Friday, January 10, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மெளன ஓலம்! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2015 | , , , , ,


மக்காவிலிருந்து
மரணச் செய்திகள்

எவன் ஒருவனிடமிருந்து
வந்தோமோ
அவன் ஒருவனிடமே
மீள்வோம்

எனினும்...

மாண்டவர் எண்ணிக்கை
கூடக்கூட
'ஆண்டவா போதுமெ'ன
அலறுகிறது மனம்

சுவாசக் குழாயைச்
சோகம் அடைக்க
கண்களில்
கண்ணீர்த் தழும்ப
கனக்கிறது மனம்

சிறியொதொரு ஒழுங்குமீறல்
சிதறடிக்க...
இரும்புக்காற்று
வீசியதுபோல்
இறந்து விழுந்தனர்
வீடுபேறு
நாடிவந்த நல்லோர்

எறும்புச்சாரையை
ஏறி மிதித்துபோல்
கரும்புத் தோட்டத்தில்
கருயானைப் புகுந்ததுபோல்
கதிகலங்கி
விதிமுடிந்து வீழ்ந்தனர்
சகோதர யாத்ரிகர்கள்

புயல்காற்றைப்போல்
பூகம்பம்போல்
கூட்டமும் ஒரு
காத்திருக்கும் பேரிடர்தான்...
வரிசையோ வேகமோ
சற்றே பிசகியதால்
விநாடிகளில்
வீழ்த்தியது
நூற்றுக்கணக்கில் யாத்ரிகர்களை

சென்றது மீள்பயணம்தான்
எனினும்
வந்துவிடுவர் என்று
நம்பி
வழியனுப்பிய சொந்தங்களும்
வாழ்த்திவிட்ட பந்தங்களும்
துக்கத்தைக்
துறந்து மறக்க
வகையறியாமல் தவிக்கின்றனர்

வாழ்க்கையின் வடிவமைப்பை
இத்தனை எளிதாக
எத்தி வைக்கும் இறைவா...

பாவச்சுமையின்
பகுதியையாவது குறைக்கவந்தோர்
புனித மக்காவில் மரணித்ததால்
இனிய சொர்க்கம்
ஏகட்டும்

தற்காலிகத்
தங்குமிடமாம்
தரைநீண்ட பூமியைவிட்டு

நிரந்தர வாழ்விடத்தில்
நீரோடும் சுவனம் நாடி
மக்காவில் மரணமுற்ற
மனிதர்கட்கு

நாடியவாரே -
நன்மையை
நல்கிவிடு நாயனே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

13 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நிரந்தர வாழ்விடத்தில்
நீரோடும் சுவனம் நாடி
மக்காவில் மரணமுற்ற
மனிதர்கட்கு

நாடியவாரே -
நன்மையை
நல்கிவிடு நாயனே!//

ஆமீன் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எறும்புச்சாரையை
ஏறி மிதித்துபோல்
கரும்புத் தோட்டத்தில்
கருயானைப் புகுந்ததுபோல்
கதிகலங்கி
விதிமுடிந்து வீழ்ந்தனர்
சகோதர யாத்ரிகர்கள்//

கண்கள் கலங்க வைக்கும் வரிகள் !

Unknown said...

Innalillahi wa inna ilaihi rajioon.

Thanks a lot brother for reflecting our emotions through the peom.

As per the news there were two waves of crowd of people one from right direction hit the straight wave of people marching caused the stampede.

It was heart wrecking and making me stunned to read the explanation of how it happened. Even my non muslim brothers showed their shocking by knowing death event happened successively two times.

Its an accident due to largest uncontrollable wave of people.

May Allah provide the relatives of those who were martyred there with strength to bear their loved ones.

Jazakkallah khair.

B. Ahamed Ameen from Dubai

Ebrahim Ansari said...

