கள் அடங்கியே- வகுப்பே முழி முழி என்று முழித்தது எனது அண்மைக்கால அனுபவம்.

sabeer.abushahruk said...

படிக்காத மேதைகள் பலரைக் கண்ட இந்நாட்டில் படித்தால் மட்டும் போதாதுதான்.

நல்லதைச் சொன்ன மெய்சாவுக்கு பாராட்டுகள்.

Shameed said...

//கால் நூற்றாண்டு என்றால் எத்தனை ஆண்டுகள் என்பதைத் தெரியாமல் ஒரு வகுப்பே -( பிளஸ் டூ ) படித்தவர்கள் அடங்கியே- வகுப்பே முழி முழி என்று முழித்தது எனது அண்மைக்கால அனுபவம்.// நீங்கள் ஆட்டு கால் சூப் பற்றி கேட்டிருந்தால் உடனே பதில் வந்திருக்கும்

sheikdawoodmohamedfarook said...

வகுப்பறைபாடம்மட்டும் அறிவைதந்துவிடாது.அறிவுஎன்பதுநான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடுவதல்ல:அதுவிண்ணையும்தாண்டிவிரிந்து கிடக்கும் மாபெரும் கடல் .அந்தக் கடலை கடக்கஒரே ஒரு அப்துல் கலாம் மட்டும்போதாது.நம்மில்.பலஅப்துல்கலாம்களைஉருவாக்கதளம்அமைக்க வேண்டும்:ஆனால்நாமோ''அவன் யார்?இவன்யார்?'' என்ற ஆராய்ச்சியில் கடலின் அலைகளை கரையோரம் நின்று கை விரல் விட்டு எண்ணிக் கொண்டுகாலத்தைபோக்கிகொண்டு இருக்கிறோம்.

அதிரை.மெய்சா said...

எனது கட்டுரைக்கு கருத்திட்டு மேலும் பல விழிப்புணர்வு பதிவுகளை எழுத ஊக்கப்படுத்தும் தாங்கள் அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

படிப்பீராக என குர்ஆன் தொடங்குவதும் ,பிணைய கைதியாக உள்ளவர் ,கல்வி கற்றுக் கொடுத்து விடுதலை பெறலாம் என்ற மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் கூற்றும்,ஆதம் நபிக்கு ,அல்லாஹ் கற்றுக் கொடுத்ததும்,அறிவின் முக்கியம் பற்றிய இஸ்லாத்தின் சான்றுகள் ஆகும்.

Very good article by brother meisa.
மெய் சார்ந்த
உங்கள் எழுத்து தான்
மெய் சா என மருவியதோ?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு