Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தன்னிலை சுகாதாரம்.. 7

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2015 | , ,

இதை எழுத காரணமாக இருந்த சூழ்நிலை இப்போது ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் சூழ்நிழைதான்,


'உலகத்தில் இருக்கும் மதம் / மார்க்கங்களில் அதிகம் சுத்தம் சம்பந்தமாக முக்கியத்துவம் கொடுத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் தான், துரதிஸ்ட்டவசமாக் அதன் விழிப்புணர்வுகள் முஸ்லீம்களிடம் சரியாக போய்சேரவில்லையோ என நினைக்க தோனுகிறது....இது ஒரு முறை டாக்டர் K.V.S ஹபீப் முகமது சொன்னார் [ இவர் இஸ்லாமிய அறிஞரும் ஆவார்.]

அது முன்பு இருக்கலாம் இப்போது மாறிவிட்டது என நினைப்பவர்களுக்கு....

# எப்படி பப்ளிக் டாய்லெட்களில் அடிக்கும் ஒருவிதமான அமோனியா வாடை மூச்சுதினறவைக்கிறது

# தன் பல்லை சுற்றி கேரளாவில் உள்ள அரண்மணை சுவர்கள் மாதிரி பாசிபடிய விட்டு எப்படி சிலபேரால் பொதுவில் நடமாட முடிகிறது.

இதற்க்கும் மக்கள் தொகைதான் காரணமா????....எப்படி இதே மக்கள் தொகை [ஆட்கள்] பயன்படுத்தும் டாய்லெட் வெளிநாடுகளில் சுத்தமாக இருக்கிறது.

அவர்களுக்கு எல்லாம் மற்றவர்களை பற்றி கவலை இருக்கிறது. நம்மிடம் அது இல்லை ,

இருந்தால் வீட்டுவாசலில் ஏன் ஒவ்வொறு நாளும் ஒடும் சாக்கடையில் லாங் ஜம்ப் தாண்டுகிறோம்.

காலையிலும் இரவிலும் பல் தேய்க்க சொல்வது பள்ளிக்கூட படிப்பு. இது என்னவோ எக்ஸாமுக்கு உள்ள விசயம் மாதிரி நிரைய பேர் அந்த வருசத்து புத்தகத்தை பாதி விலைக்கு போட்ட அதே மூட்டையில் கட்டி அனுப்பி விட்டார்கள்./ வாங்கியவனும் பயன்படுத்த வில்லை என்று சகோ; சாகுல் ஹமீது தமாமிலிருந்து பின்னூட்டமிடலாம்.

இதற்கெல்லாம் அரைமணித்தியாலத்தில் பாலிசிங் ட்ரில்லர்/வாக்யும் வைத்து சுத்தபடுத்த பல்டாகடர்கள் வந்துவிட்டார்கள் கேட்டால்..."நேரமில்லை' நு SMS மாதிரி சொல்லிடுவானுக. இன்னும் செளசால்யம் [Toilet] இல்லாத வீடுகள் நமது ஊரில் இருக்கிரது என நினைக்கிறேன் , .காரணம் = வசதியில்லை..அதெ வீட்டில் உள்ள்வர்கள் எப்படி லட்சகணக்கில் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப பணம் புரட்டிகிறார்கள் என்ப்து 'பிடிவாதக்கொடுமை'

பக்கத்தில் ஆட்கள் இருக்கும்போது வாயில் கர்சீப் / அல்லது முடிந்தால் தூரம் போய் தும்மும் பணிவன்பு நிறைய பேரிடம் இல்லை. இது போன்ற கற்கால பழக்க வழக்கங்களால் Epidamic Disease பரவுகிறது என மருத்துவ துறையினர் தொடர்ந்து வழியுருத்திவருகிறார்கள்.இந்த லட்சனத்தில் 'பன்றிக்காய்ச்சல் பாய்மாருஙகளுக்கு வ்ராது' என ஒருவர் ["பாய்"தான்] இனையயத்தில் எழுதியிருந்தார்... [உன் அறிவியல் அறிவில் கொள்ளி வைக்க!!]

இன்னும் சிலர் ஜுரம் / தடுமலுக்கு டாக்டரிடம் போகும் போது ஏதோ எல்லாம் இழந்து விட்ட மாதிரி போவது [ அப்பதான் நல்ல ஊசி/மாத்திரை தருவார்!!] கொஞ்சம் பல் தேய்த்து , வாய் கொப்பளித்து , முகம் கழுவி போனால்தான் என்ன .

இவர்கள் வாய்திறந்து பேசி அந்த மயக்கத்தில் டாக்டருக்கு ஆம்புலன்ஸ் தேவைப்படும் அளவுக்கு போய்விடலாம் அல்லவா?

சிகரட் / வெத்திலை / சுருட்டு உபயோகிப்பவர்களை திருமணம் செய்த பெண்களுக்கு 'அமைதிக்கான நோபல் பரிசு' கொடுக்கலாமா என அதிரை எக்ஸ்பிரஸ் ஒரு இன்டெர்னெட் தேர்தல் தாராளமாக நடத்தலாம்.மலேசியாவின் இஸ்லாமியத்துறை சிகரட் ஒரு ஹ்ராமான வஸ்த்து என அறிவித்து சில வருடங்கள் ஆகிவிட்டது.

