பறவைகள்
விரிகதிரின் பேரொளியில் வேட்டை யாடும்
வெண்ணிலவின் தண்மையிலே கூட்டை நாடும்
அரியவகைப் பறவையினம் ஒன்றாய்க் கூடும்
அழகுடனே இன்பமுற நின்றே தேடும்
உரியவனாம் இறையவனின் புகழைப் பாடும்
உழைப்பில்லா மானிடரின் இகழ்வைச் சாடும்
விரிதோகை மயில்களெலாம் மகிழ்ந்தே ஆடும்
வியப்புடனே பார்ப்போரின் நெகிழ்வில் ஓடும்!
அதிரை அஹ்மத்




0 Responses So Far:
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.