இறந்தவர்களுக்காக ஏற்கனவே ஒருமுறை அழுது முடித்த அந்த ஈரம் காய்வதற்குள் மீண்டும் கதறியழுதத வைத்தது இறைவனின் நாட்டம்.

இந்த இரங்கல் வரிகளை நெஞ்சங்களையும் கண்களையும் மீண்டும் நனைக்கின்றன.

எத்தநியோ முறைகள் இது போல் ஒரு கவிதை தாருங்கள் என்று உங்களிடம் கேட்டிருக்கிறோம்.

ஆனால்

இன்னொருமுறை இப்படி ஒரு கவிதை எழுதும் நிலையை வழங்கிவிடாதே அல்லாஹ் என்றே இறைஞ்சுகிறோம்.

ஆனாலும்

// நிரந்தர வாழ்விடத்தில்
நீரோடும் சுவனம் நாடி
மக்காவில் மரணமுற்ற
மனிதர்கட்கு

நாடியவாரே -
நன்மையை
நல்கிவிடு நாயனே!//

ஆமீன் !

KALAM SHAICK ABDUL KADER said...

பொறுமை என்னும்
பொக்கிஷத்தைக் கைவிட்டதாலா?
மறுமைப் பயணம்
மக்காவில் அமைந்ததாலா?

விதியென்று சொல்வதா?
விரைவாய்ச் செல்ல
மதிசொன்ன தவறென்பதா?
மண்டைக்குள் வினாக் கணைகள்!


ஷைத்தானின் ஆயுதம்
சீரழிக்கும் “அவசரம்”
ஷைத்தானுக்குக் கல்லெறிந்தாலும்
ஷைத்தானின் அவசரத்தை விடவில்லை!


விடையறியா வினாக்களுடன்
விக்கித்து நிற்கின்றோம்
மடைதிறகும் கண்ணீரில்
மடல்களை வரைகின்றோம்!

Unknown said...

மனது அழுது புலம்பும் வரிகள் கண்ணீரை அடக்க முடியவில்லை....!!

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று எனது தம்பி மினாவிலிருந்து போன் செய்து சொன்ன தகவல்:

நேற்றைய மினா விபத்துக்கு காரணம், ஷைத்தானுக்கு கல் எறியும் இடத்திற்கு அருகில் இருந்த ஒரு கூடாரத்தில் ஏற்பட்ட சிறிய தீ விபத்துதான்.

அந்த தீ விபத்து பெரியதாகிவிடுமோ  என பயந்து  எல்லோரும் அங்கு கூடியதுதான் நெரிசலுக்கும் விபத்திற்கும் காரணம்.

மரணத்திற்கான காரணம்:

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் 3:154. ... யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்...

அல்ஹாஜ். முஹம்மத் இர்பான், சென்னை. +919884769666

அதிரை.மெய்சா said...

மினாவில் நடந்த இந்த துயரசம்பவம் அனைவரின் மனதையும் மீண்டும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது.

வஃபாத்தான அந்த ஹாஜிகளின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக !

Shameed said...

மக்காவில் மரணமுற்ற
மனிதர்கட்குமறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக

தலைத்தனையன் said...

//ஷைத்தானுக்குக் கல்லெறிந்தாலும்
ஷைத்தானின் அவசரத்தை விடவில்லை!//

நல்ல நினைவூட்டல்

Ebrahim Ansari said...

ஒரு இப்ராஹீம் நபி ( அலை) அவர்களை வழிகெடுக்க இயலாத ஷைத்தான் இத்தனை பேர்களை அவசரப்படும்படி வழிகெடுத்துவிட்டானே.

sheikdawoodmohamedfarook said...

அல்லாவின்நாட்டம்நடந்தேறிவிட்டது.யாஅல்லாஹ்!உன்அருளையும்அன்பையும் அவர்கள்மீதுபொழிவாயாக!ஆமீன்!

Nooruddin said...

சோகத்தை மனத்தில் அறையும் அழுத்தமான கவி வரிகள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.