காரில் போகும்போது தும்மும்போது கவனமாக இருங்கள், உங்களிடமிருந்து வெளியாகும் பாக்டிரியா 30 நிமிடத்துக்கு உயிர்வாழமுடியும். [ கார் கண்ணாடி திறந்திருப்பது நல்லது.] அப்படி யாரும் தும்மிவிட்டால் உடனே கண்டித்து விடாதீர்கள்..சிலருக்கு நாக்கில் சனியன் AC ரூம் போட்டுதங்கியிருக்கும்.

Personal Hygiene பற்றி எழுத நிறையவிசயம் இருக்கிறது.

ZAKIR HUSSAIN

7 Responses So Far:

Ebrahim Ansari said...

//# தன் பல்லை சுற்றி கேரளாவில் உள்ள அரண்மணை சுவர்கள் மாதிரி பாசிபடிய விட்டு எப்படி சிலபேரால் பொதுவில் நடமாட முடிகிறது.//

// வீட்டுவாசலில் ஏன் ஒவ்வொறு நாளும் ஒடும் சாக்கடையில் லாங் ஜம்ப் தாண்டுகிறோம்.//

சிரிக்க மட்டுமல்ல . சிந்திக்க. செயல்பட.

மருத்துவர். கே. இளங்கோ அவர்களுடன் பேசிக் கொண்டே திருவாரூர் வரை ஒரு கார்பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.

டாக்டர் தொழிலில்தான் அதிகம் சம்பாதிக்க இயலும் என்ற ஒரு வார்த்தை வந்தது.

டாக்டர் இளங்கோ சொன்னார். அட நீங்க வேற பாய். ஒவ்வொருத்தரை நாக்கை நீட்டுங்கள் என்று சொல்லிப் பார்க்கும் ஒரு செயலுக்கு எத்தனை லட்சம் பீஸாக வாங்கினாலும் போதாது. அவ்வளவு குமட்டலையும் தாங்கும் தொழில் இது என்றார்.

sheikdawoodmohamedfarook said...

//கேரளாவில் உள்ளஅரண்மனைசுவர்களில்.......//எந்நேரமும்ஜோப்பில் மிஸ்வாக்குச்சியைவைத்திருக்கும்ஒருவர்கிட்டே வந்துபேசினால் வாந்திவரும்.காரணம்அவர் நேரம்காலம்பாராமல்உள்ளேகண்டதை எல்லாம்தள்ளுவது!அவரு அபிமானகறிஎறச்சி! எறச்சிகறிசோறு என்றால்எட்டு காததூரம்நடப்பார்.

sheikdawoodmohamedfarook said...

//toilet இல்லாதவீடுகள்நம்மூரி.........// டொய்லெட்வசதிகொண்டஒருமாடிவீட்டுக்குபோனேன்.தரையெங்கும்திட்டு திட்டாகமினிபிரமிட்போல்மண்குவியல்.''இதெல்லாம்என்னஎன்றேன்? கோழிஎச்சம்.மூடிவச்சுருக்கேன்.''அள்ளிசுத்தப்படுத்தக்கூடாதா?'ஒரே வேலையாராத்திரிக்கிபாத்துடுவோம்.அதைவிடக்கொடுமைஎன்ன வென்றால்டைனிங்டேபிள்மேலேமனிதமலம்?இதுஎன்னஎன்றேன்.புள்ளேசெஞ்சுடுச்சு!டோயலேட்டுக்குகொண்டேவிட்டா''மாட்டேன்இங்கேதான் இருப்பேன்''என்றுவம்புசெய்றான்.என்றுசாதாரணசொன்னார்கள். டைனிங்டேபிள்பழக்கம்சுடுகாடுவரைதொடருமோ?

sheikdawoodmohamedfarook said...

//எப்படிதன்பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப லட்சக்கணக்கில் பணம் புறட்டுகிறார்கள்/ /''இந்த சபுறுவந்துஎறங்குனதும் ஓம் மவளுக்கு மாப்புளே தாறேன்!''என்றுவாயே தொறந்துஒரு வார்த்தை சொன்னால் வந்து விழும் லட்சம்-லட்சம்.

அதிரை.மெய்சா said...

எல்லா வற்றையும் விட பெருநகரங்களில் உள்ள பேரூந்து நிலையத்தை சுற்றி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பொதுஜனங்கள் பார்க்க நின்றநிலையில் சிறுநீர் கழிக்கிறார்கள். இதுபோன்ற ஒரு அசிங்கம் வேறு எந்த நாட்டிலும் நடக்க வாய்ப்பில்லை.

இப்படி நமக்குநாமே அசிங்கப்படுத்திக்கொண்டு புதுப்புது நோய்களை உற்ப்பத்தி பண்ணிக்கொண்டு புளம்பிக்கொண்டு இருக்கிறோம்.

அப்துல்மாலிக் said...

ரொம்பா சூப்பர் காக்கா, இதைதான் என் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கோம், சிலசமயம் அனிச்சைசெயலுக்கு (பொத்தி தும்முவது) முன்னரே தும்மல் வந்துடுது என்பது எதார்தம். நம்வீட்டு தண்ணீர்தானேனு வாசல்லே ஓடுது என்று காலை நனைச்சிக்கொண்டு போறோமா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.